சமீபத்திய செய்தி

உலகத்திலே பல சமயங்கள் உள்ளன. அவற்றுள், ஈழத்தில் வழங்கும் சமயங்கள் நான்கு, அவை சைவம்
நன்கொடை
English

+94 123 456 789

நன்கொடை
English

416 528 1407

சமய தீட்சை

தீட்சையின் கருத்தும் வகைகளும் : “தீட்சை” என்பது இறைவன் குருவினிடமாக நின்று ஞானத்தைக் கொடுத்துப் பாசத்தைக் கெடுக்கும் கிரியை என்ற கருத்துள்ள “தீ~h” என்ற வடசொல்லிலிருந்து வந்ததே சைவசமயத்திற் பிரவேசிப்பதற்கும், அதன் வெவ்வேறு படிகளிற் புகுவதற்கும் அருகதையளிப்பது தீட்சையே. ஒருவர் சைவாசாரத்தை மேற்கொள்ள அதிகாரமளிக்கும் தீட்சை “சமய இட்சை” எனப்படும். இது சரியாமார்க்கத்தாருக்கு உரியது. சிவபூசை முதலியவற்றைச் செய்வதற்கும், சிவாகமங்களை ஒதுவதற்கும், யோக சாதனைகளை மேற்கொள்வதற்கும் அதிகாரமளிப்பது விசேஷதீட்சை எனப்படும். இது கிரியா மார்க்கத்தாருக்கும் யோக மார்க்கத்தாருக்கும் அளிக்கப்படுவது. ஞானமார்க்கத்தாருக்கு அளிக்கப்படுவது நிர்வாணதீட்சை எனப்படும்.

எழுவகைத் தீட்சை முறைகள்: அளிக்கப்படும் முறைக்கேற்பத் தீட்சையரனது நயனம், பரிசம், மானசம், சாத்திரம், மந்திரம், யோகம், ஒளத்திரி என எழுவகைப்படும். குரு சிவமாக நின்று தமது அருட்பார்வையால் சீடனின் ஆணவமலத்தைக்கெடுத்தல் நயனதீட்சை என்றும், தமது கரத்தால் சடனைத் தொட்டு அவனது மாயாமலத்தைப் போக்குதல் பரிசதட்சை என்றும், சீடனது மனதிற் பிரவேசித்து ஆன்ம போதத்தை நீக்கிச் சிவபோதத்தை உண்டாக்குதல் மானசதீட்சை என்றும் கூறப்படும். தனது முட்டைகளை மீன் தன் பார்வையாலும், கோழி பரிசத்தாலும், ஆமை எண்ணத்தாலும் பொரிக்கச் செய்வதை இவற்றிற்கு முறையே உதாரணமாகக் கூறுவர். வேதாகம உண்மைகளை விளக்குதல் சாத்திர தீட்சை ஆகும். திருவைந்தெழுத்து முதலிய மந்திரங்களை, முறைப்படி உபதேசிப்பது மந்திர தீட்சை. குரு சீடனின் இதயத்திற் பிரவேசித்து ஆன்மாவைச் சிவத்தோடு சேர்த்தல் மோகதீட்சை எனப்படும். ஓமத்தோடு செய்யப்படுவது ஒளத்திரிதீட்சை ஆகும். இவற்றுள் ஒளத்தீரிதீட்சை மேலும் இருவகைப்படும். குண்ட மண்டலங்களுடன் ஓமம் முதலிய கிரியைகளாற் செய்யப்படுவது கிரியாவதி எனவும், குண்டமண்டலங்களையும் கிரியைகளையும் மான சகமாகச் செய்வது ஞானவதி எனவும் வழங்கும். இவை முறையே புறத்தொழில்களால் வழிபடுவதையும் ஒக்கும்.

மூவகை ஆன்மாக்களுக்கும் உரிய தீட்சை முறைகள் : நயனம் முதலிய எழுவகைத் தீட்சைகளும் சகலருக்கு உரியவை. இவற்றுள் நயனம்; பரிசம், மானசம் ஆகியவையே பிரளயாகலருக்குச் செய்யப்படுபவை. இவற்றை இறைவனே நேர்நின்று, உணர்த்துவான். குருவை ஆதாரமாகக் கொண்டு சசலருக்குச் செய்யப்படும் தீட்சை ஆதாரதீட்சை எனவும், ஏனையோருக்கு இறைவனே நேரடியாகச் செய்யும் தீட்சை நிராதாரதீட்சை எனவும் வழங்கும்.

குறிப்பு : தீட்சை பெறுதலை உபதேசம் பெறுதல் என்றும் கூறப்படும். தீட்சை பெற்றோரே சைவர் என்று கூறத் தகுதியுடையோர். தீட்சை பெறாதோர் அருள் நூல்களில் தொடுவதற்கு அருகதையற்றவர்களாம்- அந்தணர் செய்யும் பூணூல் சடங்கு ஏனையோரது, தீட்சைக்குக் சமமாம். அந்தணர் காலை மாலை ஆகிய இரு வேளைகளிலும் சந்தியா வந்தனம் செய்வதுபோல், இவ்விரு வேளைகளிலும் தீட்சை பெற்ற சைவர் செய்யும் வழிபாட்டுமுறை அநுட்டானம் எனப் பெயர்பெறும். சைவக் கோலத்தைக் காட்டும் அடையாளம் அநுட்டான மேயாம். அநுட்டானத்தில் சிவசூரிய வணக்கமும், சிவகாயத்திரி செபமும், ஆசாரியர் உபதேசித்த தூல பஞ்சாட்சர மந்திரமாகிய “நமசிவாய” என்ற திருவைந்தெழுத்துச் செபமும் அடங்கியுள்ளன. இவற்றுள் பஞ்சாட்சரசெபும் மிக முக்கிய அங்கமாகும், குருமூலம் இதன் விரிவு அறியப்படவேண்டுமாதலின் அதனை இங்கு விளக்கிச் சொல்லாது விடுகின்றோம்.

சமயதீட்சை பெறுதற்குரிய வயது ஏழு, ஐந்து, பதினொன்று முதலான ஒற்றெண்களாம். தகுதியான சிவாசாரியார்மூலம் புண்ணியகாட்களில் தீட்சைபெறல் நன்று. இதனை அநுட்டித்து எல்லாப் பாடசாலைகளிலும் (ஆண்டுக்கொருமுறை சமயதீட்சை நடைபெற்று வருமாயின் சமய ஆசார நெறிமுறை பரவுவதுடன், சிவஞான அறிவும், சிவ அநுட்டானப்பொலிவும் பெருகி சைவமென்னும் பயிர் தானே தழைத்தோங்கும் திருத்தொண்டுகள் இருதரப்படும். சிவதீட்சை பெறாது செய்வது பொதுச் சிவபுண்ணியம் எனப்படும். சிவதீட்சை என்னும் அங்கத்துடன் செய்வது சிறப்புச் சிவபுண்ணியம் எனப்படும். சிறப்புச் சிவபுண்ணியத்தை அடைவதற்குப் பொதுச் சிவபுண்ணியம். உதவியாயிருக்கும். ஆதலால் சிவதீட்சை பெற்று ஆலயத்திலும், மற்றும் இடங்கலிலும் திருத்தொண்டு செய்வது உத்தமோத் தமமாகும்,

Copyrights © 2022 to Saivaneethi. All rights reserved.