சமீபத்திய செய்தி

உலகத்திலே பல சமயங்கள் உள்ளன. அவற்றுள், ஈழத்தில் வழங்கும் சமயங்கள் நான்கு, அவை சைவம்
நன்கொடை
English

+94 123 456 789

நன்கொடை
English

416 528 1407

சைவ நாற்பாதங்கள்

சிவபெருமான் திருவடியை அடைதற்குரிய நான்கு மார்க்கங்களைச் சைவ நாற்பாதங்கள் என்பர். சைவ நன்னெறிகள், சைவ நாற்படிகள், சிவ புண்ணியங்கள் என்பன சைவ நாற்பாதங்களின் மறுபெயர்கள்

சைவ நாற்பாதங்களாவன சரியை, கிரியை, யோகம், ஞானம் என்பன. இவை முறையே தாச மார்க்கம் (அடிமை நெறி), சற்புத்திர மார்க்கம், சக மார்க்கம், சன்மார்க்கம் எனவும் பெயர் பெறும்.

சரியை. முதலிய நான்கும் உபாயச் சரியை, கரியை, யோகம், ஞானம் எனவும், உண்மைச்சரியை, கிரியை, யோகம், ஞானம் எனவும் இருவகைப்படும். புகழ் முதலிய உலகப் பயனை நோக்கிச் செய்யும் புண்ணியங்கள் உபாயச் சரியை முதலியன. பத்தி காரணமாகச் செய்யும் சிவ புண்ணியங்கள் உண்மைச் சரியை முதலியன.

சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் நான்கு பாதங்களுள், சரியை இன்றேல் கிரியையும், கிரியை இன்றேல் யோகமும், யோக மின்றேல் சிவஞானமும், சிவஞானமின்றேல் சிவன் திருவடிப் பேறும் கைகூடா. ஆதலால் இவை நான்கும் முறையே ஒன்றற்கொன்று தொடர்பாய்ப் படிபோல் ஏற்றம் பெற்றுச் செல்வன. அரும்பாய், மலராய், காயாய், கனியாகிப் பயன் தருவன.

விரும்புஞ் சரியைமுதல் மெய்ஞ்ஞானம் நான்கும்
அரும்புமலர் காய்கனிபோல் அன்றோ பராபரமே.

-தாயுமானவர்-

சரியை

ஆன்மாக்கள். இறைவனது உருவத் திருமேனிகளைத் தமக்குப் புறத்தே வணங்கிச் சிவாலயத்துக்கும் சிவனடியார்களுக்கும் திருத் தொண்டு செய்தல் சரியை வழிபாடு எனப்படும்.

இச் சரியை வழிபாடு சரியையிற் சரியை, சரியையிற் கிரியை, சரியையில் யோகம், சரியையில் ஞானம் என நால் வகைத்து.

சிவாலயத்திலே சிவபெருமானுக்கும், அவர் அதிட்டித்து நின்றருளும் குரு சங்கமம் ஆகியோருக்கும், செய்யும் திருத்தொண்டுகள் சரியையிற் சரியையாம். திருவலகிடுதல், திருநந்தவனம் வைத்தல் முதலியன சிவபெருமானுக்குச் செய்யும் திருத்தொண்டுகள், குருசங்கமம் ஆகியோருக்குச் செய்யுந் திருத்தொண்டுகளாவன சிவாலயத்தலை அவரை உபசரித்தலும், அவர் ஏவிய பணிகளைச் செய்தலுமாம். (குரு-தீட்சாகுரு, போதக குரு, வித்தியாகுரு என மூவகை. சங்கமம்- சிவனடியார்.)

மூர்த்தி ஒருவரைத் தமக்குப் புறத்தே பூசித்தல், சரியையிற் கிரியை எனப்படும்.

உருத்திரமூர்த்தியைத் தம் மனத்திலே தியானித்தல் சரியையில் யோகம் ஆகும்.

சரியையில் யோகம் என்னும் நிலையிலே நிகழும் தியான பாவனையின் உறைப்பானதோர் அநுபவ உணர்வை அடைதல் சரியையில் ஞானமாகும்.

சரியை வழிபாட்டினாலே வரும் பயன் சிவசாலோக முத்தியடைதலாம். சிவசாலோக முத்தியாவது சிவபெருமான் எழுந்தருளியிருக்கும் சிவலோகத்திலே இன்புற்று வாழ்தல். (சாூலோகம்-ஒரே உலகம்) இம்முத்தி அபர முத்தியெனவும், பதமுத்தியெனவும் பெயர் பெறும்.

கிரியை

இறைவனது அருவுருத் திருமேனியை (சதாசிவனை- சிவலிங்கத்தை) அகத்தும் புறத்தும் பூசித்தல் கிரியை வழிபாடு ஆகும்.

இக் கிரியை வழிபாடு கிரியையிற் சரியை, கிரியையிற் கிரியை கிரியையில் யோகம், கிரியையில் ஞானம் என நான்கு வகைத்து.

மலர், திருமஞ்சனம், தூபம், தீபம், சந்தனம், திருவமுது முதலிய பூசைக்கு வேண்டிய பொருட்களை அமைத்துக்கொள்ளுதல் கிரியையிற் சரியையாகும்.

ஐவகைச் சுத்திபண்ணி, புறத்திலே. உள்ள சிவலிங்கத்தில் சிவபெருமானைப் பாவனை செய்து வெளிப்படுத்திப் பூசை செய்தல் கிரியைபிற் கிரியை எனப்படும். (பூதசுத்தி, தானசுத்தி, திரவியசுத்தி, மந்திர சுத்தி, இலிங்க சுத்து என்பன ஐவகைச் சுத்திகள்.)

கிரியையில் யோகம் எனப்படுவது பூசை, ஓமம், தியானம் என மூன்று இடம் வகுத்துக்கொண்டு அகத்திலே செய்யப்படும் அந்தரியாகமாம் (மனசிலே செய்யும் பூசை),

கிரியையில் யோகம் என்ற நிலையிலே நிகழும் அந்தரியாக உறைப்பிலே தோன்றுவதோர் அநுபவ உணர்வை அடைதல் கிரியையில் ஞானம் எனப்படும்.

கிரியை வழிபாட்டினாலே பெறும் பயன் சிவசாமீப மூத்தியாம். சிவசாமீப முத்தியாவது மைந்தற்குரிய உரிமை போலச் சிவபெருமானுக்குச் சமீபமாக இருந்து இன்பம் அநுபவித்து வாழ்தல். (சாமீபம்-சமீபம்-அண்மை) இம்முத்த அபரமுத்தியெனவும், பத மூத்தியெனவும் படும்.

யோகம்

சிவபெருமானை அகத்தே பூசித்தல் யோக வழிபாடாம். அது மனத்தை விடயங்களின் வழியிலே போகாவண்ணம் நிறுத்திச் சிவத்தைத் தியானித்து, பின்பு தியானிப்போனாகய தானும் தியானமும் தோன்றாமல், தியானப் பொருளாகிய சிவன் ஒன்று மாத்திரமே விளங்கப்பெற்றுச் சமாதி நிலையடைதலாகும்.

யோக வழிபாடு யோகத்திற் சரியை, யோகத்திற் சரியை, யோகத்தில் யோகம், யோகத்தில் ஞானம் என நால்வகைத்து.

யோகத்திற் சரியை, இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம் என்னும் நான்கினையும் உடையது. இயமம் ஆவது கொல்லாமை, வாய்மை, கள்ளாமை, இரக்கம், ‘வஞ்சனையில்லாமை, பொறையுடைமை, கலங்காமை முதலிய தருமங்களாம். நியமம் ஆவது தவம், தேவபக்தி, பூசை, ஞானசாத்திரம் கேட்டல், செபம், விரதம் முதலியனவாம். ஆசனமாவது பத்மாசனம் முதலிய எட்டு வகை இருக்கைகளாம், பிராணாயாமம் ஆவது பிராணவாயுவைத் தடுத்து நிறுத்தும் பயிற்சயாம்.

பிரத்தியாகாரமும் தாரணையும் யோகத்திற் கிரியை எனப்படும். பிரத்தியாகாரம் ஆவது மனத்தை ஐம்புலன் வழிச்செல்லாமல் தடுத்தல். தாரணையாவது மனத்தை ஒரு தானத்தில் திறுத்துதல். யோகத்தில் யோகமாவது தியானமாம். யோகத்தில் ஞானமாவது மனத்தைப் பரம்பொருளோடு ஐக்கியப்படுத்தி நிறுத்துதலாம்.

யோகத்தினால் வரும் பயன் சிவசாரூப் முத்தியடைதல், சிவசரூய மூத்தியாவது சிவபெருமானையொத்த வடிவமுடையோராய் இன்பம் அநுபவித்து வாழ்தல். இம் முத்தி அபரமுத்தியெனவும், பரமுத்தியெனவும் படும். (சாரூபம்-ஒத்த உருவம்)

ஞானம்

பததி, பசு, பாசம் என்னும் முப்பொருள் உண்மையை அறிவிக்கும் ஞான நூல்களைக் கேட்டுச் சிந்தித்துத் தெளிந்து நிட்டை கூடுதல் ஞானத்தில் ஞான வழிபாடு எனப்படும்.

ஞான வழிபாடும் ஞானத்திற் சரியை, ஞானத்துற் கிரியை, ஞானத்தில் யோகம், ஞானத்தில் ஞானம் என நால்வகைத்தாம்.

ஞான நூல்களைக் கேட்டல் ஞானத்திற் சரியை. கேட்டவற்றைச் சிந்தித்தல் ஞானத்தில் கிரியை, சிந்தித்தவற்றைத் தெளிதல் ஞானத்தில் யோகம். நிட்டை கூடுதல் ஞானத்தில் ஞானம். அது உள்ளத்தில் இன்பொடுங்கத் தூங்குதலாம்.

ஞான வழிபாட்டின் பயன் சாயுச்சிய முத்தி பெறுதலாம். சாயுச்சிய முத்தியாவது சிவபெருமானோடு தாடலை போல வேறறக் கலந்திருந்து பேரின்பம் அநுபவித்தலாம். இது பரமுத்தியௌவும், அத்துவித முத்தியெனவும், சாயுச்சிய முத்தியெனவும்படும்.

Copyrights © 2022 to Saivaneethi. All rights reserved.