சமீபத்திய செய்தி

உலகத்திலே பல சமயங்கள் உள்ளன. அவற்றுள், ஈழத்தில் வழங்கும் சமயங்கள் நான்கு, அவை சைவம்
நன்கொடை
English

+94 123 456 789

நன்கொடை
English

416 528 1407

சிந்துவெளி நாகரிக காலச் சிவ வழிபாடு

சிந்து வெளி என்பது இந்து, “பாகிஸ்தான், பஞ்சாப், இராசபுத்தான், சௌராட்டிரம்” என்னும் பகுதிகளை அடக்கிய நிலப்பரப்பு ஆகும். இருக்கு வேதத்திலும், இதிகாசங்களிலும் இப்பகுதியின் தொன்மை பற்றிக் குறிப்பிடப்பட்டிருந்ததால், இதனை அறிதற்குப் பல அறிஞர்கள் ஆர்வமுற்றனர். 1921-22ஆம் ஆண்டுகளில் சோர் யோன் மார்சல் என்பார் தலைமையில் இந்தியத் தொல்பொருள் ஆராய்வாளர் சிந்துவிலுள்ள மொஹஞ்சதாரோகிலும், பஞ்சாப்பிலுள்ள ஹரப்பாவிலும் உள்ள மண்மேடுகளை அகழ்ந்து ஆராய்ந்தனர். பின்பு மசூம்தார், மக்கே ஆகியோர் 90க்கு மேலான இடங்களை ஆராய்த்தனர். தொடர்ந்து இராசபுத்தானத்திலும், சௌராட்டிரத்திலும் 25 இடங்களை ஆராய்ந்தனர். இவைகளின் பேருகப் புராதன நாகரீக காலப் பொருட்கள் பலவும், எழுத்துக்களும், கட்டடங்களின் சிதைவுகளும் கிடைத்தன.

இப்பொருள்களின் அமைப்புக்களையும், எழுத்துக்களையும் ஆராய்ந்த அறிஞர்கள், இவை ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவை எனவும், இங்கு வாழ்ந்த மக்கள் சிறந்த நாகரிகம் உள்ளவர் எனவும், இங்கு வாழ்ந்தவர்களே இந்தியாவின் தொரல்குடியினர் எனவும், உலக வள்ள மற்றும் இனத்தவர்களுடன் இவர்கள் தொடர்பு உள்ளவராகளாக வாழ்ந்திருக்கின்றனர் எனவும் கூறியிருக்கின்றனர். இங்கு கிடைத்த பொருள்களுட் பல சைவத்தின் தொன்மைகளை விளக்குவனவாகும், வரலாற்றாராய்வாளர் தொல்பொருட் சான்றுகளையே ஒப்புக் கொள்பவர்களாவர். நூற்சான்றுகளை அவர்கள் ஏற்பதில்லை. அதனால், இவ்வாராய்விற்கு முன்பு இத்தியத் தொல்குடியினரின் மிகச் சிறந்த நாகரிகத்தையும், சைவத்தின் தொன்மையையும்பற்றி உலகம் நன்கு உணரவில்லை. உலக நாகரிகங்களுட் இந்துவெளி நாகரிகமே தலையாயது எனவும், சைவம் பழைமையான சமயம் எனவும் இவ்வகழ்வாராய்வின் பின்பே உலகம் உணரத் தொடங்கியது. ஆகவே இவ்வாராய்வு சைவத்தின் நீண்ட வரலாற்றில் ஓர் அரிய ஒளிகிளக்காகும். களிமண்ணாற் செய்து சுடப்பட்ட முத்திரைகள், தாயத்துக்கள், கல்லினால் செய்த சிவலிங்கங்கள், யோக நிலையிலுள்ள சிவ உருவம், கொம்புகள் உள்ள வெ உருவம், பெண் தெய்வ வடிவங்கள், உருவகங்கள் பொறித்த செம்பு, வெண்கலத் தகடுகள், நந்தி உருவங்கள் ஆலய அமைப்புக்கள், பூசைக்குரிய பொருள்கள், ஆகியன இப் பிரதேசத்தில் கிடைத்தன.

இவைகளுள் சிவலிங்கங்களும் யோகநிலைச் சிவ உருவமும் மிக முக்கியமானவை. அறுநூற்றுக்கு மேலான சிவலிங்கங்கள் இங்கு இடைத்துள்ளன. இவை மாக்கல்லினாலும், மரத்தினாலும் செய்யப் பெற்றவை. சில பீடமில்லாதனவாகவும் கிடைத்தன. சில சிவலிங்கங்களில் உருவங்கள் உள. சிவலிங்கங்கள் கிரியை நெறிக்கு உரியவை. அக்காலத்தில் இங்குள்ளோர் கிரியை நெறி உடையவர்களாக இருந்திருக்கின்றனர் எனவும், – பரவலாக இவ்விடங்களில் சிவலிங்க வழிபாடு அக்காலத்தில் இருந்திருக்கின்றது எனவும் ஆராய்வாளர் கருதுகின்றனர். சிவலிங்கங்களைத் தாயத்துக்களாகக் கழுத்தில் அணியும் வழக்கமும் இருந்திருக்கின்றது. இதனை அணிவதனால் தீமைகளும், நோய்களும் அணுகா என்பது நம்பிக்கையாக இருந்து வந்திருக்கின்றது. இவ் வழக்கம் பண்டை நாளில் ஆசிய நாடுகள் பலவற்றிலும் இருந்திருக்கின்றது.

யோக நிலையிலுள்ள சிவ உருவம் சிந்துவெளி மக்களின் உயர்ந்த நிலைச் சிவ நெறிக் கோட்பாட்டை உணர்த்துகிறது. சைவக் கோட்பாட்டின்படி யோகஞான முறைகள் உயர்ந்தவை. புராதன காலத்தில் முனிவர்களும், சித்தர்களும் யோகஞான முறைகள் உள்ளவர்களாக விளங்கினர். இதிலிருந்து சிந்து வெளிமக்கள் கடவுளை யோகிபாகவும். ஞானியாகவும் வழிபட்டனர் என்பதும், அவர்கள் யோக வழிபாட்டு முறைகளில் மிக ஈடுபாடு உள்ளவர்களாக இருந்தனர் என்பதும் தெளிவாகின்றது. மக்களும், விலங்குகளும் சூழ்ந்திருக்கும் நிலையில் உள்ள சிவ உருவமும் காணப்படுகின்றது. இது சிவன் உலகன் உயிர்கள் அனைத்திற்கும் தலைவன் எனச் சிந்து மக்கள் கொண்டிருந்த கொள்கையை உணர்த்துறெது. இன்னொரு உருவத்தில் சிவனின் தலையில் இரு கொம்புகள் காணப்படுகின்றன. இவை சிவன் முதன்மையும், அதிகாரமும் உள்ளவன் என்பதை உணர்த்துகின்றன. இங்கு பல நந்தி
உருவங்களும், பெண்தெய்வ உருவங்களும், மர உருவங்களும் கிடைத்துள்ளன. இவற்றைக்கொண்டு அந்நாளிலே இங்கு சக்தி வணக்கம், நந்த வணக்கம், நாக வணக்கம், மர வணக்கம் போன்றவை இருந்திருக்கின்றன என்பதை அறிந்துகொள்ளலாம்.

கிடைத்த பொருட்களுள், தகடொன்றில் நந்தியோடு கூடிய ஊர்வலக் காட்சி ஒன்று காணப்படுவதிலிருந்து, ௮க் காலத்தில் இந்துவெளி மக்கள் சமய-விழாக்களைச் சிறப்பாகக் கொண்டாடி வந்திருக்கின்றனர். என்பதை உணர்ந்து கொள்ளக்கிடக்கின்றது. இன்னொரு தகட்டில் பெண்தெய்வத்தின் முன் சில பெண்கள் உணவுப் பண்டத்தைக் கொண்ட தட்டுக்களை ஏந்தியபடி நிற்குங் காட்சி காணப்படுகின்றது. இக்காட்ட தெய்வத்துக்கு நேர்த்திக் கடன் செலுத்தும் வழக்கம் இருந்ததைக் காட்டுகின்றது. இன்றுள்ளது போல அக் காலத்திலும், அவரவர் அறிவு நிலைக்கும் வாழ்க்கை நிலைக்கும் ஏற்ப, சிலர் உயர்ந்த வழிபாடுகளையும், சிலர் குறைந்த வழிபாடுகளையும் மேற்கொண்டிருக்கலாம். கோயில்கள் பல இருந்தன எனவும், வலுவற்ற பொருள்களால் ஆக்கப்பட்டமையால் அவை அழிந்துவிட்டன எனவும் “மக்கே” என்னும் ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர். மண்மேடுகள் மூவகை அடுக்குகளைக் கொண்டிருந்தமையாலும், கண்டெடுத்த பொருள்கள் கல், மரம், செம்பு, வெண்கலம் ஆகியவைகளால் செய்யப் பெற்றிருந்ததாலும், சந்து வெளியில் வழிபாடு புதிய கற்காலம் செம்புக் காலம், வெண்கலக்காலம் ஆகிய மூன்று வகைக் காலங்களிலும் நீடித்திருந்திருக்கிறது எனக் கருத இடமுண்டு.

இரும்பின் உபயோகத்தை அறிந்த மத்திய ஆசிய மக்களின் வருகையால் சிந்து வெளி மக்கள் வலிமை இழந்தனர். கங்கைச் சம வெளியில் வேள்வி முறை வழிபாடு தோன்றமுன், சிவ உருவ வழிபாடு சிந்துவெளியில் நிலைத்திருந்தது எனவும், அவ்வழிபாட்டை மேற்காசியாவில் பரவச் சிந்துவெளி மக்கள் உதவினர் எனவும் அறிஞர் பலர் கூறுகின்றனர். அங்கு கிடைத்த எழுத்துக்களைத் தெளிவாக வாசித்தறியக்கூடிய நிலை ஏற்படின், அங்கு நிலவிய சிவவழிபாட்டைப் பற்றிய உண்மைகள் பல மேலும் உலகிற்குக் கிடைக்கும். அக்காலம் சிந்துவெளிச் சிவ வழிபாட்டின் பெருமையையும், அதன் தொன்மையையும் மேலும் நன்கு அறிய வாய்ப்பு உண்டாகும்.

Copyrights © 2022 to Saivaneethi. All rights reserved.