சமீபத்திய செய்தி

உலகத்திலே பல சமயங்கள் உள்ளன. அவற்றுள், ஈழத்தில் வழங்கும் சமயங்கள் நான்கு, அவை சைவம்
நன்கொடை
English

+94 123 456 789

நன்கொடை
English

416 528 1407

சைவசித்தாந்தம்

சித்தாந்த சாத்திரங்கள் மெய்கண்ட சாத்திரங்கள் எனவும் சொல்லப்படும். அவை பதினான்கு அவற்றை அருளிச் செய்தவர் அறுவராவர்.

பரமேசுவரன் வேதாகம உண்மைகளையெல்லாம் திருநந்தி தேவருக்கு உபதேசித்தருளினார். அந்தத் திருநந்தி தேவரை அபரசவன் எனவும் கூறுவர். திருநந்திதேவரே சனற்குமாரர், திருமூலர் முதலிய ஞானிகளுக்கெல்லாங் குருவாக இருந்து வேதாகமங்களைப் போதித்தருளினார். அங்ஙனம் போதித்த ஞானச்செல்வமானது குருசீட பரம்பரை உரிமையாக (தந்தை – மகன் உறவும் உரிமையும் போல) வழி வருவதாயிற்று. அதனால் சித்தாந்த சாத்திரம் அருளிய பெயர்களைத் திருக்கயிலாய பரம்பரைச் சந்தனாசாரியர்கள் என அழைப்பர்.

சந்தனாசாரியார்கள் அசச்சந்தனாசாரியர், புறச் சந்தனாசாரியர் என இரு வகையினர். திருநந்திதேவர், சனற்குமாரர், சத்தியஞான தரிசனர், பரஞ்சோதியார் என்பவர்கள். அகச் சந்தனாசாரியர்கள். இவர்கள் ஒருவருக்கொருவர் குருவுஞ் சீடருமாய் வழிவழி வந்தோர்; இவர்களில் நான்காமவரான பரஞ்சோதியாரிடம் தீட்சையும், ௨பதேசமும் பெற்றவர் மெய்கண்டதேவராவர். இவர் புறச் சந்தனாசாரியரில் முதல்வர். இவரது தலைமாணவர் அருணந்திரவாசாரியர். இவரது சீடர் மறைஞானசம்பந்தர், இவர் மாணவர் உமாபதி. சிவாசாரியர். உமர்பதிசிவம் வரையுள்ள நால்வரும். புறச்சந்தனா சாரியராவர்,

புறச்சந்தனாசாரியரில் மறைஞானசம்பந்தர் மௌனியாகவே இருந்தார். நூலெதுவும் பாடியருளவில்லை எனக் கூறுவர் ஆயின், சித்தாந்த நூலாகக் கருதப்படும். சதகமணிக்கோவை இவரால் அருளப்பட்டதாகக் கூறப்படும். மெய்கண்டதேவரும், அருணந்தி சிவாசாரியரும் உபாபதி சிவாசாரியருமே சாத்திரங்கள் அருளிச்செய்தனர். மெய்கண்டதேவரின் மாணவர் நாற்பத்தொன்மரில் மற்றொருவராகிய மனவாசகங்கடந்த தேவநாயனாரும், இவர்களுக்கு முற்பட்ட காலத்தவர்களாகிய திருவியலூர் உய்யவந்த தேவநாயனாரும், திருக்கடவூர் உய்யவந்த தேவநாயனாரும் ஆகிய மூவரும் ஒவ்வொரு நூல் பாடியருளினர்.

மெய்கண்ட சாத்திரங்கள்பாடியருளியவர்
1. திருவுந்தியார்திருவியலூர் உய்யவந்த தேவநாயனார்
2. திருக்களிற்றுப்படியவர்திருக்கடவூர் உய்யவந்த தேவநாயனார்
3. சிவஞானபோதம்மெய்கண்ட தேவநாயனார்
4. சிவஞானசித்தியார்அருணந்திசிவாசாரியார்
5. இரபா இருபஃதுஅருணந்திசிவாசாரியார்
6. உண்மை விளக்கம்மனவாசகங்கடந்த தேவநாயனார்
7. சிவப்பிரசாரம்உமாபதிசிவாசாரியார்
8. திருவருட் பயன்உமாபதிசிவாசாரியார்
9. வினாவெண்பாஉமாபதிசிவாசாரியார்
10. போற்றிப்பஃறொடைஉமாபதிசிவாசாரியார்
11. கொடிக்கவிஉமாபதிசிவாசாரியார்
12. நெஞ்சுவிடுதூதுஉமாபதிசிவாசாரியார்
13. உண்மை நெறிவிளக்கம்உமாபதிசிவாசாரியார்
14. சங்கற்பநிராகணம்உமாபதிசிவாசாரியார்

சித்தாந்த சாத்திரங்களில் முதலிலுள்ள இரண்டும் கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டிலும், அடுத்துள்ள மூன்றும் சமகாலத்தில் கி.பி. பதின்மூன்றாம் நூற்றாண்டிலும், சித்தாந்த சாத்திர அட்டகம் (அட்கம் – எட்டு நூல்) எனப்படும் நூல்கள் கி.பி. பதினான்காம் நூற்றாண்டிலும் தோன்றின என்பர்.

சந்தானகுரவர் வரலாறு பின் விரிவாக உள்ளது. திருவியலூர் உய்யவந்த தேவநாயனார் வடநாட்டினின்னு தென்னாடு வந்து தங்கி, ஞானவிருந்தளித்த நல்லார். இவர் மும்மூன்று அடிகளே கொண்ட நாற்பத்தைந்து பாடல்களில் சித்தாந்த உண்மைகளைக் கூறினர். இவரது சீடரின் சடரே திருக்கடவூர் உய்யவந்த தேவநாயனார், திருவுந்தியார்ப் பாடலுக்கு விளக்கம் கூறும் வகையில், நூறு பாக்களில் திருக்களிற்றுப்படியாரைப் பாடியருளியவர். இந்நூலை நடராசப் பெருமானது சந்நிதித் திருக்களிற்றுப் படியில் வைக்க, அந்த யானைக் கரம் இந்நூலை எடுத்துக் கூத்தரின் திருவடிக்கீழ் வைத்தமையால் திருக்களிற்றுப்படியார் எனப் பெயர் பெற்றது. இவ்விரு நூலும் மெய்கண்ட தேவருக்கு முன் தோன்றியவை.

மெய்கண்டதேவர் அருளிச்செய்த சிவஞானபோத நூல், தமிழிலே தோன்றிய. தனி முதல் நூல் என்பர் சிலர். வடமொழியிலுள்ள இரௌரவ ஆகமத்தில் சிவஞானபோதம் என உள்ள பன்னிருசூத்திரத்தின் மொழிபெயர்ப்பு நூலென்பர் ஒரு சிலர். சிவஞானபோத நூல் சித்தாந்த சாத்திர நூல்களில் கொமணியாய் விளங்குவது. மிகத் தட்ப நுட்பமான மூறையில் சைவ உண்மைகளைக் கூறுவது. மெய்கண்டதேவரே இந் நூலுக்கு வார்த்திகப் பொழிப்பும், உதாரண வெண்பாக்களும் சூர்ணிக் கொத்து என்னும் அட்டவணையும் இயற்றியருளினார். இந் நூலைத் தம் மாணவர் நாற்பத்தொன்பதின்மருக்கும் போதித்தருளினார். இந் நூலுக்குத் திருவாவடுதுறை யாதீனத்து மாதவச் சிவஞான முனிவர்கள் ஒரு சிற்றுரையும், மாபாடியம் என்னும் பேருரையும் எழுதியுள்ளார்கள். வேறு பல உரைகளும் இதற்கு உள.

சிவஞானசித்தியார் : இதனைத் தம். குருவின் ஆணைப்படி இயற்றியருளியவர் அருணந்தி சிவாசாரியர், சிவஞான யோதத்திற் கூறப்பட்ட உண்மைகளை மிக விரிவாக அளவை நூற், பிரமாணங்கள் காட்டி விளக்கிக் கூறுவதாயுள்ள சிறந்த நூல் இதுவே. சிவத்துக்கு மேல் தெய்வமில்லை சிவஞானசித்திக்கு மேல் நூலில்லை என்ற பழமொழி இந்நூலின் சிறப்பைக் காட்டும். இருபா இருபஃது என்பதும் இவரால் அருளப்பட்டதே.

மெய்கண்டதேவரின் மாணவரில் மற்றொருவராகய மனவாசகங் கடந்த தேவநாயனார், நடராசப் பெருமானுடைய உண்மைத்தத்துவத்தை விளக்கக் கூறிய ஐம்பத்துநான்கு பாடல் கொண்ட சிறு நூல் உண்மை விளக்கம் என்பது உமாபதி சிவாசாரியர் அருளிச் செய்த நூல்களில் சிவப்பிரகாசம், திருவருட்பயன், சங்கற்பநிராகரணம் என்பன சிறந்த நூல்கள். இவை சிவஞானபோதம் முதலிய நூல்களின் கருத்தையே மேலும் தெளிவுபடுத்திக் கூறும் நூல்களாகும்.

மெய்கண்டசாத்திரங்களுட் கூறப்படுவன மெய்கண்ட சாத்திரங்கள் இறைவன் ஒருவன் உளன் என்றும்; அவன் சிவனே என்றும்; அவனை அடைந்து இரண்டறக் கலந்து பேரின்பம் அநுபவிப்பதற்காக உயிர்கள் எண்ணிறந்தன உள என்றும்; அவ்வுயிர்கள் அங்ஙனம் நல்வாழ்வு பெறுவதற்காக இறைவனாலே தோற்றுவிக்கப்பட்ட தநு, கரண, புவன, போகங்கள் உள என்றும், ஆன்மாக்களை அநாதியே பற்றி நிற்கும் ஆணவ மயக்க நீக்கத்தின் பொருட்டுத் தநு கரணம் முதலியவற்றோடு திரோதான சத்தி ஆன்மாவைப் பொருந்தி “விடிவாம்-அளவும் விளக்கு” என நின்று துணைபுரியும் எனவும், இவ்வுதவிகளையெல்லாம் தமது ஒப்பற்ற (சிற்சக்தியாகிய) பேரருளினாலே வழங்கியருளுகின்ற இறைவனை நன்றியறிதலுடன் மனம், மொழி, மெய்களினால் வழுத்திச் (சிவபுண்ணியங்களாகிய) சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் படிகளிலே முறைதவறாமல் நிற்றலினால் அவ்வான்மாக்கள் “தாடலை” போல் அத்துவித முத்தி பெற்று உய்யும் எனவும் முடிந்த முடிபாக அறுதியிட்டுரைப்பனவாம்.

மெய்கண்ட சாத்திரநூல் விளக்கம்

1. திருவுந்தியார்

இது சிவஞானபோதத்திற்கு முற்பட்ட நூல். இதனைச் செய்தவர் திருவியலூர் – உய்யவந்த தேவநாயனார் இந்நூல், சிவஞானபோதத்தைப் போலச் சித்தாந்தக் கருத்துக்களைக் கோவைபடக் கூறாது, அவ்வப்போது ஆசிரியார்களுக்குத் தோன்றிய உணர்ச்சி அனுபவத்தைக்கூறும் 45 செய்யுட்களையுடையது. ஆயினும், இவ்வனுபவப்பாடல்கள், சமய சாத்திரங்கள் போலவே, கடவுள்-உயிர்-உலகம் என்னும் மூன்று பொருள்களின் இலக்கணத்தையும், பயன்களையும், பயன் அடையும் நெறிகளையும் விளக்குவனவாகும்.

2. திருக்களிற்றுப்படியார்

இதுவுஞ் சிவஞானபோதத்திற்கு முற்பட்ட நூல். இதனைச் செய்தவர் மேற்சொன்ன உய்யவந்த தேவநாயனார்மாணவர்க்கு மாணவர்.

இவர் இருக்கடவூர் உய்யவந்த தேவநாயனார் என்னும் பெயர் கொண்டவர். இந்நூல் நூறு வெண்பாக்களை உடையது. திருவுந்தியாரின் கருத்தைச் செம்மையாக விளக்குவது. இது பொன்னம்பலத்திலுள்ள திருக்களிற்றுப்படிகளில் வைக்கப்பட்டுப் பாராட்டப்பட்டதாதலின் “திருக்கவிற்றுப்படியார்” எனக் காரணப்பெயர்பெற்றது. இந் நூலில், 68 நாயன்மார் வரலாறுகளிலிருந்தும் உதாரணங்கள் தந்து வல்வினை, மெல்வினை என்பன விளக்கப்பட்டுள்ளன. திருக்குறட்பாக்கள் சிலவற்றை மேற்கோளாகக் கொண்டு அவற்றின் பொருளை விளக்குஞ் செய்யுட்கள் இன்பம் பயப்பன.

3. சிவஞானபோதம்

இது மேற்சொன்ன 14 சாத்திரங்களில் தலை சிறந்தது. சித்தாந்த உண்மைகள் கோவைபடச் செய்யப்பட்ட செந்தமிழ் நூல், திருவெண்ணை நல்லூர் – மெய்கண்ட தேவரென்னும் வேளாள அறிஞர் அருளியது. உரைநடைப் பகுதியுஞ் செய்யுட் பகுதியும் உடையது. உரைநடைப் பகுதி மேற்கோள்களையும், ஏதுக்களையும் உடையது. செய்யுட்பகுதி 18 சூத்திரங்களாகவும் 81 வெண்பாக்களாகவும் உள்ளது. இப் பன்னிரண்டு சூத்திரங்களும் ரௌரவ ஆகமத்திலுள்ள 12 வடமொழிச் சூத்திரங்களின் மொழிபெயர்ப்பு என்பது டாக்டர், இரமணசாத்திரி போன்ற ஒருசார் அறிஞர் கருத்து. மறைமலையடிகள், திரு. கா. சுப்பிரமணியம்பிள்ளை போன்ற அறிஞர்கள் அது முதல் நூலே என்று கருதுகின்றனர். தென்னிந்திய சைவசித்தாந்த மகா சமாஜத்தின் தலைவராக விளங்கெயெ சைவப்பெரியார் ம. பாலசுப்பிரமணிய முதலியார், சிவஞானபோதம் மொழிபெயர்ப்பன்று என்பதற்கு 120 காரணங்கள் காட்டி 1949இல் சிறு நூல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

4. சிவஞானத்தியார்

சிவஞானத்தியாரையும் அடுத்துவரும் இருபா இருபஃது என்னும் நூலையும் அருளியவர் மெய்கண்டார் முதல் மாணவராகிய அருள்நந்தி சிவாசாரியர் ஆவர். சிவஞானத்தியார் என்னும் நூல் சிவஞானபோதத்தின் வழி நூல், பரபக்கம், சுபக்கம் என்னும் இரண்டு பெரும் பிரிவுகளை உடையது, சிவஞான போதத்துள் அவையடக்கம் கூறிய ஒரே பாட்டினை அடிப்படையாகக் கொண்டு பரபக்கந் தோன்றியது. சுபக்கம், சிவஞானபோதத்தின், 12 சூத்திரங்களின் பொருளை 12 அதிகாரங்களில் விரித்து விளக்குவது.

சுபக்கத்தில் சிவஞானபோதப் பொருளே விரித்துரைக்கப்படுதலின், அதுபற்றிய விபரம் இங்கு தேவையில்லை. இப்பகுதி 328 செய்யுட்கள் கொண்டது. சித்தியாரின் பெருமையை, “சிவனுக்குமேல் தெய்வமில்லை, சத்திக்கு விஞ்சிய நூலில்லை.” என்னும் பழமொழியாலுந் தாயுமானவர் பாராட்டுரையாலும் நன்குணரலாம்.

5. இருபா இருபஃது

இது, தம் ஞான – குருவாகிய மெய்கண்டாரை முன்னிலையாக்கி வினாவுதல் போலவும், அவை விடைகூறுதல் போலவும் சித்தாந்தக் கருத்துக்களை 20 செய்யுட்களில் கூறும் நூல், ஆணவத்தின் எட்டு இயல்பும், மாயையின் ஏழு இயல்பும், கர்மத்தின் ஆறு இயல்பும் இதன்கண் கூறப்பட்டுள. சைவத் திருமுறைகளுள் விளங்கும் அருட்தொடர்களாகிய “கண்பாரார் கண்ணுதலாய் காட்டக்காலே” “உன்னிலுண்ணும் ஊண்ணாவிடில் விட்டிடும்” என்பவற்றிற்கு விளக்கங்கள் தரப்பட்டுள்ளன. திருநிலனாய்த் தீயாகி” என்று தொடங்கும் அப்பர், திருத்தாண்டகத்திற்கும் “ஆட்பாலவர்க்கருளும் ஆதிமாண்பும்” என்னுந் திருஞானசம்பந்தர் திருப்பாசுரத்திற்கும் பொருள் விளக்கம் பாராட்டத்தகும் முறையிற் செய்யப்பட்டுள்ளது. இச் சிறுநூல் மெய்கண்டாரது பெருஞ்சிறப்பினை அறிவிக்கும் பெருமையூடையது.

6. உண்மை விளக்கம்

இது மெய்கண்ட தேவரது மற்றொரு மாணவரான திருவதிகை மனவாசகங் கடந்தார் என்பவர் அருளியது. 53 வெண்பாக்களையுடையது. இது முப்பத்தாறு தத்துவங்களையும், ஆணவம், திருவினை என்பவற்றின் இயல்பையும், கடவுளின் இயல்பையும், ஐந்தெழுத்தின் உண்மையையும், தம் ஆசிரியரிடத்துத் தமக்கு விளக்கும்படி வினவ, ஆசிரியர் விடையளித்தது போலச் செய்யப்பட்ட நூலாகும். முத்தியிலும் மூன்று பொருளாகும் இறை, உயிர், உலகம் உண்டு என்று விளக்கும் பெருமையுடையது இந்நூல்;.

உமாபதி சிவாசாரியர் அருளிய எட்டு நூல்கள்

1. சிவப்பிரகாசம்

இது சிவஞான போதத்திற்குச் சார்பு நூலாகும். இதன் பாயிரத்துள் திருக்கயிலாய பரம்பரை ஆசிரியர்கள் இன்னாரென்பதும், சைவ நூல்களின் இயல்பும், தீட்சை வகைகளும் சுருக்கமாகவும், விளக்கமாசவும் ஓதப்பட்டுள்ளன. நூலின் அவையடக்கத்தில் நூல்களை ஆராய்ந்து உண்மை தெரியும் முறை நன்கு விளக்கப்பட்டுள்ளது. பழமை, பற்றி ஒன்றை நன்றென்றும், புதுமை பற்றி ஒன்றைத் தீதென்றுங் கொள்ளுதல் தவறு என்பது ஆசிரியர் கருத்து.

இந்நூல் நூறு விருத்தங்களையுடையது. இதில் சைவ சித்தாந்த அத்வைத நிலை-உடலும் உயிரும், கண்ணொளியும், கதிரொலியும், உயிரறிவும். கண்ணொளியும் போல இரண்டறக் கலத்தல் என்று விளக்கப்பட்டுள்ளது. ஆணவம், கன்மம், வினைப்பயன் வரும் வழிகள், மாயையின் பிரிவுகள் நன்கு விளக்கப்பட்டுள்ளன. பல சமயத்தாரின் முத்தியேதங்கள் வகுத்துக்கூறி, அவற்றிற்கு மேலதாய்ச் சித்தாந்த முத்தி விளங்கும் முறைமை உணர்த்தப்பட்டுள்ளது.

2. திருவருட்பயன்

இது குறள் வெண்பாக்களால் ஆயது, பத்து அதிகாரங்களையுடையது. ஒவ்வோர் அதிகாரத்தும் பத்துக் குறள்கள் உண்டு. இறைவனது இயல்பு கூறும் முதல் அதிகாரம் பதிமுது நிலை என்னும் பெயருடையது. ஏனைய அதிகாரங்களின் பெயர்களும் இவ்வாறே அவை கூறும் பொருளின் இயல்பை விளக்குந் தன்மையன. அவை உயிரவை நிலை, இருள்மல நிலை, அருளது நிலை, அருளுரு நிலை, அறியும் நெறி, உயிர் விளக்கம், இன்புறு நிலை, ஐந்தெழுத்தருள் நிலை, அணைந்தோர் தன்மை என்பன.

3. வினாவெண்பா

இது பதின்மூன்று பாக்களால் ஆகியது. இஃது, ஆசிரியர் தம் குலகுருவாகிய மறைஞானசசம்பந்தரிடம் சாத்திரவுண்மைகளைக் கேட்டுத் தெளியும் முறையில் அமைந்தது. இருளும், ஒளியும் ஒரிடத்தில் கூடல் அரிது என விதந்து, தன்பால் இறைவன் நின்ற வியப்பை அறிவிக்கும் பாடலும், காண்பான், காட்சி, காட்டப்படும் பொருள் என்னும் மூவகை உணர்ச்சியை நீத்தவர், முத்தி நிலயை அடைவார் எனக் குறிக்கும் திருப்பாட்டும் நுட்பமுஞ் செறிந்தவை.

4. போற்றிப் பஃறொடை வெண்பா

இது, உயிர் தொழிற்படும் முறைமையை உணர்த்தும் வாயிலாகத் தமக்குச் சிவஞானம் நல்கிச் சிவாநுபவம் ஈந்த குருவைப் பஃறொடை வெண்பாவினால் வாழ்த்திய நூலாகும். இறைவனது பரநிலையும், அவனது பொது நிலையாகும் ஐந்தொழில் நடத்தும் திறமும், உயிர்களை மறைத்து நிற்கும் ஆணவத்தின் இயல்பும், அதனை ஒழிக்கவேண்டி இறைவன் சேர்க்கும் மாயை காரியமாகும் உடற்கருவிகள், போகங்கள், உலகங்கள் இவற்றின் பேருதவியும், உயிர்கள் கர்ப்ப வாசத்திலும் உலகிலும் துன்புறும் துன்ப நிலைகளும், பிறகு வினைக்கு ஈடாகநேரும் மறுமைப் பயன்களும், பின்னைப் பிறவியில் கூடிய இருவினையொப்பு முதலிய பக்குவ நிலைகளும், இறைவன். மூவகை உயிர்கட்கு அருளுந் திறமும், உயிர்கள் சிவஞானம் பெற்றுச் சரியை முதலிய நெறிகளில் ஒழுக அடைந்த சவப்பேற்றின் நிலையும், “நாமே பிரமம்” என்பதன் இழிவும், சைவசித்தாந்த முத்தப் பெருநிலையும் முறையாக நன்கு விளக்கப்பட்டுள்ளன.

5. கொடிக்கவி

இது மிகச் சிறிய நூல். 4. (வெண்பாக்களால். ஆகியது. ஒளிக்கும் இருளுக்கும் ஒன்றே இடம் என்ற பகுதி இன்புறத்தக்கது. ஐநதெழுத்தின் நுட்பம் இறுதி வெண்பாவில் குறிக்கப்பட்டுள்ளது. இது தில்லையிற் கொடியேறும் பொருட்டுப் பாடிய நூரலாதலின் “கொடிக்கவி” எனப் பெயர் பெற்றது.

6. நெஞ்சுவிடு தூது

இஃது ஆரியர் தமது உள்ளத்தை மறைஞானசம்பந்தர்பால் மாலை வாங்கும்படி தூதுவிடு முகத்தால் பல நூல்களின் பொருள் மூடிபையும் விளக்குவது கலி வெண்பாவினால் ஆகியது. 129 கண்ணிகளை உடையது. தசாங்கம் விரித்துரைக்கும் பகுதி, படித்து இன்புறத்தக்கது. ஞானாசிரியன் பாச நீக்கம் செய்யும் திறத்தினை விளக்கும் பகுதியும், கத்தும் சமயர் புன்னெறிகளில் விழாது செல்லுந் திறமும் குறிப்பிடத்தக்கவை,

7. உண்மைநெறி விளக்கம்

இது தத்துவ ரூபம், தத்துவக் காட்சி, தத்துவ சத்தி, ஆன்ம வடிவம், ஆன்ம தரிசனம், ஆன்ம சுத்து, சிவரூபம், சிவதரிசனம், சிவயோகம், சிவபோகம் என்னும் பத்துக் காரியங்களை இனிது விளக்கும் நூல். இத் தசகாரியம் பற்றிய குறிப்புக்கள் முன்சொன்ன சிவப்பிரகாசத்தில் உள்ளன. அவற்றின் விரிவே இந் நூலாகும்.

8. சங்கற்ப நிராகரணம்

இது அகச் சமயங்கள் பலவற்றின் கொள்கைகளைக் கூறி, அவற்றைச் சித்தாந்தப் பார்வையால் மறுக்கும் நூல். சிவஞானசித்தியார் பரபக்கமும் இந்நூலும் சித்தாந்த சைவத்தின் வேறான சமயக்கொள்கை வேறுபாடுகளை அறிதற்கு மிகவும் பயன்படுகின்றது. நிமித்த காரண பரிணாமவாதி சங்கற்பத்தில் அப்பர், சம்பந்தர், திருப்பதிகங்கள், திருவாசகம், திருவிசைப்பா, காரைக்கால் அம்மையார் அற்புதத் திருவந்தாதி எடுத்தாளப்பட்டன. சைவசித்தாந்த நிலையே பல்லாற்றானும் மிகச் சிறந்தது என்பதை இச்சிறு நூல் நன்கு விளக்குகிறது.

Copyrights © 2022 to Saivaneethi. All rights reserved.