சமீபத்திய செய்தி

உலகத்திலே பல சமயங்கள் உள்ளன. அவற்றுள், ஈழத்தில் வழங்கும் சமயங்கள் நான்கு, அவை சைவம்
நன்கொடை
English

+94 123 456 789

நன்கொடை
English

416 528 1407

விரதங்கள்

எமக்கு எல்லா நலன்களையும் எப்பொழுதும் தந்துகொண்டிருக்கின்ற இறைவனை மறவாது நினைந்து, வாழ்த்தியும், வணங்கியும் இருத்தலே உயிரினத்தின் கடமையாகும். பகுத்தறிவற்ற பிற உயிரினத்திற்கு அது இயலாதாயினும், பகுத்தறிவு படைத்த மனித இனத்திற்கு அஃது இன்றியமையாதது, எனினும், உலகியல் சூழல்களால் அக் கடமையை இயற்ற. இயலாத நிலையில் இருப்பதால், குறிப்பிட்ட சில நாட்களிலேனும் மக்கள் அக் கடப்பாட்டில் நிற்றல் வேண்டும். அந் நாட்களே விரத நாட்களாகும். விரதம்- தவம்-தோன்பு என்பன ஒரு பொருட் சொற்கள்.

மனம் பொறிவழி போகாது நிற்றற் பொருட்டு, உணவை வீடுத்தேனுஞ் சுருக்கயேனும் மனம், வாக்கு, காயம் என்னும் மூன்றினாலும் கடவுளை விதிப்படி மெய்யன் போடு வழிபடுதல்விரதமாகும், இஃது ஆன்ம ஈடேற்றங் கருதிச் செய்யுஞ் சாதனை ஆகும். விரதம் “நோன்பு” என்றுங் கூறப்படும். பெரியோர் கூறும் புண்ணியம் ஏழினுள் ஒன்றான தவம் விரதம் அநுட்டித்தல். விரதம் அநுட்டிப்பதனால் மனம் புத்தி. முதலிய உட்கருவிகள் தூய்மை அடையும். இதனால் ஞானம் – நல்லறிவு கைகூடும்.

சிவ விரதங்கள்

சிவராத்தரி விரதம், பிரதோஷ விரதம், சோமவார விரதம், தருவாதிரை விரதம், உமாமகேசுர விரதம், கேதார விரதம், கலியாணசுந்தர விரதம் , சூல விரதம், இடப விரதம் என எட்டாகும்.

சிவராத்தரி

சிவராத்திரி என்பது இருட்காலம் என்பது யாவரும் அறிந்தது. எனினும், உண்மையான இருட்காலம், என்பது இறைவன் உலகம் முழுவதையும் ஒடுக்கிநிற்கும் காலம். இதனை “சர்வசம்மாரகாலம்” , “பிரளய. காலம்” “ஊழிமுடிவு” என்று பலவாருகக் கூறுவர். இரவில் ஒளியின்றி உயிர்களின் நடமாட்டமில்லாது எங்கும் அமைதி நிலவுவதுபோல், இந்த ஊழி ஒடுக்க காலத்தில் பஞ்ச பூதங்களும், தநு, கரண புவன போகங்களும் ஒன்று மேயில்லாது உயிர்கள் செயலற்றுக் இடப்பனவாம். ஆகவே அப்பொழுது அமைதியே நிலவும். இந்தப் – பேரிருளில் தனித்து நிற்பவன் சிவபெபருமான் ஒருவனேயாம்.

நாம் நாள்தோறும் காண்கின்ற இரவு, அனைத்துயிர்க்கும் உரிய சாதாரண இராக்காலம், ஆயின் உலக ஒடுக்க நிலையாகிய இரவு சிவனுக்கே உரிய சாதாரண இராக்காலமாகும். இதனாற்றான் இவ் விரவு “சிவராத்துரி” எனப் பெயர் பெற்றுள்ளது.

ஊழி முடிவில் ஒடுங்கு உலகத்தை மீளத் தோற்றுவித்தற்காக இறைவன் சோதி வடிவான இலிங்கமாய் நின்று “இலளிதாதேவி” என்னும் பெயரோடு சத்தியைத் தோற்றுவிக்க, அத்தேவி இலிங்கப் பிரானை வணங்க, அவர் இலிக்கோற்பவராகத் தோன்றி, உலகன் மறு தோற்றத்தின் பொருட்டுப் பிரமா முதலியோரைப் படைத்துச் சிருட்டித் தொழிலை ஆரம்பிப்பார். இதனையே மாசிமாதத்துச் சதுரத்தத் திதியில் வரும் இரவும், அன்று இரவு மூன்றாம் சாமம் நடை பெறும் இலிங்கோற்பவ பூசையும் எடுத்துக்காட்டுகின்றன. சிவனிடத்தில் அன்பு பூண்டொழுகுவோர்க்கு அன்றைய நாள் சிறந்த நோன்பு நாளாகும்.

வழிபாட்டிலும் செலவு செய்தல் வேண்டும். இரவில் நான்குசாமப் பூசைகளும் அவ்வக் காலங்களில் செய்தல் உத்தமம், இன்றேல் ஒருகாலத்திற் சேர்த்தேனும் செய்தல் வேண்டும். இது மத்திமம் ஆகும். நான்கு சாமமும் பூசை செய்வோர் முதற் சாமத்திற் பாலாலும், இரண்டாம் சாமத்திற்தயிராலும், மூன்றாம் சாமத்தில் நெய்யாலும் நான்காம் சாமத்தில் தேனாலும் பெருமானுக்கு அபிடேகம் செய்யக் கடவர். நான்குசாமப் பூசைகளிலும் வில்வத்தால் அர்ச்சிப்பது மேலான பலனைக் கொடுக்கும். இக்காலங்களில் விநாயகர்க்கும், சண்டேசுரர்க்கும் பூசை செய்தல் வேண்டும். சிவபூசை இல்லாதோர் நான்கு சாமமும் சிவாலய தரிசனம் செய்வதோடு, பஞ்சாட்சர செபம், சிவபுராணம் படித்தல், கேட்டல் முதலியவற்றில் இரவைக் கழித்தல் வேண்டும். உபவாசம் இருக்க இயலாதோர் நீரேனும் பாலேனும் உண்டு கொள்ளலாம். இரவு முழுவதும் இந்நாளில் நித்திரை விழிக்க முடியாதவர் பதினாலாவது நாழிகையில் வரும் இலிங்கோற்பவ காலம் வரையிலாயினும் நித்திரை ஒழித்தல் வேண்டும். இவ் இலிங்கோற்பவ காலத்தில் செய்யும் தரிசனமும் பூசையும் பெரும்பலன் நிறைந்தன. இறைவனின் திருவுளம் பற்றிய காலம் இதுவாகும்.

உபவாசம் மேற்கொண்டோர் அடுத்தநாட் காலையிலே நித்திய கருமங்களை முடித்துக்கொண்டு சூரியோதய ஆறு நாழிகைக்குள்ளே சிவனடியாரோடு பாரணம் பண்ணல், வேண்டும். பாரணம் பண்ணிய பின் பகலிலே நித்திரை செய்யவொட்டாது. (பாரணம்-உபவாசத்திற்குப் பின் உட்கொள்ளும் உணவு)

சிவராத்திரி விரத பலன் பாவநீக்கமும், உலகம் எல்லா நலன்களும் பெற்றுச் செழித்தலுமேயாம்.

  

சிவராத்திரியில் நான்குசாமப் பூசை விதி முறைகள்

சாமம் மலர் பத்திரம்
1ஆவது தாமரை,அலரி வில்வம்
2ஆவது சண்பகம், தாமரை துளி, வில்வம்
3ஆவது செங்கழுநீர், ஆத்தி, பிச்சசி முட்களுவை, வில்வம், அறுகு
4 ஆவது நந்திமாவர்த்தம் விளா
சாமம் பழம் தூபம் ஓதும் வேதம்
1ஆவது வில்வம் சாம்பிராணி இருக்கு
2ஆவது பலா சந்தனக்கட்டை யகர்
3ஆவது மாதுளம் குங்குலியம் சாமம்
4ஆவது நானாவித பழங்கள் கர்ப்பூரம் அதர்வம்

பிரதோஷ விரதம்

ஒவ்வொரு வளர்பிறை தேய்பிறை இரண்டிலும் 13ஆம் திதியாகிய திரயோதசித் திதியில் சூரிய அத்தமனத்திற்கு முன் ஒன்றரை மணி நேரமும், பின் ஒன்றரை மணி நேரமும் உள்ள காலம் பிரதோஷ காலம் எனப்படும். இக்காலத்தில் சிவபெருமானைக் குறித்து இவ் விரதம் அனுட்டிக்கப்படும். ஐப்பசி, கார்த்திகை, சித்திரை, வைகாசி ஆகிய மாதங்களில் ஒன்றில் வரும் சனிப்பிரதோஷத்தில் – தொடங்க இவ்விரதத்தை அனுட்டிக்கத் தொடங்கலாம். பகலில் உணவை விடுத்து, பிரதோஷ காலம் தொடங்குவதற்கு முன்பே நீராடி, சிவபூசை முடித்துச் சிவாலய தரிசனம் செய்து பிரதோஷகாலம் கழிந்தபின் சிவனடியாரோடு உணவு கொள்ளல் வேண்டும். பிரதோஷ காலத்தில் சிவாலயத்தில் வலம்வந்து இடபதேவரையும் சண்டேசுரரையும் கும்பிடுதற்கு விசேட முறை உண்டு, பிருதிவியிலுள்ள தீர்த்தங்களெல்லாம் பிரதோஷ வேளையில் சிவதரிசனத்தின் பொருட்டு நந்ததேவரை வந்தடைவதாகப் புராணங்கள் கூறுவதனால், இந்நேரத்தில் நந்திதேவரது இரண்டு கொம்புகளுக்கும் இடையால் சிவதரிசனஞ் செய்தல் மிகவும் உத்தமமென அருள் நூல்கள் கூறுகின்றன.

இறைவன் தீர்த்தங்களின் வடிவாய் இருந்து உயிர்களது வினையைப் போக்கி, அவைகட்கு நலஞ் செய்பவன், அப்படியான தீர்த்தங்கள் நந்திதேவரிடம் பிரதோஷ வேளையில் வந்திருக்கும்போது அவருக் கூடாகச் சிவதரிசனஞ் செய்பவர்கள் அத்தீர்த்தத்தில் நீராடிச் சிவதரிசனஞ் செய்பவர்களாகின்றனர். இத் தீர்த்தத்தைத் தாண்டி வழிபடுவோர், தாங்கள் செய்த பாவத்தைத் தீர்த்தத்தில் கழுவி உயிரைத் தூய்மை செய்துகொள்வர்.

பல இடங்களில், பல காலங்களில் சென்றாடிப் பயன் பெறுதற்குரிய புண்ணிய தீர்த்தங்களின் பலன்களை, ஓர் இடத்தில் ஒரே பொழுதில் எல்லோரும் மானசீகமாக ஆடிப் பெறுதற்பொருட்டு, பிரதோஷப் பொழுதில் புண்ணிய வடிவான நந்தியம் பெருமானடியில் ஒன்று இரண்டு வர வைத்திருப்பது இறைவனது பேரருட் கருணைக்கோர் எடுத்துக்காட்டாகும். இப்படியான சிறந்த விரதத்தை விதிப்படி நோற் போர் மேன்மையான சித்திகளை எய்துவர். பிரதோஷகாலத்தில் செய்யும் ஆலய பிரதட்சணத்தைச் ழூசோமசூத்திரப் பிரதட்சணம் என்பர்.

உணவு உண்டல், உறங்கல், எண்ணெய் தேய்த்தல், நீராடல், நூல்களைப் படித்தல் முதலியன பிரதோஷ காலத்தில் தவிர்க்கப்படல் – வேண்டும்.

பிரதோஷ விரத தரிசன பலன்: கடன், வறுமை, நோய், பயம், பாவம் முதலானவற்றின் நீக்கம்.

திருவாதிரை விரதம்

மார்கழியில் வரும் திருவாதிரை நட்சத்திரத்தோடு கூடிய நன்னாளில் அனுட்டிப்பது திருவாதிரை விரதம். இந்த விரதம் சிவபெருமானுக்கு மிகவும் உகந்தது. இதனையொட்டியே சிவபெருமானை ஆதிரையின் முதல்வன் என்றும், ஆதிரையான் என்றும் கூறுவர். மார்கழித் திங்கள்

இடபதேவரைத் தரித்து, அங்கு நின்றும் இடமாகச் சென்று சண்டேசுரரைத் தரிசித்து, சென்ற வழியே திரும்பி வந்து மீண்டும் இடபதேவரைத் தரிசித்து, அங்கு நின்றும் வலமாகச் சென்றும் வடதிசையைச் சேர்ந்து கோமுகையைக் கடவாது. முன் சென்ற வழியே திரும்பி வந்து இடபதேவரைத் தரிசித்து, அங்கு நின்றும் இடமாகச் சென்று சண்டேசுரரைத் தரிசித்து, அங்கு நின்றும் திரும்பி கோமுகை வரையும் சென்று திரும்பிவந்து சண்டேசுரரைக் தரிசித்து அங்கு நின்றும் திரும்பி வந்து இடபதேவரைத் தரிசித்துப் பின்பு சிவலிங்கப்பெருமானை வணங்குதலாம்.

திருவாதிரை நாளன்று நடராசருக்குச் சிறப்புக்கள் நடைபெறும். அவற்றுள் சிதம்பரத்தில் நடப்பது மிகுந்த சிறப்புடையது. இவ்விரதம் சிதம்பரத்திலிருந்து அனுட்டிப்பது உத்தமோத்தமம். அங்கு ஆருத்ரா தரிசனம் செய்வதற்காக அநேகர் செல்வர். “ஆருத்ரா” என்பது ஆதிரையைக் குறிக்கும் சொல். இவ்விரதத்தில் உபவாசம் இருத்தல் மேலாம்.

சங்கரசங்கதை என்னும் வடமொழி நூலின் உபதேச காண்டத்தில் இவ்விரத மகமை கூறப்பட்டுள்ளது. கச்சியப்பசிவாசாரியாருடைய மாணாக்கராகிய கோனேரியப்ப முதலியார் தமிழில் இதனை மொழி பெயர்த்துள்ளார்.

தேவி விரதம்

வெள்ளிக்கிழமை, ஐப்பசி உத்தரம், நவராத்திரி என மூன்றாம்.

நவராத்திரி விரதம்

சூரியன் கன்னி இராசியில் செல்வது புரட்டாதி மாதமாகும். இப் புரட்டாதி மாதம் வளர்பிறைப் பிரதமை முதல் நவமி முடியவரும் ஒன்பது நாளும் கும்பத்திலே பூசைசெய்து தேவியை அனுட்டிக்கும் விரதமாம். இதில் வரும் அட்டமிக்கு மகா அட்டமி என்றும், நவமிக்கு மகா நவமி என்றும் பெயர்; இதனால் இதை மகாநோன்பு அல்லது மகர் நோன்பு என்று சொல்லிக் கொண்டாடுவர். இது தேவி உபாசகர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் விரதமாகும். இந்த ஒன்பது இரவுகளிலும், முதல் மூன்று நாட்களிலும் வீரத்தை வேண்டித் துர்க்கையையும், அடுத்த மூன்று நாட்களிலும் செல்வத்தை வேண்டித் திருமகளையும், இறுதி மூன்று நாட்களும் கல்வியை வேண்டிக் கலைமகளையும் நினைந்து பூசித்து விரதம் அனுட்டிப்பர், நோன்பு நோற்புவர்கள் பிரதமையில் எண்ணெய் முழுக்காடி நோன்பைத் தொடங்க வேண்டும். இவ்விரதம் அனுட்டிப்போர் முதல் எட்டு நாளும் ஒரு போது உணவு உட்கொண்டு, ஒன்பதாவது நாளான மகா நவமியில் உபவாசம் இருத்தல் உத்தமம். இந்நோன்பு நாட்களில் அபிராமி அந்தாதி, குமரகுருபரர் சகலகலாவல்லிமாலை போன்ற பாடல்கள் சிறப்பாகப் பாராயணம் செய்யத்தக்கன. ஒன்பது நாள் இரவு பூசைகளும் முடிந்த பத்தாவது நாள் விஜயதசமி விழா நடைபெறும். இந் நாள் புதிதாக வித்தைகள் தொடங்குவதற்குரிய நன்னாளாகும். பெரும்பாலும் சிறுவர்களுக்கு விஜயதசமியிற்றான் ஏடு தொடக்கல் நடைபெறும். நவராத்திரி காலப் பூஜைக்குரிய சிறப்பு மலர்கள் கோங்கும், மகிளமுமாம். சிறப்பு நிவேதனப் பொருட்கள் வடை, தேன்குழல், எள்ளுருண்டை முதலியனவாம். விரதபலன் சகல் சௌபாக்கிய சம்பத்துகளும் பெறுதலாம்.

விநாயகர் விரதங்கள்

வெள்ளிக்கிழமை, விநாயக சதுர்த்தி, விநாயக சட்டி என மூன்றாகும்.

விநாயக சதுர்த்தி விரதம்

மாதந்தோறும் வரும் வளர்பிறைச் சதுர்த்துத் திதி விநாயகர் விரதத்திற்குச் சிறந்த நாளாகும். ஆவணிமாத வளர்பிறைச் சதுர்த்தியில் அனுட்டிக்கப்படும் விநாயக சதுர்த்தி விரதம், மற்றும் விரத பலனிலும் பார்க்கக் கூடுதலான பலனை நல்கும் எனச் சமய நூல்கள் சாற்றுகின்றன. அந்நாளில் இளம்பிறைச் சந்திரனைப் பார்த்தலாகாது. பகலில் உபவாசம் இருந்து ஆலய தரிசனம் செய்தபின், இரவில் கொழுக்கட்டை, மோதகம் முதலியன விநாயகருக்கு நிவேதித்து உண்ணலாம். இந்நோன்பு நோற்பவர் விநாயகரை அறுகம்புல்லால் அர்ச்சிப்பது அளவிறந்த பலனைக் கொடுக்கும்.

சுப்பிரமணியர் விரதம்

இளமையும், நீங்கா அழகுமுடைய மூருகப்பெருமானின் திருப் பெயர்களுள் ஒன்று சுப்பிரமணியர். அப்பெருமானை நினைந்து நோற்றற்குரிய நோன்புகள் மூன்று. அவையாவன, வெள்ளிக்கழமை விரதம், கார்த்திகை விரதம், கந்தசட்டி விரதம் என்பனவாகும்.

வெள்ளிக்கிழமை விரதம்

சுக்கிரவாரம் என்றால் வெள்ளிக்கிழமை என்பது பொருள். வெள்ளிக்கிழமை விரதமாவது ஐப்பசி மாதத்து முதலாவது வெள்ளிக்கிழமை தொடங்கி, வெள்ளிக்கிழமை தோறுஞ் சுப்பிரமணியக் கடவுளைக் குறித்து அனுட்டிக்கும் விரதமாகும். இவ்விரத நாளில் உபவாசமிருத்தல் உத்தமம். அதற்கு இயலாதவர்கள் இரவிலே பழம் முதலியன உட்கொள்ளலாம். இதற்கும் இயலாதோர் ஒருபொழுது பகலில் உணவு கொள்ளலாம். இவ்விரதம் மூன்று ஆண்டுகளுக்கேனும். அனுட்டித்தல் வேண்டும். இவ்விரதத்தை முடிவு செய்யும், போது, விரதமிருக்குஞ் சாந்திக்கிரியைகளுடன் முடித்தல் வேண்டும். இக்கிரியை “உத்தியாபனம்” எனக் கூறப்படும். விரதபலனை அடையும் பொருட்டுச் செய்யும் கிரியை இதுவாகும். ஐப்பசி மாதத்துக் கடைசி வெள்ளிக்கிழமை உத்தியாபனஞ் செய்து கொள்ளுதற்கு உகந்த நாள் ஆகும்,

கார்த்தகை விரதம்

கார்த்திகை மாதத்துக் கார்த்திகை நட்சத்திரம் முதலாகத் தொடங்கி, மாதந்தோறும் வரும் கார்த்தகை நட்சத்திரத்தில் சுப்பிரமணியக் கடவுளைக் குறித்து நோற்கும் விரதம் கார்த்திகை விரதமாகும் கிருத்திகை எனவும் இது கூறப்படும்.

கார்த்திகை நட்சத்திரத்திற்கு மூதல் நாளாகிய பரணியில் ஆசாரமாக இருந்து, ஒருபோது உண்டு, மறுநாள் (கார்த்திகை நாள்) முருகனை முறைப்படி பூசைசெய்து வழிபாடாற்றி உபவாசமிருந்து, அடுத்த நாளாகிய ரோகிணியில் பாரணை செய்தல் உத்தமம். இது கைகூடாதவர் பழம் முதலியன இரவில் உட்கொள்ளக்கடவர். இவ் விரதம் பன்னிரண்டு வருடங்கள் அனுட்டித்தல் வேண்டும். அரிச்சந்திரன், அந்திமான், சந்திமான் ஆகியோர் இவ்விரதத்தை அனுட்டித்துச் சித்திகள் அடைந்ததாக வரலாறு கூறுகின்றது. (அத்திமான்-சந்திமான் இடையெழு வள்ளல்கள்.)

கந்தசட்டி விரதம்

ஐப்பசி மாகம் அமாவாசைக்கு அடுத்த பிரதமை முதற் சட்டி ஈறாகிய ஆறு நாளும் அநுட்டிக்கும் விரதம் இதுவாகும். ஒவ்வொரு நாளும் காலையில் நீராடி முருகப்பெருமானை வழிபட்டு, சிறிதளவு நீர்மட்டும் அருந்தி உபவாசம் ஆறு நாளும் இருந்து, ஏழாம்நாள் சிவனடியார்களுடன் பாரணை செய்வது இவ்விரதத்திற்கு நியமமாகும். இதற்கு இயலாதவர் முதலைந்து நாளும் ஒருபொழுது உண்டு. சட்டியில் உபவாசஞ் செய்யக் கடவர். இவ்விரதம் ஆறு ஆண்டுகள் அனுட்டித்தல் வேண்டும். திருச்செந்தூர் போன்ற முருகன் திருத்தலங்கள் கீழ் நோன்பிற்குச் சிறந்தனவாம் ஈழத்திலும் மாவிட்டபுரம், நல்லூர், செல்லச்சந்நிதி, கொழும்பு கொம்பனித்தெரு அருள்மிகு சிவசுப்பிரமணியசுவாமி கோவில் போன்ற இடங்களில் சிறப்பாக இந்தோன்பு நோற்கப்பட்டு வருகின்றது.

பிரதமையில் சிவபெருமானது நெற்றியிலிருந்து, தெறித்தபொறிகள் ஆறும் சரவணத்தில் ஆறருக்களாக, கிருத்திகைமுத லறு வரும் பாலூட்ட வளர்த்து, உமாதேவியார் எடுக்க ஆறு திருமுகமும், (பன்னிரண்டு திருக்கையுமுடைய ஒருருவாய் எழுந்தருளிய நாள் இக் கந்தசட்டி நாளாகும். சூரபதுமனை முருகன் சங்காரஞ் செய்ததாளும் இதுவேயாம். கந்தபுராண உபதேச காண்டத்தில் இவ்விரதம் பற்றிய செய்திகள் விரிவாகக் கூறப்பட்டுள்ளன் தேவர்கள் இவ்விரதத்தை தோற்றுப் பயன் பெற்றதாகவும் இந்நூல் கூறும்.

மறைகளின் முடிவால் வாக்கால் மனத்தினால் அளக்கொ ணாமல் நிறைவுடன் யாண்டு மாகி நின்றிடும் நிமல மூர்த்தி அறுமுக உருவாய்த் தோன்றி அருளொடு சரவ ணத்தில் வெறிகமழ் கமலப் போதில் வீற்றிரும் தருளி னானே.

குறிப்பு : விரதம் அநுட்டிப்பவர் அவ்விரத நாட்களில் தவிர்க்க வேண்டியனவும், செய்யவேண்டியனவுமான கடமை விவரங்கள் : காமம், கோபம் முதலிய குற்றங்கள் எல்லாவற்றையும் பற்றறக் களைதல் வேண்டும். தவறாது வைகறையிலே நித்திரை விட்டெழுதல் வேண்டும், புண்ணிய தீர்த்தத்தை அடைந்து திருநீறு, வில்வ மரத்தடி மண்;தருப்பை, கோமயம், திலம் என்பவைகளைச். சிரசிலே வைத்து, கையிலே பவித்திரம் சேர்த்துச் சங்கற்பஞ் சொல்லி நீராட வேண்டும். தியானம், செபம், பூசை, ஆலய தரிசனம், பிரதட்சணம், திருமுறைப்பாராயணம் முதலியன சிறப்பாகச் செய்தல் வேண்டும். திருக்கோயிலிலே இயன்றமட்டூம் நெய்விளக்கு ஏற்றல், திருமஞ்சனத் அபிஷேகம், திரவியம், நெய்வேத்தியத் திரவியங்கள் கொடுத்தல் வேண்டும். நோன்பு அழித்து உணவு அருந்தும்போது சிவனடியார் ஒருவரோடாயினும் உணவு கொள்ளல் வேண்டும் கோமயத்திலே மெழுகப்பட்ட தரையிலே இரவில் கடவுளைச் சிந்தித்துக்கொண்டு அதிசுத்தராய் நித்திரைசெய்தல் வேண்டும். மறுநாள் வைகறையில் எழுந்துவிடல் வேண்டும். உபவாச விரத நாளிற்கு முதல்நாள் ஒருபொழுது மாத்திரம் உணவுகொள்ளல் வேண்டும். உபவாச விரத நாளுக்கு அடுத்தநாள் காலையில் ழூநித்திய கருமம் இரண்டும் முடித்துக்கொண்டு மாகேசுர பூசை செய்து சூரியன் உதித்து ஆறு காழிகையுள்ளே சுற்றத்தாரோடு பாரணம் பண்ணல் வேண்டும். பாரணம் பண்ணியபின். பகலிலே நித்திரை செய்யாது சிவத்தியானத்துடன் சிவபுராணங்களைக் – கேட்டுக்கொண்டிருத்தல் வேண்டும். – குறித்த ஒரு நோன்பை அநுட்டித்துவரும் ஒருவர், விதிப்படி அந்த நோன்பை உத்தியாபனம் செய்தல் வேண்டும். தொடங்கிய விரதத்தை இடையே விடுவோரும், உத்தியாபனம் செய்யாதோரும். விரதபலனை அடையமாட்டார். நீராபாதும், திருநீறு அணியாதும் மாகேசுர பூசைக்கோ அன்றி, விரதத்திற்கோ உணவு பாகம் பண்ணுதல் சமய ஆசாரத்துற்கு ஒழுங்கற்ற செயலாகும், இது குளிக்கப் போய்ச் சேறு பூசுவதற்கு ஒப்பாகும் என்பர் பெரியோர்.

Copyrights © 2022 to Saivaneethi. All rights reserved.