சமீபத்திய செய்தி

உலகத்திலே பல சமயங்கள் உள்ளன. அவற்றுள், ஈழத்தில் வழங்கும் சமயங்கள் நான்கு, அவை சைவம்
நன்கொடை
English

+94 123 456 789

நன்கொடை
English

416 528 1407

நகுலேஸ்வரம்

கீரிமலை இலங்கையின் வடகரையில் உள்ளது. இது தீர்த்த விசேடம் மிக்க இடம்; இங்கு புராதன சிவத்தலம் ஒன்றும் உண்டு. இவ் விடத்தின் புராதன பெயர் திருத்தம்பலை கோயில்கொண்டிருந்த பெருமானின் புராதன பெயர் திருத்தம்பலேசுவரர். கீரிமுகமூடைய முனிவர் ஒருவார் இத்துறையில் நீராடி, அருகிலுள்ள பெருமானை வழிபட்டு வந்ததினாலே கீரிமுகம் மாறப்பெற்றார். இக்காரணங் கொண்டே இவ் விடம் கீரிமலை எனப் பெயர் பெற்றது. இதனை வடமொழியில் நகுலகரி என்பர், இங்கு இடங்கொண்ட இறைவனின் இக்காலப் பெயர் நகுலேசர்-நகுலேசுவரர். இறைவி நகுலாம்பிகை-நகுலேசுவரி. கோவில் நகுலேசுவரம்.

இத்தலம் ஆதிச் சோழ மன்னனாகிய முசுகுந்தன், நளன், அருச்சுனன் முதலியோரினால் தொழப்பெற்ற ஒன்றாகும். தீர்த்த-தல யாத்திரைகளுக்குரிய புராதனப் புண்ணிய இடங்களுள் கீரிமலையும் ஒன்று.

வடமொழிச் சைவ புராணங்கள் பத்தினுள் கந்தபுராணம் சிறப்பானது. அதில் உள்ள சூத சங்கதையில் நகுலேசுவரம் பழைமையான யாத்திரைத் தலங்களுள் ஒன்று எனக் குறிக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து ஈழத்தில் சைவம் எவ்வளவு தொன்மைக் காலம் தொடக்கம் நிலவி வருகின்றது என்பதை நாம் அறிந்துகொள்ளலாம்.

விசயன் இலங்கை அரசனாக இருந்தபோது, இவ்வாலயத்திற்குத் திருப்பணிகள் செய்ததாக வரலாறு உண்டு.

முன்னாளில் ஈழத்தின் வடகரை முழுவதும் மலைத் தொடராயிருந்து, பின் கடலால் தாக்குண்டு அழிந்துபோய்விட, எஞ்சியுள்ள அதனடிவாரமே இப்போதுள்ள கீரிமலை என்பது ஆராய்ச்சியாளர் கருத்து. இந்நிலத்தின் கீழேயுள்ள கற்பாறைகளிலே சிப்பிகளும், நத்தைகளும் பதிந்து கல்லாய்க் கடத்தலாலும், வடகரையிலே கடலினுள் நெடுந்தூரம் கற்பாறைகள் காணப்படுதலாலும், ஆராய்ச்சியாளர் முடிவைச் சரியான தெனத் துணிந்து கொள்ளலாம்;

இவ்வாறு கீரிமலையிலிருந்த உன்னத மலையும், அதனருகேயிருந்த பூர்வ சிவாலயமும் கடல்வாய்ப்பட்ட பின்னர், புதிய கோவில் அமைக்கப்பட்டுள்ளது. நகுலமுனியால் பூசிக்கப்பட்ட கோயில் இதவேயாம்.

இப்போது கீரிமலையென்று கூறப்படும் மேட்டு நிலத்தில் சுவறும் மழைநீர், நன்னீரருவியாகிப் பள்ளமாகிய கடற்கரையிற் பலவிடங்களில் சுரந்தோடுகின்றது. இவ்வருவி நீரே கீரிமலைத் தீர்த்தச் சிறப்புக்குரியதாகும். மாருதப்புரவிகவல்லி தீர்த்தமாடித் தனது குன்மநோய் நீங்கப்பெற்ற புண்ணிய தீர்த்தம் இதுவேயாம்.

பறங்கியர் யாழ்ப்பாண அரசைக் கைப்பற்றிய பொழுது இடித்தழித்த சிவாலயங்களுள் கீரிமலைச் சிவன் கோவிலும் ஒன்று. அழிந்த இக்சோவிலை உருவாக்குவதற்கு ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் முயற்சி எடுத்துள்ளார். அவரது முயற்சியைத் தொடர்ந்து, திருப்பணி வேலைகள் நடந்தேறி, இன்று நித்திய நைமித்திய கிரியைகள் ஒழுங்காக நடைபெற்று வருகின்றன. இவ்வாலய மகோற்சவம் மாசமாதத்தில் பதினைந்து நாட்கள் நடைபெறுகின்றது. மாசி மகா சிவராத்திரியில் தீர்த்தோற்சவம் நடைபெறும்.

மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆய மூவகைச் சிறப்பும் இவ்வாலயத்திற்கு உண்டு.

இவ்வாலயத்தின் தொன்மைபற்றிக் கூறும் நூல்கள்; தட்சணகைலாய புராணம், கைலாயமாலை, நகுலாசல புராணம், நகுலமலைக் குறவஞ்சி, நகுலமலைச் சதகம், நகுலகிரிப் புராணம், நகசுலேசுவரர் விநோத விசித்திரக் கவிப்பூங்கொத்து என்பனவாம்.

இவ்வாலயத்திற்குத் திருப்புகழ்ப் பாடல் ஒன்றும் உண்டு. திருப்புகழில் இவ்வாலயம் அருக்கொணொhமலை எனப் போற்றப்படுகின்றது. தலவிருட்சம் கல்லால்.

இவ்வாலயத் தீர்த்தக்கரைச் சூழலிலே பல அநுபூதிமான்களது சமாதிகள் உள. இவ்வாலயத்தைச் சூழப் பல திருமடங்களும் யாத்திரிகர் வசதிக்கேற்ப அமைக்கப்பட்டுள்ளன. கதிரவேலுச் சிறாப்பர் – மடம், சித்தங்கேணி வைத்திலிங்கம் மடம், தொல்புரம் கிருஷ்ணபிள்ளை மடம் போன்றவை குறிப்பிடத்தக்க சிலவாகும்.
1976இல் ஆரம்பிக்கப்பட்ட “சிவநெறிக் கழகம்” என்ற பெயருடைய சித்தாந்த சைவநெறி பரப்பும் மன்றம் ஒன்று, இன்று இவ்வாலயத்தோடொட்ட நின்று சைவமாநாடுகளையும் சைவக் கருத்தரங்குகளையும், சைவசமய அறிவுப் போட்டிகளையும் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

Copyrights © 2022 to Saivaneethi. All rights reserved.