சமீபத்திய செய்தி

உலகத்திலே பல சமயங்கள் உள்ளன. அவற்றுள், ஈழத்தில் வழங்கும் சமயங்கள் நான்கு, அவை சைவம்
நன்கொடை
English

+94 123 456 789

நன்கொடை
English

416 528 1407

வேதங்கள் கூறும் சிவ வழிபாடு

வேதங்கள் சைவத்தின் முதனூல்கள். இவைகள் வடமொழியில் உள்ளன. மனித அறிவுக்கு எட்டாத உயர்ந்த உண்மைகளைக் கூறுவதால் “வேதம்” எனவும், உயர்ந்த தத்துவங்களைத் தெரிவிப்பதால் ‘மறை” எனவும், மனிதனால் ஆக்கப்படாததால் “அபௌருசேயம்” எனவும், பல காலமாகச் செவி வழியாகக் கேட்கப்பட்டு வந்தமையால் “சுருதி” எனவும், எழுதப்படாமல் இருந்ததால் “எழுதாக்கிளவி” எனவும் பெயர்பெறும்.

வேதங்கள் மிகத் தொன்மையானவை. அவை கடவுளால் அருளப்பட்டவை. அவைகளை முனிவர்கள் அவர்பாற் கேட்டு உலகற்கு வழங்கினர். வேதம் நான்கும் பதினெட்டொடும் விரித்தார் என்பது ஞானசம்பந்தர் அருள்வாக்கு. அவை இருக்கு, யசார், சாமம், அதர்வணம் என நான்காகும். ஒவ்வொரு வேதமும் தனித்தனி “சங்கதை, பிராமணம், ஆரணியகம், உபநிடதம்” என்னும் பகுதிகளை உடையன. இவை ஒன்றன்பின் ஒன்றாகத் தோன்றியவை. சங்கிதை ஆகிய நான்கும், பிரமசரியம், இல்லறம், வானப்பிரத்தம், சந்நியாசம் ஆகிய நான்கு நிலையினர்க்கும் உரியவை. ஆச்சிரமப் பகுப்பு இந்நிலையிலிருந்து தோன்றியதேயாம். ஆரம்பகால மக்கள் இயற்கைச் சக்திகளையே தெய்வமாக வணங்கினர். ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொரு சக்தி இருப்பதாக அவர்கள் எண்ணினர். காலப்போக்கில், அவைகளுக்கு மூல காரணமான ஒரு பொருள். உண்டு எனவும், இயற்கைச் சக்திகள் இப் பொருளின் கூறுகளே எனவும் அவர்கள் உணர்ந்தனர். இப்படியான தெய்வங்களுக்குச் செய்யும் வழிபாடு அவர்கள்மூலம் கடவுளை அடைகின்றது என அவர்கள் நம்பினர். நாளடைவில் கடவுளுக்கு வெவ்வேறு பெயர்களும், உருவங்களும் அமைந்தன.

வேதங்களின் வழிபாடு இயற்கைச் சக்திகளுக்கே உரியது எனக் கூறுவது பொருந்தாது. “அக்நி நீயே உருத்திரன்”, இக் கடவுளே… நீ புரங்களைப் பொடி செய்தனை என இருக்கு வேதமே கூறுகின்றது. வேத வழிபாடுகள் கங்கைச் சமவெளியை நிலைக்களனாகக் கொண்டிருந்தன என ஊகிக்க இடமுண்டு.

தெய்வங்களின் அருளைப் பெறுவதால் இம்மைப் பயன்களையும் மறுமைப் பயன்களையும் பெறலாமென மக்கள் நம்பினர். வேதங்களிலுள்ள பாடல்கள் அவர்களைப் பிரீதிப்படுத்துவனவாகவும், அவைகளைத் துதித்துத் தம் தேவைகளை நிறைவேற்றும்படி வேண்டுவனவாகவும். உள்ளன. பாடல்களின் சொற்கள் சக்திவாப்ந்திருந்தமையால், அவை மந்திரங்களாகக் கொள்ளப்பட்டன. வேதங்களின் பாடல்களை ஒழுங்குபட அமைத்துக் கூறுவன சங்கிதைகள் எனப்படும்.

இருக்கு வேதம் : வேதங்களுள் முதன்மையானது இருக்கு வேதம். உலகின் மிகப் பழைய சிறந்த இலக்கியமும் இதுவேயாம். இந்திரன், அக்கிநி, சூரியன், உருத்திரன், வருணன், உசஸ் ஆகிய தெய்வங்களின் பெயர்கள் இதில் இடம் பெறுகின்றன. இவர்கள் பூமியிலும், வானத்திலும் இருந்து உலகைக் காப்பவர்கள் எனக் கருதப்பட்டனர். இருக்கு வேதப் பாடல்கள் தெய்வங்களை அழைத்தல், துதித்தல் வேண்டல் ஆகிய பகுதிகளை உடையன. தெய்வங்களை முன்னிலைப்படுத்தி அழைத்தல் ஒரு சிறு கிரியையாக அமைகிறது. இருக்கு வேதம் கிரியையின் தொடக்க நிலையாகவும், பக்தி நிலையின் ஆரம்ப இடமாகவும் விளங்குகின்றது. பாடல்கள் தெய்வங்களுக்குச் சமர்ப்பிக்கப்படுகின்றன. இவ்வாறு சமர்ப்பித்தல் ஒருவகை வழிபாட்டு முறையாகும். இம்முறை சைவத் தமிழ்த் திருமுறைகளிலும் அமைந்துள்ளமை நினைவு கொள்ளற்பாலது. இருக்கு வேதம் கடவுளை இயற்கையிலும், இயற்கைக்கு அப்பாலும் வைத்து வழிபடுகிறது. மந்திரங்களின் தோற்றத்திற்கும் இருக்கு வேதமே மூலமாகும்.

யசுர் வேதம்:- இருக்கு வேத வழிபாட்டு முறையை விரித்தும், ஒழுங்குபடுத்தியும் கூறுவது யசார் வேதம். யசுர் வேத முறை புதியதோர் அம்சமாக அமைகிறது. தெய்வங்களை மேலும் பிரீதிப்படுத்துதற்காக வேள்வி செய்து வழிபடும் முறையை இது கூறுகிறது. வேள்விவேட்டு வழிபடும் உள்ளத்திற்குச் சக்தியை ஊட்டும்.

சிவபிரானின் பெருமையைக் முறையை விளக்குதற்காகவே யசார் வேதம் அமைந்திருக்கிறது. தெய்வங்களைப் பிரீதிப்படுத்தி உலகிற்கு நன்மைகளை உண்டாக்குவதே வேள்வியின் நோக்கம் மந்திரங்களை ஓதுவதால் உள்ளமும், இடமும் தூய்மை அடைகின்றன. வேள்வித் தீ அவிந்து உருக்கரக்கும் நிலைறும் “ஸ்ரீ ருத்திரம்” யசுர் வேதத்தில் இடம் பெறுகிறது. பஞ்சாட்சர. மந்திரமும், பிரணவ மந்திரமும் ஸ்ரீருத்திர மந்திரங்களுக்குள் உள்ளன. யசுர் வேதம் உரைநடையில் உள்ளது. இதில் தெய்வங்களுக்குப் பல பெயர்கள் கூறப்படுகின்றன, இவை அஷ்டோத்திரம், சகஸ்ரநாமம் முதலியவை தோன்றுவதற்கு வழியாய் அமைந்திருக்கின்றன.

சாம வேதம் :- உள்ளம் உருக்கும் இசையை உடையது சாம வேதம், வேண்டும் பொருளைப் பெற்றுக் கொடுப்பதுவே “சாமம்” என்னும் சொல்லின் பொருளாகும். இருக்கு வேதப் பாடல்களே இவ் வேதத்தில் உள்ளன. இறைவன் சாம வேத விருப்பினன் ஆவன். வழிபாட்டில் இசை பெறும் முக்கியத்துவத்தை இவ் வேதம் உணர்த்துகிறது.

அதர்வணவேதம் :- காலத்தின் அருமை, பிரமசரியம், கெல்வத்தைப் பெருக்கல், பூமி விருத்தி போர் முறை, நோய் நீக்கம், தீமைவிலக்கல். வயப்படுத்துதல் முதலியவைகளைப் பற்றிக் கூறுவது அதர்வணவேதம். இவ் வேதம் வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களையும், கிரியைகளையும், மந்திரங்களின் பிரயோகங்களையும், உயர்ந்த கருத்துக்களையும் விரிவாகக் கூறுகின்றது. மந்திர சக்தியின் பயனை உணரவும் இவ் வேதம் உதவுகின்றது. இவ்வேதம் செய்யுள் நடையிலும் உரை நடையிலும் எழுதப்பட்டுள்ளது.

வேத சங்கதைகளின் விளக்கங்களே பிராமணங்கள்;. இவை உரைநடையில் உள்ளன. இவை வைதிக வேள்விகளின் வகைகளையும், அவைகளை நடத்தும் முறைகளையும் விரிவாகக் கூறுகின்றன. இவற்றுடன், சமயக் கொள்கை, கதை, தத்துவம் என்பனவும் உள. பிராமணங்கள் சிறந்த கருத்துக்களை உடையன. இவை சிந்தனையைத் தூண்டுவன. பிராமணங்களின் “பிரசாபதி” முதன்மையான தெய்வமாகும். அவரே சிருட்டி கர்த்தா. அதன் விளைவே பிரபஞ்சம் என்பது பிராமணங்களின் கருத்து. பிராமணங்களில் சிவனின் பெயர் முக்கிய இடம்பெறுகிறது. அவை சிவனின் பெருமையைக் கூறி, வழிபாட்டின் அமைப்பை உயர்நிலைக்கு நிறுத்த முயல்கின்றன. பிராமணங்களில் வரும் உருத்திரன் சிவனேயாம் உருத்திரன் பெருந் தேவனாக விளங்குகிறான். உருத்திரனுக்கு “பசுபதி”, “ஈசானன்” முதலிய பெயர்கள் கௌசீதகிப் பிராமணத்தில் உள. சாங்காயனம் என்னும் பிராமணம் தீ, நீர், காற்று ஆகியவைகளையும் சூரியன், சந்திரன் முதலியவைகளையும் உருத்திரனுடன் தொடர்புறுத்துகிறது. இதனாலேயே சிவனுக்கு அட்டமூர்த்து என்னும் பெயர் அமையக் காரணமாயிற்று.

ஆரணியகங்கள் வானப்பிரத்த நிலையில் காடுகளிலே தங்கி வழிபாடு செய்தற்காக அமைந்தவை. இவை பிராமணங்கள் கூறும் நிலைக்கும் உபநிடதங்கள் கூறும் நிலைக்கும் இடைப்பட்ட நிலையைக் கூறுகின்றன. இவை மானக் வேள்விகளைப் பற்றிக் குறிப்பிடுகின்றன. வேள்விக் குண்டங்களை உள்ளத்தில் கற்பனையாக அமைத்தலுக்கு இவை வழி காட்டுகின்றன.

உபநிடதங்களில் உயர்ந்த ஞானம். முக்கிய இடம் பெறுகிறது. இவை இதனையே அறிவுறுத்துகின்றன. கிரியைகளும், வேள்விகளும் இவைகளில் இல்லை. ஞானமே வேள்வியாகிறது. தவம் செய்தலே கிரியை. பிரமம் என்னும் பெயர் முதன்மை பெறுகின்றது. உயர்ந்த சமயக் கருத்துக்கள் இங்கு உள. இவை பிரமம், ஆன்மா, மோட்சம், பிரபஞ்சம், உபாசனை, ஞானம் ஆகியவைகளைப் பற்றியன. உலகப்பற்றைத் துறந்து மெய்யுணர்வு பெற்ற ஞானியரை வேண்டி, அவர் வாயிலாக ஞானத்தைப் பெறவேண்டும் தனித்திருந்து தியானம் செய்யவேண்டும். இவையே உபநிடதங்கள். காட்டும் வழிபாட்டு வழிகளாகும். ஈசாவாசியம், கேநம், கடோ, பிரச்சினம், முண்டகம், மாண்டுக்கியம், சாந்தோக்கியம் என்பன பிரதான உபநிடதங்கள்.

வேதங்கள் சமய தத்துவங்களைப் பரந்த அடிப்படையில் கூறுவதனால், எல்லாச் சமயங்களுக்கும் பொதுநூல் ஆகின்றன. வேதங்களிலுள்ள கிரியைகள், வேள்விகள், மந்திரங்கள், தத்துவங்கள் என்பன விரிவடைந்து, ஆகமங்களின் கிரியை, யாகம், மந்திரங்கள், தத்துவங்கள் ஆகவும் அமைகின்றன. ஆரணியகம் கூறும் மானசீக வேள்வி ஆகமத்தில் அந்தர்யாகமாகிறது. ஆகவே ஆகம வழிபாடுகளின் விரிவுக்கு, வேதங்களின் வழிபாடு துணையாயின் எனலாம். வேதங்களின் பெருமைகளைத் தெப்வத் தமிழ்த் திருமுறைகளும், மெய்கண்ட நூல்களும் நன்கு உணர்த்துகின்றன.

வேதங்களுக்குத் தரும சாத்திரங்கள், புராணங்கள், இதிகாசங்கள், வேது அங்கங்கள், வேத தரிசனங்கள்உப வேதங்கள் என்பன துணை நூல்களாகக் கொள்ளப்படுகின்றன. வேதங்களிலுள்ள உண்மைகளையும், விதிகளையும் எளிதாக அனைவரும் அறிதற்கு இவை துணைபுரிகின்றன. வேத முறைப்படி. வாழவேண்டிய முறைகளைத் தருமசாத்திரங்கள் கூறுகின்றன. புராணங்கள் சிவபிரானின் பெருமைகளையும், பழைய அருட் செயல்களையும், வழிபாட்டு முறைகளையும் பற்றிக் கூறுகின்றன.

இதிகாசங்கள் வரலாற்றிற்கு முந்திய அரசர்களின் வரலாறுகளையும், வேதங்களின் முறைப்படியான வாழ்க்கை முறைகளையும் கூறுவனவாம்.

புராணங்களும் இதிகாசங்களும் வேதக் கிரியைகளினதும், வழிபாடுகளினதும் வளர்ச்சி நிலையை உணர்த்துகின்றன. வேத அங்கங்கள் சிட்சை, வியாகரணம், நிருத்தம் சோதுடம், கற்பம், சந்தசு என ஆறு.

Copyrights © 2022 to Saivaneethi. All rights reserved.