சமீபத்திய செய்தி

உலகத்திலே பல சமயங்கள் உள்ளன. அவற்றுள், ஈழத்தில் வழங்கும் சமயங்கள் நான்கு, அவை சைவம்
நன்கொடை
English

+94 123 456 789

நன்கொடை
English

416 528 1407

திருவுருவ வழிபாடு

தன்னை விரும்பி வழிபடுவோருக்குத் தன்னருட் காட்சியைக் கொடுக்கும்பொருட்டு இறைவன் உறையும். இடங்கள் திருக்கோயில்களாகும். சைவசமயத்தில் திருக்கேகோயில் வழிபாடு என்பது சமய ஒழுக்கத்துக்கு நிறைவுதரும் ஒரு அங்கமாகும். “வழிபாடு” என்ற சொல் “தொழுதல்” என்ற பொருளிலேயே பெரும்பாலும்
இன்று வழங்கப்படுகின்றது. காட்டிய வழியில் பின்பற்றி நடத்தலே “வழிபடுதல்” எனப்படும். அதனால் ஆலயங்கள் தூலமாயும், சூக்குமமாயும் காட்டும் வழிகளில் நடப்பதே அவற்றைப் பின்பற்றி ஒழுகுவதே உண்மை வழிபாடு என்று பெயர் பெறும்.
மனிதனுக்கு ஆன்மீக அறிவை ஊட்டி வளர்ப்பதற்காக அமைக்கப்பட்ட ஆலயங்களில், அவனது அறிவு, இச்சை, செயல் ஆகிய மூன்றிற்கும் நிறைவு தரும் மூவகை முறைகள் இருப்பதைக் காணலாம். ஆலய அமைப்பு முறை, ஆராதனை முறை, தரிசன முறை என்பனவே அவையாகும். . ஆலயக் கட்டடங்கள்-அதன் பல அங்கங்கள் மண்டபங்கள், பிராகாரங்கள் முதலியனவும், அங்குள்ள திருவுருவங்கள் (விக்கரகங்கள்) அவற்றிற்குரிய இடங்கள், யந்திரங்கள், பிரதிட்டைகள் முதலியனவும், அவை அமைக்கப்பட்டிருக்கும் விதங்களும் ஆலய அமைப்பு முறையைச் சார்ந்தனவாம்.
அர்ச்சகர் ஆலயங்களில் செய்யும் பூசை முறைகள்-கிரியைகள் ஆராதனை முறையதாம்.

ஆலயத்தில் அடியார்கள் சென்று வழிபடும் முறை தரிசனம் எனப்படும்.
இம்மூன்று முறைகளும் தனித்தனியே அறிகுறிப்பொருள், அருள்நெறிப்பொருள், அநுபவப் பொருள் என மூவகைப் பொருள்களைக் கொடுப்பனவாம்.
அறிகுறிப்பொருள் அடியார்களுடைய அறிவைப் பெருக்குவது, அருள் நெறிப்பொருள் அடியாருடைய இச்சையைப் பண்படுத்துவது. அநுபவப் பொருள் அடியார்க்கு மன அமைதியையும், சாந்தியையும் ஆன்ம வளர்ச்சியையும்-முன்னேற்றத்தையும் அளிப்பதாம்.

திருவுருவம்

திருக்கோயில் திருவுருவ வழிபாடு தனி ஒரு மனிதனுக்கென உருவாகவில்லை. மக்கள் அனைவருஞ் சென்று வழிபடுவதற்காகத் தோன்றியவையே அவையாகும். மக்களின் எண்ணிக்கைத் தொகை பெரிது. ஆயின் அவர்களுள் பெரும்பாலானோர் அறிவு நிலையின் அடித்தளத்தையும் அணுகா அறியா நிலையிலுள்ளனர். இந்நிலையிலுள்ளோர் எளிதாய் விளங்கி வழிபடும் முறைக்கு ஏற்ப அமைந்த
சாதனங்களே சைவக்கோவிற் திருவுருவங்களாகும். குணங்குறியற்ற இறைவனைக் குணங்குறிகளால் வகுக்கும் எல்லைக்குள் வைத்துப் புறத்தோற்றங் கொடுத்து, எமது கட்புலனுக்குள் அடங்கச்செய்யும் முயற்சியின் விளைவே நாம் காணும்-வழிபடும் திருவுருவங்கள். உருவமற்ற இறைவன் ஆன்மாக்கள் உய்யும்பொருட்டு, அவர்கள்மீது உண்டான கருணை மேலீட்டால், அருள் பாலித்தற்காகக் காலத்திற்குக் காலம் உருக்கொள்கின்றான். அப்படியாக அவன் பல வடிவங்களில் வந்து நின்று அருள்பாலிப்பதனால் திருவுருவங்களும் பல திறத்தனவாகின்றன. பலதரப்பட்டவர்கள் நிலைக்கும், அவர்களது எண்ணங்களுக்கும், விருப்பங்களுக்கும் ஏற்றவாறு வழிபடுவதற்கு அமைவாக இத்திருவுருவங்கள் பலவகைப்பட்டு விளங்குவனவாகும். சாதாரண மனித அறிவால் உணர்ந்துகொள்ள முடியாத இறைவனை அறிய வகையறியாது தடுமாறும் பக்குவப்பட்ட பெத்தான்மாக்களுள் விவேகமும், பக்குவமும், உடையவர்களது வழிபாட்டிற்கு உரியது. சிலிங்கத் திருமனியாம். இப்படியான சிவலிங்கத் திருமேனியை உணரும் பக்குவம் இல்லாதவர்களது வழிபாட்டுக்கு உரிய திருவுருவம் கை, கால் முதலிய உறுப்புக்களுடன் கூடிய உருவத்திருமேனிகள் ஆகும் என்பது ஞானநூல் வல்ல பெரியோர் கருத்து.

தொன்று தொட்டே இத்திருவுருவ வழிபாட்டு முறை நம் சைவ சமயத்தில் நிலவி வருகிறது. பழம்பெரும் நாகரிக நகரங்களாக விளங்கி, இன்று அழிந்திருக்கும் மொஹஞ்சதாரோ, ஹரப்பா நகர அகழ் வாராய்வின்போது சிற்சில இடங்களிற் கண்டெடுக்கப்பட்ட தெய்வத் திருவுருவச் சிலைகளே இக்கருத்திற்குச்
சான்றாகும். இவற்றின் விரிவை இந்நூலில் உள்ள “சைவத்ததின் தொன்மை”, “சிந்துவெளி நாகரிக காலச் சிவ வழிபாடு’ என்ற பாடல்களிற் காணலாம்.
திருவுருவங்கள் இறைவனை நினைவு கூர்ந்து, மனதால் உணர்ந்து கொள்வதற்குத் துணை நிற்பதோடமையாது, அவன் பெருமையினை அறிவதற்கும் உதவியாக விளங்குகின்றன. கணிதம் பயிலும் ஒருவன், குறியீடுகள் மூலமே தனது கணித அறிவை வளர்க்கின்றான். குறியீடுகள் மூலமாக வளர்த்த கணித அறிவைக்கொண்டு பலதரப்பட்ட படிகளை ஓவ்வொன்றாகக் கடந்து, கற்பனைக்கோட்டையாக எண்ணிவந்த சந்திரமண்டலம்வரை மனிதன் போய்விட்டான். இது பற்றிக்
கற்பனை கட்டுமுன்-இம்முடிபை யாருங் கண்ணாற் கண்டதில்லை. ஆனால் கற்பனையையே உண்மையாகக் காணுகிற நிலை கைகூடியபொழுது உலகமே அதிசயித்து உண்மையை உணர்ந்தது. இவ்வுண்மையின் அந்தத்தைக் காட்டப் பேருதவியாக விளங்கியவை கணிதக் குறியீடுகளேயாம்.

இதுபற்றித்திடமான ஒரு முடிவு காண்பதற்கு முன் நல்லநுகூலமான விளைவை நல்க உதவி வந்த கணிதக் குறியீடுகளைப் பொய்யென்று வாதிடவோ அன்றிச் சொல்லவோ முடியுமா? மூடியாது. புறக்கண் கொண்டு நாம் காணுந் திடமான உண்மை இதுவாகும்.
இதுபோலவே ஆன்மீக உலகில் அகக்கண் கொண்டு காணவேண்டிய இறைவனைக் காட்டும் ஆரம்ப நிலைக் குறியீடாக – அடையாளமாக விளங்குவது எமது ஆலயத் திருவுருவங்களும், அவற்றிற் காற்றும் வழிபாடுகளுமாகும். இவற்றின் இறுதி முடிவான நிலைபரம் பொருட்காட்சியான சிவாநுபவம். கணித சாத்திரத்தில் குறியீடுகள் பொருள் அல்ல) அவை உணர்த்துகின்ற இயற்கை உண்மைகளே பொருளாம். அதுபோலத் திருவுருவ வழிபாட்டிலும் திருவுருவம் பொருளன்று. அது குறியீடாக நின்று காட்டும் பேருண்மையே – எண்ணமே பொருள். திருவுருவ வழிபாட்டால் தங்கள் எண்ணத்தை நிறைவு செய்து இறைவனின் பேருண்மையைக் காட்டிச் சிவாநுபவப் பேறு பெற்றோர் எமது சமயத்தில் பலராவர் மார்க்கண்டேயர் போன்றவர் வாழ்க்கை வரலாறு இதற்குச் சான்றாகும். இன்னும், எமது சமய குரவர்கள் அறுபத்து மூவர்களுள் முப்பது பேர் திருவுருவ வழிபாட்டால் வீடு பெற்றோராவர், அவர்களுள் எறிபத்தர், கலயர், முருகர், கண்ணப்பர், ஆனாயர், சண்டேசுவரர், திருநாளைப்போவார், சேரமான் பெருமாள், சாக்கீயர், தண்டியடிகள், பூசலார், கணம் புல்லர், புகழ்ச்சோழர் ஐயடிகள், காடவர்கோன் போன்றோர் குறிப்பிடத்தக் சிலராவர்.

நாம் திருவுருவ ‘வழிபாடு செய்கிறோம் என்றால், அவ்வழிபாடு தம் உள்ளத்திலிருந்து எழுந்து காணும் உருவத்தையும் கடந்து, அறிய முடியாத ஒரு பொருளைச் சென்று பற்றுகிறது என்பதை தாம் பூரணமாக நம்பி உணருதல் வேண்டும். இன்னும் திருவுருவத்தில் இறைவன் எழுந்தருளி இருப்பதாய் ஆரம்ப முதல் நினைந்து வழிபாடாற்றி வரவரத் திருவுருவமே இறைவனாயும், அதன்மேல் திருவுருவத்தைக் காணாது இறைவனையே அங்கு நேருக்கு நேராகக் காணுவதாகவும் அநுபவம் பிறக்கும் என்பதும் தெளிவாம்.

உருவ வழிபாட்டில் பலருடைய மனங்கள் பார்வைகள் ஒருங்கு வந்து ஒரே பொருளில் குவிகின்றன. பலருடைய தூய சிந்தையிலிருந்து பிறக்கும் எண்ணங்கள் குவிந்து ஒருமுகப்படும்போது “எண்ணத்திற்கு ஆற்றல் உண்டு” என்று கூறுவதற்கு இசைய அது பதியும் இடத்தில் தெய்வ சாந்நித்திய ஆற்றல் பிறக்கும். அவ்வாற்றல், அதனை நோக்கி வழிபடுவோரைத் தன்வயப்படுத்தித் தெளிந்த நல்லறிவூட்டும் நன்மை பெருக நல்வாழ்வு பெறவுஞ் செய்யும். அப்படியானவர்களது உண்மையறிவானந்த அநுபோகப் பெருக்கில் கருவாகிப் பிறந்தவையே எமது சைவசமயக் கருவூலங்களகிய தோத்திர சாத்திர நூல்களாவன. இவ்வாறு பக்தியுடையவர் கிரியையில்லாது சிலையில் வணக்கஞ் செய்வதையும், அவர் மனம் அச்சிலையில் தெய்வம் இருக்கிறதென்று கருதுவதும், எங்கும் நிறைத்த இறைவன் அச்சிலையில் காட்சியாவதைவும் உணர்த்துவதே தோத்திர நூலாகிய தேவாரத்தில், அப்பர் பெருமானது திருவாரூர்த்
திருத்தாண்டகப் பதிகத்தில் வரும் “உயிராவனாமிருந்து உற்றுநோக்கி உள்ளக் கிழியி னுருவெழுதி” என்ற பாடலாகும் (உள்ளக்கிழி – மனமாகிய படம் வரையுஞ் சீலை) சரியை, கிரியை, யோகம் ஆகிய முத்திற நெறியாளர்களுக்கும் திருவுருவ வழிபாடு உரியதாகும். இதனை வலியுறுத்துகின்றது சைவ சாத்திர நூலாகிய சிவஞான சித்தியார்ப் பாடல் ஒன்று.

“திருக்கோயி லுள்ளிருக்குந் திருமேனி தன்னைச்
சிவனெனவே கண்டவர்க்குச் சிவனுறைவா னங்கே
உருக்கோலி மத்திரத்தா லெனநினையு மவர்க்கு
முளனெங்கு மிலனிங்கு முளனென் பார்க்கும்
விருப்பாய வடிவாகி ழூயிந்தனத்தி னெரிபோல்
மந்திரத்தின் வந்துதித்து மிகுஞ்சுரப்பிக் கெங்கும்
உருக்காண வொண்ணாத பால்முலைப்பால் விம்மி
ஒழுகுவது போல்வெளிப்பட் டருளுவனன் பர்க்கே”

என்பதே அப்பாடலாகும். ஆலயத்திலுள்ள திருவுருவச்சிலை, விக்கிரகம், பிம்பம், மூர்த்து, பேரம், பிரமை போன்ற பல்வேறு சொற்களால் சிற்ப நூல்களில் குறிப்பிடப்படும். இவற்றுள் “விக்ரகம்” என்ற சொல்லில் வரும் “வி” “விசேடம்” என்றும், “கரகம்” “இடம்” என்றும் பொருள்படும். அஃதாவது கடவுள் விசேடமாக விளங்கும் இடம் என்பது
பொருளாம். அண்டம் முழுவதிலும் பொதுவாக வியாபகமுடைய இறைவன், ஆலயங்களில் விசேடமாகவும் அதிலும் விக்கிரகங்கவில் இன்னும் அதி விசேடமாகவும் விளங்குவான் எனச் சமய நூல்கள் கூறுகின்றன. ஆலயங்களில் கல்லினால் அல்லது தாமிரத்தால் (உலோகத்தால்)செய்யப்பட்ட திருவுருவச் சிலைகள்
வைக்கப்பட்டிருப்பதைக் காண்கிறோம். கல்லாலமைந்தவை கற்சிலை அல்லது சிலாகிக்கிரகம் எனப்படும். இவை ஒவ்வொன்றும் ஆகம முறையில்
அமைந்த அவற்றிற்குரிய கருவறைகளில் பிரதிட்டை செய்யப்பட்டு வழிபாடு செய்யப்படும். இத்திருவுருவங்களுக்குத்தான் நித்திய திருமஞ்சனமும் பூசையும் நடைபெறும். நைமித்திய பூசை வழிபாடும் இவற்றிற்குத்தான் நடைபெறும். தாமிரத்தால் வார்க்கப்பட்டு வைக்கப்பட்டிருக்கும் திருவுருவங்களுக்கு நாள்தோறும் திருமஞ்சனம் நிகழ்வதில்லை; பூசை மட்டுமே நடைபெறும்.

திருவுருவங்களை அமைக்குஞ் சிற்பி, அவ்வவற்றின் பிரமாணங்களுக்கு அமையவே சிலைகளை அமைக்கவேண்டும். இவற்றில் தவறுகள் ஏதேனும் நேரின், சிற்பி முதலாக அந்நாடு முழுவதற்குமே பெருங்கேடுகள் சூழும் எனச் சிற்ப ஆகமங்களும், சிற்ப நூல்களும், புராணங்களும் கூறுகின்றன. திருவுருவங்களின் உயரம் பேராங்குலம், மானாங்குலம், மாத்தராங்குலம், தேகலப்தாங்குலம் என்ற நால்வகை விக்கிரக அளவு நூற் பிரமாணங்களுக்கு அமைந்ததாக இருக்கும். இதேபோன்று இவற்றின்
சுற்றளவு அளக்கும் முறை மானம், பிரமாணம், உன்மானம், பரிமாணம், உபமானம், இலம்பமானம் என ஆறு வகையாகும். இங்ஙனம் ஒரு நாமம் ஒர் உருவம் ஒன்று மில்லார்க்கு ஆயிரந்திருநாமம் பாடி நாம் தௌள்ளேணங்
கொட்டாமோ” என்ற திருவாசக வாக்குப்படி, உருவம் ஒன்றின்றி எங்குமாய், எல்லாமாய் நிற்கும் பரமசிவத்திற்குச் சிவாலயங்களில் முதலுருவாகச் சிவலிங்கத்தையும், வழி உருவங்களாகத் தாண்டவர் (நடராசர்), தேவியார், தட்சணாமூர்த்து, ஆகிய மூவரையும், சார்புருவங்களாக விநாயகர், சுப்பிரமணியர், கால வைரவர் போன்ற மூர்த்திகளையும் வகுத்து வைத்திருக்கின்றனர். இவருள் சிவம் அருவம் அல்லது அரூபம் என்றும், சிவலிங்கம் ரூபாரூபம் அல்லது அருவுருவம் என்றும், மற்றை இரு மூவரும் ரூபம்
அல்லது உருவம் என்றும் கூறப்படுகின்றனர். உருவமற்ற பரமன் கொண்ட கோலங்களையெல்லாம் வழிபடும் வழக்கம் சைவத் தமிழர்களிடையே
பெரும்பாலும் பண்டு தொட்டு இருந்து வரக்காண்கின்றோம். இவ்வுருவங்களை வழிபடும் தோறும், இவற்றுடன் தொடர்புகொண்ட நிகழ்ச்சிகளையும் வழிபடுவோர் நினைவு கூருகின்றனர்.

ஆன்மாக்கள் ஈடேறவேண்டி அவன் திருவிளையாட்டாக நிகழ்த்திய சம்பவங்கள், அவனது ஒவ்வொரு திருக்கோலப் பெருமையினையும் நினைவுறுத்துகின்றன. வெறும் சம்பவங்களைச் சித்திரிக்கும் இச்சிலைகள் நாளடைவில் அச்சம்பவங்களை உணர்த்துவதை விட்டு, எம் அறிவு முதிர்ச்சிக்கு ஏற்ப, தம் அடிப்படையிற்
புதைந்து கிடக்கும் பேருண்மைகளை உணர்த்துவனவாக மாறிவிடுகின்றன. உருவ அமைப்பு, அது சுட்டும் வரலாறு, உருவத்தின் திருக்கரங்களில் விளங்கும் படைக்கலங்கள், கைகள் காட்டும் முத்திரைகள், சிறப்பாக அபய வரதமாக அமைந்திருக்கும் கரங்கள், அவன் அணிந்திருக்கும் அணிகலன்கள் என்பவை
உணர்த்தும் பொருள்கள் திருவுருவங்களை வணங்கும் போது வணங்குவோர் கருத்திற் பதிய வேண்டும். ஏனெனில் இவற்றின் தத்துவம் விளங்கி வழிபடுவது மேலான அருளை வழங்கும் என்பதற்காகவாம். இறைவன் ஊர்பேரற்றவன் குணங்குறியும் உருவமும் அற்றவன். ஆயின் ஆன்மாக்களிடம் பூண்ட அன்பினால் திருவுருவங்களில் உருவாகிக் காட்சி அளித்தருளுகின்றான் என்று முன்னரே இப்பாடத்தில் கூறப்பட்டுள்ளது. இக்காட்சி உருவங்கள் யாவும் கருணை வடிவானவையாம். இறைவனுக்கெனச் சிறப்பாக உரிய ஐந்தொழில்களை நிகழ்த்தி நிற்றலை அறுபத்து நான்கு கோணங்களினின்றும் படம் பிடித்துக் காட்டுபவை இத்திருவுருவங்களாகும்.
சிவாகம விதிப்படி கட்டடங்கள் அமைக்கப்பட்டு, மசுகும்பாபிடேகத்தினால் தெய்வப்பிரதிட்டை செய்யப்பட்டு நித்திய நைமித்திய கிரியைகள் செய்யப்பட்டு வருகின்ற ஆலயங்களில் வேதபாடம் செய்து வைக்கப்பட்டுள்ள ழூயந்திரங்களெலாம் அருட்கருவிகளாம். அவற்றைத் தம்மிடத்துக் கொள்ளாத உருவங்களெல்லாம் வெறுஞ் சிலைகளாம். அவை ஆராதனைக்கேற்ற மூர்த்திகள் ஆகமாட்டா.

ஆலயங்களில் யந்திரமே உயிர்நாடியாக உள்ளது. அதுவே பூசைக்கு இன்றியமையாதது. அதன்மேலுள்ள திருவுருவம் (விக்ரகம்) அருவப் பொருளை அறியமாட்டாத மனத்தின் கவர்ச்சிக்காகவும், மக்கள் மனத்தை ஒருமுனைப்படுத்துவதற்காகவுமே உதவுவது, அதனாற்றான் ஆன்மார்த்த பூசையில் பலர் சிலையின்றி வெறும் யந்திரத்தை மாத்திரம் வைத்துப் பூசை செய்யும் வழக்கம் இருந்துவருகின்றது.

அன்றியும் இந்த யந்திரங்கள் அறிகுறியாகக் காட்டும் உண்மையும் ஒன்றுள்ளது. யந்திரம் முதலில் வரையப்படும்போது அது ஓர் உலோகத் துண்டாய் வெறும் சடப்பொருளாகவே இருக்கும். பின் மந்திரம் முத்திரை பாவனைகளாலும், உரிய கிரியைகளாலும், அது பாடம் பண்ணப்படும்போது, இரும்புத்துண்டு காந்தமாவதுபோல, அச் சடப்பொருள் சிறிது சிறிதாக அருட் கருவியாதற்குரிய பக்குவம் பெற்றுக் கொண்டு வரும். இது சித்பிரகாச ஆவாகனம் எனப்படும். முடிவில் இத்தகட்டில் பூரண உருவேறி யந்திரதாபனமும், பிராணப் பிரதிட்டையும் செய்யப்படும்போது, அது முழுவதும் இறைவனது அருட்கருவியாக மாறிக் கோடி சூரியப் பிரகாசம் பொருந்திய அநுக்கிரக சக்தியை நாற்புறமும் இரவும், பகலும் இடைவிடாது வீசிக்கொண்டே இருக்கும் என ஞானநூல் வல்லோர் கூறுவர், ஆலயங்களில் நடைபெறும் நித்திய ஆராதனைகளால் உண்டாகும் பயன்களில் ஒன்று அங்ஙனஞ் செலவாகும். சக்திக்கு ஈடுகொடுத்து அருளாற்றலை நிறைவு செய்தலாம். இஃது, அன்றாடம் செய்யவேண்டிய அறிமுக ஆவாகனத்தால் நடைபெறும். ஆராதனை இல்லாத யத்திரங்கள் நாளாவட்டத்தில் சக்தி இழந்துவிடும். இதனால் மூர்த்திகரமும் இறங்கிவிடும் என்பது தெளிவாகும்.

ஆகம விதிகளின்படி அபிடேகங்கள் நடைபெறும் கோயில்களில் அங்கு பிரதிட்டை கும்பாபிடேகங்களின் போது பிம்பத்திலும், அதன் யந்திரத்திலும் சேமித்து வைக்கப்பட்டுள்ள தெய்வீக சக்திகளும், வசீகர அருள் அலைகளும் திருமஞ்சனத் திரவியங்களில் தோய்ந்துள்ள சக்திகளால் வீரியம் பெறுகின்றன. ஒவ்வொரு நேரப் பூசை முடிவிலும் சண்டேசுவரர் பூசையும், ழூவிசர்ச்சனமும் செய்யப்படும்போது பிரசன்ன மூர்த்திகள் யாவரும் வெளியேறுவர், அந்நேரம் அங்கு திரண்டிருந்த அருள் முழுவதும் உலக நன்மையின் பொருட்டு நாற்புறமும் நாட்டிற் பரவும்.

(1) சிவன்

சிவனுக்கெனச் சிறப்பாக உள்ள திருமேணிகள் மூன்று அருவம், உருவம், அருவுருவம் என்பனவே அவையாகும்.

அருவத்திருமேனி ஊனக் கண்களுக்குப் புலப்படாதது ; நுண்ணியது, அகக்கண்கொண்டு உள் தோக்கும் யோகிகள் நோக்கிற்கு மட்டும் எட்டுவது. அடுத்து கை, கால் முதலிய உறுப்புக்கள் இல்லாததனால் அருவமாகியும், கண்ணாற் பார்க்கும் பொழுதும், கையாற் தொடும் பொழுதும் உணரத் தக்ககனால் உருவமாகியும், இரு நிலைகளும் விரவப் பெற்றது. இதுதான் அருவுருவமாகும். இவ் அருவுருவத் தோற்றம் இவனுக்கு மட்டுமே அமைந்ததாகும். இதுவே இலிங்கம் எனப்படும். சிவனுக்கு மட்டுமே சிறப்பாக இது உரியதனால். சிவலிங்கம் எனப்படுகிறது. மனம் வாக்குகளுக்கு எட்டாத இறைவனை வாழ்த்தி வணங்கும் பொழுதும், நினைக்கும் பொழுதும், அவனை உணர முற்படுவோருக்கு இலிங்கம் அவனைக் குறிக்கும் அடையாளமாக அவனை உணர்த்தும் கருவியாக விளங்குகிறது.

இலிங்கம் உயரிய தத்துவங்கள் பலவற்றை உணர்த்தி நிற்பது, சிவாலயங்களில் இருக்கும் பிரதான திருவுருவம் ஏவலிங்கமாகும். “லிங்கம்” என்பதில் வரும் “லிங்” லயம் அல்லது அடங்குதல் என்றும், “கம்” தோன்றுதல் என்றும் பொருள்படும், அஃதாவது கலன் தோற்ற ஒடுக்கத்தைக் குறித்து நிற்கும் குறி . அல்லது அடையாளம் ழூசிவலிங்கம் என்று கூறப்படும்.

இலிங்கம் உருவ அமைப்பு இல்லாதது. அருவுருவ வடிவுடையது லிங்கம் சிவத்தையும், பீடம் சக்தியையும் குறிப்பது. “சிவலிங்கம் ஞான மயமாகய பிரணவரூபமாக உள் ளது என்று”? இருமூலர் இருமந்திரம். கூறுகறது.

இலிங்கம் உருவ அமைப்பின்றி இருப்பது. அது எல்லா உலகங்களி னதும், சராசரங்களினதும் தோற்றத்தைக் குறிக்கும். எந்த ஒரு உயிரும் (பிராணியும்) கருவின் தொடக்கத்தில். உருவமில்லாத கட்டியாகவே இருக்கும். எமது பூமியும், ஏனைய ரகங்களும் விண்மீன்கள் முதலிய சகலமுந் தொடக்கத்தில் முட்டை போலவே தோற்றின. அதனாற் ரன் அவை அண்டங்கள் எனப்படுகின்றன. ௮ண்டம் முட்டையைக் குறிப்பது, இலிங்க வடிவம் அண்டமுட்டை வடிவமே என்பது இங்கு குறிப்பிடத் தக்கதாகும்

உருவமில்லாத இறைவன் ஆன்மாக்களுக்கு அருள்செய்யும் நோக்கமாகத் இருமேனி கொள்ளும்போது அருவுருவமா8ய உருவமுண் டாகும். அவ்வருவுருவைக் குறிப்பதே சிலிங்கமாகும்; அப்படியான சிவலிங்கத்தில் சிவபெருமான் சதாசிவமூர்த்தி வடிவினராகத் தியானித்துப் பூரிக்கப்படுவர். இச் சதாசிவத்திலிருந்தே ஈசானம் முதலிய ஐந்து திருமுகங்களும், மற்றும் அவயவங்களும் தோன்றும், ஈசானம், கற்புருஷம், அகோரம், வாமதேவம், சத்தயோசாதம் ஆகிய ஐந்து திருமுகங்களும் ஐந்தொழில்களையுஞ் செய்யுந் தருவருளைக் குறிப்பனவாகும்.

சிவபெருமான் சிவலிங்கத்திலே சரியை வழிபாடு செய்வார்க்கு மறைந்து நின்று அருள் செய்வார். ரியையாளர்க்கும், யோககளுக்கும் அவர்கள் பூசிக்கும்போது தோன்றி நின்று அருள் செய்வார். ஞானி களுக்கு அவர் அன்பே தாமாய் எப்போதும் வெளிப்பட்டு நின்று அருள்செய்வார்.

இலிங்க வகைகள் : சிவலிங்கம் பரார்த்தலிங்கம் அல்லது தாவரலிகம் எனவும். ஆன்மார்த்தலிங்கம் அல்லது இட்டலிங்கம் எனவும் இருவகைப்படும். யாவரும் வழிபடுவதற்காகத் தருக்கோயில்களில் நிலையாகத் தாபிக்கப்படுவது பரார்த்தலிங்கம் அல்லது தாவரலிங்கம் எனப்படும். தானே தோன்றியதாயின் இது சுயம்புலிங்கம் எனவும்படும். தாபிச்சகப்பட்டதாயின் தாபித்தோருக்கேற்பப் பெயர்பெறும். விநாயகர் முதலிய கணர்களால் தாபிக்கப்பட்டது காணலிங்கம் தேவர்களால் தாபிக்கப்பட்டது தைவிகலிங்கம் இருடிகளால் தாபிக்கப்பட்டது ஆரிடலிங்கம்; மானிடரால் தாபிக்கப்பட்டது மானுடலிங்கம். பரார்த்தலிங்கத்தில் சிவபெருமான் சங்காரகாலம்’ வரை சாந்நித்தியராயிருந்து ஆன்மாக்களுக்கு அனுக்கிரகம் செய்வார். ஆதிசைவ மரபில் உதித்து, மூவகைத் தீட்சையும் ஆசாரிய அபிடேகமும் பெற்று, வேதாகமங் கற்று வல்ல ஆசாரியர்களே பரார்த்த லிங்கத்துக்குப் பூசை, திருவிழா முதலியன செய்தற்குரியோர் ஆவர். இனி விசேட தீட்சை பெற்றவர்கள், தாமே சிவலிங்கத் திருமேனியைத் தீண்டி வழிபட்டு இன்புற வேண்டும் என்ற விருப்பத்தால், தமது விசேட. நீட்சாகுருவிடமிருந்து பெற்று, அவரது உபதேசப்படி பூசிக்கும் சிவலிங்கம் ஆன்மார்த்தலிங்கம் அல்லது இட்டலிங்கம் எனப்படும். அது சுவர்ணலிங்கம் படிகலிங்கம், இரத்ததினலிங்கம், சைலலிங்கம் எனப் பலவகைப்படும். ஆன்மார்த்த பூசை ஆயுட்காலம் முழுவதும் செய்தற்குரிய அங்கவீம் பிணி முதலியன இல்லாதவர்களாயும், சிவபூசா விதிகளையறிந்து அனட்டிக்க வல்லவராயும் உள்ளவர்களே முற்கூறிய இலிங்கங்களைப் பிரதிட்டை செய்து வழிபடுவதற்குரியவர்களாவர். ஏனையோர், பூசித்தவுடன் ஆற்றிலேனும், குளத்திலேனும் விடப்படும் சணிகலிங்க பூசையே செய்தற்குரியவர் சணிகலிங்கம் என்பது மண், அரிசி, அன்னம், ஆற்றுமணல், கோமயம்,. வெண்ணெய், உருத்திராக்கம், சந்தனம், சர்க்கரை. மா முதலியவற்றுள் ஒன்றால் சிவலிங்க வடிவாய் அமைத்துப். பூசிக்கப்படுவது.

சிவபெருமானைச் சிறப்பாக அர்ச்சித்தற்குரிய காலங்கள் திருவனந்தற்காலம் ஆகிய மார்கழி, காலைச் சந்திக்காலமாகய தை, உச்சிககாலமாகய சித்திiர் சாயரட்சைக் காலமாகிய ஆடி, அர்த்தசாம. காலமாகிய ஐப்பசி என்னும் ஐந்து மாதங்களுமாம். இவற்றுள்ளும் திருவனந்தற் காலமாகிய மார்கழி மாதம் மிகவும் உத்தமமான காலமாகும். இம்மாதம் முழுவதும் விதிப்படி அர்ச்சிப்பதும், இம்மாதத் திருவாதிரை நாளில் மூலலிங்கத்திற்குச் சிறப்பாக நெய்யாலும், இளவெந்நீராலும் ஸ்நபனகும்பத்தாலும் இருமஞ்சனமாட்டித் இருவூஞ்சல் விழாச் செய்தல் மேலான பலனைக் கொடுக்கும் எனக் கூறுவர்.

சிவபெருமான் திருவருட் சக்தி வடிவமைந்த ஊஞ்சலின்மீதிருந்து ஆடுதல், ஆன்மாக்களுடைய பிறவித் துன்பங்களையும், பிறவிக்குக் காரணமாகிய பாசங்களையும் அறுத்து, ஆன்மாக்களை ஆட்கொண்டு திருவருள் வாயிலாகத் தம்முடன் கூட்டுதலைக் குறிப்பதாம், ௮த் திருவருளாகிய. திருவடியே ஆன்மாக்களுக்கு உறைவிடமாம். என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

இவனது பூசைக்கு உதவும் மலர்கள் தாழம்பூ தவிர்ந்த மலர்களாம். சிவனது விரதங்களையும், அவற்றருலாகும் பலன்களையும் இந் நூலிலுள்ள “சிவ விரதங்கள்” என்ற பாடத்திற் காண்க.

குறிப்பு: எடுத்து வைத்து அலர்ந்த. பூ, நிலத்தில் விழுந்து கிடந்த பூ, பழைய பூ, உதிர்ந்த பூ, அரும்பு, இரவில் எடுத்த பூ, கைச்சீலை, எருக்கிலை, ஆமணக்கிலை போன்றவற்றில் கொண்டுவந்த பூ, காற்றில் அடிபட்ட பூ, புழுக்கடி, எச்சம் – சிலந்தி நூல் – மயிர் என்பவற்றுடன் கூடிய பூ, மோந்த பூ, நீராடாதவர், சிவதீட்சை -பெருதவர் எடுத்த பூ மூதலானவை அர்ச்சனைக்கு ஆகாத பூக்களாகும்.

சிவமூர்த்தங்கள்:

சிவாலயத்திற் பல உருவத். திருமேனிகள் உள. அவையொவ்வொன்றும் உட்கருத்துக்களுடையதாயும், புராணக்கதைகட்கமைய அமைக்கப்பட்டதாயுமிருக்கின்றது, சிவபெருமான் அடியவர்கட்கு அருள் செய்யுமாறு அவர்கள் மனோபாவனைப்படியும், அவ்வருட் செய்கைக்கேற்றதுமான திருவுருவங்களைக் கொண்டவர். அவைகளிலிருபத்தைந்து ஆகம புராணங்களிற் கூறப்படுகின்றன. அவை நடேசர், சந்திரசேகரர், உமாமசேகர்; இடபாரூடர், கல்யாணசுந்தரர், பிட்சாடனர், காமாரி, காலாரி, திரிபுராரி, சலந்தராரி, மாதங்காரி, வீரபத்திரர், ஹரியர்த்தர், அர்த்தநாரீசுரர், கிராதர், கங்காளர், சண்டேசானுக்கரகர், நீலகண்டர், சக்கரப்பிரதர், கயமுகாணுக்கரகர், சோமாஸ்கந்தர், ஏகபாதர், சுகாசீனர், தட்சணாமூர்த்து, லிங்கோற்பவர் என்பன. இவைகளுள் விசேடமாக நடேசர் (சபாபதி), சந்திரசேகரர், சோமாஸ்கந்தர், தட்சணாமூர்த்தி, பிட்சாடனர் முதலிய வடிவங்களைத்தான் அதிகமாய் ஆலயங்களில் காணலாம். ஏனையவை எல்லாம் வைக்கப்படின் ஆலயம் பெரிதாகும். இந்த இருபத்தைந்து மூர்த்தங்களும் மகேசுவர மூர்த்தம் எனப்படும்.

(2) நடேசர்

நடேசர் ஐந்தொழில்களைக் காட்டும் வடிவமாகும். அவரது அனவரத தாண்டவமே எல்லா உலகங்களின் அசைவுகட்கும், செயல்கட்கும் மூலகாரணம். எல்லாழியங்கும் வலிமை அந்த நாட்டியத்திலிருந்தே வருகின்றது. நடராசப் பெருமானே எல்லா நாட்டியங்களுக்கும். தலைவனாவான். அணு முதல் அண்டம் வரை இடைவிடாது அசைந்து கொண்டிருக்க முதற் காரணம் இந்த நடேசர் நாட்டியமே.

தோற்றந் துடியதனிற் றோயுந் திதியமைப்பிற்
சாற்றியிடு மங்கயிலே சங்காரம் – ஊற்றமாய்
ஊன்று மலர்ப்பதத்தே யுற்ற திரோதமுத்தி
நான்ற மலர்ப்பதத்தே நாடு.

நடேசரின் வடிவில் ஒரு திருக்கரம் உடக்கை என்ற வாத்தியத்தைத் தாங்கயுள்ளது. அதிலிருந்து சத்தம் பிறக்கும். சத்தம் ஆகாயத்தில் உண்டாவது. ஆகாயம் பஞ்சபூதங்களில் முதலானதும் அவையெல்லாவற்றுள்ளும் மேன்மையானதுமாகும். ஆகாயத்திலிருந்து வாயுவும், வாயுவிலிருந்து தேயுவும் (நெரும்பு), தேயுவிலிருந்து அப்புவும் (நீரும்), அப்புவிலிருந்து பிருதிவியும் (நிலமும்) பிறக்கின்றன. சத்தப் பிரபஞ்சத் தினின்றும் ஏனைய தோன்றி இவ்வுலகம் தோன்றியதென்பது மேற்கூறியவற்ரால் விளங்கும், உடுக்கையின் ஓசை நாத தத்துவத்தைக் காட்டும். அதிலிருந்தே விந்து தொடக்கம் பிருதிவியீறான முப்பத்துஆறு தத்துவங்களும் பிறக்கும்; அதனாலேயே “தோற்றந் துடியதனில்” எளப்பட்டது. இது இறைவனின் படைத்தல்தொழிலைக் குறிக்கும், “தோயுந் திதியமைப்பில்”, காத்தற் ரொழில் நடராசரின் அபயத்தைக் காட்டும் திருக்கரத்தால் விளங்கும். “சாற்றியிடு மங்கியிலே சங்காரம்” நடேசரின் இன்னொரு கரத்தில் அக்கினி காணப்படுகிறது. அது சர்வசங்காரத்தை (அழித்தலை)க் காட்டும். “நான்ற மலர்ப்பதத்தே நாடு” என்பது தூக்கிய பாதத்தை நாடுவாய் என்பதைக் காட்டுகின்றது. அதாவது தூக்கிய பாதத்தின் கீழடைவதே முத்தியாகும். அது அருளல். ஊன்றிய பாதம் முயலகனெனும் ஆணவத்தை மிதித்தடக்க ஆன்மாவுக்கு மல மறைப்பை உண்டாக்கும்.

(3) சந்திரசேகரர்

சந்தரசேகரராவது உமாதேவியாரை இடப்பாகத்தே கொண்ட போக வடிவம். சடையில் ஒற்றைப் பிறை விளங்கும். அதனாலேயே சந்திரசேகரர் எனப்பட்டார். கலைகள் தேய்ந்து வருந்திய சந்திரனுக்கு அபயங் கொடுத்த கோலம்தான் சந்திரசேகர வடிவம். “வேண்டுதல் வேண்டாமை யிலானடி சேர்ந்தார்க் யொண்டு மிடும்பை யில” என்னுந் திருக்குறள் வாக்கின்படி, இறைவனையடைந்தவர்க்குத் துன்பமேயில்லை யென்பதைக் குறிக்கும் வடிவம் இது. வருந்துமெவர்க்கும் புகவிடம் இதுவென்பதையே இவ்வடிவம் காட்டும். இறைவனைப் புகலிடமாகக் கொண்டவர்க்கு “அஞ்சுவது யாதொன்றுமில்லை அஞ்சவருவதுமில்லை” என்பதை சந்திரசேகரர் சடையிலணியப்பட்ட சந்திரனும் பாம்பும். காட்டும். “பாம்பொடு திங்கள் பகைகூர்த் தாண்டாய்” எனத் தேவாரங் கூறுகிறது. சந்திரன் அமிர்தம்; பாம்பு நஞ்ச. இறைவனுக்கு இரண்டும் சமம். அவனுக்கு விருப்பு வெறுப்பு இல்லை என்பதை அவனிவை இரண்டையும் அணிந்திருக்கும் சந்திரசேகர கோல மூலம் நாம் உணரலாம்.

(4) சோமாஸ்கந்தர்

சர்வலோகங்களையும் தேராயமைத்து ஆரோகணித்து, முப்புரங்களையும் எரிக்கப் புறப்பட்ட கோலம் சோமாஸ்கந்தர் மூர்த்தமாகும். அதனாலேயே தேர்த்திருவிழாவுக்கு இத்திருவுருவ மூர்த்தியை எழுந்தருளச் செய்கின்றனர். இத்திருவுருவம் திருப்பாற்கடலில் யோக நித்திரை செய்யும் மகாவிஷ்ணுவின் மார்பிலெப்பொழுதும் எழுந்தருளியிருந்து அவராற் பூசிக்கப்படுவது. முசுகுந்தச் சக்கரவர்த்தியால் வருந்திப் பெற்றுவந்து பூசிக்கப்பட்டது. இவ்வடிவில் இறைவனும் இறைவியும் அவர்களுக் ஒடையில் கந்தருமிருக்கக் காணலாம். கந்தர் இடையில் இருப்பது ழூசுத்தாத்துவித சித்தாந்தகளின் முத்தி நிலையைக் காட்டுகிறது. “தாயுடன் சென்று பின் தாதையைக் கூடி” எனும் பெரியோர் வாசகம் இதை விளக்குகிறது. ஆன்மா இறைவனின் சத்தியாகிய பெருங் கருணைவசப்பட்டு இறைவனை அடைந்து ஒருபுறம் இறைவனும், மறுபுறம் இறைவியுமிருக்க, வேறு ஒன்றையும் காணாது இறைவனையே சதா தரிசித்துத் தன்னை மறந்து நிற்கிறது. இறைவனும் இறைவியும் ஒன்று ஆகையால், இறைவனையே அன்றி வேறெதையும் அறியாது இறைவனில் ஒன்றுபட்டு நிற்கிறது திருவருள் பதிந்த ஆன்மா என்பதனையே இத்திருஉருவக் காட்சி நமக்கு உணர்த்துகின்றது.

முப்புரமெரித்தல் என்பது. ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களையும் எரித்தலாம்.

“அப்பணி செஞ்சடை யாதி புராதனன்
முப்புரஞ் செற்றன னென்பர்கள் மூடர்கள்
முப்புர மாவது மும்மல காரீயம்
அப்புர மெய்தமை யாரறி வாரே”

எனும் திருமந்திரப் பாடல் இதை விளக்குகின்றது. இறைவன் ஆன்மாக்களின் மலத்தை நீக்கும் பொருட்டுத் தனு, கரணம், புவனம் முதலியவற்றை உண்டாக்க, அவை மூலமாக மலத்தை நீக்குதல் என்பதை சகல உலகையும் தேராக்கி, அதில் சென்று முப்புரமெரித்தார் என்பதிலிருந்தும், அதனால் மூன்று மலங்களும் நீங்கப்பெற்ற ஆன்மா தேரில் வீற்றிருக்கும் சோமாஸ்கந்த மூர்த்தத்தில் கந்தரின் (முருகனின்) நிலையை அடைவதிலிருந்தும் வளங்குகிறது.

(5) தட்சணாமூர்த்தி

குருவடிவம், சனகர், சனந்தனர், சனாதனர், சனற்குமாரர் எனும், பிரமபுத்திரர்களாகிய சீடர்களுக்கும், ஏனைய பக்குவ ஆன்மாக்களுக்கும் கல்லாலமரத்தின் கீழ் ஞான குருவாய் எழுந்தருளியிருந்து, ஞானோபதேசம் செய்யும் வடிவம் ஆகும்.

(6) பிட்சாடனர்

பிட்சாடனப் பெருமான் ஆன்மாக்கள் செய்யும் செப தவ அநுட்டானங்களை ஏற்கும் வடிவம். கருமத்தாலேயே முத்தியடையலாம். அதற்குத் தெய்வாநுக்கிரகம் தேவையில்லையென வாதிட்டு இறைவனை வழிபடாது ஏனைய சகல நற்குண நற்செய்கைகளிலும் நின்ற தாருகாவன முனிவர்களை அடிமைகொண்டு, அவர்களைத் திருத்தித் தெய்வ வழிபாட்டிற் செலுத்தி உய்விப்பதற்காக இறைவன் கொண்ட திருவடிவமே இத்திருவுருவம் ஆகும்.

(2) உமாதேவியார்

மகேசுவர மூர்த்தங்களைவிடத் தேவியின் உருவங்களும் ஆலயங்களில் உள. உமாதேவியார் சிவபெருமானுடைய அருட்சக்கு என்று கூறப்படுவர். உலகத்திலே பிள்ளைகளைப் பெற்று அன்புடன் வளர்த்துக்காத்துவருபவர் தாயார். இதுபோல ஆன்மாக்கள் உய்திபெறும் பொருட்டுப் படைத்தல், காத்தல் முதலிய ஐந்தொழில் நிகழ்ச்சிகளுக்குந் துணையாக உள்ள சிவசக்தியாகிய உமாதேவியார் அம்மை என்றும் உலகமாதா என்றும் போற்றப்படுகிறார். சத்தியாகிய இறைவி பராசத்தி, சிற்சத்தி, இச்சாசத்தி, கிரியா சத்தி, ஞான சத்தி என்னும் ஐந்து சத்திகளாயும் நின்று இறைவனின் ஐந்தொழில்களை நடாத்துவதுடன், ஐந்தொழில்களும் (திருத்திய முன்றுக்கு) ஏற்ப போகசத்து, வீரசத்தி, கோரசத்தி, அதிகாரசத்தி போன்ற வடிவங்களாயும் நிற்பள்.

போகசத்தி பார்வதியம்மையார், வீரசத்தி துர்க்காதேவி, கோரசத்திகாளி, அதிகார சத்தி நாரயணமூர்த்தியை அதிட்டித்து நிற்கும் நாரயணி, அதிட்டித்து நிற்றல்-நிலைக்களமாகக் கொண்டு நின்று நடத்துதலாம்.

போக சத்தி. சகல உலகங்களையும் ஈன்றளித்து காப்பாற்றியநுக்கிரகிப்பவள், வீரசத்து, மகுடாசுர சங்காரத்தில் ஈடுபட்ட கோலமாய் சகல வெற்றிகளுக்கும் இருப்பிடமாய் இருப்பவள். கோரசத்தி பயங்கரமான உருவமுடையவளாய் வினைகளை அழித்து ஆன்மாக்களை ஈடேற்றும் சங்கரியாவாள். அதிகார சத்தி துட்டரை அடக்கிச் ழூசிட்டரைப் பாதுகாத்து நிற்கும் திதித் தொழிலுடையவளாவாள்;.

சிவலிங்க வடிவில் தியானித்துப் பூசிக்கப்படும் சதாசிவ மூர்த்தியின் சத்தி மனோன்மணி எனப்படுவாள். இச்சத்து பக்குவான்மாக்களுடைய மலத்தை நீக்கி, சத்திநிபாதத்தை அருளி, அவ்வான்மாக்களைச் சிவத்தோடு சேர்ப்பவள். இவ் அம்மை நான்கு திருக்கைகளை உடையவள். ஒரு திருக்கையில் தாமரைப் பூவையும், மறு திருக்கையில் செபமாலையையும் தாங்கயுள்ளாள். மற்றிரு திருக்கைகளில் ஒன்றினால் அபயமும், மற்றதனால் வரதமும் காட்டுகிறாள். அபயம் காட்டும் கை வலக்கை, இது தம்மை அன்புடன் வழிபடும் அடியவர்களுக்கு உலகத் துன்பங்களை இட்டுப் பயப்பட வேண்டாம் என்று ஆறுதலை அளிக்கும் பாவனையில் அஞ்சேல் என்று காட்டுவதாக உள்ளது.

(அ + பயம் =அபயம் – பயத்தை நீக்குவது) அடுத்து வரத முத்திரை பொருந்தியது இடக்கை. இது ஞானமயமாகிய தம் திருவடியைக் காட்டி இதைத்தருவோம் பெற்றுக்கொள் என்ற குறிப்பினைக்காட்டி நிற்கும்.

சிவம் சத்தியோடு கூடி உலகப்படைப்பு முதலியன நிகழும்படி சங்கற்பித்தலே உலகத்தோற்றம், முதலிய நிகழ்ச்சிகளுக்குக் காரணமாகையால், அச்சங்கற்பமே சிவம் சக்தியோடு கூடியிருத்தல் எனவும், அச்சங்கற்பம் இல்லாமையே பிரிதல் எனவும் சைவச் சிறப்பு நூல்களாகிய சிவாகமங்கள் கூறும். நெருப்பில் சூடும், மலரில் மணமும், சூரியனில் ஒளியும் போலச் சிவபெருமான் கருணை வடிவான சத்தியுடன் பிரிவின்றி இருத்தலாகய வல்லமையே சிவசத்தியாகய அருட்சத்தியாகும். இச்சத்தியைப் பெண்பாலாகத் தம் இடப்பாகத்தில் இறைவன் வைத்த காரணத்தை,

“தென்பா லுகந்தாடுந் தில்லைசிற் றம்பலவன்
பெண்பா லுகந்தான் பெரும்பித்தன் காணேடீ
பெண்பா லுகந்திலனேற் பேதாய் இருநிலத்தோர்
விண்பா லியோகெய்தி விடுவர்காண் சாழலோ”

என்ற மணிமொழியார் திருவாசகத்தால் அறிந்துகொள்ளலாம்,

இத்தன்மையளான உமையம்மை| அங்கயற்கண்ணி;, மீனாட்டு, காமாட்சி, இராசராசேசுவரி, புவனேசுவரி, மகேசுவரி, நாகேசுவரி, காளி, மாரி முதலிய பெயர்களுடனும் வேறுபல பெயர்களுடனும் சைவ உலகில் பிரசித்தமான கோயில்களில் இடங்கொண்டிருக்கின்றாள். இத்தகைய அம்மை வடிவங்களை வழிபடும் அன்பர்களுக்கெல்லாம் அருள்கொடுப்பவரும் உமாமகேசுவரராயே சிவபெருமானே ஆவார். அவர் அம்மையானவள் தாங்கும் இத்திருவுருவங்களில் அதிட்டித்து நின்று அருளினைப் பாலிப்பார். “உடையாள் நடுவுள் நீயிருத்து” என்ற திருவாசக அடியை ஆராயின் இதன் உண்மை தெளிவாகும்.

அம்மையின் திருக்கோயிலை வழிபடும் முறை:

அம்மையாருக்குத் தனியாக உள்ள திருக்கோயிலுக்குச் செல்வோர், இதிற் கூறப்படும் முறையில் வழிபடுதல் ஆலய வழிபாட்டு ஒழுங்காகும்.

சிவசந்நிதிக்குச் செல்லும் ஆசார ஒழுங்கு முறையில் கோயிலினுள்ளே சென்று பலிபீடத்திற்கு இப்பாலே நான்கு முறை விழுந்து கும்பிட்டெழுந்து, இரண்டு கைகளையும் குவித்துக்கொண்டு, நான்கு தரத்திற்குக் குறையாது இரட்டை எண்கள் வர வலஞ் செய்து, மீண்டுஞ் சந்நிதியை அடைந்து துவாரபாலகிகளைக் கும்பிட்டு, அநுமதி பெற்று உள்ளே புக வேண்டும். உள்ளே புகுந்து விக்கினேசுவரரைத் தரிசித்த பின் தேவி சந்நிதியை அடைந்து ஆதி சைவரைக் கொண்டு அர்ச்சனை செய்வித்து வணங்க வேண்டும். பின்னர் விபூதி, குங்குமம் முதலியன வாங்கித் தரித்துக்கொண்டு மகேசுவரி, வாமை முதலிய சத்திகளையும் விநாயகர், சுப்பிரமணியர் முதலான மூர்த்திகளையும் தரிசித்துச் சண்டேசுவரி சந்நிதியை அடைந்து கும்பிட வேண்டும். அங்கு கும்பிடும் போது மூன்று முறை கைகொட்டித் தேவி தரிசன பலனைத் தரும் பொருட்டுப் பிரார்த்தித்து வலம் வந்து தேவி சந்நிதியை அடைந்து நான்கு முறை வணங்க எழுந்து, தனியாக ஓர் இடத்தில். அமைதியாக இருந்து தேவி மூலமந்திரத்தை இயன்ற மட்டுஞ் செபித்தல் வேண்டும். இவையாவும் முடிந்த பின்னர் அம்மையை மனதினில் நினைந்தபடி, சந்நிதியைப் பார்த்தபடியே தேவிக்குப் புறங்காட்டாது வெளியே வந்து வீட்டுக்குத் திரும்புதல் வேண்டும்.

சூரியன் கர்க்கடககத்தை அடைவது ஆடி மாதத்தில், இந்த ஆடிமாதத்தில் வரும் ஆடிப்பூரம் உமையம்மைக்குரிய நாளாகும், பெரும்பாலான ஆலயங்களில் இந்நாளில் அம்மைக்குத் தேர்த் திருவிழா நடைபெறும். இந்நாள் பூசை நோன்புகள் சர்வசாந்தியையும், சகல சித்திகளையும், சுகத்தையும், புண்ணியத்தையும் கொடுக்கும் எனக் கூறுகிறது திருப்போரூர்ப் புராணம்,

அம்மையின் அர்ச்சனைக்கு அறுகும், நெல்லியும் தவிர்க்கப்பட்ட பத்திரங்களாகும்.

அம்மையையே வழிபடு (உபாசனா) கடவுளாகக் கொள்பவர்கள் சாக்தர் எனப்படுவர்.

பொது

திருக்கோவில்களில் விநாயகர், வைரவர், வீரபத்திரர், சுப்பிரமணியர் என்னும் நான்கு சிவகுமாரர்களின் திருவுருவங்களும் உள. இந்நால் வரும் அடியார்கள் ஈடேறும் பொருட்டு இறைவன் கொண்ட கோலங்களாகும். முன்னர் கூறப்பட்ட இருபத்தைந்து மகேசுவர வடிவங்களும், இந்நான்கும் இறைவன் சுத்தமாயாதத்துவத்திற் கொண்ட வடிவங்களே. இறைவன் ஒருவரே அடியார் வேண்டுகோளுக்கேற்பப் பல கோலங்களோரடு நின்று அருள் செய்பவர். தோற்றம் வேறுபடினும் உள் நிற்பது ஒன்றே, இவ்வடிவங்கள் எல்லாம் ஆன்மதத்துவமாகய இருபத்து நாலாம் தத்துவத்தின் மேலுள்ள சுத்தவித்தியா தத்துவங்களில் எடுக்கப்படுவன. இறைவன் முப்பத்தாறு தத்துவங்களுக்கும் மேலானவர். தத்துவம் எல்லாம் சடப்பொருள்களே.

(8) விநாயகர்:

விநாயகர் சிவபெருமானது சக்தி அம்சமாகத் தோன்றிய ஒரு மூர்த்தமே. அதனால் இவர் சிவகுமாரர் என்றுஞ் சொல்லப்படுவர், ஆயின் இவர் சிவத்தின் வடிவினரேயன்றிச் சிவத்தின் வேறல்லர்.

உலகங்கள் முதற் தோன்றுதற்கு முதற் காரணமாயுள்ளது மகா மாயை அல்லது பிரணவம் எனப்படும். அதற்குத் தலைமையாய் இருக்கும் சிவசத்திக்கும் விநாயகர் என்று பெயர். தனக்கு மேலான ஒருவர், தலைவர் இல்லாதவர் என்ற பொருளை உணர்த்துவது விநாயகர் என்னும் பெயர். நாம் எடுக்கும் எக்கருமமும் இடையூறு இன்றி இனிது முடிதற் பொருட்டு விநாயகர் அருளை வேண்டி வணங்குதல் தொன்று தொட்ட மரபாகும். தம்மை அன்பால் வணங்கும் அடியவர்களுக்கு விக்கினங்களை (இடையூறுகளை) நீக்குங் கடவுளாதலின் விக்கனேசுவரர் எனவும் இவர் போற்றப்படுவர். தன்னை அடைந்தோர்க்கு ஞானத்தினால் மோட்சத்தைக் கொடுக்கும் சிவசொரூபி என்றதனால் கணபதி என்ற பெயரும் பெறுவர். (க £ ண £ பதி – கணபதி க – ஞானம்;, ண – மோட்சம், பதி – தலைவர்). மேலும் மனித உடலின் மூலாதாரத்தில் அதன் அதிதெய்வமாக இருந்து குண்டலினி சத்தியை நடத்துபவராக இருப்பவர் கணபதி என்றும் யோகசாத்திரம் கூறும்.

விநாயகர் பிரணவ வடிவினர் பிரணவம் வட்டவடிவைக் குறிக்கும்; இயற்கை அசைவுகளெல்லாம் வட்டமானவையே. வட்டத்துக்கு முடிவு இல்லை. வேறெந்த வடிவுக்கும் முடிவு உண்டு. இவர் பிரணவ வடிவினராக இருப்பது சகலமுந் தோற்றுவதற்கு முதற் காரணர் என்பதை விளக்கும். “கணபதி” என்ற பெயர் மூலப்பொருகள்களுக்குத் தலைவன் என்ற பொருளையும் உணர்த்துவதாகும். இப்பெயரும் முதற்காரணரென்பதை விளக்குகின்றது.

வேதமானது சிவபெருமானை முதல், இடை, கடைகளில் பிரகாசப்படுத்துகின்றது. அது முதலில் “ஓம்” என்று தொடங்குகின்றது. இந்த “ஒம்” பிரணவம் என்று சொல்லப்படுவது. இதன் வடிவமே விநாயகக் கடவுள். வேதத்தின் முதல் எழுத்து விநாயகரது சுத்தஞான வடிவம் என்பதை விநாயகரது திருவுருவமே உணர்த்துகின்றது. இதனையே “கைவேழமுகம்” என்று பெரியோர் கூறுவர். மேலும் “முந்தை வேத முதலெழுத்தாகிய எந்தை” எனவும், “மூலமொழிப் பொருளா மெந்தை” எனவும் தாரகப் பிரமமான மாக்கய முகத்து வள்ளல் எனவும், கந்தபுராணம் கூறுவதும் இதனையேயாம். இது பற்றியே விநாயகரை முதலில் வழிபடும் மரபு போற்றப்பட்டு வருகின்றது. சிவபெருமான் அவருக்கு அருளிச் செய்ததும் இதுவே என உண்மை நூல்கள் கூறுகின்றன.

பிரணவத்தின் வரிவடிவம் முதற்பகுதி நட்சத்திர வடிவம் என்றும் இரண்டாம் பகுதி தண்டவடிவாக அமைந்திருப்பதாகவும் காமிக ஆகமம் கூறுவதாகக் கூறுவார். எனவே இவ்விரண்டு உறுப்புகளும் (0£¡-உ) கலந்த வடிவம் ஊமை எழுத்து என்றும், மூலமனு என்றும், பின்ளையார் சுழி என்றும், மௌனாக்கரம் என்றும் கூறப்படும். இப்படிப் பலவாறாகக் கூறப்படும் பிள்ளையார் சுழியாகி “உ” என்னும் எழுத்து நாத விந்துக்களின் வரிவடிவாம். “உ” என்ற அடையாளத்திலுள்ள வட்டம் (0) விந்து-சதீ இமையும், கோடு (-) நாதம் சிவத்தையும், அதாவது சிவம் சத்து ஆகிய இரண்டையும் அடக்கியுள்ளது. “மோனமே குறியாதா முதலெழுத் தருளிய” என்ற கந்தபுராணத்தாலும், “கண்டன வெலாமோன வுருவெளிய தாகவுங் கருதியஞ் சலிசெய்கு வாம்” என்ற தாயுமான சுவாமிகள் பாடலாலும் உணரப்படும்;.

விநாயகர் பிரணவ வடிவினர் என்பதைக் காட்டுவதற்காகவே மோதகம், தேங்காய், மாதுளம்பழம் முதலிய வட்டப் பொருட்கள் நிவேதிக்கப்படுகின்றன. இன்னும் அவர் சத்துவகுணத்தினராகையால் பால், தேன், சர்க்கரை, பருப்பு, அவல் முதலிய பதார்த்தங்கள் நிவேதிக்கப்படுகின்றனவாம்.

கயமுகாசுரன் என்பவனாற் செய்யப்பட்ட கொடுமைகளை அடக்கத் தேவர்களை மீட்டு, அவ் அசுரனை ஆட்கொள்ளுவதற்காக இறைவன் கொண்ட திருக்கோலமே விநாயகராவார்.

விநாயகர் யானை முகம், பருத்த தொந்தி, மூன்று திருக்கண், இரண்டு திருவடி, இருந்த பாவனை கயமுகாசுரனைக் கொல்ல முரித்த கொம்பும், அங்குசமும் (யானைத் தோட்டி) தங்கிய வலதுகைகள் இரண்டு, பாசமும் மோதகமும் தாங்கிய இடது கைகள் இரண்டு) துதிக்கை ஆகிய ஐந்து திருக்கைகள் கொண்ட திருக்கோலத்தில் பிருச்சானி. ஊர்தியில் (வாகனத்தில்) அமர்ந்திருத்தலையே தம் திருவுருவமாகக் கொண்டவர்.

இயற்கையான யானைக்குத் தொந்தி வயிறு இருப்பதில்லை. ஆயின் சகல அண்டங்களும், சராசரங்களும் ஓங்காரமென்னும் பிரணவத்துள் அடங்குவதால், அவ்வடிவினராகிய யானைமுகப் பிள்ளையாருக்குத் தொந்தி வயிறு (தாழி வயிறு) அமைந்திருப்பது இயல்பாகின்றது, இருக்கண்கள் மூன்றும் இச்சை, உரியை, ஞானம் ஆகிய மூன்றையும் குறிப்பனவாம். பரஞானத்தால் எத்னையும் காண வேண்டும் என்பதைக்குறிப்பது நெற்றிக்கண். அவர் தோற்றத்தில் காணும் விரிந்த காதுகள் அன்பார்கள் கூறுவதைக் கேட்கும் ஆவல் உடையவர் என்பதைக் காட்டுவதாகும்.

கயமுகசங்காரத்தின் பொருட்டு முரிக்கப்பட்டதாகிய ஒற்றைக்கொம்பை ஏந்தி நிற்பது ஆணவம், கன்மம், மாமை ஆய மும்மலங்களையும் நீக்குபவர் தாம் என்பதை அடியவர்க்கு அறிவித்தற்காகவாம்.

ஆன்மாக்களை அநாதியே பந்தித்த ஆணவ மலமாகிய யானையைப் பாசமென்னும் கயிற்றாற் கட்டி அங்குசத்தால் அடக்கி, மறைத்தல் என்னுந் தொழிலைச் செய்பவர் தாம் என்பதை உணர்த்துவதற்காகவே பாசாங்குசங்களை ஏந்தியுள்ளார்.

ஆணவ வடிவமான கயமுகனுடைய சேனைகளைப் பாசத்தாற் கட்டி, கணிச்சியால் ( கோடரியால்) அடக்கி, அவனது மலவலி கெட்டப் பெருச்சாளி வடிவமாக வர, அவனுக்கு நீங்காத ஞானத்தைக் கொடுத்துச் சுத்தனாக்கித் தனது வாகனமாகும் பேற்றினைக் கொடுத்து அடிமை கொண்டதனால், ஆணவம் என்ற மதங்கொண்ட யானையை அடக்கி ஆன்மாவை அடிமை கொண்டவர் இவர் என்பது இனிது விளங்கும்.

விநாயகரைப் பூசித்துப் பெறற்கரும் பேறுகளும், தெய்வப் புலமையும் பெற்ற பிற்காலத்து ஒளவையார் பாடிய விநாயகர் அகவலில் வரும் “கோடா யுதத்தால் கொடுவினை களைந்து” என்ற அடியாலும் “கண்ணிலான வெங்கரி பிடித்தடக்கிக் கரிகினேற் குருகையுமாக்கும்” என்ற தணிகைப் புராணத் திருவாக்காலும் அறிந்து கொள்ளலாம்;.

பிள்ளையாருக்குரிய நிவேதனப் பொருள்களாகிய அவல், பொரி, பெரியகடலை போன்றவை வறுபட்டு முளை இழந்த விதைகளைக் குறிப்பன. இவை விநாயகருக்கு நிவேதிப்பது விநாயகரை அண்டித் தம்மை அர்ப்பணிப்போருடைய வினைப்பயன்கள் வறுபட்டுப் பிறவித் துன்ப முளை இழந்து பேரின்பம் இடைக்கும் என்பதைக் காட்டவேயாம்.

மேலும் அண்டங்கள் கோழி. முட்டை வடிவின முட்டைக்கு அண்டம் என்பது இன்னோர் பெயராகும், இப்பெருமானுக்குரிய இன்னொரு நிவேதனப் பொருளாகிய மாதுளம் பழப் பருப்பு ஒவ்வொன்றும் ஒவ்வொரு ஏறு முட்டை வடிவான தனித்தனி அண்டமாகவும், நூற்றுக்கணக்கான அப்பருப்புகளை அண்டங்களாகக் கொண்ட மாதுளங்கனி ஒவ்வொன்றும் அகிலாண்டமாகவும் உருவகப்படுத்திக் கூறப்பட்டிருப்பது அறிந்து நினைந்து நினைந்து வியக்கத் தக்கதாகும்;.

பத்து நெறி, ஞான நெறி ஆகிய இரண்டிலும் மிக இன்றியமையாத சாதனம் மனத்தாழ்மை ( பணிவு) ஆகும் “நான்” என்ற அகங்காரம் அற்ற நிலைமை இதுவாகும், மற்றெல்லா மூர்த்திகளுக்கும் நிலத்தில் விழுந்த இலைகளும், பூக்களும் – உதவாதனவாகும். ஆயின் பிள்ளையார் விரும்புவது யாவரும் மிதித்து நடமாடும் புல்லாகிய அறுகாகும். தன்னை அண்டி வழிபடுவோர்க்கு எளிதில் வந்து இன்பம் விழைக்கும் பேற்றை அளிப்பர் என்பதைக் காட்டுவது இதுவாகும்;

அர்ச்சனை செய்யும் அறுகு, ஒரே காம்பில் மூன்று கவருடையனவாக இருத்தல் வேண்டும். இம் மூன்றும் ஊசி முனையாகவும் இருக்கும். அல்லது அடியில் ஒன்று சேர்ந்து இருக்கும். எடுத்த காரியங்களில் விக்கினமின்றி வெற்றிபெற விரும்புவோர் மனம், வாக்கு, காயம் ஆகிய மூன்றையும் கூர்மைப்படுத்த வேண்டும் என்பதையும், இம் மூன்றையும் ஒற்றுமைப்படுத்து அடக்கமாக ஒரே சிந்தனையில் (ஏகாக் கிரக சித்தம்) வைத்திருக்கவேண்டும் என்பவற்றைக் குறிப்பன இதன் விளக்கம்.

பிள்ளையாரை வழிபடும்போது மூன்றுமுறை குட்டிக் கீழே குந்தி எழுவதும், மனம், வாக்கு, காயம் ஆகிய மூன்றையும் குட்டி அடக்கி ஆள்வதையே குறிக்கும். குலைந்துபோன முப்புரிநூல் ஊசிக்காதுக்குள் புகாததுபோல, சிதறுண்ட மனமொழி மெய்கள் காரியசித்தி கொடாமல் விக்கினங்களை உண்டுபண்ணி விடுவனவாம்.

துளசி, தவிர்ந்த மலர்கள் விநாயகர் பூசைக்கு உகந்தனவாம், விநாயகர் விரதம்பற்றி இந்நூலிலுள்ள “விரதங்கள்” என்ற பாடப் பகுதியில் கூறப்பட்டுள்ளனவற்றைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்,

வைரவக் கடவுள்

வைரவக் கடவுள் சத்துவ குணத்தில் தாமத குணத்தர்;. அவர் சங்காரருத்திரரெனப்படுவர். சகல தத்துவ சம்பந்தங்களையும் சங்கரித்து ஆன்மாக்களை ஈடேற்றுங் கோலமே அவரது வடிவம். அவரது உருவம் சுத்த நிர்வாணமாயிருக்கும். அவ்வுருவத்துக்கு உடை தரிப்பதேயில்லை. உலகப் பற்றை விடினும், உடற் பற்றை விடல் சிறிது கடினம். உடல் பற்று இருந்தால் உடையில்லாதிருக்க முடியாது, அந்தப் பற்றினையும் வீடு என்பதே அவருடைய வடிவம் காட்டுவது. வினை விழும்போதுதான் உடம் பற்று அழியும், அவைகளை அழிக்குங் கோலம் தன் கோலமாகையால், தாமதகுணத்தைக்காட்டும் கோரவடிவையுடையவராக இருக்கின்றார். பிரம விஷ்ணு முதலிய தேவர்கள் இறைவனை மறந்து தருக்குற்ற காலத்தில் அவர்களைத் திருத்துவதற்காசுக் கருணை கொண்டு, கருணையிற் கோபவடிவாய்ச் சென்று, பிரமனது ஒரு சிரசை நகத்தாற் கிள்ளி ஏனைய தேவர்களின் இரத்தத்தை அவர்களின் தருக்கடங்கும் வரையும் கவர்ந்து, அவர்களை ஆட்கொண்ட கோலம் வைரவ மூர்த்தம் ஆடும்.

சிவத்தினின்றும் தோன்றிய காரணத்தால் இவர் சிவகுமாரர் எனப்படுவர். ஆயினும் சிவத்தின் வேறாகாத சத்தி வடிவமே அவர் ஆவர்.

இவரது வாகனம் வேத வடிவமே நாய் ஆகும். அவரை வணங்கும் Nபுhது எங்களுடைய அகந்தைமை நீக்கிக் காத்தருளும்படி வேண்டுதல் செய்கிறோம்.

வைரவக் கடவுளைப் பின்பற்றும் பரிவராங்களும், சிறு தெய்வங்களும் வைரவ நாமமுடையன. அவைகள் பல வைரவ நாமங்களோடு சிறு கோவில்களில் வைக்கப்படுகின்றன. அவைகளாலியன்ற நன்மைகளை அவைகள் தாமே செய்வதாயினும். இறைவனருளே அங்கும் நிற்கும் என்பது தேற்றம்.

இரவு ழூபள்ளியறை மூடியவுடனே வைரவருக்கு வழிபாடியற்றி அவருடைய பரிவாரங்களாகிய வேதாள கணங்களுக்குப் பலிபோடப்படுகின்றது.

“ஊரின் பாதுகாப்புப் பொருட்டும், பிணிநீக்கத்தின் பொருட்டும், துன்ப நீக்கத்தின் பொருட்டும் பாயாசன்னத்தால் பலி சமைக்கவேண்டும் என்பது ஆகம வாக்யம், அதன் பின்னர் பள்ளியறை முத்திராதண்டம் வைரவரிடம் ஒப்படைக்கப்படுகிறது. முத்திரதண்டத்தை வைத்திருப்பதால் வைரவர். ஆலயக் காவலாளர் என்றும், அவர் துடியாயுள்ள ஆலயங்களில் திருடருக்கு உயிராபத்து என்றும் கூறப்படும். அவரிடம் ஒப்படைக்கப்படுவது முத்திரைக் கோலேயன்றி, ஆலயத் இறவுகோல்கள் அல்ல முத்திரைகள். பூட்டுக்களுக்கு கவசமே அன்றி வேறல்ல. அதனால் ஆலயத்துக்குக் காந்தக் கவசமாக உள்ள சூக்கும நிலையை இராக்காலங்களில் வலி மீறி நிற்கும் அசுரர்கள் பாதியாமல் பாதுகாப்பதே வைரவர் வேலை எனக் கொள்வது முறையாகும்.

ஆகவே காலையில் ஆலயத் திருக்கோவில் பூசை அருட்பணிகள் தொடங்குமுன் முத்திரைக் கோலைக் கைக்கொண்டுள்ள அவருடைய அநுமதி இன்றியமையாததாகின்றது. அதனால் ஆகமங்களிலும் சேத்திரபாலர் அநுஜ்ஜையே (திருவுள்ளம் பற்ற வேண்டுதல்) காலையில் செய்ய வேண்டிய முதற் கிரியையாக விதிக்கப்பட்டுள்ளது. அவரை ஆராதித்து அவரிடமிருந்து முத்திரைக் கோலைப் பெற்றுப் பள்ளியறையைத் திறந்த பின்னரே மூர்த்திகள் சாந்றநித்தியம் பெறுவர். பரிவார தேவதைகள் தொழிற்படுவர். அருட்தொழிலும் தொடங்கும். ஆலயமும் ஆராதலைக்குத் தகுதி பெறும்.

வைரவக் கடவுளின் தோற்றம் செஞ்சடையும், முக்கண்ணும், நீலநிறத் திருமேனியும், சூலம் – பிரமகபாலம், பாசம் – உடுக்கு ஆகியவைகளைத் தரித்த நான்கு திருக்கைகளும்; வச்சிர தந்தங்களும், கோபக் குறிப்போடு கூடிய சிரிப்பும், வேதமாகிய நாய் வாகனமும் கொண்ட கோரமூர்த்தமாகும்.

வைரவ விரதங்கள் மங்கலவார விரதம், சித்துரைப் பரணி விரதம், ஐப்பசிப்; பரணி விரதம் என மூன்றாகும். தைமாசத்து முதற் செவ்வாய்க்கிழமை தொடக்கம் ஒவ்வொரு செவ்வாயும் வைரவக் கடவுளைக் குறித்து அனுட்டிக்கும் விரதம் மங்களவார விரதமாகும். சித்திரைமாத பரணி நட்சத்திரத்தில் வைரவரைக் குதித்து அநுட்டிப்பது சித்திரைப் பரணி விரதமாகும்.

ஐப்பசிப் பரணி நட்சத்திரத்துலே வைரவக்கடவுளைக் குறித்து அநுட்டிக்கும் விரதம் ஐப்பசிப் பரணி விரதமாகும்.

வைரவக்கடவுளின் பூசைக்குரிய பூக்கள் நந்தியாவர்த்தம் தவிர்ந்த ஏனைய பூக்களாம். இவருக்கு நிவேதனமாக வடைமாலை சாத்துவது வழக்கம்.

ஆலயத்துள் கடைசியாகச் செய்யப்படும் நிர்மல வைரவருடைய தரிசனம் ஆன்மாவின் விடுதலையைக் குறிப்பிடுவது. அதன் பின்னர் அடியார்கள் வெளியே வந்து கொடிமரத் தண்டை அமைதியாக இருந்து செபம் செய்யவேண்டும். ஈற்றில் விழுந்துவணங்கி வீட்டுக்குப் புறப்படவேண்டும். அடியார்கள் புற உலகில் புகவும் மேட்டுநீர் பள்ளத்தை நோக்கி விரைந்தோடுவதுபோல அவரிடம் தோய்ந்திருக்கும் அருள்மணமும் வேகமாக வெளியே ஈர்க்கப்படும். அங்ஙனம் குளிர்காற்றில் அகப்பட்ட வெந்நீர் போன்று அதன் வேகம் விரைவாக விரயமாகிப் போகாமல் தம்மிடம் ஒடுங்கி நின்று. வெகுநேரம் வேலை செய்யும் பொருட்டே, கொடிமரத்தண்டை தியானமும் கவச மந்திரமும் விதிக்கப்பட்டுள்ளன. சுடு நீரை வெந்நீர்க் குப்பியில் (வுhநசஅழள குடயளா) அடைத்துச் சேமிப்பது போன்றது. உண்மையான பக்தியுடன் ஆலயம் தொழும் அடியார்களுடைய உடம்புகளைச் சுற்றி ஒரு அருளொளிப் பிரபா மண்டலம் அங்கு ஏற்படும். அவர்கள் வெளிவரும்போது அதன் ஒளியில் ஈடுபட்டுத் திழைத்து நிற்கும் பூதகணங்கள் (யேவரசந ளுpசைவைள) அவரோடு கூடவே வரும். அவரை விடை கொடுத்து ஆலயத்துள் அனுப்புவதற்காகவே வெளிவாயிலில் வந்து அடியார்கள் சிறிது நேரம் அமர்ந்து அவர்களை வழியனுப்பிக்கொள்ளும்படி, ஆகமங்களில் விளக்கப்பட்டுள்ளன. அந்த அமர்வு இப்போதும், நடைபெறுகின்றது ஆனால், அது இக்காலத்தில் பழம், சுண்டல் போன்றவை உண்பதற்கேயன்றி மேற்கூறிய காரணம் கொண்டல்ல என்பதும், அதன் காரணம் அறியப்படாது இருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

(10) முருகக்கடவுள்

முருகன் தமிழ்க் கடவுள் தமிழர் கடவுள், பழந்தமிழ் நூல்கள் நிலத்தினை நான்கு பகுதிகளாகப் பிரித்து, ஒவ்வொரு பகுதிக்கும் உரிய கடவுளரையும் குறித்துள்ளன. அதன்படி, மலையும் மலைசார்ந்த பகுதியுமான குறிஞ்சிநிலக் கடவுள் முருகன் ஆவார். அதனால் முருகனைக் குறிஞ்சிக்கழவன், மலைகூழவோன் எனத் தமிழ் நூல்கள் கூறும்.

“முருகு” என்ற சொல் இளமை, மணம், அழகு தெய்வம் என்றெல்லாம் பொருள்படும். இதற்கு முருகன் “என்றும் இளையோன்” எனப் பாராட்டப்பட்டுள்ளதே சான்றாகும். முருகன் பற்றிய வரலாற்றைப் பழந்தமிழ் நூல்கள் ஒருவாறு கூறுகின்றன. கந்தபுராணமாய பிற்கால நரல் பிறிதொருவாறு கூறுகின்றது.

இப்போது யாவராலும் கொள்ளப்படும் வரலாறு கந்தபுராணமாகிய நூலில் கூறப்பட்ட வரலாறே அது, சூரபதுமன் முதலிய அசுரர்களின் கொடுமைகளுக்கு ஆற்றாத தேவர்கள் சிவபிரானிடம் முறையிட, அவர் தமது அபேதமுகத்தோடு கூடிய ஆறு திருமுகங்களினின்றும் ஆறு தீப்பொறிகளைத் தோற்றுவித்தனர். அவரது ஆணைப்படி அந்த ஆறு பொறிகளை வாயுவும் கூயும் ஏந்திச் சென்று கங்கையில் விட்டனர். கங்கை தன் பக்கலில் இருந்த சரவணப் பொய்கையில், கடப்ப மர நிழலில் அப் பொறிகளை விட்டது. அப்போது ஆறு பொறிகளும் ஒரு குழந்தை உருவம் கொண்டன. தேவர்களின் கட்டளைப்படி கார்த்திகை மாதர் அறுவரும் தாம் தாம் அக்குழந்தைக்குப் பால் கொடுக்க விரும்பினர். அம்மாதர்களை மகிழ்விக்க அந்த ஒரு குழந்தை ஆறு குழந்தைகளாகத் திகழ, அவர்கள் அக்குழந்தைகட்குப் பால் ஊட்டினர். பின்னர் சிவன் உமையுடன் கங்கைக்கு வந்து, குழந்தைகளைத் தேவிக்குக் காட்டத் தேவி ஆறு குழந்தைகளையும் ஒன்று சேர்த்துக் கையால் எடுத்தணைக்க, ழூஆறு இருமுகங்களும் பன்னிரண்டு இருக்கரங்களும் கொண்ட ஒரு குழந்தையாக உருவெடுத்துப் பொலிந்தார் முருகக்கடவுள்.

இவர் ஒரு குழந்தையாகச் சேர்க்கப்பட்ட காரணத்தால் கந்தன் என்றும், அக்கினியின் கரத்தால் ஏந்தப்பட்டதால் அக்கனி பூ என்றும், கங்கையில் வளர்ந்தமையால் காங்கேயன் என்றும், சரவணப் பொய்கையில் தோன்றியதால் சரவணபவன் என்றும், கார்த்திகைப் பெண்களிடம்பாலுண்டமையால் கார்த்திகேயன் என்றும், கடப்பமர நிழலில் பள்ளி கொண்டதால் கடம்பன் என்றும், விசாகநாளுக்குரியராகத் தோன்றியதால் வீசாகன் என்றும், ஆறு முகத்துடன் விளங்கியதால் ஆறுமுகன் சண்முகன் என்றும், இளமையும் அழகும் கொண்டு திகழ்ந்ததால் முருகன்-குமரன் என்றும், மருவும் அடியவர் மனதில் உறைவதால் குகன் என்றும், இனிமையான பேரின்பத்தில் மேலான ஞானவிருப்பினைத் தன் அடியவர்க்கு அருள்பவன் ஆனபடியால் சுப்பிரமணியன் என்றும், பிரணவப் பொருளைச் சிவபெருமானுக்கு உபதேசித்தமையால் சிவகுருசாமிநாதன்-குருமூர்த்து என்றும், சிவபெருமான் ஆணைப்படி, தேவர்களுக்குச் சேனாபதியாய்ப் போருக்குச் சென்று. சூரனை வேலாயுதத்தால் அழித்தபடியால் தேவசேனாபதி என்றும், வேலாயுதன் என்றும் பெயர் பெற்றார். இத்துடன் மாயமாக நின்ற சூரனை வேல்கொண்டு பிளந்தபோது அவன் பெற்ற இறவா வரமெனும் பலத்தால் சேவலும் மயிலுமாக வந்து முருகனை எதிர்த்தான். அச்சமயம் முருகப்பெருமான் அவற்றுக்கு அருள் நோக்கம் செய்ய அவையும், ஞானநிலை பெற்றன. அதனால் சேவல் முருகனுக்குக் கொடியானது. மயில் அவர்தம் வாகனமாயது, ஆகவே முருகன் சேவற் கொடியோன் என்றும், மயில்வாகனன் மயூரன் என்றும் பெயர் பெற்றதாகப் புராணங்கள் கூறுகின்றன.

முருகப்பெருமான் செந்நிறத்தவர்; வந்த ஆடையர் ஆதலால் சேயோன் எனப் பெயர் பெற்றவர். இவருக்கு உகந்த மலர்கள் கடம்பு, வெட்ட, குரா, கூதளம், காந்தள் என்பனவாகும்.

இவருக்கு உகந்தவை என்று கொள்ளப்படுபவை இசை, குறிஞ்சி நிலம், தேன், தினைமா, வாசனைப்புகை, குரவைக் கூத்து, தமிழ் என்பனவாகும், அத்துடன் திருமுருகாற்றுப்படை, திருப்புகழ், கந்தரந்தாது, கந்தரலங்காரம், கந்தரநுபூதி, திருவகுப்பு ஆகிய ஆறு நூல்களும் இவருக்கு உகந்தவை என்று கொள்ளப்படுபவை ஆகும்.

திருமுருகாற்றுப்படை முருகனுக்கு அதிகமாகத் தித்தித்தது என்று அருணகிரியார் கூறியுள்ளார். “வன்னியின் கன்னலும் அமுதும் தேனும் கைக்கும் தீஞ்சொல்லைக் கேட்பதை விட்டு திருமுருகாற்றுப்படையின் தமிழைச் செவி தாழ்த்திக் கேட்டார் முருகன்” என்று சீகாளத்திப்புராணம் செப்புகிறது.

“உருக்கம்நல் விழுக்குலம் ஒழுக்கம் இலரேனும்
இருப்புகழ் படிப்பவர் மனத்தினில் இருப்பன்”

என முருகவேள் கூறுவதாகத் தனிப் பாடல் ஒன்றில் காணக்கிடக்கிறது.

முருகனுக்குச் சிறப்பாக அமைந்த படை வேலாயுதம். இது ஞானசத்து எனப்படும்.

முருகனின் தேவியர் தெய்வமானை, வள்ளி எனப்படுவர். தெய்வயானை உரியா சத்தியைக் குறிப்பது. வள்ளி இச்சா சத்தியைக் குறிப்பது யான், எனது என்ற அகந்தை அற்ற அடியவர்களிடம் முருகன் தானே வந்து அருள்புரிவான் என்ற தத்துவத்தை விளக்குவது வள்ளி திருமணமாகும்.

மயில் ஆகிய வாகனம் ஆணவத்தையும், கொடியாகய கோழி சிவஞானத்தையும் குறிப்பன. முருகன் ஆன்மாவின் ஆணவத்தை அடக்கும் அடையாளமாகவே மயிலை வாகனமாகக் கொண்டுள்ளார். ஆணவமாகிய மயிலைக் கீழ் அடக்கி, அதன் மீது அமர்ந்து, திருவருளாகய சிவஞானத்தைக் கொடுத்து ஆன்மாக்களை உயர்பதம் அடையச் செய்பவர் தாம் என்பதைக் குறிக்கும், சிவஞானம் என்ற கோழியை வெற்றிக்கொடியாகப் பிடித்துள்ளமை. மேலும் கோழி கூவுவதன் பொருள், கொக்கு £ அர £ கொக்கரக்கோ, கொக்கு – மாமரம் – சூரபத்மன்;| அர – அறுத்த| கோ- அரசன், மாமரமாய் நின்ற சூரனை அறுத்துத் தேவர் துயர் நீக்கிய அரசர்க்கரசனாகிய முருகன்.

ஆறுமுகம் பிரணவத்துடன் கூடிய அஞ்செழுந்துன் (பஞ்சாக்கரத்துன்) அறிகுறியென்றும் வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு, மேல், கீழ் என்னும் ஆறினும் நிறைந்து நிற்கும் சிதாகாச வடிவத்தை அறிவுறுத்துவதென்றும், அறு சமயப் பொருளை விளக்குலதென்றும், வேறு பல நுட்பங்களை உளங்கொண்டதென்றும் சொல்லப்படுதல் காணலாம்.

சிவம், சத்தி ஆகிய இரண்டும் ஒன்றுபடும். சித்தப்பிரமநிலையே சுப்பிரமணியம் என்று சொல்லப்படுவதிலும் ஆறுமுக உண்மை உண்டு. (சிவபெருமானது ஐந்து முகமும், சத்தியினது ஒருமுகமும் சேர்ந்த ஒன்றே அறுமுகம் என்பாரும் உளர்.) ஆறாவது முகம் அதோமுகம் என்று சொல்லப்படும், ஐம்புலனும் ஒன்றப்பெறும் சான்றோரிடம் – விளங்கும் (சிற்சத்தி) ஆறாவது அறிவுக்குப் பொருளாவதே அதோ முகம் எனப்படும். “அஞ்சுமுகம் தோன்றில் ஆறுமுகம் தோன்றும்” என்று நக்கீரர் கூறியது இந்த அதோமுகத்தையேயாம்.

பரம்பொருள் சச்சிதாநந்த (உண்மை – அறிவு, ஆநந்தம்) மயமாய் இருப்பதைத் தாய், தந்தை, சேய் என்று புராணம் கூறும். சித் என்ற உண்மையைச் சிவம் என்றும், சித் என்ற அறிவைச் சத்தி என்றும்; ஆனந்தம் என்ற இன்பத்தைக் குகன் என்றும். கூறி, இம்மூன்றும் ஒன்றிணைந்த இவ்வுண்மையை உலகோர்க்கு உணர்த்துவதே சோமாஸ்கந்த மூர்த்தமென்பர்.

இயற்கை முதல்வனாகிய முருகன். ஆறுமுகங் கொண்டது, வேல் தாங்கியது, சூரனைத்தடிந்தது, இருதேவியாரைக். கொண்டது என்ற வரலாறுகளில் உள்ள உண்மைகளை நக்கீரர் திருமுருகாற்றுப்படை, குமாரதந்திரம், கந்தபுராணம், திருப்புகழ், சுப்பிரமணிய பராக்கிரமம், குமரகுருபரசுவாமிகள் பாடல், சிதம்பரசுவாமிகள் பாடல், பாம்பன் குமர குருதாச சுவாமிகள் பிரபந்தம் முதலியவற்றில் காணலாம்;.

தமிழ் வேதமாகிய தேவாரத்தில் “சமரசூரபன்மாவைத் தடிந்த வேல் குமரன்” என்றும், “நம் செந்தில்மேய வள்ளி மணாளன்” என்றும், “நம் கடம்பனை” என்றும், “முருகனது பெருமையகர் முதுகுன்றடைவோமே” என்றும், “தழமைமமில் ஏறவன் தாதை யோதான்” என்றும், “மாயச்சூ ரண்றறுத்த மைந்தன் தாதை” என்றும், “சரவணத்தான் கைதொழுது சாருமடி சார்ந்தார்க் கெல்லாஞ் சரணமடி” என்றும், பொன்னானை மயிலூர்தி முருகவேன் தாதை” என்றும் பலவாறாகச் நிறப்பித்து முருகன் போற்றப்பட்டுள்ளார்.

முருகனைத் தமிழாற் பாடத் தமிழ்வேதம் அருளியவர் அருணகிரிநாதர் ஆவார். அவரருளிய முருகன் தமிழ் வேதங்களே திருப்புகழ், கந்தரநுபூதி, கந்தரலங்காரம் ஆகியனவாகும், இப்பாடல்களால் அவனைப் பாடிப் போற்றி ஏத்தி வழிபட்டு நலம் பல பெற்றோர் எண்ணிறந்தோர் ஆவார். இன்றும் இந்த நம்பிக்கையுடையோர் குறைகளை முருகன் களைந்து வருகின்றான். மன உறுதிக்கும், நம்பிக்கைக்கும் ஏற்ற அளவிற்றான் குறைகள் களையப்படும் என்பது தெளிவாகும். உறுதி இன்றி “முருகா”, “முருகா” என்று உரக்கப்பாடி, எத்தனை தடவை போற்றினும் குறைகள் நீக்கப்படமாட்டா.

முருகன் மெய்யடியார்கள் வழிபாட்டினை ஏற்றருள்புரியும் பேரருட்குணத்துடன் வீற்றிருக்கும் பழம் பெரும் படை வீடுகளாவன திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், திருவாவினன்சூடி (பழனி), குன்றுதோறாடல், இருவேரகம் (சுவாமிமலை), ‘பழமுதிர் சோலை ஆகிய ஆறுமாம். இன்று இவருக்குரிய சிறப்புத் தலங்களாகக் கருதப்படுவன கைலைச் சாரலில கந்தமாதனம், திருத்தணிகை, வள்ளிமலை, சென்னைக் கந்த கோட்டம், காஞ்சி குமரகோட்டம், திருப்போரூர், மயிலம், திருவிடைக்கழி, சிக்கல், ழூஎட்டிக்குடி, வயலூர், வீராலிமலை, குன்றக்குடி, பிரான்மலை, கழுகுமலை, வள்ளியூர், மருமலை, இலஞ்சி, திருச்செங்கோடு, மருதமலை, சென்னிமலை, கன்னடப் பிரதேசத்து சுப்பிரமணியம், ஈழத்துக் கதிர்காமம், மண்டூர், நல்லூர், மாவிட்டபுரம், செல்லச்சந்நிது போன்றனவாகும்,

சிவனே இளையோனாக வந்து முருகனாகத் திகழ்கின்றான் என்பது புராணம். இதனை “சூர்முதலை இறுப்ப அரனே இளையோன் ஆனவாற்றால்” என்ற தணிகைப் புராணமும், அறுமுகன் அவனும் யாமும் பேதகம் அன்றாய்” என்ற கந்தபுராணமும் வலியுறுத்துகின்றன.

“முருகவேளுக்குரிய மந்திரம் ஆறு எழுத்து-சடாட்சரம் எனப்படும் குமாராய நம என்பதுதான் ஆறெழுத்து எனக் கூறுவர் நச்சினார்க்கினியர், இஃதன்றி சரவணபவ என்ற ஆறெழுத்து என்றும் கூறப்படும்.

சூரியன் இடபராசியில் வரும் வைகாசி மாச விசாக நட்சத்திரநாள் முருகனுக்கு உகந்த நாள். இந்த நாளில் மண்டல பூசை செய்து வில்வச் சமித்தனால் ஓமஞ் செய்து ஸ்நபகும்பபூசை புரிந்து, கஸ்தூரி, பச்சைக் கர்ப்பூரம். முதலிய பரிமளத் திரவியங்களுடன் பனிநீரும் சேர்க்கப்பட்ட நறுமணப் பொருட்களால் பூசித்து மூலவருக்குத் திருமஞ்சனஞ் செய்தல் மேலாம். இந்நாள் முருகப்பெருமானுக்கு மெய்யன்போடு பூசை செய்வோரடையும் பலன் சாயுச்சியமாகும். இவற்றின் விரிவு குமாரதந்திரத்தில் உண்டு. இதனை ஒட்டியே. பெரும்பாலான முருகன் கோயில் தீர்த்தோற்சவங்கள் இந்நாளில் நடைபெற்று வருகின்றன.

சிவகிரி சத்திகிரி என்னும் மலைகளைக் காவடியாக எடுத்துவந்த இடும்பனை ஆட்கொண்டு, அதுகாரணமாகப் பால் காவடி முதலியன எடுக்கும் ஆன்மாக்களது பிரார்த்தனைகளை முருகன் ஏற்கின்றனன். கா£அடி¡காவடி, சரண் புகுந்தோரைக் காக்குஞ் சேவடி என்பது பொருள்.

முருகன் ஆடிய நடனங்கள் குடை, துடி என இரண்டாம்.

முருகப்பெருமானைச் சைவ சமயத்தவர்கள் சற்குரு பாவனையில் வணங்குவர். முருகனையே வழிபடு தெய்வமாகக் கொள்வோர் கௌமாரர் எனப்படுவர்.

முருகன் விரதங்கள் பற்றிய விரிவை இந்நூலில் உள்ள சுப்பிரமணியார் விரதங்கள் என்ற பகுதியில் பார்க்கவும்.

Copyrights © 2022 to Saivaneethi. All rights reserved.