சமீபத்திய செய்தி

உலகத்திலே பல சமயங்கள் உள்ளன. அவற்றுள், ஈழத்தில் வழங்கும் சமயங்கள் நான்கு, அவை சைவம்
நன்கொடை
English

+94 123 456 789

நன்கொடை
English

416 528 1407

சிவாகமக்களின் தோற்றமும் வழிபாடும்

தொன்றுதொட்டு வரும் முறை ஆகமம் “ஆகமம்” எனப்படும் “ஆகமம்” என்பதற்கு பதி, பசு, பாசம் ஆகிய முப்பொருள்களைக் கூறுவது எனவும், மலத்தை நீக்கி ஞானத்தைக் கொடுப்பது எனவும் பொருள் கூறுவர் பெரியோர். ஓவ்வொரு சமயத்திற்கும் ஆகமங்கள் வெவ்வேறாக உள இதனால் ஆகமங்கள் சமயச் சிறப்பு நூல்கள் ஆகும். இவ வழிபாடு மிகத் தொன்றுதொட்டு வழங்கி வருவது. சிவாகமங்கள் சிவ வழிபாட்டு முறைகளை விளக்கக் கூறுகின்றன. ஆகவே, சிவாகமங்கள் சைவச் சிறப்பு பிரமாண நூல்கள் எனப்படும்

சிவாகமங்களில் சைவ சமயக் கொள்கைகளும் வழிபாட்டு முறைகளும் விரிவாக விளக்கப்பட்டுள்ளன. இவை சிவபிரானால் அருளிச் செய்யப்பெற்றவை. “மகேந்திரமதனில் சொன்ன ஆகமம் தோற்றுவித்தருளியும்’ என மணிவாசகனாரும், “வேதமோ டாகமம் மெய்யாம் இறைவனூல்” எனத் திருமூலரும் அருளியமை நோக்கற்பாலன. ஆகமங்கள் தந்திரம் என்றும் கூறப்படும். வேதங்களில் பொதுவான சமயக் கொள்கைகள் கூறப்படும். வழிபாடுகளும், கிரியைகளும், சிறப்பாகவும் விரிவாகவும் ஆகமங்களிற்றான் கூறப்படுகின்றன. கடவுளின் இயல்புகள் ஆன்மாக்களுக்கு அருள் செய்யும் வழிகள், கடவுளை வழிபடும் முறைகள், வழிபடும் இடங்களின் அமைப்புகள், கடவுட்டிருவுருவங்களின் அமைப்புக்கள், கோயிற் கிரியைகளின் வகைகள், அவைகளை நடத்தும் முறை, வழிபடுவோர்க்குரிய இயல்புகள், சைவ சாதனங்கள், கடவுள் வழிபாட்டினால் ஆன்மாக்கள் அடையும் பேறுகள் ஆகியவைகளை ஆகமங்கள் விரிவாக விளக்குகின்றன.

ஆகம முறையிலான கடவுள் வழிபாட்டில் இரகசியம், மந்திரம், ஆலயம், மூர்த்து என்பன முக்கியமானவை. கடவுள் சொல்லுக்கும் மனத்திற்கும் எட்டாதவர். அவர் அருளைப் பெற ஆலய வழிபாடு தேவை எனச் சிவாகமங்கள் வற்புறுத்துகின்றன. இதனாலேயே ஆலய அமைப்பு, ஆலய வழிபாடு, ஆலயத் தொண்டு என்பவைகளை ஆகமங்கள் விளக்குகின்றன. கடவுளை அடைதற்கு ஆலய வழிபாடு எளிதானது. அனைவராலும் செய்யக்கூடியது. இது செயல்முறை வழியாம். ஆசுவேதான் சிவாகமங்களில் ஆலய வழிபாட்டுக் கிரியைகள் முக்கி இடத்தை வகிக்கின்றன. அறிவு-வழி (ஞானவழி) – உயர்ந்த வழி. ஆயின் அனைவராலும் எளிதில் அடைதற்குரியதன்று. நம் நாட்டில் ஆலய வழிபாட்டு முறை தொன்றுதொட்டு வந்த பழமையான முறையாகும். இது தெய்வ அருளால் உருவானது. திருக்கோயிற் தொண்டுகளும், வழிபாடுகளும் பக்தியை வளர்க்கும் உள்ளத்தைத் தூய்மையாக்கும் சிவ அருளுக்கு உரிமையாக்கும் பேரானந்தப் பெருவாழ்வைக்கொடுக்கும். இம்மைப் பேறுகளையும், மறுமைப்பயன்களையும் பெறுவதற்கு வழிபாடும் கிரியைகளும் உதவுகின்றன.

வழிபாட்டின் பயனைப் பெற விரும்புவோருக்கு ஆத்ம, ஸ்நான, திரவிய, இலிங்க, மந்திரம் ஆய ஐவகைச் சுத்திகளும் இன்றியமையாதனவெனச் சிவாகமங்கள் கூறுகின்றன. வழிபடுவோரின் தரய்மைக்காக விரதம், செபம், தியானம், தோத்திரம், தலயாத்திரை செய்தல், சைவ சாதனங்களை அணிதல் என்பன அறிவுறுத்தப்பெற்றுள்ளன. வேதங்களில், வைதிக யாகம் போன்று சிவாகமங்களில் சிவயாகம் முக்கிய இடத்தை, வகிக்கிறது. நித்திய, நைமித்தியக் கிரியைகள் மிக விரிந்தும், பரந்தும் அமைந்துள்ளன, மந்திரங்களினால் மண், கல், மரம் ஆகிய அனைத்தும் தெய்விக இயல்பைப் பெறுகின்றன என்பது சிவாகமத் துணியு. கடவுளே அடைதலே ஆன்மாக்களின் நோக்கமாதல் வேண்டும் என்பது ஆகமங்களின் கருத்தாகும். ஆகவே ஆகமங்கள் இந்நோக்கத்தை அடிமை மார்க்கம், சற்புத்திர மார்க்கம், தோழமை மார்க்கம், சன்மார்க்கம் என நான்கு வழிகளை வகுத்துள்ளன. இவை முறையே சரியை, கிரியை, யோகம், ஞானம் எனப் பெயர் பெறும். சரியை வழியில் : சிவ சின்னங்களை அணிதல், சிவாலய வழிபாடு, ஆலயத் தொண்டு, சிவனடியார் தொண்டு என்பனவும், கிரியையில் பிரம்மசரியம் முதலிய நிலைகள் – தீட்சை வகைகள் – திருக்கோயில் அமைப்பு, திருக்கோயிற் கிரியைகள், அபரக் கிரியைகள் என்பனவும், யோகத்தில் இயமம், நியமம் முதலிய எண் வகை முறைகளும், ஞானத்தில் பாசத்தை நீக்கிக் கடவுளை அடைதலும் விளக்கப்பெற்றுள்ளன. இவைகள் ஒருவனைப் படிப்படியாகத் தூய்மைபெறச் செய்து சிவ அருளுக்கு உரிமையாக்கப் பிறவா நிலையை எய்துவிப்பன.

சிவாகமங்கள் குரு வழிபாடு, இலிங்க வழிபாடு, சங்கம வழிபாடு ஆகிய மூன்றையும் வழிபாடுகளாக விதித்துள்ளன. ஆன்மா சிவத்துடன் அத்துவிதமாதலே பிறவாப் பெரு நிலையாகும் எனச் சிவாகமங்கள் கூறும். சிவாகமங்கள் சதாசிவ மூர்த்தியின் உச்சி முகத்திலிருந்து தோன்றியவை. சிவாகமங்கள் 28. அவை காமிகம், இந்தியம், காரணம், அசிதம், சுப்பிரபேதம், ரௌரவம், லளிதம், பரமேஸ்வரம், வாதுளம் முதலியன. இவைகளுள் சிலவே இப்போது உள்ளன. சிவாகமங்களைச் சிவன் அருளினாராதலால், சிவாகம முறைகள், வழிபாடுகள் என்பவைகளையும் அவரே அருளினார் என்ப. மேலும் இவற்றில் உப ஆகமங்கள் 207 உள. அவற்றையும். சைவம் ஏற்றுக் கொள்ளும் என்ப. சுத்த வைதிக சுத்த சைவத்தின் உட்பட்ட சிவதீட்சை செய்தலும், பெறுதலும் சரியை முதலியனவற்றை அநுட்டித்தலும் ஆகமம் உணர்ந்தார்க்கன்றி, வேதம் மாத்திரம் உணர்ந்தார்க்கு முடிதல் இல்லையாம்.,சவாசமங்கள். சைவச் சிறப்பு நூல்கள் என்பதற்கு இது மேலான ஓர் எடுத்துக்காட்டாகும். சிவாகமங்களுள் ஞானகாண்டப் பகுதியை நிர்வாண தீட்சை பெற்றோரும், கர்ம காண்டப் பகுதியை விசேட தீட்சை பெற்றோரும் ஓதலாம் என்று பெரியோர் கூறுவர். சிவாகம வழிபாட்டையும் கருத்துக்களையும் தெய்வத் தமிழ்த் திருமுறைகளும், மெய்கண்ட சாத்திரங்களும் தெளிவாக விளக்குகின்றன. சிவாகமங்கள் இருபத்தெட்டையும் திருமூலர் தமது திருமந்திரத்தில் விளக்கியுள்ளார். சிவாகம வழிபாட்டின் சிறப்பையும் பயனையும். நோக்கியே சமய குரவர்கள் தலங்கள் தோறும் சென்று வழிபாடு செய்து திருமுறைகளை அருளியுள்ளனர்.

சிவாகமங்கள் வடமொழியிலுள்ளன. “நிலைபெறுமா றெண்ணுதியே” என்பது அப்பரதும், “மாலற நேய மலிந்தவர் வேடமும் ஆலயந்தானும் அரனெனத் தொழுமே” என்பது மெய்கண்ட தேவரதும் அருள் வாக்குக்கள். இவை சிவாகமங்களின் வழிவந்த கருத்துக்களேயாம். சிவாகமங்களின் சிறப்பு நோக்கியே மணிவாசகனார் ஆகம மாகிநின்று அண்ணிப்பான் தாள்வாழ்க” என அருளினார்.

Copyrights © 2022 to Saivaneethi. All rights reserved.