சமீபத்திய செய்தி

உலகத்திலே பல சமயங்கள் உள்ளன. அவற்றுள், ஈழத்தில் வழங்கும் சமயங்கள் நான்கு, அவை சைவம்
நன்கொடை
English

+94 123 456 789

நன்கொடை
English

416 528 1407

ஐந்தாம் திருமுறை இரண்டாம் பகுதி

திருநாவுக்கரசுசுவாமிகள் அருளிச்செய்த தேவாரப்பதிகங்கள்

5.51 திருப்பாலைத்துறை – திருக்குறுந்தொகை

திருச்சிற்றம்பலம்

510நீல மாமணி கண்டத்தர் நீள்சடைக் 
கோல மாமதி கங்கையுங் கூட்டினார் 
சூல மான்மழு வேந்திச் சுடர்முடிப் 
பால்நெய் யாடுவர் பாலைத் துறையரே.
5.51.1
511கவள மால்களிற் றின்னுரி போர்த்தவர் 
தவள வெண்ணகை மங்கையோர் பங்கினர் 
திவள வானவர் போற்றித் திசைதொழும் 
பவள மேனியர் பாலைத் துறையரே.
5.51.2
512மின்னின் நுண்ணிடைக் கன்னியர் மிக்கெங்கும் 
பொன்னி நீர்மூழ்கிப் போற்றி யடிதொழ 
மன்னி நான்மறை யோடுபல் கீதமும் 
பன்னி னாரவர் பாலைத் துறையரே.
5.51.3
513நீடு காடிட மாய்நின்ற பேய்க்கணங் 
கூடு பூதங் குழுமிநின் றார்க்கவே 
ஆடி னாரழ காகிய நான்மறை 
பாடி னாரவர் பாலைத் துறையரே.
5.51.4
514சித்தர் கன்னியர் தேவர்கள் தானவர் 
பித்தர் நான்மறை வேதியர் பேணிய 
அத்த னேநமை யாளுடை யாயெனும் 
பத்தர் கட்கன்பர் பாலைத் துறையரே.
5.51.5
515விண்ணி னார்பணிந் தேத்த வியப்புறும் 
மண்ணி னார்மற வாதுசி வாயவென் 
றெண்ணி னார்க்கிட மாவெழின் வானகம் 
பண்ணி னாரவர் பாலைத் துறையரே.
5.51.6
516குரவ னார்கொடு கொட்டியுங் கொக்கரை 
விரவி னார்பண் கெழுமிய வீணையும் 
மருவு நாண்மலர் மல்லிகை செண்பகம் 
பரவு நீர்ப்பொன்னிப் பாலைத் துறையரே.
5.51.7
517தொடருந் தொண்டரைத் துக்கந் தொடர்ந்துவந் 
தடரும் போதர னாயருள் செய்பவர் 
கடலின் நஞ்சணி கண்டர் கடிபுனற் 
படருஞ் செஞ்சடைப் பாலைத் துறையரே.
5.51.8
518மேகந் தோய்பிறை சூடுவர் மேகலை 
நாகந் தோய்ந்த அரையினர் நல்லியற் 
போகந் தோய்ந்த புணர்முலை மங்கையோர் 
பாகந் தோய்ந்தவர் பாலைத் துறையரே.
5.51.9
519வெங்கண் வாளர வாட்டி வெருட்டுவர் 
அங்க ணாரடி யார்க்கருள் நல்குவர் 
செங்கண் மாலயன் தேடற் கரியவர் 
பைங்கண் ஏற்றினர் பாலைத் துறையரே.
5.51.10
520உரத்தி னாலரக் கன்னுயர் மாமலை 
நெருக்கி னானை நெரித்தவன் பாடலும் 
இரக்க மாவருள் செய்தபா லைத்துறைக் 
கரத்தி னாற்றொழு வார்வினை யோயுமே.
5.51.11


இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் – பாலைவனநாதர், தேவியார் – தவளவெண்ணகையம்மை. 

திருச்சிற்றம்பலம்
 


5.52 திருநாகேச்சரம் – திருக்குறுந்தொகை 


திருச்சிற்றம்பலம்

521நல்லர் நல்லதோர் நாகங்கொண் டாட்டுவர் 
வல்லர் வல்வினை தீர்க்கும் மருந்துகள் 
பல்லில் ஓடுகை யேந்திப் பலிதிரி 
செல்வர் போல்திரு நாகேச் சரவரே.
5.52.1
522நாவ லம்பெருந் தீவினில் வாழ்பவர் 
மேவி வந்து வணங்கி வினையொடு 
பாவ மாயின பற்றறு வித்திடுந் 
தேவர் போல்திரு நாகேச் சரவரே.
5.52.2
523ஓத மார்கட லின்விட முண்டவர் 
ஆதி யார்அய னோடம ரர்க்கெலாம் 
மாதோர் கூறர் மழுவல னேந்திய 
நாதர் போல்திரு நாகேச் சரவரே.
5.52.3
524சந்தி ரன்னொடு சூரியர் தாமுடன் 
வந்து சீர்வழி பாடுகள் செய்தபின் 
ஐந்த லையர வின்பணி கொண்டருள் 
மைந்தர் போல்மணி நாகேச் சரவரே.
5.52.4
525பண்டோ ர் நாளிகழ் வான்பழித் தக்கனார் 
கொண்ட வேள்விக் குமண்டை யதுகெடத் 
தண்ட மாவிதா தாவின் றலைகொண்ட 
செண்டர் போல்திரு நாகேச் சரவரே.
5.52.5
526வம்பு பூங்குழல் மாது மறுகவோர் 
கம்ப யானை யுரித்த கரத்தினர் 
செம்பொ னாரித ழிம்மலர்ச் செஞ்சடை 
நம்பர் போல்திரு நாகேச் சரவரே.
5.52.6
527மானை யேந்திய கையினர் மையறு 
ஞானச் சோதியர் தியர் நாமந்தான் 
ஆன அஞ்செழுத் தோதவந் தண்ணிக்குந் 
தேனர் போல்திரு நாகேச் சரவரே.
5.52.7
528கழல்கொள் காலினர் காலனைக் காய்ந்தவர் 
தழல்கொள் மேனியர் சாந்தவெண் ணீறணி 
அழகர் ஆல்நிழற் கீழற மோதிய 
குழகர் போல்குளிர் நாகேச் சரவரே.
5.52.8
529வட்ட மாமதில் மூன்றுடன் வல்லரண் 
சுட்ட செய்கைய ராகிலுஞ் சூழ்ந்தவர் 
குட்ட வல்வினை தீர்த்துக் குளிர்விக்குஞ் 
சிட்டர் போல்திரு நாகேச் சரவரே.
5.52.9
530தூர்த்தன் றோண்முடி தாளுந் தொலையவே 
சேர்த்தி னார்திருப் பாதத் தொருவிரல் 
ஆர்த்து வந்துல கத்தவ ராடிடுந் 
தீர்த்தர் போல்திரு நாகேச் சரவரே.
5.52.10


இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் – செண்பகாரணியேசுவரர், 
தேவியார் – குன்றமுலைநாயகியம்மை. 

திருச்சிற்றம்பலம்
 


5.53 திருவதிகைவீரட்டம் – திருக்குறுந்தொகை 


திருச்சிற்றம்பலம்

531கோணன் மாமதி சூடியோர் கோவணம் 
நாணில் வாழ்க்கை நயந்தும் பயனிலை 
பாணில் வீணை பயின்றவன் வீரட்டங் 
காணில் அல்லதென் கண்டுயில் கொள்ளுமே.
5.53.1
532பண்ணி னைப்பவ ளத்திரள் மாமணி 
அண்ண லையம ரர்தொழு மாதியைச் 
சுண்ண வெண்பொடி யான்றிரு வீரட்டம் 
நண்ணி லல்லதென் கண்டுயில் கொள்ளுமே.
5.53.2
533உற்ற வர்தம் உறுநோய் களைபவர் 
பெற்ற மேறும் பிறங்கு சடையினர் 
சுற்றும் பாய்புனல் சூழ்திரு வீரட்டங் 
கற்கி லல்லதென் கண்டுயில் கொள்ளுமே.
5.53.13
534முற்றா வெண்மதி சூடும் முதல்வனார் 
செற்றார் வாழுந் திரிபுரந் தீயெழ 
விற்றான் கொண்டெயி லெய்தவர் வீரட்டங் 
கற்றா லல்லதென் கண்டுயில் கொள்ளுமே.
5.53.4
535பல்லா ரும்பல தேவர் பணிபவர் 
நல்லா ருந்நயந் தேத்தப் படுபவன் 
வில்லால் மூவெயி லெய்தவன் வீரட்டங் 
கல்லே னாகிலென் கண்டுயில் கொள்ளுமே.
5.53.5
536வண்டார் கொன்றையும் மத்தம் வளர்சடைக் 
கொண்டான் கோல மதியோ டரவமும் 
விண்டார் மும்மதி லெய்தவன் வீரட்டங் 
கண்டா லல்லதென் கண்டுயில் கொள்ளுமே.
5.53.6
537அரையார் கோவண ஆடைய னாறெலாந் 
திரையார் ஒண்புனல் பாய்கெடி லக்கரை 
விரையார் நீற்றன் விளங்கு வீரட்டன்பாற் 
கரையே னாகிலென் கண்டுயில் கொள்ளுமே.
5.53.7
538நீறு டைத்தடந் தோளுடை நின்மலன் 
ஆறு டைப்புனல் பாய்கெடி லக்கரை 
ஏறு டைக்கொடி யான்றிரு வீரட்டங் 
கூறி லல்லதென் கண்டுயில் கொள்ளுமே.
5.53.8
539செங்கண் மால்விடை யேறிய செல்வனார் 
பைங்க ணானையின் ஈருரி போர்த்தவர் 
அங்கண் ஞாலம தாகிய வீரட்டங் 
கங்கு லாகவென் கண்டுயில் கொள்ளுமே.
5.53.9
540பூணா ணாரம் பொருந்த வுடையவர் 
நாணா கவ்வரை வில்லிடை யம்பினாற் 
பேணார் மும்மதி லெய்தவன் வீரட்டங் 
காணே னாகிலென் கண்டுயில் கொள்ளுமே.
5.53.10
541வரையார்ந் தவயி ரத்திரள் மாணிக்கந் 
திரையார்ந் தபுனல் பாய்கெடி லக்கரை 
விரையார் நீற்றன் விளங்கிய வீரட்டம் 
உரையே னாகிலென் கண்டுயில் கொள்ளுமே.
5.53.11
542உலந்தார் வெண்டலை உண்கல னாகவே 
வலந்தான் மிக்கவன் வாளரக் கன்றனைச் 
சிலம்பார் சேவடி யூன்றினான் வீரட்டம் 
புலம்பே னாகிலென் கண்டுயில் கொள்ளுமே.
5.53.12


இத்தலம் நடுநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் – வீரட்டானேசுவரர், தேவியார் – திருவதிகைநாயகியம்மை. 
திருச்சிற்றம்பலம்



5.54 திருவதிகைவீரட்டம் – திருக்குறுந்தொகை 

திருச்சிற்றம்பலம்

543எட்டு நாண்மலர் கொண்டவன் சேவடி 
மட்ட லரிடு வார்வினை மாயுமாற் 
கட்டித் தேன்கலந் தன்ன கெடிலவீ 
ரட்ட னாரடி சேரு மவருக்கே.
5.54.1
544நீள மாநினைந் தெண்மலர் இட்டவர் 
கோள வல்வினை யுங்குறை விப்பரால் 
வாள மாலிழி யுங்கெடி லக்கரை 
வேளி சூழ்ந்தழ காய வீரட்டரே.
5.54.2
545கள்ளின் நாண்மல ரோரிரு நான்குகொண் 
டுள்குவா ரவர் வல்வினை யோட்டுவார் 
தெள்ளு நீர்வயல் பாய்கெடி லக்கரை 
வெள்ளை நீறணி மேனிவீ ரட்டரே.
5.54.3
546பூங்கொத் தாயின மூன்றொடோ ரைந்திட 
வாங்கி நின்றவர் வல்வினை யோட்டுவார் 
வீங்கு தண்புனல் பாய்கெடி லக்கரை 
வேங்கைத் தோலுடை யாடைவீ ரட்டரே.
5.54.4
547தேனப் போதுகள் மூன்றொடோ ரைந்துடன் 
தானப் போதிடு வார்வினை தீர்ப்பவர் 
மீனத் தண்புனல் பாய்கெடி லக்கரை 
வேன லானை யுரித்தவீ ரட்டரே.
5.54.5
548ஏழித் தொன்மலர் கொண்டு பணிந்தவர் 
ஊழித் தொல்வினை யோட அகற்றுவார் 
பாழித் தண்புனல் பாய்கெடி லக்கரை 
வேழத் தின்னுரி போர்த்தவீ ரட்டரே.
5.54.6
549உரைசெய் நூல்வழி யொண்மல ரெட்டிடத் 
திரைகள் போல்வரு வல்வினை தீர்ப்பரால் 
வரைகள் வந்திழி யுங்கெடி லக்கரை 
விரைகள் சூழ்ந்தழ காயவீ ரட்டரே.
5.54.7
550ஓலி வண்டறை யொண்மல ரெட்டினாற் 
காலை யேத்த வினையைக் கழிப்பரால் 
ஆலி வந்திழி யுங்கெடி லக்கரை 
வேலி சூழ்ந்தழ காயவீ ரட்டரே.
5.54.8
551தாரித் துள்ளித் தடமல ரெட்டினாற் 
பாரித் தேத்தவல் லார்வினை பாற்றுவார் 
மூரித் தெண்டிரை பாய்கெடி லக்கரை 
வேரிச் செஞ்சடை வேய்ந்தவீ ரட்டரே.
5.54.9
552அட்ட புட்பம் அவைகொளு மாறுகொண் 
டட்ட மூர்த்தி அனாதிதன் பாலணைந் 
தட்டு மாறுசெய் கிற்ப அதிகைவீ 
ரட்ட னாரடி சேரு மவர்களே.
5.54.10


திருச்சிற்றம்பலம்


5.55 திருநாரையூர் – திருக்குறுந்தொகை 

திருச்சிற்றம்பலம்

553வீறு தானுடை வெற்பன் மடந்தையோர் 
கூற னாகிலுங் கூன்பிறை சூடிலும் 
நாறு பூம்பொழில் நாரையூர் நம்பனுக் 
காறு சூடலும் அம்ம அழகிதே.
5.55.1
554புள்ளி கொண்ட புலியுரி யாடையும் 
வெள்ளி கொண்டவெண் பூதிமெய் யாடலும் 
நள்ளி தெண்டிரை நாரையூ ரான்நஞ்சை 
அள்ளி யுண்டலும் அம்ம அழகிதே.
5.55.2

555
வேடு தங்கிய வேடமும் வெண்டலை 
ஓடு தங்கிய வுண்பலி கொள்கையும் 
நாடு தங்கிய நாரையூ ரான்நடம் 
ஆடு பைங்கழல் அம்ம அழகிதே.
5.55.3
556கொக்கின் றூவலுங் கூவிளங் கண்ணியும் 
மிக்க வெண்டலை மாலை விரிசடை 
நக்க னாகிலும் நாரையூர் நம்பனுக் 
கக்கி னாரமும் அம்ம அழகிதே.
5.55.4
557வடிகொள் வெண்மழு மானமர் கைகளும் 
பொடிகொள் செம்பவ ளம்புரை மேனியும் 
நடிகொள் நன்மயில் சேர்திரு நாரையூர் 
அடிகள் தம்வடி வம்ம அழகிதே.
5.55.5
558சூல மல்கிய கையுஞ் சுடரொடு 
பாலு நெய்தயி ராடிய பான்மையும் 
ஞால மல்கிய நாரையூர் நம்பனுக் 
கால நீழலும் அம்ம அழகிதே.
5.55.6
559பண்ணி னான்மறை பாடலொ டாடலும் 
எண்ணி லார்புர மூன்றெரி செய்ததும் 
நண்ணி னார்துயர் தீர்த்தலும் நாரையூர் 
அண்ண லார்செய்கை அம்ம அழகிதே.
5.55.7
560என்பு பூண்டெரு தேறி இளம்பிறை 
மின்பு ரிந்த சடைமேல் விளங்கவே 
நன்ப கற்பலி தேரினும் நாரையூர் 
அன்ப னுக்கது அம்ம அழகிதே.
5.55.8
561முரலுங் கின்னரம் மொந்தை முழங்கவே 
இரவி னின்றெரி யாடலு நீடுவான் 
நரலும் வாரிநன் னாரையூர் நம்பனுக் 
கரவும் பூணுதல் அம்ம அழகிதே.
5.55.9
562கடுக்கை யஞ்சடை யன்கயி லைம்மலை 
எடுத்த வாளரக் கன்றலை ஈரைஞ்சும் 
நடுக்கம் வந்திற நாரையூ ரான்விரல் 
அடுத்த தன்மையும் அம்ம அழகிதே.
5.55.10


இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் – சவுந்தரேசுவரர், தேவியார் – திருபுரசுந்தரநாயகி.
திருச்சிற்றம்பலம் 


5.56 திருக்கோளிலி – திருக்குறுந்தொகை 


திருச்சிற்றம்பலம்

563மைக்கொள் கண்ணுமை பங்கினன் மான்மழுத் 
தொக்க கையினன் செய்யதோர் சோதியன் 
கொக்க மர்பொழில் சூழ்தரு கோளிலி 
நக்க னைத்தொழ நம்வினை நாசமே.
5.56.1
564முத்தி னைமுத லாகிய மூர்த்தியை 
வித்தி னைவிளை வாய விகிர்தனைக் 
கொத்த லர்பொழில் சூழ்தரு கோளிலி 
அத்த னைத்தொழ நீங்கும்நம் மல்லலே.
5.56.2
565வெண்டி ரைப்பர வைவிட முண்டதோர் 
கண்ட னைக்கலந் தார்தமக் கன்பனைக் 
கொண்ட லம்பொழிற் கோளிலி மேவிய 
அண்ட னைத்தொழு வார்க்கல்ல லில்லையே.
5.56.3
566பலவும் வல்வினை பாறும் பரிசினால் 
உலவுங் கங்கையுந் திங்களும் ஒண்சடை 
குலவி னான்குளி ரும்பொழிற் கோளிலி 
நிலவி னான்றனை நித்தல் நினைமினே.
5.56.4
567அல்ல லாயின தீரும் அழகிய 
முல்லை வெண்முறு வல்லுமை யஞ்சவே 
கொல்லை யானை யுரித்தவன் கோளிலிச் 
செல்வன் சேவடி சென்று தொழுமினே.
5.56.5
568ஆவின் பால்கண் டளவில் அருந்தவப் 
பாலன் வேண்டலுஞ் செல்லென்று பாற்கடல் 
கூவி னான்குளி ரும்பொழிற் கோளிலி 
மேவி னானைத் தொழவினை வீடுமே.
5.56.6
569சீர்த்த நன்மனை யாளுஞ் சிறுவரும் 
ஆர்த்த சுற்றமும் பற்றிலை யாதலாற் 
கூத்த னாருறை யுந்திருக் கோளிலி 
ஏத்தி நீர்தொழு மின்னிடர் தீருமே.
5.56.7
570மால தாகி மயங்கு மனிதர்காள் 
காலம் வந்து கடைமுடி யாமுனங் 
கோல வார்பொழிற் கோளிலி மேவிய 
நீல கண்டனை நின்று நினைமினே.
5.56.8
571கேடு மூடிக் கிடந்துண்ணு நாடது 
தேடி நீர்திரி யாதே சிவகதி 
கூட லாந்திருக் கோளிலி ஈசனைப் 
பாடு மின்னிர வோடு பகலுமே.
5.56.8
572மடுத்து மாமலை யேந்தலுற் றான்றனை 
அடர்த்துப் பின்னும் இரங்கி யவற்கருள் 
கொடுத்த வன்னுறை கோளிலி யேதொழ 
விடுத்து நீங்கிடும் மேலை வினைகளே.
5.56.9

இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் – கோளிலிநாதர், தேவியார் – வண்டமர்பூங்குழலம்மை.
திருச்சிற்றம்பலம்


5. 57 திருக்கோளிலி – திருக்குறுந்தொகை 

திருச்சிற்றம்பலம்

573முன்ன மேநினை யாதொழிந் தேனுனை 
இன்னம் நானுன சேவடி யேத்திலேன் 
செந்நெ லார்வயல் சூழ்திருக் கோளிலி 
மன்ன னேயடி யேனை மறவலே.
5.57.1
574விண்ணு ளார்தொழு தேத்தும் விளக்கினை 
மண்ணு ளார்வினை தீர்க்கு மருந்தினைப் 
பண்ணு ளார்பயி லுந்திருக் கோளிலி 
அண்ண லாரடி யேதொழு துய்ம்மினே.
5.57.2
575நாளும் நம்முடை நாள்கள் அறிகிலோம் 
ஆளும் நோய்களோ ரைம்பதோ டாறெட்டும் 
ஏழை மைப்பட் டிருந்துநீர் நையாதே 
கோளி லியரன் பாதமே கூறுமே.
5.57.3
576விழவி னோசை ஒலியறாத் தண்பொழில் 
பழகி னார்வினை தீர்க்கும் பழம்பதி 
அழல்கை யானம ருந்திருக் கோளிலிக் 
குழக னார்திருப் பாதமே கூறுமே.
5.57.4
577மூல மாகிய மூவர்க்கு மூர்த்தியைக் 
கால னாகிய காலற்குங் காலனைக் 
கோல மாம்பொழில் சூழ்திருக் கோளிலிச் 
சூல பாணிதன் பாதந் தொழுமினே.
5.57.5
578காற்ற னைக்கடல் நஞ்சமு துண்டவெண் 
ணீற்ற னைநிமிர் புன்சடை யண்ணலை 
ஆற்ற னையம ருந்திருக் கோளிலி 
ஏற்ற னாரடி யேதொழு தேத்துமே.
5.57.6
579வேத மாயவிண் ணோர்கள் தலைவனை 
ஓதி மன்னுயி ரேத்து மொருவனைக் 
கோதி வண்டறை யுந்திருக் கோளிலி 
வேத நாயகன் பாதம் விரும்புமே.
5.57.7
580நீதி யாற்றொழு வார்கள் தலைவனை 
வாதை யான விடுக்கும் மணியினை 
கோதி வண்டறை யுந்திருக் கோளிலி 
வேத நாயகன் பாதம் விரும்புமே.
5.57.8
581மாலும் நான்முக னாலும் அறிவொணாப் 
பாலின் மென்மொழி யாளொரு பங்கனைக் 
கோல மாம்பொழில் சூழ்திருக் கோளிலி 
நீல கண்டனை நித்தல் நினைமினே.
5.57.9
582அரக்க னாய இலங்கையர் மன்னனை 
நெருக்கி யம்முடி பத்திறுத் தானவற் 
கிரக்க மாகிய வன்றிருக் கோளிலி 
அருத்தி யாயடி யேதொழு துய்ம்மினே.
5.57.10


திருச்சிற்றம்பலம்


5.58 திருப்பழையாறைவடதளி – திருக்குறுந்தொகை 

திருச்சிற்றம்பலம்

583தலையெ லாம்பறிக் குஞ்சமண் கையருள் 
நிலையி னான்மறைத் தான்மறைக் கொண்ணுமே 
அலையி னார்பொழி லாறை வடதளி 
நிலையி னானடி யேநினைந் துய்ம்மினே.
5.58.1
584மூக்கி னால்முரன் றோதியக் குண்டிகை 
தூக்கி னார்குலந் தூரறுத் தேதனக் 
காக்கி னானணி யாறை வடதளி 
நோக்கி னார்க்கில்லை யாலரு நோய்களே.
5.58.2

585
குண்ட ரைக்குண மில்லரைக் கூறையில் 
மிண்ட ரைத்துரந் தவிம லன்றனை 
அண்ட ரைப்பழை யாறை வடதளிக் 
கண்ட ரைத்தொழு துய்ந்தன கைகளே.
5.58.3
586முடைய ரைத்தலை முண்டிக்கும் மொட்டரை 
கடைய ரைக்கடிந் தார்கனல் வெண்மழுப் 
படைய ரைப்பழை யாறை வடதளி 
உடைய ரைக்குளிர்ந் துள்குமென் உள்ளமே.
5.58.4
587ஒள்ள ரிக்கணார் முன்னமண் நின்றுணுங் 
கள்ள ரைக்கடிந் தகருப் பூறலை 
அள்ள லம்புன லாறை வடதளி 
வள்ள லைப்புக ழத்துயர் வாடுமே.
5.58.5
588நீதி யைக்கெட நின்றம ணேயுணுஞ் 
சாதி யைக்கெடு மாசெய்த சங்கரன் 
ஆதி யைப்பழை யாறை வடதளிச் 
சோதி யைத்தொழு வார்துயர் தீருமே.
5.58.6
589திரட்டி ரைக்க வளந்திணிக் குஞ்சமண் 
பிரட்ட ரைப்பிரித் தபெரு மான்றனை 
அருட்டி றத்தணி யாறை வடதளித் 
தெருட்ட ரைத்தொழத் தீவினை தீருமே.
5.58.7
590ஓதி னத்தெழுத் தஞ்சுண ராச்சமண் 
*வேதி னைப்படுத் தானைவெங் கூற்றுதை 
பாத னைப்பழை யாறை வடதளி 
நாத னைத்தொழ நம்வினை நாசமே. 
* வேது என்பது – வெப்பம்.
5.58.8
591வாயி ருந்தமி ழேபடித் தாளுறா 
ஆயி ரஞ்சம ணும்மழி வாக்கினான் 
பாயி ரும்புன லாறை வடதளி 
மேய வன்னென வல்வினை வீடுமே.
5.58.9
592செருத்த னைச்செயுஞ் சேணரக் கன்னுடல் 
எருத்தி றவிர லாலிறை யூன்றிய 
அருத்த னைப்பழை யாறை வடதளித் 
திருத்த னைத்தொழு வார்வினை தேயுமே.
5.58.10


இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் – சோமேசுவரர், தேவியார் – சோமகலாநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
 


5.59 திருமாற்பேறு – திருக்குறுந்தொகை 

திருச்சிற்றம்பலம்

593பொருமாற் றின்படை வேண்டிநற் பூம்புனல் 
வருமாற் றின்மலர் கொண்டு வழிபடுங் 
கருமாற் கின்னருள் செய்தவன் காண்டகு 
திருமாற் பேறு தொழவினை தேயுமே.
5.59.1
594ஆலத் தார்நிழ லில்லறம் நால்வர்க்குக் 
கோலத் தாலுரை செய்தவன் குற்றமில் 
மாலுக் காரருள் செய்தவன் மாற்பேறு 
ஏலத் தான்றொழு வார்க்கிட ரில்லையே.
5.59.2
595துணிவண் ணச்சுட ராழிகொள் வானெண்ணி 
அணிவண் ணத்தலர் கொண்டடி யர்ச்சித்த 
மணிவண் ணற்கருள் செய்தவன் மாற்பேறு 
பணிவண் ணத்தவர்க் கில்லையாம் பாவமே.
5.59.3
596தீத வைசெய்து தீவினை வீழாதே 
காதல் செய்து கருத்தினில் நின்றநன் 
மாத வர்பயில் மாற்பேறு கைதொழப் 
போது மின்வினை யாயின போகுமே.
5.59.4
597வார்கொள் மென்முலை மங்கையோர் பங்கினன் 
வார்கொள் நன்முர சம்மறை யவ்வறை 
வார்கொள் பைம்பொழில் மாற்பேறு கைதொழு 
வார்கள் மன்னுவர் பொன்னுல கத்திலே.
5.59.5
598பண்டை வல்வினை பற்றறுக் கும்வகை 
உண்டு சொல்லுவன் கேண்மின் ஒளிகிளர் 
வண்டு சேர்பொழில் சூழ்திரு மாற்பேறு 
கண்டு கைதொழத் தீருங் கவலையே.
5.59.6
599மழுவ லான்றிரு நாமம் மகிழ்ந்துரைத் 
தழவ லார்களுக் கன்புசெய் தின்பொடும் 
வழுவி லாவருள் செய்தவன் மாற்பேறு 
தொழவ லார்தமக் கில்லை துயரமே.
5.59.7
600முன்ன வனுல குக்கு முழுமணிப் 
பொன்ன வன்றிகழ் முத்தொடு போகமாம் 
மன்ன வன்றிரு மாற்பேறு கைதொழும் 
அன்ன வரெமை யாளுடை யார்களே.
5.59.8
601வேட னாய்விச யன்னொடும் எய்துவெங் 
காடு நீடுகந் தாடிய கண்ணுதல் 
மாட நீடுய ருந்திரு மாற்பேறு 
பாடு வார்பெறு வார்பர லோகமே.
5.59.9
602கருத்த னாய்க்கயி லாய மலைதனைத் 
தருக்கி னாலெடுத் தானைத் தகரவே 
வருத்தி யாரருள் செய்தவன் மாற்பேறு 
அருத்தி யாற்றொழு வார்க்கில்லை அல்லலே.
5.59.10


இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் – மால்வணங்குமீசர், தேவியார் – கருணைநாயகியம்மை. 
திருச்சிற்றம்பலம்
 


5.60 திருமாற்பேறு – திருக்குறுந்தொகை 

திருச்சிற்றம்பலம்

603ஏது மொன்று மறிவில ராயினும் 
ஓதி அஞ்செழுத் தும்முணர் வார்கட்குப் 
பேத மின்றி அவரவர் உள்ளத்தே 
மாதுந் தாமும் மகிழ்வர்மாற் பேறரே.
5.60.1
604அச்ச மில்லைநெஞ் சேயரன் நாமங்கள் 
நிச்ச லுந்நினை யாய்வினை போயறக் 
கச்ச மாவிட முண்டகண் டாவென 
வைச்ச மாநிதி யாவர் மாற்பேறரே.
5.60.2
605சாத்தி ரம்பல பேசுஞ் சழக்கர்காள் 
கோத்தி ரமுங்கு லமுங்கொண் டென்செய்வீர் 
பாத்தி ரஞ்சிவ மென்று பணிதிரேல் 
மாத்தி ரைக்குள் அருளுமாற் பேறரே.
5.60.3
606இருந்து சொல்லுவன் கேண்மின்கள் ஏழைகாள் 
அருந்த வந்தரும் அஞ்செழுத் தோதினாற் 
பொருந்து நோய்பிணி போகத் துரப்பதோர் 
மருந்து மாகுவர் மன்னுமாற் பேறரே.
5.60.4
607சாற்றிச் சொல்லுவன் கேண்மின் தரணியீர் 
ஏற்றின் மேல்வரு வான்கழ லேத்தினாற் 
கூற்றை நீக்கிக் குறைவறுத் தாள்வதோர் 
மாற்றி லாச்செம்பொ னாவர்மாற் பேறரே.
5.60.5
608ஈட்டு மாநிதி சால இழக்கினும் 
வீட்டுங் காலன் விரைய அழைக்கினுங் 
காட்டில் மாநட மாடுவாய் காவெனில் 
வாட்டந் தீர்க்கவும் வல்லர்மாற் பேறரே.
5.60.6
609ஐய னேயர னேயென் றரற்றினால் 
உய்ய லாமுல கத்தவர் பேணுவர் 
செய்ய பாத மிரண்டும் நினையவே 
வைய மாளவும் வைப்பர்மாற் பேறரே.
5.60.7
 இப்பதிகத்தில் 8,9-ம் செய்யுட்கள் சிதைந்து போயின.5.60.8-9

610
உந்திச் சென்று மலையை யெடுத்தவன் 
சந்து தோளொடு தாளிற வூன்றினான் 
மந்தி பாய்பொழில் சூழுமாற் பேறென 
அந்த மில்லதோர் இன்பம் அணுகுமே.
5.60.10


திருச்சிற்றம்பலம்
 


5.61 திருஅரிசிற்கரைப்புத்தூர் – திருக்குறுந்தொகை 


திருச்சிற்றம்பலம்

611முத்தூ ரும்புனல் மொய்யரி சிற்கரைப் 
புத்தூ ரன்னடி போற்றியென் பாரெலாம் 
பொய்த்தூ ரும்புல னைந்தொடு புல்கிய 
மைத்தூ ரும்வினை மாற்றவும் வல்லரே.
5.61.1
612பிறைக்க ணிச்சடை யெம்பெரு மானென்று 
கறைக்க ணித்தவர் கண்ட வணக்கத்தாய் 
உறக்க ணித்துரு காமனத் தார்களைப் 
புறக்க ணித்திடும் புத்தூர்ப் புனிதரே.
5.61.2
613அரிசி லின்கரை மேலணி யார்தரு 
புரிசை நந்திருப் புத்தூர்ப் புனிதனைப் 
பரிசொ டும்பர விப்பணி வார்க்கெலாந் 
துரிசில் நன்னெறி தோன்றிடுங் காண்மினே.
5.61.3
614வேத னைமிகு வீணையின் மேவிய 
கீத னைக்கிள ருந்நறுங் கொன்றையம் 
போத னைப்புனல் சூழ்ந்தபுத் தூரனை 
நாத னைந்நினைந் தென்மனம் நையுமே.
5.61.4
615அருப்புப் போன்முலை யாரல்லல் வாழ்க்கைமேல் 
விருப்புச் சேர்நிலை விட்டுநல் லிட்டமாய் 
திருப்புத் தூரனைச் சிந்தை செயச்செயக் 
கருப்புச் சாற்றிலும் அண்ணிக்குங் காண்மினே.
5.61.5
616பாம்பொ டுமதி யும்படர் புன்சடைப் 
பூம்பு னலும்பொ திந்தபுத் தூருளான் 
நாம்ப ணிந்தடி போற்றிட நாடொறுஞ் 
சாம்பல் என்பு தனக்கணி யாகுமே.
5.61.6
617கனலங் கைதனி லேந்திவெங் காட்டிடை 
அனலங் கெய்திநின் றாடுவர் பாடுவர் 
பினலஞ் செஞ்சடை மேற்பிறை யுந்தரு 
புனலுஞ் சூடுவர் போலும்புத் தூரரே.
5.61.7
618காற்றி னுங்கடி தாகி நடப்பதோர் 
ஏற்றி னும்மிசைந் தேறுவர் என்பொடு 
நீற்றி னையணி வர்நினை வாய்த்தமைப் 
போற்றி யென்பவர்க் கன்பர்புத் தூரரே.
5.61.8
619முன்னு முப்புரஞ் செற்றன ராயினும் 
அன்ன மொப்பர் அலந்தடைந் தார்க்கெலாம் 
மின்னு மொப்பர் விரிசடை மேனிசெம் 
பொன்னு மொப்பர்புத் தூரெம் புனிதரே.
5.61.9
620செருத்த னாற்றன தேர்செல வுய்த்திடுங் 
கருத்த னாய்க்கயி லையெடுத் தானுடல் 
பருத்த தோள்கெடப் பாதத் தொருவிரல் 
பொருத்தி னார்பொழி லார்ந்தபுத் தூரரே.
5.61.10

இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் – படிக்காசுவைத்தநாதர், தேவியார் – அழகாம்பிகை.
திருச்சிற்றம்பலம்
 


5.62 திருக்கடுவாய்க்கரைப்புத்தூர் – திருக்குறுந்தொகை 

திருச்சிற்றம்பலம்

621ஒருத்த னைமூ வுலகொடு தேவர்க்கும் 
அருத்த னையடி யேன்மனத் துள்ளமர் 
கருத்த னைக்கடு வாய்ப்புன லாடிய 
திருத்த னைப்புத்தூர் சென்றுகண் டுய்ந்தேனே.
5.62.1
622யாவ ருமறி தற்கரி யான்றனை 
மூவ ரின்முத லாகிய மூர்த்தியை 
நாவின் நல்லுரை யாகிய நாதனைத் 
தேவனைப் புத்தூர் சென்றுகண் டுய்ந்தேனே.
5.62.2
623அன்ப னையடி யாரிடர் நீக்கியைச் 
செம்பொ னைத்திக ழுந்திருக் கச்சியே 
கம்ப னைக்கடு வாய்க்கரைத் தென்புத்தூர் 
நம்ப னைக்கண்டு நானுய்யப் பெற்றேனே.
5.62.3
624மாத னத்தைமா தேவனை மாறிலாக் 
கோத னத்திலைந் தாடியை வெண்குழைக் 
காத னைக்கடு வாய்க்கரைத் தென்புத்தூர் 
நாத னைக்கண்டு நானுய்யப் பெற்றேனே.
5.62.4
625குண்டு பட்டகுற் றந்தவிர்த் தென்னையாட் 
கொண்டு நற்றிறங் காட்டிய கூத்தனைக் 
கண்ட னைக்கடு வாய்க்கரைத் தென்புத்தூர் 
அண்ட னைக்கண் டருவினை யற்றேனே.
5.62.5
626பந்த பாச மறுத்தெனை யாட்கொண்ட 
மைந்த னைம்மண வாளனை மாமலர்க் 
கந்த நீர்க்கடு வாய்க்கரைத் தென்புத்தூர் 
எந்தை யீசனைக் கண்டினி தாயிற்றே.
5.62.6
627உம்ப ரானை உருத்திர மூர்த்தியை 
அம்ப ரானை அமலனை ஆதியைக் 
கம்பு நீர்க்கடு வாய்க்கரைத் தென்புத்தூர் 
எம்பி ரானைக்கண் டின்பம தாயிற்றே.
5.62.7
628மாசார் பாச மயக்கறு வித்தெனுள் 
நேச மாகிய நித்த மணாளனைப் 
பூச நீர்க்கடு வாய்க்கரைத் தென்புத்தூர் 
ஈச னேயென இன்பம தாயிற்றே.
5.62.8
629இடுவா ரிட்ட கவளங் கவர்ந்திரு 
கடுவா யிட்டவர் கட்டுரை கொள்ளாதே 
கடுவாய்த் தென்கரைப் புத்தூ ரடிகட்காட் 
படவே பெற்றுநான் பாக்கியஞ் செய்தேனே.
5.62.9
630அரக்க னாற்றல் அழித்தவன் பாடல்கேட் 
டிரக்க மாகி அருள்புரி யீசனைத் 
திரைக்கொள் நீர்க்கடு வாய்க்கரைத் தென்புத்தூர் 
இருக்கு நாதனைக் காணப்பெற் றுய்ந்தேனே.
5.62.10


இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் – சொர்ணபுரீசுவரர், தேவியார் – சொர்ணபுரிநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
 


5.63 திருக்குரங்காடுதுறை – திருக்குறுந்தொகை 

திருச்சிற்றம்பலம்

631இரங்கா வன்மனத் தார்கள் இயங்குமுப் 
புரங்கா வல்லழி யப்பொடி யாக்கினான் 
தரங்கா டுந்தட நீர்ப்பொன்னித் தென்கரைக் 
குரங்கா டுதுறைக் கோலக் கபாலியே.
5.63.1
632முத்தி னைமணி யைப்பவ ளத்தொளிர் 
தொத்தி னைச்சுடர் சோதியைச் சோலைசூழ் 
கொத்த லர்குரங் காடு துறையுறை 
அத்த னென்னஅண் ணித்திட் டிருந்ததே.
5.63.2
633குளிர்பு னற்குரங் காடு துறையனைத் 
தளிர்நி றத்தையல் பங்கனைத் தண்மதி 
ஒளிய னைந்நினைந் தேனுக்கென் உள்ளமுந் 
தெளிவி னைத்தெளி யத்தெளிந் திட்டதே.
5.63.3
634மணவன் காண்மலை யாள்நெடு மங்கலக் 
கணவன் காண்கலை ஞானிகள் காதலெண் 
குணவன் காண்குரங் காடு துறைதனில் 
அணவன் காணன்பு செய்யு மடியர்க்கே.
5.63.4
635ஞாலத் தார்தொழு தேத்திய நன்மையன் 
காலத் தானுயிர் போக்கிய காலினன் 
நீலத் தார்மிடற் றான்வெள்ளை நீறணி 
கோலத் தான்குரங் காடு துறையனே.
5.63.5
636ஆட்டி னான்முன் அமணரோ டென்றனைப் 
பாட்டி னான்றன பொன்னடிக் கின்னிசை 
வீட்டி னான்வினை மெய்யடி யாரொடுங் 
கூட்டி னான்குரங் காடு துறையனே.
5.63.6
637மாத்தன் றான்மறை யார்முறை யான்மறை 
ஓத்தன் றாருகன் றன்னுயி ருண்டபெண் 
போத்தன் றானவள் பொங்கு சினந்தணி 
கூத்தன் றான்குரங் காடு துறையனே.
5.63.7
638நாடி நந்தம ராயின தொண்டர்காள் 
ஆடு மின்னழு மின்தொழு மின்னடி 
பாடு மின்பர மன்பயி லும்மிடங் 
கூடு மின்குரங் காடு துறையையே.
5.63.8
639தென்றல் நன்னெடுந் தேருடை யானுடல் 
பொன்ற வெங்கனல் பொங்க விழித்தவன் 
அன்ற வந்தக னையயிற் சூலத்தாற் 
கொன்ற வன்குரங் காடு துறையனே.
5.63.9
640நற்ற வஞ்செய்த நால்வர்க்கு நல்லறம் 
உற்ற நன்மொழி யாலருள் செய்தநற் 
கொற்ற வன்குரங் காடு துறைதொழப் 
பற்றுந் தீவினை யாயின பாறுமே.
5.63.10
641கடுத்த தேரரக் கன்கயி லைம்மலை 
எடுத்த தோள்தலை யிற்றல றவ்விரல் 
அடுத்த லுமவன் இன்னிசை கேட்டருள் 
கொடுத்த வன்குரங் காடு துறையனே.
5.63.11


இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் – ஆபத்சகாயர், தேவியார் – பவளக்கொடியம்மை.
திருச்சிற்றம்பலம்
 


5.64 திருக்கோழம்பம் – திருக்குறுந்தொகை 

திருச்சிற்றம்பலம்

642வேழம் பத்தைவர் வேண்டிற்று வேண்டிப்போய் 
ஆழம் பற்றிவீழ் வார்பல வாதர்கள் 
கோழம் பத்துறை கூத்தன் குரைகழற் 
தாழும் பத்தர்கள் சாலச் சதுரரே.
5.64.1
643கயிலை நன்மலை யாளுங் கபாலியை 
மயிலி யன்மலை மாதின் மணாளனைக் 
குயில்ப யில்பொழிற் கோழம்ப மேயவென் 
உயிரி னைநினைந் துள்ளம் உருகுமே.
5.64.2
644வாழும் பான்மைய ராகிய வான்செல்வந் 
தாழும் பான்மைய ராகித்தம் வாயினால் 
தாழம் பூமணம் நாறிய தாழ்பொழிற் 
கோழம் பாவெனக் கூடிய செல்வமே.
5.64.3
645பாட லாக்கிடும் பண்ணொடு பெண்ணிவள் 
கூட லாக்கிடுங் குன்றின் மணற்கொடு 
கோடல் பூத்தலர் கோழம்பத் துண்மகிழ்ந் 
தாடுங் கூத்தனுக் கன்புபட் டாளன்றே.
5.64.4
646தளிர்கொள் மேனியள் தான்மிக அஞ்சவோர் 
பிளிறு வாரணத் தீருரி போர்த்தவன் 
குளிர்கொள் நீள்வயல் கோழம்பம் மேவினான் 
நளிர்கொள் நீர்சடை மேலு நயந்ததே.
5.64.5
647நாத ராவர் நமக்கும் பிறர்க்குந்தாம் 
வேத நாவர் விடைக்கொடி யார்வெற்பிற் 
கோதை மாதொடுங் கோழம்பங் கோயில்கொண் 
டாதி பாத மடையவல் லார்களே.
5.64.6
648முன்னை நான்செய்த பாவ முதலறப் 
பின்னை நான்பெரி தும்மருள் பெற்றதும் 
அன்ன மார்வயற் கோழம்பத் துள்ளமர் 
பின்னல் வார்சடை யானைப் பிதற்றியே.
5.64.7
649ஏழை மாரிடம் நின்றிரு கைக்கொடுண் 
கோழை மாரொடுங் கூடிய குற்றமாங் 
கூழை பாய்வயற் கோழம்பத் தானடி 
ஏழை யேன்முன் மறந்தங் கிருந்ததே.
5.64.8
650அரவ ணைப்பயில் மாலயன் வந்தடி 
பரவ னைப்பர மாம்பரஞ் சோதியைக் 
குரவ னைக்குர வார்பொழிற் கோழம்பத் 
துரவ னையொரு வர்க்குணர் வொண்ணுமே.
5.64.9
651சமர சூரபன் மாவைத் தடிந்தவேற் 
குமரன் தாதைநற் கோழம்ப மேவிய 
அமரர் கோவினுக் கன்புடைத் தொண்டர்கள் 
அமர லோகம தாளுடை யார்களே.
5.64.10

652
துட்ட னாகி மலையெடுத் தஃதின்கீழ்ப் 
பட்டு வீழ்ந்து படர்ந்துய்யப் போயினான் 
கொட்டம் நாறிய கோழம்பத் தீசனென் 
றிட்ட கீத மிசைத்த அரக்கனே.
5.64.11


இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் – கோகுலேசுவரர், தேவியார் – சவுந்தரியம்மை.
திருச்சிற்றம்பலம்
 


5.65 திருப்பூவனூர் – திருக்குறுந்தொகை 

திருச்சிற்றம்பலம்

653பூவ னூர்ப்புனி தன்றிரு நாமந்தான் 
நாவின் நூறுநூ றாயிரம் நண்ணினார் 
பாவ மாயின பாறிப் பறையவே 
தேவர் கோவினுஞ் செல்வர்க ளாவரே.
5.65.1
654என்ன னென்மனை எந்தையெ னாருயிர் 
தன்னன் றன்னடி யேன்றனமாகிய 
பொன்னன் பூவனூர் மேவிய புண்ணியன் 
இன்ன னென்றறி வொண்ணான் இயற்கையே.
5.65.2
655குற்றங் கூடிக் குணம்பல கூடாதீர் 
மற்றுந் தீவினை செய்தன மாய்க்கலாம் 
புற்ற ராவினன் பூவனூர் ஈசன்பேர் 
கற்று வாழ்த்துங் கழிவதன் முன்னமே.
5.65.3
656ஆவின் மேவிய ஐந்தமர்ந் தாடுவான் 
தூவெண் ணீறு துதைந்தசெம் மேனியான் 
மேவ நூல்விரி வெண்ணியின் தென்கரைப் 
பூவ னூர்புகு வார்வினை போகுமே.
5.65.4
657புல்ல மூர்தியூர் பூவனூர் பூம்புனல் 
நல்ல மூர்திநல் லூர்நனி பள்ளியூர் 
தில்லை யூர்திரு வாரூர் சீர்காழிநல் 
வல்ல மூரென வல்வினை மாயுமே.
5.65.5
658அனுச யப்பட்ட துவிது வென்னாதே 
கனிம னத்தொடு கண்களும் நீர்மல்கிப் 
புனித னைப்பூவ னூரனைப் போற்றுவார் 
மனித ரிற்றலை யான மனிதரே.
5.65.6
659ஆதி நாதன் அமரர்க ளர்ச்சிதன் 
வேத நாவன்வெற் பின்மடப் பாவையோர் 
பாதி யானான் பரந்த பெரும்படைப் 
பூத நாதன்தென் பூவனூர் நாதனே.
5.65.7
660பூவ னூர்தண் புறம்பயம் பூம்பொழில் 
நாவ லூர்நள் ளாறொடு நன்னிலங் 
கோவ லூர்குட வாயில் கொடுமுடி 
மூவ லூருமுக் கண்ணனூர் காண்மினே.
5.65.8
661ஏவ மேது மிலாவம ணேதலர் 
பாவ காரிகள் சொல்வலைப் பட்டுநான் 
தேவ தேவன் திருநெறி யாகிய 
பூவ னூர்புகு தப்பெற்ற நாளின்றே.
5.65.9
662நார ணன்னொடு நான்முகன் இந்திரன் 
வார ணன்கும ரன்வணங் குங்கழற் 
பூர ணன்திருப் பூவனூர் மேவிய 
கார ணன்னெனை யாளுடைக் காளையே.
5.65.10

663
மைக்க டுத்த நிறத்தரக் கன்வரை 
புக்கெ டுத்தலும் பூவனூ ரன்னடி 
மிக்க டுத்த விரல்சிறி தூன்றலும் 
பக்க டுத்தபின் பாடியுய்ந் தானன்றே.
5.65.11


இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் – புஷ்பவனநாதர் தேவியார் – கற்பகவல்லியம்மை.
திருச்சிற்றம்பலம்
 


5.66 திருவலஞ்சுழி – திருக்குறுந்தொகை 

திருச்சிற்றம்பலம்

664ஓத மார்கட லின்விட முண்டவன் 
பூத நாயகன் பொற்கயி லைக்கிறை 
மாதொர் பாகன் வலஞ்சுழி யீசனைப் 
பாத மேத்தப் பறையுநம் பாவமே.
5.66.1
665கயிலை நாதன் கறுத்தவர் முப்புரம் 
எயில்கள் தீயெழ வெல்வல வித்தகன் 
மயில்க ளாலும் வலஞ்சுழி யீசனைப் 
பயில்கி லார்சிலர் பாவித் தொழும்பரே.
5.66.2
666இளைய காலமெம் மானை யடைகிலாத் 
துளையி லாச்செவித் தொண்டர்காள் நும்முடல் 
வளையுங் காலம் வலஞ்சுழி யீசனைக் 
களைக ணாகக் கருதிநீர் உய்ம்மினே.
5.66.3
667நறைகொள் பூம்புனல் கொண்டெழு மாணிக்காய்க் 
குறைவி லாக்கொடுங் கூற்றுதைத் திட்டவன் 
மறைகொள் நாவன் வலஞ்சுழி மேவிய 
இறைவ னையினி என்றுகொல் காண்பதே.
5.66.4
668விண்ட வர்புர மூன்று மெரிகொளத் 
திண்டி றற்சிலை யாலெரி செய்தவன் 
வண்டு பண்முர லுந்தண் வலஞ்சுழி 
அண்ட னுக்கடி மைத்திறத் தாவனே.
5.66.5
669படங்கொள் பாம்பொடு பான்மதி யஞ்சடை 
அடங்க வாழவல் லானும்பர் தம்பிரான் 
மடந்தை பாகன் வலஞ்சுழி யானடி 
அடைந்த வர்க்கடி மைத்திறத் தாவனே.
5.66.6
670நாக்கொண் டுபர வும்மடி யார்வினை 
போக்க வல்ல புரிசடைப் புண்ணியன் 
மாக்கொள் சோலை வலஞ்சுழி ஈசன்றன் 
ஏக்கொ ளப்புர மூன்றெரி யானவே.
5.66.7
671தேடு வார்பிர மன்திரு மாலவர் 
ஆடு பாத மவரும் அறிகிலார் 
மாட வீதி வலஞ்சுழி யீசனைத் 
தேடு வானுறு கின்றதென் சிந்தையே.
5.66.8
672கண்ப னிக்குங் கைகூப்புங் கண்மூன்றுடை 
நண்ப னுக்கெனை நான்கொடுப் பேனெனும் 
வண்பொ னித்தென் வலஞ்சுழி மேவிய 
பண்ப னிப்பொனைச் செய்த பரிசிதே.
5.66.9
673இலங்கை வேந்தன் இருபது தோளிற 
நலங்கொள் பாதத் தொருவிர லூன்றினான் 
மலங்கு பாய்வயல் சூழ்ந்த வலஞ்சுழி 
வலங்கொள் வாரடி யென்றலை மேலவே.
5.66.10


இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் – வலஞ்சுழிநாதர், தேவியார் – பெரியநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
 


5.67 திருவாஞ்சியம் – திருக்குறுந்தொகை 

திருச்சிற்றம்பலம்

674படையும் பூதமும் பாம்பும்புல் வாயதள் 
உடையுந் தாங்கிய உத்தம னார்க்கிடம் 
புடைநி லாவிய பூம்பொழில் வாஞ்சியம் 
அடைய வல்லவர்க் கல்லலொன் றில்லையே.
5.67.1
675பறப்பை யும்பசு வும்படுத் துப்பல 
திறத்த வும்முடை யோர்திக ழும்பதி 
கறைப்பி றைச்சடைக் கண்ணுதல் சேர்தரு 
சிறப்பு டைத்திரு வாஞ்சியஞ் சேர்மினே.
5.67.2
676புற்றி லாடர வோடு புனல்மதி 
தெற்று செஞ்சடைத் தேவர் பிரான்பதி 
சுற்று மாடங்கள் சூழ்திரு வாஞ்சியம் 
பற்றிப் பாடுவார்க் குப்பாவ மில்லையே.
5.67.3
677அங்க மாறும் அருமறை நான்குடன் 
தங்கு வேள்வியர் தாம்பயி லுந்நகர் 
செங்கண் மாலிட மார்திரு வாஞ்சியந் 
தங்கு வார்நம் மமரர்க் கமரரே.
5.67.4
678நீறு பூசி நிமிர்சடை மேற்பிறை 
ஆறு சூடும் அடிகள் உறைபதி 
மாறு தானொருங் கும்வயல் வாஞ்சியந் 
தேறி வாழ்பவர்க் குச்செல்வ மாகுமே.
5.67.5
679அற்றுப் பற்றின்றி யாரையு மில்லவர்க் 
குற்ற நற்றுணை யாவான் உறைபதி 
தெற்று மாடங்கள் சூழ்திரு வாஞ்சியங் 
கற்றுச் சேர்பவர்க் குக்கருத் தாவதே.
5.67.6
680அருக்கன் அங்கி நமனொடு தேவர்கள் 
திருத்துஞ் சேவடி யான்றிக ழுந்நகர் 
ஒருத்தி பாக முகந்தவன் வாஞ்சியம் 
அருத்தி யாலடை வார்க்கில்லை யல்லலே.
5.67.7
 இப்பதிகத்தில் 8,9,10-ம் செய்யுட்கள் சிதைந்து போயின.5.67.8-10


இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் – சுகவாஞ்சிநாதர், தேவியார் – வாழவந்தஅம்மை.
திருச்சிற்றம்பலம்
 


5.68 திருநள்ளாறு – திருக்குறுந்தொகை 

திருச்சிற்றம்பலம்

681உள்ளா றாததோர் புண்டரி கத்திரள் 
தெள்ளா றாச்சிவ சோதித் திரளினைக் 
கள்ளா றாதபொற் கொன்றை கமழ்சடை 
நள்ளா றாவென நம்வினை நாசமே.
5.68.1
682ஆர ணப்பொரு ளாமரு ளாளனார் 
வார ணத்துரி போர்த்த மணாளனார் 
நார ணன்நண்ணி யேத்துநள் ளாறனார் 
கார ணக்கலை ஞானக் கடவுளே.
5.68.2
683மேகம் பூண்டதோர் மேருவிற் கொண்டெயில் 
சோகம் பூண்டழல் சோரத்தொட் டானவன் 
பாகம் பூண்டமால் பங்கயத் தானொடு 
நாகம் பூண்டுகூத் தாடுநள் ளாறனே.
5.68.3
684மலியுஞ் செஞ்சடை வாளர வம்மொடு 
பொலியும் பூம்புனல் வைத்த புனிதனார் 
நலியுங் கூற்றை நலிந்தநள் ளாறர்தம் 
வலியுங் கண்டிறு மாந்து மகிழ்வனே.
5.68.4
685உறவ னாய்நிறைந் துள்ளங் குளிர்ப்பவன் 
இறைவ னாகிநின் றெண்ணிறைந் தானவன் 
நறவ நாறும் பொழிற்றிரு நள்ளாறன் 
மறவ னாய்ப்பன்றிப் பின்சென்ற மாயமே.
5.68.5
686செக்க ரங்கழி செஞ்சுடர்ச் சோதியார் 
நக்க ரங்கர வார்த்தநள் ளாறனார் 
வக்க ரன்னுயிர் வவ்விய மாயற்குச் 
சக்க ரமருள் செய்த சதுரரே.
5.68.6
687வஞ்ச நஞ்சிற் பொலிகின்ற கண்டத்தர் 
விஞ்சை யிற்செல்வப் பாவைக்கு வேந்தனார் 
வஞ்ச நெஞ்சத் தவர்க்கு வழிகொடார் 
நஞ்ச நெஞ்சர்க் கருளுநள் ளாறரே.
5.68.7
688அல்ல னென்று மலர்க்கரு ளாயின 
சொல்ல னென்றுசொல் லாமறைச் சோதியான் 
வல்ல னென்றும்வல் லார்வள மிக்கவர் 
நல்ல னென்றுநல் லார்க்குநள் ளாறனே.
5.68.8
689பாம்ப ணைப்பள்ளி கொண்ட பரமனும் 
பூம்ப ணைப்பொலி கின்ற புராணனுந் 
தாம்ப ணிந்தளப் பொண்ணாத் தனித்தழல் 
நாம்ப ணிந்தடி போற்றுநள் ளாறனே.
5.68.9
690இலங்கை மன்னன் இருபது தோளிற 
மலங்க மால்வரை மேல்விரல் வைத்தவர் 
நலங்கொள் நீற்றர்நள் ளாறரை நாடொறும் 
வலங்கொள் வார்வினை யாயின மாயுமே.
5.68.10


இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் – திருநள்ளாற்றீசர், தேவியார் – போகமார்த்தபூண்முலையம்மை.
திருச்சிற்றம்பலம்


5.69 திருக்கருவிலி – திருக்குறுந்தொகை 

திருச்சிற்றம்பலம்

691மட்டிட் டகுழ லார்சுழ லில்வலைப் 
பட்டிட் டுமயங் கிப்பரி யாதுநீர் 
கட்டிட் டவினை போகக் கருவிலிக் 
கொட்டிட் டையுறை வான்கழல் கூடுமே.
5.69.1
692ஞால மல்கு மனிதர்காள் நாடொறும் 
ஏல மாமல ரோடிலை கொண்டுநீர் 
கால னார்வரு தன்முன் கருவிலிக் 
கோல வார்பொழிற் கொட்டிட்டை சேர்மினே.
5.69.2
693பங்க மாயின பேசப் பறைந்துநீர் 
மங்கு மாநினை யாதே மலர்கொடு 
கங்கை சேர்சடை யான்றன் கருவிலிக் 
கொங்கு வார்பொழிற் கொட்டிட்டை சேர்மினே.
5.69.3
694வாடி நீர்வருந் தாதே மனிதர்காள் 
வேட னாய்விச யற்கருள் செய்தவெண் 
காட னாருறை கின்ற கருவிலிக் 
கோடு நீள்பொழிற் கொட்டிட்டை சேர்மினே.
5.69.4
695உய்யு மாறிது கேண்மின் உலகத்தீர் 
பைகொள் பாம்பரை யான்படை யார்மழுக் 
கையி னானுறை கின்ற கருவிலிக் 
கொய்கொள் பூம்பொழிற் கொட்டிட்டை சேர்மினே.
5.69.5
696ஆற்ற வும்மவ லத்தழுந் தாதுநீர் 
தோற்றுந் தீயொடு நீர்நிலந் தூவெளி 
காற்று மாகிநின் றான்றன் கருவிலிக் 
கூற்றங் காய்ந்தவன் கொட்டிட்டை சேர்மினே.
5.69.6
697நில்லா வாழ்வு நிலைபெறு மென்றெண்ணிப் 
பொல்லா வாறு செயப்புரி யாதுநீர் 
கல்லா ரும்மதில் சூழ்தண் கருவிலிக் 
கொல்லே றூர்பவன் கொட்டிட்டை சேர்மினே.
5.69.7
698பிணித்த நோய்ப்பிற விப்பிறி வெய்துமா 
றுணர்த்த லாமிது கேண்மின் உருத்திர 
கணத்தி னார்தொழு தேத்துங் கருவிலிக் 
குணத்தி னானுறை கொட்டிட்டை சேர்மினே.
5.69.8
699நம்பு வீரிது கேண்மின்கள் நாடொறும் 
எம்பி ரானென் றிமையவ ரேத்துமே 
கம்ப னாருறை கின்ற கருவிலிக் 
கொம்ப னார்பயில் கொட்டிட்டை சேர்மினே.
5.69.9
700பாரு ளீரிது கேண்மின் பருவரை 
பேரு மாறெடுத் தானை யடர்த்தவன் 
கார்கொள் நீர்வயல் சூழ்தண் கருவிலிக் 
கூர்கொள் வேலினன் கொட்டிட்டை சேர்மினே.
5.69.10


இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் – சற்குணநாதர், தேவியார் – சர்வாங்கநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
 


5.70 திருக்கொண்டீச்சரம் – திருக்குறுந்தொகை 

திருச்சிற்றம்பலம்

701கண்ட பேச்சினிற் காளையர் தங்கள்பால் 
மண்டி யேச்சுணு மாதரைச் சேராதே 
சண்டி யீச்சுர வர்க்கருள் செய்தவக் 
கொண்டி யீச்சுர வன்கழல் கூறுமே.
5.70.1
702சுற்ற முந்துணை நன்மட வாளொடு 
பெற்ற மக்களும் பேண லொழிந்தனர் 
குற்ற மில்புகழ்க் கொண்டீச் சுரவனார் 
பற்ற லாலொரு பற்றுமற் றில்லையே.
5.70.2
703மாடு தானது வில்லெனின் மானிடர் 
பாடு தான்செல்வா ரில்லைபன் மாலையாற் 
கூட நீர்சென்று கொண்டீச் சுரவனைப் 
பாடு மின்பர லோகத் திருத்துமே.
5.70.3
704தந்தை தாயொடு தார மெனுந்தளைப் 
பந்த மாங்கறுத் துப்பயில் வெய்திய 
கொந்த விழ்பொழிற் கொண்டீச் சுரவனைச் 
சிந்தை செய்ம்மின் அவனடி சேரவே.
5.70.4
705கேளு மின்னிள மையது கேடுவந் 
தீளை யோடிரு மல்லது வெய்தன்முன் 
கோள ராவணி கொண்டீச் சுரவனை 
நாளு மேத்தித் தொழுமின்நன் காகுமே.
5.70.5
706வெம்பு நோயும் இடரும் வெறுமையும் 
துன்ப முந்துய ரும்மெனுஞ் சூழ்வினை 
கொம்ப னார்பயில் கொண்டீச் சுரவனை 
எம்பி ரானென வல்லவர்க் கில்லையே.
5.70.6
707அல்ல லோடரு நோயில் அழுந்திநீர் 
செல்லு மாநினை யாதே கனைகுரற் 
கொல்லை யேறுடைக் கொண்டீச் சுரவனை 
வல்ல வாறு தொழவினை மாயுமே.
5.70.7
708நாறு சாந்தணி நன்முலை மென்மொழி 
மாறி லாமலை மங்கையோர் பாகமாக் 
கூற னாருறை கொண்டீச் சுரநினைந் 
தூறு வார்தமக் கூனமொன் றில்லையே.
5.70.8
709அயிலார் அம்பெரி மேருவில் லாகவே 
எயிலா ரும்பொடி யாய்விழ எய்தவன் 
குயிலா ரும்பொழிற் கொண்டீச் சுரவனைப் 
பயில்வா ரும்பெரு மைபெறும் பாலரே.
5.70.9
710நிலையி னார்வரை நின்றெடுத் தான்றனை 
மலையி னாலடர்த் துவிறல் வாட்டினான் 
குலையி னார்பொழிற் கொண்டீச் சுரவனைத் 
தலையி னால்வணங் கத்தவ மாகுமே.
5.70.10


இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் – பசுபதீச்சுவரர், தேவியார் – சாந்தநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
 


5.71 திருவிசயமங்கை – திருக்குறுந்தொகை 

திருச்சிற்றம்பலம்

711குசையும் அங்கையிற் கோசமுங் கொண்டவவ் 
வசையின் மங்கல வாசகர் வாழ்த்தவே 
இசைய மங்கையுந் தானுமொன் றாயினான் 
விசைய மங்கையுள் வேதியன் காண்மினே.
5.71.1
712ஆதி நாதன் அடல்விடை மேலமர் 
பூத நாதன் புலியத ளாடையன் 
வேத நாதன் விசயமங் கையுளான் 
பாத மோதவல் லார்க்கில்லை பாவமே.
5.71.2
713கொள்ளி டக்கரைக் கோவந்த புத்தூரில் 
வெள்வி டைக்கருள் செய்விச யமங்கை 
உள்ளி டத்துறை கின்ற உருத்திரன் 
கிள்ளி டத்தலை யற்ற தயனுக்கே.
5.71.3
714திசையு மெங்குங் குலுங்கத் திரிபுரம் 
அசைய வங்கெய்திட் டாரழ லூட்டினான் 
விசைய மங்கை விருத்தன் புறத்தடி 
விசையின் மங்கி விழுந்தனன் காலனே.
5.71.4
715பொள்ள லாக்கை அகத்திலைம் பூதங்கள் 
கள்ள மாக்கிக் கலக்கிய காரிருள் 
விள்ள லாக்கி விசயமங் கைப்பிரான் 
உள்ள நோக்கியெ னுள்ளுள் உறையுமே.
5.71.5
716கொல்லை யேற்றுக் கொடியொடு பொன்மலை 
வில்லை யேற்றுடை யான்விச யமங்கைச் 
செல்வ போற்றியென் பாருக்குத் தென்றிசை 
எல்லை யேற்றலும் இன்சொலு மாகுமே.
5.71.6
717கண்பல் உக்கக் கபாலம்அங் கைக்கொண்டு 
உண்ப லிக்குழல் உத்தம னுள்ளொளி 
வெண்பி றைக்கண்ணி யான்விச யமங்கை 
நண்ப னைத்தொழப் பெற்றது நன்மையே.
5.71.7
718பாண்டு வின்மகன் பார்த்தன் பணிசெய்து 
வேண்டு நல்வரங் கொள்விச யமங்கை 
ஆண்ட வன்னடி யேநினைந் தாசையாற் 
காண்ட லேகருத் தாகி யிருப்பனே.
5.71.8
719வந்து கேண்மின் மயல்தீர் மனிதர்காள் 
வெந்த நீற்றன் விசயமங் கைப்பிரான் 
சிந்தை யால்நினை வார்களைச் சிக்கெனப் 
பந்து வாக்கி உயக்கொளுங் காண்மினே.
5.71.9
720இலங்கை வேந்தன் இருபது தோளிற 
விலங்கள் சேர்விர லான்விச யமங்கை 
வலஞ்செய் வார்களும் வாழ்த்திசைப் பார்களும் 
நலஞ்செய் வாரவர் நன்னெறி நாடியே.
5.72.10


இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் – விசையநாதேசுவரர், தேவியார் – மங்கைநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
 


5.72 திருநீலக்குடி – திருக்குறுந்தொகை 

திருச்சிற்றம்பலம்

721வைத்த மாடும் மனைவியும் மக்கள்நீர் 
செத்த போது செறியார் பிரிவதே 
நித்த நீலக் குடியர னைந்நினை 
சித்த மாகிற் சிவகதி சேர்திரே.
5.72.1
722செய்ய மேனியன் றேனொடு பால்தயிர் 
நெய்ய தாடிய நீலக் குடியரன் 
மைய லாய்மற வாமனத் தார்க்கெலாங் 
கையி லாமல கக்கனி யொக்குமே.
5.72.2
723ஆற்ற நீள்சடை ஆயிழை யாளொரு 
கூற்றன் மேனியிற் கோலம தாகிய 
நீற்றன் நீலக் குடியுடை யானடி 
போற்றி னாரிடர் போக்கும் புனிதனே.
5.72.3
724நாலு வேதியர்க் கின்னருள் நன்னிழல் 
ஆலன் ஆலநஞ் சுண்டகண் டத்தமர் 
நீலன் நீலக் குடியுறை நின்மலன் 
கால னாருயிர் போக்கிய காலனே.
5.72.4
725நேச நீலக் குடியர னேயெனா 
நீச ராய்நெடு மால்செய்த மாயத்தால் 
ஈச னோர்சர மெய்ய எரிந்துபோய் 
நாச மானார் திரிபுர நாதரே.
5.72.5
726கொன்றை சூடியைக் குன்ற மகளொடு 
நின்ற நீலக் குடியர னேயெனீர் 
என்றும் வாழ்வுகந் தேயிறு மாக்குநீர் 
பொன்றும் போது நுமக்கறி வொண்ணுமே.
5.72.6
727கல்லி னோடெனைப் பூட்டி அமண்கையர் 
ஒல்லை நீர்புக நூக்கவென் வாக்கினால் 
நெல்லு நீள்வயல் நீலக் குடியரன் 
நல்ல நாமம் நவிற்றியுய்ந் தேனன்றே.
5.72.7
728அழகி யோமிளை யோமெனு மாசையால் 
ஒழுகி ஆவி உடல்விடு முன்னமே 
நிழல தார்பொழில் நீலக் குடியரன் 
கழல்கொள் சேவடி கைதொழு துய்ம்மினே.
5.72.8
729கற்றைச் செஞ்சடைக் காய்கதிர் வெண்டிங்கள் 
பற்றிப் பாம்புடன் வைத்த பராபரன் 
நெற்றிக் கண்ணுடை நீலக் குடியரன் 
சுற்றித் தேவர் தொழுங்கழற் சோதியே.
5.72.9
730தருக்கி வெற்பது தாங்கிய வீங்குதோள் 
அரக்க னாருட லாங்கோர் விரலினால் 
நெரித்து நீலக் குடியரன் பின்னையும் 
இரக்க மாயருள் செய்தனன் என்பரே.
5.72.10


இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் – நீலகண்டேசுவரர், தேவியார் – நீலநிறவுமையம்மை.
திருச்சிற்றம்பலம்
 


5.73 திருமங்கலக்குடி – திருக்குறுந்தொகை 

திருச்சிற்றம்பலம்

731தங்க லப்பிய தக்கன் பெருவேள்வி 
அங்க லக்கழித் தாரருள் செய்தவன் 
கொங்க லர்க்குழற் கொம்பனை யாளொடு 
மங்க லக்குடி மேய மணாளனே.
5.73.1
732காவி ரியின்வ டகரைக் காண்டகு 
மாவி ரியும்பொ ழில்மங் கலக்குடித் 
தேவ ரியும்பி ரமனுந் தேடொணாத் 
தூவெ ரிச்சுடர்ச் சோதியுட் சோதியே.
5.73.2
733மங்க லக்குடி ஈசனை மாகாளி 
வெங்க திர்ச்செல்வன் விண்ணொடு மண்ணுநேர் 
சங்கு சக்கர தாரி சதுர்முகன் 
அங்க கத்திய னும்மர்ச்சித் தாரன்றே.
5.73.3
734மஞ்சன் வார்கடல் சூழ்மங்க லக்குடி 
நஞ்ச மாரமு தாக நயந்துகொண் 
டஞ்சு மாட லமர்ந்தடி யேனுடை 
நெஞ்ச மாலய மாக்கொண்டு நின்றதே.
5.73.4
735செல்வ மல்கு திருமங் கலக்குடிச் 
செல்வ மல்கு சிவநிய மத்தராய்ச் 
செல்வ மல்கு செழுமறை யோர்தொழச் 
செல்வன் றேவியொ டுந்திகழ் கோயிலே.
5.73.5
736மன்னு சீர்மங் கலக்குடி மன்னிய 
பின்னு வார்சடைப் பிஞ்ஞகன் றன்பெயர் 
உன்னு வாரு முரைக்கவல் லார்களுந் 
துன்னு வார்நன் னெறிதொடர் வெய்தவே.
5.73.6
737மாத ரார்மரு வும்மங்க லக்குடி 
ஆதி நாயகன் அண்டர்கள் நாயகன் 
வேத நாயகன் வேதியர் நாயகன் 
பூத நாயகன் புண்ணிய மூர்த்தியே.
5.73.7
738வண்டு சேர்பொழில் சூழ்மங்க லக்குடி 
விண்ட தாதையைத் தாளற வீசிய 
சண்ட நாயக னுக்கருள் செய்தவன் 
துண்ட மாமதி சூடிய சோதியே.
5.73.8
739கூசு வாரலர் குண்டர் குணமிலர் 
நேச மேது மிலாதவர் நீசர்கள் 
மாசர் பால்மங்க லக்குடி மேவிய 
ஈசன் வேறு படுக்கவுய்ந் தேனன்றே.
5.73.9
740மங்க லக்குடி யான்கயி லைமலை 
அங்க லைத்தெடுக் குற்ற அரக்கர்கோன் 
தன்க ரத்தொடு தாள்தலை தோள்தகர்ந் 
தங்க லைத்தழு துய்ந்தனன் தானன்றே.
5.73.10


இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் – பிராணேசவரதர், தேவியார் – மங்களநாயகியம்மை.

திருச்சிற்றம்பலம்
 


5.74 திருஎறும்பியூர் – திருக்குறுந்தொகை 

திருச்சிற்றம்பலம்

741விரும்பி யூறு விடேல்மட நெஞ்சமே 
கரும்பி னூறல்கண் டாய்கலந் தார்க்கவன் 
இரும்பி னூறல றாததோர் வெண்டலை 
எறும்பி யூர்மலை யானெங்க ளீசனே.
5.74.1
742பிறங்கு செஞ்சடைப் பிஞ்ஞகன் பேணுசீர்க் 
கறங்கு பூத கணமுடைக் கண்ணுதல் 
நறுங்கு ழல்மட வாளொடு நாடொறும் 
எறும்பி யூர்மலை யானெங்க ளீசனே.
5.74.2
743மருந்து வானவர் தானவர்க் கின்சுவை 
புரிந்த புன்சடைப் புண்ணியன் கண்ணுதல் 
பொருந்து பூண்முலை மங்கைநல் லாளொடும் 
எறும்பி யூர்மலை யானெங்க ளீசனே.
5.74.3
744நிறங்கொள் கண்டத்து நின்மலன் எம்மிறை 
மறங்கொள் வேற்கண்ணி வாணுதல் பாகமா 
அறம்பு ரிந்தருள் செய்தவெம் அங்கணன் 
எறும்பி யூர்மலை யானெங்க ளீசனே.
5.74.4
745நறும்பொன் நாண்மலர்க் கொன்றையு நாகமுந் 
துறும்பு செஞ்சடைத் தூமதி வைத்துவான் 
உறும்பொன் மால்வரைப் பேதையோ டூர்தொறும் 
எறும்பி யூர்மலை யானெங்க ளீசனே.
5.74.5
746கறும்பி யூர்வன ஐந்துள காயத்தில் 
திறம்பி யூர்வன மற்றும் பலவுள 
குறும்பி யூர்வதோர் கூட்டகத் திட்டெனை 
எறும்பி யூரரன் செய்த இயற்கையே.
5.74.6
747மறந்து மற்றிது பேரிடர் நாடொறுந் 
திறம்பி நீநினை யேல்மட நெஞ்சமே 
புறஞ்செய் கோலக் குரம்பையி லிட்டெனை 
எறும்பி யூரரன் செய்த இயற்கையே.
5.74.7
748இன்ப மும்பிறப் பும்மிறப் பின்னொடு 
துன்ப மும்முட னேவைத்த சோதியான் 
அன்ப னேயர னேயென் றரற்றுவார்க் 
கின்ப னாகும் எறும்பியூ ரீசனே.
5.74.8
749கண்ணி றைந்த கனபவ ளத்திரள் 
விண்ணி றைந்த விரிசுடர்ச் சோதியான் 
உண்ணி றைந்துரு வாயுயி ராயவன் 
எண்ணி றைந்த எறும்பியூ ரீசனே.
5.74.9
750நிறங்கொள் மால்வரை ஊன்றி யெடுத்தலும் 
நறுங்கு ழல்மட வாள்நடுக் கெய்திட 
மறங்கொள் வாளரக் கன்வலி வாட்டினான் 
எறும்பி யூர்மலை எம்மிறை காண்மினே.
5.74.10


இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் – எறும்பீசுவரர், 
தேவியார் – நறுங்குழல்நாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
 


5.75 திருக்குரக்குக்கா – திருக்குறுந்தொகை 

திருச்சிற்றம்பலம்

751மரக்கொக் காமென வாய்விட் டலறிநீர் 
சரக்குக் காவித் திரிந்தய ராதுகால் 
பரக்குங் காவிரி நீரலைக் குங்கரைக் 
குரக்குக் காவடை யக்கெடுங் குற்றமே.
5.75.1
752கட்டா றேகழி காவிரி பாய்வயல் 
கொட்டா றேபுன லூறு குரக்குக்கா 
முட்டா றாவடி யேத்த முயல்பவர்க் 
கிட்டா றாவிட ரோட எடுக்குமே.
5.75.2
753கைய னைத்துங் கலந்தெழு காவிரி 
செய்ய னைத்திலுஞ் சென்றிடுஞ் செம்புனல் 
கொய்ய னைத்துங் கொணருங் குரக்குக்கா 
ஐய னைத்தொழு வார்க்கல்ல லில்லையே.
5.75.3
754மிக்க னைத்துத் திசையும் அருவிகள் 
புக்குக் காவிரி போந்த புனற்கரைக் 
கொக்கி னம்பயில் சோலைக் குரக்குக்கா 
நக்க னைநவில் வார்வினை நாசமே.
5.75.4
755விட்டு வெள்ளம் விரிந்தெழு காவிரி 
இட்ட நீர்வய லெங்கும் பரந்திடக் 
கொட்ட மாமுழ வோங்கு குரக்குக்கா 
இட்ட மாயிருப் பார்க்கிட ரில்லையே.
5.75.5
756மேலை வானவ ரோடு விரிகடல் 
மாலும் நான்முக னாலுமளப் பொணாக் 
கோல மாளிகைக் கோயில் குரக்குக்காப் 
பால ராய்த்திரி வார்க்கில்லை பாவமே.
5.75.6
757ஆல நீழ லமர்ந்த அழகனார் 
கால னையுதை கொண்ட கருத்தனார் 
கோல மஞ்ஞைகள் ஆலும் குரக்குக்காப் 
பால ருக்கருள் செய்வர் பரிவொடே.
5.75.7
758செக்க ரங்கெழு செஞ்சுடர்ச் சோதியார் 
அக்க ரையரெம் மாதிபு ராணனார் 
கொக்கி னம்வயல் சேருங் குரக்குக்கா 
நக்க னைத்தொழ நம்வினை நாசமே.
5.75.8
759உருகி ஊன்குழைந் தேத்தி யெழுமின்நீர் 
கரிய கண்டன் கழலடி தன்னையே 
குரவ னஞ்செழுங் கோயில் குரக்குக்கா 
இரவும் எல்லியும் ஏத்தித் தொழுமினே.
5.75.9
760இரக்க மின்றி மலையெடுத் தான்முடி 
உரத்தை யொல்க அடர்த்தா னுறைவிடங் 
குரக்கி னங்குதி கொள்ளுங் குரக்குக்கா 
வரத்த னைப்பெற வானுல காள்வரே.
5.75.10


இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் – கொந்தளக்கருணைநாதர், தேவியார் – கொந்தளநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
 


5.76 திருக்கானூர் – திருக்குறுந்தொகை 

திருச்சிற்றம்பலம்

761திருவின் நாதனுஞ் செம்மலர் மேலுறை 
உருவ னாயுல கத்தி னுயிர்க்கெலாங் 
கருவ னாகி முளைத்தவன் கானூரிற் 
பரம னாய பரஞ்சுடர் காண்மினே.
5.76.1
762பெண்டிர் மக்கள் பெருந்துணை நன்னிதி 
உண்டின் றேயென் றுகவன்மின் ஏழைகாள் 
கண்டு கொண்மின்நீர் கானூர் முளையினைப் 
புண்ட ரீகப் பொதும்பி லொதுங்கியே.
5.76.2
763தாயத் தார்தமர் நன்னிதி யென்னுமிம் 
மாயத் தேகிடந் திட்டு மயங்கிடேல் 
காயத் தேயுளன் கானூர் முளையினை 
வாயத் தால்வணங் கீர்வினை மாயவே.
5.76.3
764குறியில் நின்றுண்டு கூறையி லாச்சமண் 
நெறியை விட்டு நிறைகழல் பற்றினேன் 
அறிய லுற்றிரேல் கானூர் முளையவன் 
செறிவு செய்திட் டிருப்பதென் சிந்தையே.
5.76.4
765பொத்தல் மண்சுவர்ப் பொல்லாக் குரம்பையை 
மெய்த்த னென்று வியந்திடேல் ஏழைகாள் 
சித்தர் பத்தர்கள் சேர்திருக் கானூரில் 
அத்தன் பாத மடைதல் கருமமே.
5.76.5
766கல்வி ஞானக் கலைப்பொரு ளாயவன் 
செல்வ மல்கு திருக்கானூ ரீசனை 
எல்லி யும்பக லும்மிசை வானவர் 
சொல்லி டீர்நுந் துயரங்கள் தீரவே.
5.76.6
767நீரும் பாரும் நெருப்பும் அருக்கனுங் 
காரு மாருதங் கானூர் முளைத்தவன் 
சேர்வு மொன்றறி யாது திசைதிசை 
ஓர்வு மொன்றில ரோடித் திரிவரே.
5.76.7
768ஓமத் தோடயன் மாலறி யாவணம் 
வீமப் பேரொளி யாய விழுப்பொருள் 
காமற் காய்ந்தவன் கானூர் முளைத்தவன் 
சேமத் தாலிருப் பாவதென் சிந்தையே.
5.76.8
 இப்பதிகத்தில் 9-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.5.76.9
769வன்னி கொன்றை எருக்கணிந் தான்மலை 
உன்னி யேசென் றெடுத்தவன் ஒண்டிறல் 
தன்னை வீழத் தனிவிரல் வைத்தவன் 
கன்னி மாமதிற் கானூர்க் கருத்தனே.
5.76.10


இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் – செம்மேனிநாயகர், தேவியார் – சிவயோகநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
 


5.77 திருச்சேறை – திருக்குறுந்தொகை 

திருச்சிற்றம்பலம்

770பூரி யாவரும் புண்ணியம் பொய்கெடுங் 
கூரி தாய அறிவுகை கூடிடுஞ் 
சீரி யார்பயில் சேறையுட் செந்நெறி 
நாரி பாகன்றன் நாமம் நவிலவே.
5.77.1
771என்ன மாதவஞ் செய்தனை நெஞ்சமே 
மின்னு வார்சடை வேதவி ழுப்பொருள் 
செந்நெ லார்வயல் சேறையுட் செந்நெறி 
மன்னு சோதிநம் பால்வந்து வைகவே.
5.77.2
772பிறப்பு மூப்புப் பெரும்பசி வான்பிணி 
இறப்பு நீங்கியிங் கின்பம்வந் தெய்திடுஞ் 
சிறப்பர் சேறையுட் செந்நெறி யான்கழல் 
மறப்ப தின்றி மனத்தினுள் வைக்கவே.
5.77.3
773மாடு தேடி மயக்கினில் வீழ்ந்துநீர் 
ஓடி யெய்த்தும் பயனிலை ஊமர்காள் 
சேடர் வாழ்சேறைச் செந்நெறி மேவிய 
ஆட லான்றன் அடியடைந் துய்ம்மினே.
5.77.4
774எண்ணி நாளும் எரியயிற் கூற்றுவன் 
துண்ணென் றோன்றிற் றுரக்கும் வழிகண்டேன் 
திண்ணன் சேறைத் திருச்செந் நெறியுறை 
அண்ண லாருளர் அஞ்சுவ தென்னுக்கே.
5.77.5
775தப்பில் வானந் தரணிகம் பிக்கிலென் 
ஒப்பில் வேந்தர் ஒருங்குடன் சீறிலென் 
செப்ப மாஞ்சேறைச் செந்நெறி மேவிய 
அப்ப னாருளர் அஞ்சுவ தென்னுக்கே.
5.77.6
776வைத்த மாடும் மடந்தைநல் லார்களும் 
ஒத்தொவ் வாதவுற் றார்களு மென்செய்வார் 
சித்தர் சேறைத் திருச்செந் நெறியுறை 
அத்தர் தாமுளர் அஞ்சுவ தென்னுக்கே.
5.77.7
777குலங்க ளென்செய்வ குற்றங்க ளென்செய்வ 
துலங்கி நீநின்று சோர்ந்திடல் நெஞ்சமே 
இலங்கு சேறையிற் செந்நெறி மேவிய 
அலங்க னாருளர் அஞ்சுவ தென்னுக்கே.
5.77.8
778பழகி னால்வரும் பண்டுள சுற்றமும் 
விழவி டாவிடில் வேண்டிய எய்தொணா 
திகழ்கொள் சேறையிற் செந்நெறி மேவிய 
அழக னாருளர் அஞ்சுவ தென்னுக்கே.
5.77.9
779பொருந்து நீண்மலை யைப்பிடித் தேந்தினான் 
வருந்த வூன்றி மலரடி வாங்கினான் 
திருந்து சேறையிற் செந்நெறி மேவியங் 
கிருந்த சோதியென் பார்க்கிட ரில்லையே.
5.77.10


இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் – செந்நெறியப்பர், தேவியார் – ஞானவல்லியம்மை.
திருச்சிற்றம்பலம்
 


5.78 திருக்கோடிகா – திருக்குறுந்தொகை 

திருச்சிற்றம்பலம்

780சங்கு லாமுன்கைத் தையலோர் பாகத்தன் 
வெங்கு லாமத வேழம் வெகுண்டவன் 
கொங்கு லாம்பொழிற் கோடிகா வாவென 
எங்கி லாததோர் இன்பம்வந் தெய்துமே.
5.78.1
781வாடி வாழ்வதென் னாவது மாதர்பால் 
ஓடி வாழ்வினை உள்கிநீர் நாடொறுங் 
கோடி காவனைக் கூறீரேற் கூறினேன் 
பாடி காவலிற் பட்டுக் கழிதிரே.
5.78.2
782முல்லை நன்முறு வல்லுமை பங்கனார் 
தில்லை யம்பலத் தில்லுறை செல்வனார் 
கொல்லை யேற்றினர் கோடிகா வாவென்றங் 
கொல்லை யேத்துவார்க் கூனமொன் றில்லையே.
5.78.3
783நாவ ளம்பெறு மாறும னன்னுதல் 
ஆம ளஞ்சொலி அன்புசெ யின்னலாற் 
கோம ளஞ்சடைக் கோடிகா வாவென 
ஏவ ளின்றெனை ஏசுமவ் வேழையே.
5.78.4
784வீறு தான்பெறு வார்சில ராகிலும் 
நாறு பூங்கொன்றை தான்மிக நல்கானேற் 
கூறு வேன்கோடி காவுளாய் என்றுமால் 
ஏறு வேனும்மால் ஏசப் படுவனோ.
5.78.5
785நாடி நாரணன் நான்முகன் வானவர் 
தேடி யேசற வுந்தெரி யாததோர் 
கோடி காவனைக் கூறாத நாளெலாம் 
பாடி காவலிற் பட்டுக் கழியுமே.
5.78.6
 இப்பதிகத்தில் 7,8,9-ம் செய்யுட்கள் சிதைந்து போயின.5.78.7-9
– 786வரங்க ளால்வரை யையெடுத் தான்றனை 
அரங்க வூன்றி யருள்செய்த அப்பனூர் 
குரங்கு சேர்பொழிற் கோடிகா வாவென 
இரங்கு வேன்மனத் தேதங்கள் தீரவே.
5.78.10


இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் – கோடீசுவரர், தேவியார் – வடிவாம்பிகையம்மை.
திருச்சிற்றம்பலம்
 


5.79 திருப்புள்ளிருக்குவேளூர் – திருக்குறுந்தொகை 

திருச்சிற்றம்பலம்

787வெள்ளெ ருக்கர வம்விர வுஞ்சடைப் 
புள்ளி ருக்குவே ளூரரன் பொற்கழல் 
உள்ளி ருக்கு முணர்ச்சியில் லாதவர் 
நள்ளி ருப்பர் நரகக் குழியிலே.
5.79.1
788மாற்ற மொன்றறி யீர்மனை வாழ்க்கைபோய்க் 
கூற்றம் வந்துமைக் கொள்வதன் முன்னமே 
போற்ற வல்லிரேற் புள்ளிருக் குவேளூர் 
சீற்ற மாயின தேய்ந்தறுங் காண்மினே.
5.79.2
789அரும றையனை ஆணொடு பெண்ணனைக் 
கருவி டம்மிக வுண்டவெங் கண்டனைப் 
புரிவெண் ணூலனைப் புள்ளிருக் குவேளூர் 
உருகி நைபவர் உள்ளங் குளிருமே.
5.79.3
790தன்னு ருவை யொருவர்க் கறிவொணா 
மின்னு ருவனை மேனிவெண் ணீற்றனைப் 
பொன்னு ருவனைப் புள்ளிருக் குவேளூர் 
என்ன வல்லவர்க் கில்லை யிடர்களே.
5.79.4
791செங்கண் மால்பிர மற்கு மறிவொணா 
அங்கி யின்னுரு வாகி அழல்வதோர் 
பொங்க ரவனைப் புள்ளிருக் குவேளூர் 
மங்கை பாகனை வாழ்த்த வருமின்பே.
5.79.5
792குற்ற மில்லியைக் கோலச் சிலையினாற் 
செற்ற வர்புரஞ் செந்தழ லாக்கியைப் 
புற்ற ரவனைப் புள்ளிருக் குவேளூர் 
பற்ற வல்லவர் பாவம் பறையுமே.
5.79.6
793கையி னோடுகால் கட்டி யுமரெலாம் 
ஐயன் வீடினன் என்பதன் முன்னம்நீர் 
பொய்யி லாவரன் புள்ளிருக் குவேளூர் 
மையு லாவிய கண்டனை வாழ்த்துமே.
5.79.7
794உள்ளம் உள்கி உகந்து சிவனென்று 
மெள்ள வுள்க வினைகெடும் மெய்ம்மையே 
புள்ளி னார்பணி புள்ளிருக் குவேளூர் 
வள்ளல் பாதம் வணங்கித் தொழுமினே.
5.79.8
 இப்பதிகத்தில் 9-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.5.79.9
795அரக்க னார்தலை பத்தும் அழிதர 
நெருக்கி மாமலர்ப் பாதம் நிறுவிய 
பொருப்ப னாருறை புள்ளிருக் குவேளூர் 
விருப்பி னாற்றொழு வார்வினை வீடுமே.
5.79.10


இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் – வைத்தியநாதர், தேவியார் – தையல்நாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
 


5.80 திருஅன்பில்ஆலந்துறை – திருக்குறுந்தொகை 

திருச்சிற்றம்பலம்

796வானஞ் சேர்மதி சூடிய மைந்தனை 
நீநெஞ் சேகெடு வாய்நினை கிற்கிலை 
ஆனஞ் சாடியை அன்பிலா லந்துறைக் 
கோனெஞ் செல்வனைக் கூறிடக் கிற்றியே.
5.80.1
797கார ணத்தர் கருத்தர் கபாலியார் 
வார ணத்துரி போர்த்த மணாளனார் 
ஆர ணப்பொருள் அன்பிலா லந்துறை 
நார ணற்கரி யானொரு நம்பியே.
5.80.2
798அன்பினா னஞ்ச மைந்துட னாடிய 
என்பின் ஆனை யுரித்துக் களைந்தவன் 
அன்பி லானையம் மானையள் ளூறிய 
அன்பி னால்நினைந் தாரறிந் தார்களே.
5.80.3
799சங்கை யுள்ளதுஞ் சாவது மெய்யுமை 
பங்க னாரடி பாவியே னானுய 
அங்க ணனெந்தை அன்பிலா லந்துறைச் 
செங்க ணாரடிச் சேரவும் வல்லனே.
5.80.4
800கொக்கி றகர் குளிர்மதிச் சென்னியர் 
மிக்க ரக்கர் புரமெரி செய்தவர் 
அக்க ரையினர் அன்பிலா லந்துறை 
நக்கு ருவரும் நம்மை யறிவரே.
5.80.5
801வெள்ள முள்ள விரிசடை நந்தியைக் 
கள்ள முள்ள மனத்தவர் காண்கிலார் 
அள்ள லார்வயல் அன்பிலா லந்துறை 
உள்ள வாறறி யார்சிலர் ஊமரே.
5.80.6
802பிறவி மாயப் பிணக்கில் அழுந்தினும் 
உறவெ லாஞ்சிந்தித் துன்னி உகவாதே 
அறவன் எம்பிரான் அன்பிலா லந்துறை 
மறவா தேதொழு தேத்தி வணங்குமே.
5.80.7
803நுணங்கு நூலயன் மாலும் இருவரும் 
பிணங்கி யெங்குந் திரிந்தெய்த்துங் காண்கிலா 
அணங்கன் எம்பிரான் அன்பிலா லந்துறை 
வணங்கும் நும்வினை மாய்ந்தறும் வண்ணமே.
5.80.8
804பொய்யெ லாமுரைக் குஞ்சமண் சாக்கியக் 
கையன் மாருரை கேளா தெழுமினோ 
ஐயன் எம்பிரான் அன்பிலா லந்துறை 
மெய்யன் சேவடி யேத்துவார் மெய்யரே.
5.80.9
805இலங்கை வேந்தன் இருபது தோளிற்று 
மலங்க மாமலை மேல்விரல் வைத்தவன் 
அலங்கல் எம்பிரான் அன்பிலா லந்துறை 
வலங்கொள் வாரைவா னோர்வலங் கொள்வரே.
5.80.10


இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் – சத்திவாகீசர், தேவியார் – சவுந்தரநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
 


5.81 திருப்பாண்டிக்கொடுமுடி – திருக்குறுந்தொகை 

திருச்சிற்றம்பலம்

806சிட்ட னைச்சிவ னைச்செழுஞ் சோதியை 
அட்ட மூர்த்தியை ஆல நிழலமர் 
பட்ட னைத்திருப் பாண்டிக் கொடுமுடி 
நட்ட னைத்தொழ நம்வினை நாசமே.
5.81.1
807பிரமன் மாலறி யாத பெருமையன் 
தரும மாகிய தத்துவன் எம்பிரான் 
பரம னாருறை பாண்டிக் கொடுமுடி 
கரும மாகத் தொழுமட நெஞ்சமே.
5.81.2
808ஊச லாளல்லள் ஒண்கழ லாளல்லள் 
தேச மாந்திருப் பாண்டிக் கொடுமுடி 
ஈச னேயெனும் இத்தனை யல்லது 
பேசு மாறறி யாளொரு பேதையே.
5.81.3
809தூண்டி யசுடர் போலொக்குஞ் சோதியான் 
காண்ட லுமெளி யன்னடி யார்கட்குப் 
பாண்டிக் கொடுமுடி மேய பரமனைக் 
காண்டு மென்பவர்க் கேதுங் கருத்தொணான்.
5.81.4
810நெருக்கி யம்முடி நின்றிசை வானவர் 
இருக்கொ டும்பணிந் தேத்த இருந்தவன் 
திருக்கொ டுமுடி யென்றலுந் தீவினைக் 
கருக்கெ டுமிது கைகண்ட யோகமே.
5.81.5
 இப்பதிகத்தில் 6,7,8,9,10-ம் செய்யுட்கள் சிதைந்து போயின.5.81.6-10


இத்தலம் கொங்குநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் – கொடுமுடிநாதேசுவரர், தேவியார் – பண்மொழிநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
 


5.82 திருவான்மியூர் – திருக்குறுந்தொகை 

திருச்சிற்றம்பலம்

811விண்ட மாமலர் கொண்டு விரைந்துநீர் 
அண்ட நாயகன் றன்னடி சூழ்மின்கள் 
பண்டு நீர்செய்த பாவம் பறைந்திடும் 
வண்டு சேர்பொழில் வான்மியூ ரீசனே.
5.82.1
812பொருளுஞ் சுற்றமும் பொய்ம்மையும் விட்டுநீர் 
மருளும் மாந்தரை மாற்றி மயக்கறுத் 
தருளு மாவல்ல ஆதியா யென்றலும் 
மருள றுத்திடும் வான்மியூ ரீசனே.
5.82.2
813மந்த மாகிய சிந்தை மயக்கறுத் 
தந்த மில்குணத் தானை யடைந்துநின் 
றெந்தை யீசனென் றேத்திட வல்லிரேல் 
வந்து நின்றிடும் வான்மியூ ரீசனே.
5.82.3
814உள்ள முள்கலந் தேத்தவல் லார்க்கலாற் 
கள்ள முள்ள வழிக்கசி வானலன் 
வெள்ள முமர வும்விர வுஞ்சடை 
வள்ள லாகிய வான்மியூ ரீசனே.
5.82.4
815படங்கொள் பாம்பரைப் பான்மதி சூடியை 
வடங்கொள் மென்முலை மாதொரு கூறனைத் 
தொடர்ந்து நின்று தொழுதெழு வார்வினை 
மடங்க நின்றிடும் வான்மியூ ரீசனே.
5.82.5
816நெஞ்சி லைவர் நினைக்க நினைக்குறார் 
பஞ்சின் மெல்லடி யாளுமை பங்கவென் 
றஞ்சி நாண்மலர் தூவி யழுதிரேல் 
வஞ்சந் தீர்த்திடும் வான்மியூ ரீசனே.
5.82.6
817நுணங்கு நூலயன் மாலு மறிகிலாக் 
குணங்கள் தாம்பர விக்குறைந் துக்கவர் 
சுணங்கு பூண்முலைத் தூமொழி யாரவர் 
வணங்க நின்றிடும் வான்மியூ ரீசனே.
5.82.7
818ஆதி யும்மர னாயயன் மாலுமாய்ப் 
பாதி பெண்ணுரு வாய பரமனென் 
றோதி யுள்குழைந் தேத்தவல் லாரவர் 
வாதை தீர்த்திடும் வான்மியூ ரீசனே.
5.82.8
819ஓட்டை மாடத்தி லொன்பது வாசலுங் 
காட்டில் வேவதன் முன்னங் கழலடி 
நாட்டி நாண்மலர் தூவி வலஞ்செயில் 
வாட்டந் தீர்த்திடும் வான்மியூ ரீசனே.
5.82.9
820பார மாக மலையெடுத் தான்றனைச் 
சீர மாகத் திருவிர லூன்றினான் 
ஆர்வ மாக அழைத்தவ னேத்தலும் 
வார மாயினன் வான்மியூ ரீசனே.
5.82.10


இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் – மருந்தீசுவரர், தேவியார் – சொக்கநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
 


5.83 திருநாகைக்காரோணம் – திருக்குறுந்தொகை 

திருச்சிற்றம்பலம்

821பாணத் தான்மதில் மூன்று மெரித்தவன் 
பூணத் தானர வாமை பொறுத்தவன் 
காணத் தானினி யான்கடல் நாகைக்கா 
ரோணத் தானென நம்வினை ஓயுமே.
5.83.1
822வண்ட லம்பிய வார்சடை ஈசனை 
விண்ட லம்பணிந் தேத்தும் விகிர்தனைக் 
கண்ட லங்கமழ் நாகைக்கா ரோணனைக் 
கண்ட லும்வினை யான கழலுமே.
5.83.2
823புனையு மாமலர் கொண்டு புரிசடை 
நனையு மாமலர் சூடிய நம்பனைக் 
கனையும் வார்கடல் நாகைக்கா ரோணனை 
நினைய வேவினை யாயின நீங்குமே.
5.83.3
824கொல்லை மால்விடை யேறிய கோவினை 
எல்லி மாநட மாடும் இறைவனைக் 
கல்லி னார்மதில் நாகைக்கா ரோணனைச் 
சொல்ல வேவினை யானவை சோருமே.
5.83.4
825மெய்ய னைவிடை யூர்தியை வெண்மழுக் 
கைய னைக்கடல் நாகைக்கா ரோணனை 
மைய னுக்கிய கண்டனை வானவர் 
ஐய னைத்தொழு வார்க்கல்ல லில்லையே.
5.83.5
826அலங்கல் சேர்சடை ஆதி புராணனை 
விலங்கல் மெல்லியல் பாகம் விருப்பனைக் 
கலங்கள் சேர்கடல் நாகைக்கா ரோணனை 
வலங்கொள் வார்வினை யாயின மாயுமே.
5.83.6
827சினங்கொள் மால்கரி சீறிய ஏறினை 
இனங்கொள் வானவ ரேத்திய ஈசனைக் 
கனங்கொள் மாமதில் நாகைக்கா ரோணனை 
மனங்கொள் வார்வினை யாயின மாயுமே.
5.83.7
828அந்த மில்புகழ் ஆயிழை யார்பணிந் 
தெந்தை யீசனென் றேத்தும் இறைவனைக் 
கந்த வார்பொழில் நாகைக்கா ரோணனைச் 
சிந்தை செய்யக் கெடுந்துயர் திண்ணமே.
5.83.8
829கருவ னைக்கடல் நாகைக்கா ரோணனை 
இருவ ருக்கறி வொண்ணா இறைவனை 
ஒருவ னையுண ரார்புர மூன்றெய்த 
செருவ னைத்தொழத் தீவினை தீருமே.
5.83.9
830கடல்க ழிதழி நாகைக்கா ரோணன்றன் 
வடவ ரையெடுத் தார்த்த அரக்கனை 
அடர வூன்றிய பாதம் அணைதரத் 
தொடர அஞ்சுந் துயக்கறுங் காலனே.
5.83.10


இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் – காயாரோகணேசுவரர், தேவியார் – நீலயதாட்சியம்மை.
திருச்சிற்றம்பலம்
 


5.84 திருக்காட்டுப்பள்ளி – திருக்குறுந்தொகை 

திருச்சிற்றம்பலம்

831மாட்டுப் பள்ளி மகிழ்ந்துறை வீர்க்கெலாங் 
கேட்டுப் பள்ளிகண் டீர்கெடு வீரிது 
ஓட்டுப் பள்ளிவிட் டோ ட லுறாமுனங் 
காட்டுப் பள்ளியு ளான்கழல் சேர்மினே.
5.84.1
832மாட்டைத் தேடி மகிழ்ந்துநீர் நும்முளே 
நாட்டுப் பொய்யெலாம் பேசிடு நாணிலீர் 
கூட்டை விட்டுயிர் போவதன் முன்னமே 
காட்டுப் பள்ளியு ளான்கழல் சேர்மினே.
5.84.2
833தேனை வென்றசொல் லாளொடு செல்வமும் 
ஊனை விட்டுயிர் போவதன் முன்னமே 
கான வேடர் கருதுங்காட் டுப்பள்ளி 
ஞான நாயக னைச்சென்று நண்ணுமே.
5.84.3
834அருத்த முமனை யாளொடு மக்களும் 
பொருத்த மில்லை பொல்லாதது போக்கிடுங் 
கருத்தன் கண்ணுதல் அண்ணல்காட் டுப்பள்ளித் 
திருத்தன் சேவடி யைச்சென்று சேர்மினே.
5.84.4
835சுற்ற முந்துணை யும்மனை வாழ்க்கையும் 
அற்ற போதணை யாரவ ரென்றென்றே 
கற்ற வர்கள் கருதுங்காட் டுப்பள்ளிப் 
பெற்ற மேறும் பிரானடி சேர்மினே.
5.84.5
836அடும்புங் கொன்றையும் வன்னியும் மத்தமுந் 
துடும்பல் செய்சடைத் தூமணிச் சோதியான் 
கடம்பன் தாதை கருதுங்காட் டுப்பள்ளி 
உடம்பி னார்க்கோர் உறுதுணை யாகுமே.
5.84.6
837மெய்யின் மாசுடை யாருடல் மூடுவார் 
பொய்யை மெய்யென்று புக்குடன் வீழன்மின் 
கையின் மானுடை யான்காட்டுப் பள்ளியெம் 
ஐயன் றன்னடி யேயடைந் துய்மினே.
5.84.7
838வேலை வென்றகண் ணாரை விரும்பிநீர் 
சீலங் கெட்டுத் திகையன்மின் பேதைகாள் 
காலை யேதொழுங் காட்டுப்பள் ளியுறை 
நீல கண்டனை நித்தல் நினைமினே.
5.84.8
839இன்று ளார்நாளை இல்லை யெனும்பொருள் 
ஒன்று மோரா துழிதரும் ஊமர்காள் 
அன்று வானவர்க் காக விடமுண்ட 
கண்ட னார்காட்டுப் பள்ளிகண் டுய்ம்மினே.
5.84.9
840எண்ணி லாவரக் கன்மலை யேந்திட 
எண்ணி நீண்முடி பத்து மிறுத்தவன் 
கண்ணு ளார்கரு துங்காட்டுப் பள்ளியை 
நண்ணு வாரவர் தம்வினை நாசமே.
5.84.10


இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் – ஆரணியசுந்தரர், தேவியார் – அகிலாண்டநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
 


5.85 திருச்சிராப்பள்ளி – திருக்குறுந்தொகை 

திருச்சிற்றம்பலம்

841மட்டு வார்குழ லாளொடு மால்விடை 
இட்ட மாவுகந் தேறும் இறைவனார் 
கட்டு நீத்தவர்க் கின்னரு ளேசெயுஞ் 
சிட்டர் போலுஞ் சிராப்பள்ளிச் செல்வரே.
5.85.1
842அரிய யன்றலை வெட்டிவட் டாடினார் 
அரிய யன்றொழு தேத்தும் அரும்பொருள் 
பெரிய வன்சிராப் பள்ளியைப் பேணுவார் 
அரிய யன்றொழ அங்கிருப் பார்களே.
5.85.2
843அரிச்சி ராப்பகல் ஐவரா லாட்டுண்டு 
சுரிச்சி ராதுநெஞ் சேயொன்று சொல்லக்கேள் 
திரிச்சி ராப்பள்ளி யென்றலுந் தீவினை 
நரிச்சி ராது நடக்கும் நடக்குமே.
5.85.3
844தாயு மாயெனக் கேதலை கண்ணுமாய்ப் 
பேய னேனையும் ஆண்ட பெருந்தகை 
தேய நாதன் சிராப்பள்ளி மேவிய 
நாய னாரென நம்வினை நாசமே.
5.85.4
 இப்பதிகத்தில் 5,6,7,8,9,10-ம் செய்யுட்கள் சிதைந்து போயின.5.85.5-10


இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் – தாயுமானேசுவரர், தேவியார் – மட்டுவார்குழலம்மை.
திருச்சிற்றம்பலம்
 


5.86 திருவாட்போக்கி – திருக்குறுந்தொகை 

திருச்சிற்றம்பலம்

845கால பாசம் பிடித்தெழு தூதுவர் 
பால கர்விருத் தர்பழை யாரெனார் 
ஆல நீழ லமர்ந்தவாட் போக்கியார் 
சீல மார்ந்தவர் செம்மையுள் நிற்பரே.
5.86.1
846விடுத்த தூதுவர் வந்து வினைக்குழிப் 
படுத்த போது பயனிலை பாவிகாள் 
அடுத்த கின்னரங் கேட்கும்வாட் போக்கியை 
எடுத்து மேத்தியும் இன்புறு மின்களே.
5.86.2
847வந்திவ் வாறு வளைத்தெழு தூதுவர் 
உந்தி யோடி நரகத் திடாமுனம் 
அந்தி யின்னொளி தாங்கும்வாட் போக்கியார் 
சிந்தி யாவெழு வார்வினை தீர்ப்பரே.
5.86.3
848கூற்றம் வந்து குமைத்திடும் போதினாற் 
தேற்றம் வந்து தெளிவுற லாகுமே 
ஆற்ற வுமருள் செய்யும்வாட் போக்கிபால் 
ஏற்று மின்விளக் கையிருள் நீங்கவே.
5.86.4
849மாறு கொண்டு வளைத்தெழு தூதுவர் 
வேறு வேறு படுப்பதன் முன்னமே 
ஆறு செஞ்சடை வைத்தவாட் போக்கியார்க் 
கூறி யூறி உருகுமென் னுள்ளமே.
5.86.5
850கான மோடிக் கடிதெழு தூதுவர் 
தான மோடு தலைபிடி யாமுனம் 
ஆனஞ் சாடி யுகந்தவாட் போக்கியார் 
ஊன மில்லவர்க் குண்மையில் நிற்பரே.
5.86.6
851பார்த்துப் பாசம் பிடித்தெழு தூதுவர் 
கூர்த்த வேலாற் குமைப்பதன் முன்னமே 
ஆர்த்த கங்கை யடக்கும்வாட் போக்கியார் 
கீர்த்தி மைகள் கிளர்ந்துரை மின்களே.
5.86.7
852நாடி வந்து நமன்தமர் நல்லிருள் 
கூடி வந்து குமைப்பதன் முன்னமே 
ஆடல் பாடல் உகந்தவாட் போக்கியை 
வாடி யேத்தநம் வாட்டந் தவிருமே.
5.86.8
853கட்ட றுத்துக் கடிதெழு தூதுவர் 
பொட்ட நூக்கிப் புறப்படா முன்னமே 
அட்ட மாமலர் சூடும்வாட் போக்கியார்க் 
கிட்ட மாகி யிணையடி யேத்துமே.
5.86.9
854இரக்க முன்னறி யாதெழு தூதுவர் 
பரக்க ழித்தவர் பற்றுதன் முன்னமே 
அரக்க னுக்கருள் செய்தவாட் போக்கியார் 
கரப்ப துங்கரப் பாரவர் தங்கட்கே.
5.86.10


இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் – இரத்தினகிரீசுவரர், தேவியார் – சுரும்பார்குழலம்மை.
திருச்சிற்றம்பலம்
 


5.87 திருமணஞ்சேரி – திருக்குறுந்தொகை 

திருச்சிற்றம்பலம்

855பட்ட நெற்றியர் பாய்புலித் தோலினர் 
நட்ட நின்று நவில்பவர் நாடொறுஞ் 
சிட்டர் வாழ்திரு வார்மணஞ் சேரியெம் 
வட்ட வார்சடை யார்வண்ணம் வாழ்த்துமே.
5.87.1
856துன்னு வார்குழ லாளுமை யாளொடும் 
பின்னு வார்சடை மேற்பிறை வைத்தவர் 
மன்னு வார்மணஞ் சேரி மருந்தினை 
உன்னு வார்வினை யாயின ஓயுமே.
5.87.2
857புற்றி லாடர வாட்டும் புனிதனார் 
தெற்றி னார்புரந் தீயெழச் செற்றவர் 
சுற்றி னார்மதில் சூழ்மணஞ் சேரியார் 
பற்றி னாரவர் பற்றவர் காண்மினே.
5.87.3
858மத்த மும்மதி யும்வளர் செஞ்சடை 
முத்தர் முக்குணர் மூசர வம்மணி 
சித்தர் தீவணர் சீர்மணஞ் சேரியெம் 
வித்தர் தாம்விருப் பாரை விருப்பரே.
5.87.4
859துள்ளு மான்மறி தூமழு வாளினர் 
வெள்ள நீர்கரந் தார்சடை மேலவர் 
அள்ள லார்வயல் சூழ்மணஞ் சேரியெம் 
வள்ள லார்கழல் வாழ்த்தவாழ் வாவதே.
5.87.5
860நீர்ப ரந்த நிமிர்புன் சடையின்மேல் 
ஊர்ப ரந்த உரகம் அணிபவர் 
சீர்ப ரந்த திருமணஞ் சேரியார் 
ஏர்ப ரந்தங் கிலங்குசூ லத்தரே.
5.87.6
861சுண்ணத் தர்சுடு நீறுகந் தாடலார் 
விண்ணத் தம்மதி சூடிய வேதியர் 
மண்ணத் தம்முழ வார்மணஞ் சேரியார் 
வண்ணத் தம்முலை யாளுமை வண்ணரே.
5.87.7

862
துன்ன வாடையர் தூமழு வாளினர் 
பின்னு செஞ்சடை மேற்பிறை வைத்தவர் 
மன்னு வார்பொழில் சூழ்மணஞ் சேரியெம் 
மன்ன னார்கழ லேதொழ வாய்க்குமே.
5.87.8
863சித்தர் தேவர்கள் மாலொடு நான்முகன் 
புத்தர் தேரமண் கையர் புகழவே 
மத்தர் தாமறி யார்மணஞ் சேரியெம் 
அத்த னாரடி யார்க்கல்ல லில்லையே.
5.87.9
864கடுத்த மேனி அரக்கன் கயிலையை 
எடுத்த வனெடு நீண்முடி பத்திறப் 
படுத்த லுமணஞ் சேரி யருளெனக் 
கொடுத்த னன்கொற்ற வாளொடு நாமமே.
5.87.10


இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் – அருள்வள்ளல்நாயகர், தேவியார் – யாழின்மொழியம்மை.
திருச்சிற்றம்பலம்
 


5.88 திருமருகல் – திருக்குறுந்தொகை 

திருச்சிற்றம்பலம்

865பெருக லாந்தவம் பேதைமை தீரலாந் 
திருக லாகிய சிந்தை திருத்தலாம் 
பருக லாம்பர மாயதோ ரானந்தம் 
மருக லானடி வாழ்த்தி வணங்கவே.
5.88.1
866பாடங் கொள்பனு வற்றிறங் கற்றுப்போய் 
நாடங் குள்ளன தட்டிய நாணிலீர் 
மாடஞ் சூழ்மரு கற்பெரு மான்றிரு 
வேடங் கைதொழ வீடெளி தாகுமே.
5.88.2
867சினத்தி னால்வருஞ் செய்தொழி லாமவை 
அனைத்தும் நீங்கிநின் றாதர வாய்மிக 
மனத்தி னால்மரு கற்பெரு மான்றிறம் 
நினைப்பி னார்க்கில்லை நீணில வாழ்க்கையே.
5.88.3
868ஓது பைங்கிளிக் கொண்பால் அமுதூட்டிப் 
பாது காத்துப் பலபல கற்பித்து 
மாது தான்மரு கற்பெரு மானுக்குத் 
தூது சொல்ல விடத்தான் தொடங்குமே.
5.88.4
869இன்ன வாறென்ப துண்டறி யேனின்று 
துன்னு கைவளை சோரக்கண் நீர்மல்கும் 
மன்னு தென்மரு கற்பெரு மான்றிறம் 
உன்னி யொண்கொடி உள்ள முருகுமே.
5.88.5
870சங்கு சோரக் கலையுஞ் சரியவே 
மங்கை தான்மரு கற்பெரு மான்வரும் 
அங்க வீதி அருகணை யாநிற்கும் 
நங்கை மீரிதற் கென்செய்கேன் நாளுமே.
5.88.6
871காட்சி பெற்றில ளாகிலுங் காதலே 
மீட்சி யொன்றறி யாது மிகுவதே 
மாட்சி யார்மரு கற்பெரு மானுக்குத் 
தாழ்ச்சி சாலவுண் டாகுமென் தையலே.
5.88.7
872நீடு நெஞ்சுள் நினைந்துகண் ணீர்மல்கும் 
ஓடு மாலினோ டொண்கொடி மாதராள் 
மாட நீண்மரு கற்பெரு மான்வரிற் 
கூடு நீயென்று கூட லிழைக்குமே.
5.88.8
873கந்த வார்குழல் கட்டிலள் காரிகை 
அந்தி மால்விடை யோடுமன் பாய்மிக 
வந்தி டாய்மரு கற்பெரு மானென்று 
சிந்தை செய்து திகைத்திடுங் காண்மினே.
5.88.9
874ஆதி மாமலை அன்றெடுத் தானிற்றுச் 
சோதி யென்றலுந் தொல்லருள் செய்திடும் 
ஆதி யான்மரு கற்பெரு மான்றிறம் 
ஓதி வாழ்பவர் உம்பர்க்கும் உம்பரே.
5.88.10


இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் – மாணிக்கவண்ணவீசுவரர், தேவியார் – வண்டுவார்குழலம்மை.
திருச்சிற்றம்பலம்
 


5.89 தனி – திருக்குறுந்தொகை 

திருச்சிற்றம்பலம்

875ஒன்று வெண்பிறைக் கண்ணியோர் கோவணம் 
ஒன்று கீளுமை யோடு முடுத்தது 
ஒன்று வெண்டலை யேந்தியெம் முள்ளத்தே 
ஒன்றி நின்றங் குறையும் ஒருவனே.
5.89.1
876இரண்டு மாமவர்க் குள்ளன செய்தொழில் 
இரண்டு மாமவர்க் குள்ளன கோலங்கள் 
இரண்டு மில்லிள மானெமை யாளுகந் 
திரண்டு போதுமென் சிந்தையுள் வைகுமே.
5.89.2
877மூன்று மூர்த்தியுள் நின்றிய லுந்தொழில் 
மூன்று மாயின மூவிலைச் சூலத்தன் 
மூன்று கண்ணினன் தீத்தொழில் மூன்றினன் 
மூன்று போதுமென் சிந்தையுள் மூழ்குமே.
5.89.3
878நாலின் மேன்முகஞ் செற்றது மன்னிழல் 
நாலு நன்குணர்ந் திட்டது மின்பமாம் 
நாலு வேதஞ் சரித்தது நன்னெறி 
நாலு போலெம் அகத்துறை நாதனே.
5.89.4
879அஞ்சு மஞ்சுமோ ராடி யரைமிசை 
அஞ்சு போலரை யார்த்ததின் றத்துவம் 
அஞ்சு மஞ்சுமோ ரோரைஞ்சு மாயவன் 
அஞ்சு மாமெம் அகத்துறை ஆதியே.
5.89.5
880ஆறு கால்வண்டு மூசிய கொன்றையன் 
ஆறு சூடிய அண்ட முதல்வனார் 
ஆறு கூர்மையர்க் கச்சம யப்பொருள் 
ஆறு போலெம் அகத்துறை ஆதியே.
5.89.6
881ஏழு மாமலை ஏழ்பொழில் சூழ்கடல் 
ஏழு போற்றுமி ராவணன் கைந்நரம் 
பேழு கேட்டருள் செய்தவன் பொற்கழல் 
ஏழுஞ் சூழடி யேன்மனத் துள்ளவே.
5.89.7
882எட்டு மூர்த்தியாய் நின்றிய லுந்தொழில் 
எட்டு வான்குணத் தீசனெம் மான்றனை 
எட்டு மூர்த்தியு மெம்மிறை யெம்முளே 
எட்டு மூர்த்தியு மெம்மு ளொடுங்குமே.
5.89.8
883ஒன்ப தொன்பதி யானை யொளிகளி 
றொன்ப தொன்பது பல்கணஞ் சூழவே 
ஒன்ப தாமவை தீத்தொழி லின்னுரை 
ஒன்ப தொத்துநின் றென்னு ளொடுங்குமே.
5.89.9
884பத்து நூறவன் வெங்கண்வெள் ளேற்றண்ணல் 
பத்து நூறவன் பல்சடை தோண்மிசை 
பத்தி யாமில மாதலின் ஞானத்தாற் 
பத்தி யானிடங் கொண்டது பள்ளியே.
5.89.10


திருச்சிற்றம்பலம்
 


5.90 தனி – திருக்குறுந்தொகை 

திருச்சிற்றம்பலம்

885மாசில் வீணையும் மாலை மதியமும் 
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும் 
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே 
ஈசன் எந்தை இணையடி நீழலே.
5.90.1
886நமச்சி வாயவே ஞானமுங் கல்வியும் 
நமச்சி வாயவே நானறி விச்சையும் 
நமச்சி வாயவே நாநவின் றேத்துமே 
நமச்சி வாயவே நன்னெறி காட்டுமே.
5.90.2
887ஆளா காராளா னாரை அடைந்துய்யார் 
மீளா வாட்செய்து மெய்ம்மையுள் நிற்கிலார் 
*தோளா தசுரை யோதொழும் பர்செவி 
வாளா மாய்ந்துமண் ணாகிக் கழிவரே. 
* தோளாத சுரையென்பது துவாரமிடாத சுரைக்காய்
5.90.3
888நடலை வாழ்வுகொண் டென்செய்திர் நாணிலீர் 
சுடலை சேர்வது சொற்பிர மாணமே 
கடலின் நஞ்சமு துண்டவர் கைவிட்டால் 
உடலி னார்கிடந் தூர்முனி பண்டமே.
5.90.4
889பூக்கைக் கொண்டரன் பொன்னடி போற்றிலார் 
நாக்கைக் கொண்டரன் நாமம் நவில்கிலார் 
ஆக்கைக் கேயிரை தேடி அலமந்து 
காக்கைக் கேயிரை யாகிக் கழிவரே.
5.90.5
890குறிக ளுமடை யாளமுங் கோயிலும் 
நெறிக ளுமவர் நின்றதோர் நேர்மையும் 
அறிய ஆயிரம் ஆரணம் ஓதிலும் 
பொறியி லீர்மன மென்கொல் புகாததே.
5.90.6
891வாழ்த்த வாயும் நினைக்க மடநெஞ்சும் 
தாழ்த்தச் சென்னியுந் தந்த தலைவனைச் 
சூழ்த்த மாமலர் தூவித் துதியாதே 
வீழ்த்த வாவினை யேன்நெடுங் காலமே.
5.90.7
892எழுது பாவைநல் லார்திறம் விட்டுநான் 
தொழுது போற்றிநின் றேனையுஞ் சூழ்ந்துகொண் 
டுழுத சால்வழி யேயுழு வான்பொருட் 
டிழுதை நெஞ்சமி தென்படு கின்றதே.
5.90.8
893நெக்கு நெக்கு நினைபவர் நெஞ்சுளே 
புக்கு நிற்கும்பொன் னார்சடைப் புண்ணியன் 
பொக்க மிக்கவர் பூவுநீ ருங்கண்டு 
நக்கு நிற்ப ரவர்தமை நாணியே.
5.90.9
894விறகிற் றீயினன் பாலிற் படுநெய்போல் 
மறைய நின்றுளன் மாமணிச் சோதியான் 
உறவு கோல்நட் டுணர்வு கயிற்றினான் 
முறுக வாங்கிக் கடையமுன் னிற்குமே.
5.90.10


திருச்சிற்றம்பலம்
 


5.91 தனி – திருக்குறுந்தொகை 

திருச்சிற்றம்பலம்

895ஏயி லானையெ னிச்சை யகம்படிக் 
கோயி லானைக் குணப்பெருங் குன்றினை 
வாயி லானை மனோன்மனி யைப்பெற்ற 
தாயி லானைத் தழுவுமென் ஆவியே.
5.91.1
896முன்னை ஞான முதற்றனி வித்தினைப் 
பின்னை ஞானப் பிறங்கு சடையனை 
என்னை ஞானத் திருளறுத் தாண்டவன் 
தன்னை ஞானத் தளையிட்டு வைப்பனே.
5.91.2
897ஞானத் தாற்றொழு வார்சில ஞானிகள் 
ஞானத் தாற்றொழு வேனுனை நானலேன் 
ஞானத் தாற்றொழு வார்கள் தொழக்கண்டு 
ஞானத் தாயுனை நானுந் தொழுவனே.
5.91.3
898புழுவுக் குங்குணம் நான்கெனக் கும்மதே 
புழுவுக் கிங்கெனக் குள்ளபொல் லாங்கில்லை 
புழுவி னுங்கடையேன்புனி தன்றமர் 
குழுவுக் கெவ்விடத் தேன்சென்று கூடவே.
5.91.4
899மலையே வந்து விழினும் மனிதர்காள் 
நிலையி னின்று கலங்கப் பெறுதிரேல் 
தலைவ னாகிய ஈசன் றமர்களைக் 
கொலைகை யானைதான் கொன்றிடு கிற்குமே.
5.91.5
900கற்றுக் கொள்வன வாயுள நாவுள 
இட்டுக் கொள்வன பூவுள நீருள 
கற்றைச் செஞ்சடை யானுளன் நாமுளோம் 
எற்றுக் கோநம னால்முனி வுண்பதே.
5.91.6
901மனிதர் காளிங்கே வம்மொன்று சொல்லுகேன் 
கனிதந் தாற்கனி யுண்ணவும் வல்லிரே 
புனிதன் பொற்கழல் ஈசனெ னுங்கனி 
இனிது சாலவும் ஏசற் றவர்கட்கே.
5.91.7
902என்னை யேதும் அறிந்திலன் எம்பிரான் 
தன்னை நானுமு னேது மறிந்திலேன் 
என்னைத் தன்னடி யானென் றறிதலுந் 
தன்னை நானும் பிரானென் றறிந்தெனே.
5.91.8
903தெள்ளத் தேறித் தெளிந்துதித் திப்பதோர் 
உள்ளத் தேறல் அமுத ஒளிவெளி 
கள்ளத் தேன்கடி யேன்கவ லைக்கடல் 
வெள்ளத் தேனுக்கெவ் வாறு விளைந்ததே.
5.91.9
 இப்பதிகத்தில் 10-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.5.91.10


திருச்சிற்றம்பலம்
 


5.92 காலபாராயணம் – திருக்குறுந்தொகை 

திருச்சிற்றம்பலம்

904கண்டு கொள்ளரி யானைக் கனிவித்துப் 
பண்டு நான்செய்த பாழிமை கேட்டிரேல் 
கொண்ட பாணி கொடுகொட்டி தாளங்கைக் 
கொண்ட தொண்டரைத் துன்னிலுஞ் சூழலே.
5.92.1
905நடுக்கத் துள்ளும் நகையுளும் நம்பற்குக் 
கடுக்கக் கல்ல வடமிடு வார்கட்குக் 
கொடுக்கக் கொள்க வெனவுரைப் பார்களை 
இடுக்கண் செய்யப் பெறீரிங்கு நீங்குமே.
5.92.2
906கார்கொள் கொன்றைக் கடிமலர்க் கண்ணியான் 
சீர்கொள் நாமஞ் சிவனென் றரற்றுவார் 
ஆர்க ளாகிலு மாக அவர்களை 
நீர்கள் சாரப் பெறீரிங்கு நீங்குமே.
5.92.3
907சாற்றி னேன்சடை நீண்முடிச் சங்கரன் 
சீற்றங் காமன்கண் வைத்தவன் சேவடி 
ஆற்ற வுங்களி பட்ட மனத்தராய்ப் 
போற்றி யென்றுரைப் பார்புடை போகலே.
5.92.4
908இறையென் சொன்மற வேல்நமன் றூதுவீர் 
பிறையும் பாம்பு முடைப்பெரு மான்றமர் 
நறவம் நாறிய நன்னறுஞ் சாந்திலும் 
நிறைய நீறணி வாரெதிர் செல்லலே.
5.92.5
909வாம தேவன் வளநகர் வைகலுங் 
காம மொன்றில ராய்க்கை விளக்கொடு 
தாமந் தூபமுந் தண்ணறுஞ் சாந்தமும் 
ஏம மும்புனை வாரெதிர் செல்லலே.
5.92.6
910படையும் பாசமும் பற்றிய கையினீர் 
அடையன் மின்னம தீசன் அடியரை 
விடைகொ ளூர்தியி னானடி யார்குழாம் 
புடைபு காதுநீர் போற்றியே போமினே.
5.92.7
911விச்சை யாவதும் வேட்கைமை யாவதும் 
நிச்சல் நீறணி வாரை நினைப்பதே 
அச்ச மெய்தி அருகணை யாதுநீர் 
பிச்சை புக்கவன் அன்பரைப் பேணுமே.
5.92.8
912இன்னங் கேண்மின் இளம்பிறை சூடிய 
மன்னன் பாதம் மனத்துட னேத்துவார் 
மன்னும் அஞ்செழுத் தாகிய மந்திரந் 
தன்னி லொன்றுவல் லாரையுஞ் சாரலே.
5.92.9
913மற்றுங் கேண்மின் மனப்பரிப் பொன்றின்றிச் 
சுற்றும் பூசிய நீற்றொடு கோவணம் 
ஒற்றை யேறுடை யானடியே யல்லாற் 
பற்றொன் றில்லிகள் மேற்படை போகலே.
5.92.10

914
அரக்கன் ஈரைந் தலையுமோர் தாளினால் 
நெருக்கி யூன்றியிட் டான்தமர் நிற்கிலுஞ் 
சுருக்கெ னாதங்குப் பேர்மின்கண் மற்றுநீர் 
சுருக்கெ னிற்சுட ரான்கழல் சூடுமே.
5.92.11


திருச்சிற்றம்பலம்
 


5.93 மறக்கிற்பனே என்னும் – திருக்குறுந்தொகை 

திருச்சிற்றம்பலம்

915காச னைக்கன லைக்கதிர் மாமணித் 
தேச னைப்புக ழார்சிலர் தெண்ணர்கள் 
மாசி னைக்கழித் தாட்கொள வல்லவெம் 
ஈச னையினி நான்மறக் கிற்பனே.
5.93.1
916புந்திக் குவிளக் காய புராணனைச் 
சந்திக் கண்ணட மாடுஞ் சதுரனை 
அந்தி வண்ணனை ஆரழல் மூர்த்தியை 
வந்தெ னுள்ளங்கொண் டானை மறப்பனே.
5.93.2
917ஈசன் ஈசனென் றென்றும் அரற்றுவன் 
ஈசன் றானென் மனத்திற் பிரிவிலன் 
ஈசன் றன்னையு மென்மனத் துக்கொண்டு 
ஈசன் றன்னையும் யான்மறக் கிற்பனே.
5.93.3
918ஈசன் என்னை யறிந்த தறிந்தனன் 
ஈசன் சேவடி யேற்றப் பெறுதலால் 
ஈசன் சேவடி யேத்தப் பெற்றேனினி 
ஈசன் றன்னையும் யான்மறக் கிற்பனே.
5.93.4
919தேனைப் பாலினைத் திங்களை ஞாயிற்றை 
வான வெண்மதி சூடிய மைந்தனை 
வேனி லானை மெலிவுசெய் தீயழல் 
ஞான மூர்த்தியை நான்மறக் கிற்பனே.
5.93.5
920கன்ன லைக்கரும் பூறிய தேறலை 
மின்ன னைமின் னனைய வுருவனைப் 
பொன்ன னைமணிக் குன்று பிறங்கிய 
என்ன னையினி யான்மறக் கிற்பனே.
5.93.6
921கரும்பி னைக்கட்டி யைக்கந்த மாமலர்ச் 
சுரும்பி னைச்சுடர்ச் சோதியுட் சோதியை 
அரும்பி னிற்பெரும் போதுகொண் டாய்மலர் 
விரும்பும் ஈசனை நான்மறக் கிற்பனே.
5.93.7
922துஞ்சும் போதுஞ் சுடர்விடு சோதியை 
நெஞ்சுள் நின்று நினைப்பிக்கு நீதியை 
நஞ்சு கண்டத் தடக்கிய நம்பனை 
வஞ்ச னேனினி யான்மறக் கிற்பனே.
5.93.8
923புதிய பூவினைப் புண்ணிய நாதனை 
நிதியை நீதியை நித்திலக் குன்றினைக் 
கதியைக் கண்டங் கறுத்த கடவுளை 
மதியை மைந்தனை நான்மறக் கிற்பனே.
5.93.9
924கருகு கார்முகில் போல்வதோர் கண்டனை 
உருவ நோக்கியை ஊழி முதல்வனைப் 
பருகு பாலனைப் பான்மதி சூடியை 
மருவு மைந்தனை நான்மறக் கிற்பனே.
5.93.10


திருச்சிற்றம்பலம்
 


5.94 தொழற்பாலனம் என்னும் – திருக்குறுந்தொகை 

திருச்சிற்றம்பலம்

925அண்டத் தானை அமரர் தொழப்படும் 
பண்டத் தானைப் பவித்திர மாந்திரு 
முண்டத் தானைமுற் றாத இளம்பிறைத் 
துண்டத் தானைக்கண் டீர்தொழற் பாலதே.
5.94.1
926முத்தொப் பானை முளைத்தெழு கற்பக 
வித்தொப் பானை விளக்கிடை நேரொளி 
ஒத்தொப் பானை ஒளிபவ ளத்திரள் 
தொத்தொப் பானைக்கண் டீர்தொழற் பாலதே.
5.94.2
927பண்ணொத் தானைப் பவளந் திரண்டதோர் 
வண்ணத் தானை வகையுணர் வான்றனை 
எண்ணத் தானை இளம்பிறை போல்வெள்ளைச் 
சுண்ணத் தானைக்கண் டீர்தொழற் பாலதே.
5.94.3
928விடலை யானை விரைகமழ் தேன்கொன்றைப் 
படலை யானைப் பலிதிரி வான்செலும் 
நடலை யானை நரிபிரி யாததோர் 
சுடலை யானைக்கண் டீர்தொழற் பாலதே.
5.94.4
929பரிதி யானைப்பல் வேறு சமயங்கள் 
கருதி யானைக்கண் டார்மனம் மேவிய 
பிரிதி யானைப் பிறரறி யாததோர் 
சுருதி யானைக்கண் டீர்தொழற் பாலதே.
5.94.5
930ஆதி யானை அமரர் தொழப்படும் 
நீதி யானை நியம நெறிகளை 
ஓதி யானை உணர்தற் கரியதோர் 
சோதி யானைக்கண் டீர்தொழற் பாலதே.
5.94.6
931ஞாலத் தானைநல் லானைவல் லார்தொழுங் 
கோலத் தானைக் குணப்பெருங் குன்றினை 
மூலத் தானை முதல்வனை மூவிலைச் 
சூலத் தானைக்கண் டீர்தொழற் பாலதே.
5.94.7
932ஆதிப் பாலட்ட மூர்த்தியை ஆனஞ்சும் 
வேதிப் பானைநம் மேல்வினை வெந்தறச் 
சாதிப் பானைத் தவத்திடை மாற்றங்கள் 
சோதிப் பானைக்கண் டீர்தொழற் பாலதே.
5.94.8
933நீற்றி னானை நிகரில்வெண் கோவணக் 
கீற்றி னானைக் கிளரொளிச் செஞ்சடை 
ஆற்றி னானை அமரர்தம் ஆருயிர் 
தோற்றி னானைக்கண் டீர்தொழற் பாலதே.
5.94.9
934விட்டிட் டானைமெய்ஞ் ஞானத்து மெய்ப்பொருள் 
கட்டிட் டானைக் கனங்குழை பாலன்பு 
பட்டிட் டானைப் பகைத்தவர் முப்புரஞ் 
சுட்டிட் டானைக்கண் டீர்தொழற் பாலதே.
5.94.10
935முற்றி னானை இராவணன் நீண்முடி 
ஒற்றி னானை ஒருவிர லாலுறப் 
பற்றி னானையோர் வெண்டலைப் பாம்பரைச் 
சுற்றி னானைக்கண் டீர்தொழற் பாலதே.
5.94.11


திருச்சிற்றம்பலம்


5.95 இலிங்கபுராணம் – திருக்குறுந்தொகை 

திருச்சிற்றம்பலம்

936புக்க ணைந்து புரிந்தல ரிட்டிலர் 
நக்க ணைந்து நறுமலர் கொய்திலர் 
சொக்க ணைந்த சுடரொளி வண்ணனை 
மிக்குக் காணலுற் றாரங் கிருவரே.
5.95.1
937அலரு நீருங்கொண் டாட்டித் தெளிந்திலர் 
திலக மண்டலந் தீட்டித் திரிந்திலர் 
உலக மூர்த்தி யொளிநிற வண்ணனைச் 
செலவு காணலுற் றாரங் கிருவரே.
5.95.2
938ஆப்பி நீரோ டலகுகைக் கொண்டிலர் 
பூப்பெய் கூடை புனைந்து சுமந்திலர் 
காப்புக் கொள்ளி கபாலிதன் வேடத்தை 
ஓப்பிக் காணலுற் றாரங் கிருவரே.
5.95.3
939நெய்யும் பாலுங்கொண் டாட்டி நினைந்திலர் 
பொய்யும் பொக்கமும் போக்கிப் புகழ்ந்திலர் 
ஐயன் வெய்ய அழல்நிற வண்ணனை 
மெய்யைக் காணலுற் றாரங் கிருவரே.
5.95.4
940எருக்கங் கண்ணிகொண் டிண்டை புனைந்திலர் 
பெருக்கக் கோவணம் பீறி யுடுத்திலர் 
தருக்கி னாற்சென்று தாழ்சடை யண்ணலை 
நெருக்கிக் காணலுற் றாரங் கிருவரே.
5.95.5
941மரங்க ளேறி மலர்பறித் திட்டிலர் 
நிரம்ப நீர்சுமந் தாட்டி நினைந்திலர் 
உரம்பொ ருந்தி யொளிநிற வண்ணனை 
நிரம்பக் காணலுற் றாரங் கிருவரே.
5.95.6
942கட்டு வாங்கங் கபாலங்கைக் கொண்டிலர் 
அட்ட மாங்கங் கிடந்தடி வீழ்ந்திலர் 
சிட்டன் சேவடி சென்றெய்திக் காணிய 
பட்ட கட்டமுற் றாரங் கிருவரே.
5.95.7
943வெந்த நீறு விளங்க அணிந்திலர் 
கந்த மாமலர் இண்டை புனைந்திலர் 
எந்தை ஏறுகந் தேறெரி வண்ணனை 
அந்தங் காணலுற் றாரங் கிருவரே.
5.95.8
944இளவெ ழுந்த இருங்குவ ளைம்மலர் 
பிளவு செய்து பிணைத்தடி யிட்டிலர் 
களவு செய்தொழிற் காமனைக் காய்ந்தவன் 
அளவு காணலுற் றாரங் கிருவரே.
5.95.9
945கண்டி பூண்டு கபாலங்கைக் கொண்டிலர் 
விண்ட வான்சங்கம் விம்மவாய் வைத்திலர் 
அண்ட மூர்த்தி அழல்நிற வண்ணனைக் 
கெண்டிக் காணலுற் றாரங் கிருவரே.
5.95.10
946செங்க ணானும் பிரமனுந் தம்முளே 
எங்குந் தேடித் திரிந்தவர் காண்கிலார் 
இங்குற் றேனென்றி லிங்கத்தே தோன்றினான் 
பொங்கு செஞ்சடைப் புண்ணிய மூர்த்தியே. 11
5.95.11


திருச்சிற்றம்பலம்
 


5.96 மனத்தொகை – திருக்குறுந்தொகை 

திருச்சிற்றம்பலம்

947பொன்னுள் ளத்திரள் புன்சடை யின்புறம் 
மின்னுள் ளத்திரள் வெண்பிறை யாயிறை 
நின்னுள் ளத்தருள் கொண்டிருள் நீங்குதல் 
என்னுள் ளத்துள தெந்தை பிரானிரே.
5.96.1
948முக்க ணும்முடை யாய்முனி கள்பலர் 
தொக்கெ ணுங்கழ லாயொரு தோலினோ 
டக்க ணும்மரை யாயரு ளெய்தலா 
தெக்க ணும்மிலன் எந்தை பிரானிரே.
5.96.2
949பனியாய் வெங்கதிர் பாய்படர் புன்சடை 
முனியாய் நீயுல கம்முழு தாளினுந் 
தனியாய் நீசரண் நீசல மேபெரி 
தினியாய் நீயெனக் கெந்தை பிரானிரே.
5.96.3
950மறையும் பாடுதிர் மாதவர் மாலினுக் 
குறையு மாயினை கோளர வோடொரு 
பிறையுஞ் சூடினை யென்பத லாற்பிறி 
திறையுஞ் சொல்லிலை எந்தை பிரானிரே.
5.96.4
951பூத்தார் கொன்றையி னாய்புலி யின்னதள் 
ஆர்த்தா யாடர வோடன லாடிய 
கூத்தா நின்குரை யார்கழ லேயல 
தேத்தா நாவெனக் கெந்தை பிரானிரே.
5.96.5
952பைம்மா லும்மர வாபர மாபசு 
மைம்மால் கண்ணியோ டேறுமைந் தாவெனும் 
அம்மா லல்லது மற்றடி நாயினேற் 
கெம்மா லும்மிலன் எந்தை பிரானிரே.
5.96.6
953வெப்பத் தின்மன மாசு விளக்கிய 
செப்பத் தாற்சிவ னென்பவர் தீவினை 
ஒப்பத் தீர்த்திடும் ஒண்கழ லாற்கல்ல 
தெப்பற் றும்மிலன் எந்தை பிரானிரே.
5.96.7
954திகழுஞ் சூழ்சுடர் வானொடு வைகலும் 
நிகழு மொண்பொரு ளாயின நீதியென் 
புகழு மாறு மலானுன பொன்னடி 
இகழு மாறிலன் எந்தை பிரானிரே.
5.96.8
955கைப்பற் றித்திரு மால்பிர மன்னுனை 
எப்பற் றியறி தற்கரி யாயருள் 
அப்பற் றல்லது மற்றடி நாயினேன் 
எப்பற் றும்மிலன் எந்தை பிரானிரே.
5.96.9
956எந்தை யெம்பிரான் என்றவர் மேல்மனம் 
எந்தை யெம்பிரான் என்றிறைஞ் சித்தொழு 
தெந்தை யெம்பிரான் என்றடி யேத்துவார் 
எந்தை யெம்பிரான் என்றடி சேர்வரே.
5.96.10


திருச்சிற்றம்பலம்
 


5.97 சித்தத்தொகை – திருக்குறுந்தொகை 

திருச்சிற்றம்பலம்

957சிந்திப் பார்மனத் தான்சிவன் செஞ்சுடர் 
அந்தி வானிறத் தானணி யார்மதி 
முந்திச் சூடிய முக்கண்ணி னானடி 
வந்திப் பாரவர் வானுல காள்வரே.
5.97.1
958அண்ட மாரிரு ளூடு கடந்தும்பர் 
உண்டு போலுமோ ரொண்சுட ரச்சுடர் 
கண்டிங் காரறி வாரறி வாரெலாம் 
வெண்டிங் கட்கண்ணி வேதியன் என்பரே.
5.97.2
959ஆதி யாயவ னாரு மிலாதவன் 
போது சேர்புனை நீண்முடிப் புண்ணியன் 
பாதி பெண்ணுரு வாகிப் பரஞ்சுடர்ச் 
சோதி யுட்சோதி யாய்நின்ற சோதியே.
5.97.3
960இட்ட திட்டதோ ரேறுகந் தேறியூர் 
பட்டி துட்டங்க னாய்ப்பலி தேர்வதோர் 
கட்ட வாழ்க்கைய னாகிலும் வானவர் 
அட்ட மூர்த்தி யருளென் றடைவரே.
5.97.4
961ஈறில் கூறைய னாகி எரிந்தவெண் 
ணீறு பூசி நிலாமதி சூடிலும் 
வீறி லாதன செய்யினும் விண்ணவர் 
ஊற லாயரு ளாயென் றுரைப்பரே.
5.97.5
962உச்சி வெண்மதி சூடிலும் ஊனறாப் 
பச்சை வெண்டலை யேந்திப் பலஇலம் 
பிச்சை யேபுகு மாகிலும் வானவர் 
அச்சந் தீர்த்தரு ளாயென் றடைவரே.
5.97.6
963ஊரி லாயென்றொன் றாக வுரைப்பதோர் 
பேரி லாய்பிறை சூடிய பிஞ்ஞகா 
காரு லாங்கண்ட னேயுன் கழலடி 
சேர்வி லார்கட்குத் தீயவை தீயவே.
5.97.7
964எந்தை யேயெம் பிரானே யெனவுள்கிச் 
சிந்திப் பாரவர் தீவினை தீருமால் 
வெந்த நீறுமெய் பூசிய வேதியன் 
அந்த மாவளப் பாரடைந் தார்களே.
5.97.8
965ஏன வெண்மருப் போடென்பு பூண்டெழில் 
ஆனை யீருரி போர்த்தன லாடிலுந் 
தான வண்ணத்த னாகிலுந் தன்னையே 
வான நாடர் வணங்குவர் வைகலே.
5.97.9
966ஐயன் அந்தணன் ஆணொடு பெண்ணுமாம் 
மெய்யன் மேதகு வெண்பொடிப் பூசிய 
மைகொள் கண்டத்தன் மான்மறிக் கையினான் 
பைகொள் பாம்பரை யார்த்த பரமனே.
5.97.10
967ஒருவ னாகிநின் றானிவ் வுலகெலாம் 
இருவ ராகிநின் றார்கட் கறிகிலான் 
அருவ ராவரை ஆர்த்தவ னார்கழல் 
பரவு வாரவர் பாவம் பறையுமே.
5.97.11
968ஓத வண்ணனும் ஒண்மலர்ச் செல்வனும் 
நாத னேயரு ளாயென்று நாடொறுங் 
காதல் செய்து கருதப் படுமவர் 
பாத மேத்தப் பறையுநம் பாவமே.
5.97.12
969வ தன்மை யவரவ ராக்கையான் 
வெவ்வ தன்மைய னென்ப தொழிமினோ 
மௌவல் நீண்மலர் மேலுறை வானொடு 
பௌவ வண்ணனு மாய்ப்பணி வார்களே.
5.97.13
970அக்கும் ஆமையும் பூண்டன லேந்திஇல் 
புக்குப் பல்பலி தேரும் புராணனை 
நக்கு நீர்கள் நரகம் புகேன்மினோ 
தொக்க வானவ ராற்றொழு வானையே.
5.97.14
971கங்கை தங்கிய செஞ்சடை மேலிளந் 
திங்கள் சூடிய தீநிற வண்ணனார் 
இங்க ணாரெழில் வானம் வணங்கவே 
அங்க ணாற்கது வாலவன் தன்மையே.
5.97.15
972நகர வெல்கொடி யானொடு நன்னெஞ்சே 
நுகர நீயுனைக் கொண்டுயப் போக்குறில் 
மகர வெல்கொடி மைந்தனைக் காய்ந்தவன் 
புகரில் சேவடி யேபுக லாகுமே.
5.97.16
973சரண மாம்படி யார்பிற ரியாவரோ 
கரணந் தீர்த்துயிர் கையி லிகழ்ந்தபின் 
மரண மெய்திய பின்னவை நீக்குவான் 
அரண மூவெயி லெய்தவ னல்லனே.
5.97.17
974ஞமனென் பான்நர கர்க்கு நமக்கெலாஞ் 
சிவனென் பான்செழு மான்மறிக் கையினான் 
கவனஞ் செய்யுங் கனவிடை யூர்தியான் 
தமரென் றாலுங் கெடுந்தடு மாற்றமே.
5.97.18
975இடப மேறியும் இல்பலி யேற்பவர் 
அடவி காதலித் தாடுவர் ஐந்தலைப் 
படவம் பாம்பரை யார்த்த பரமனைக் 
கடவி ராய்ச்சென்று கைதொழு துய்ம்மினே.
5.97.19
976இணர்ந்து கொன்றைபொற் றாது சொரிந்திடும் 
புணர்ந்த வாளர வம்மதி யோடுடன் 
அணைந்த அஞ்சடை யானவன் பாதமே 
உணர்ந்த உள்ளத் தவருணர் வார்களே.
5.97.20
977தருமந் தான்றவந் தான்றவத் தால்வருங் 
கருமந் தான்கரு மான்மறிக் கையினான் 
அருமந் தன்ன அதிர்கழல் சேர்மினோ 
சிரமஞ் சேரழல் தீவினை யாளரே.
5.97.21
978நமச்சி வாயவென் பாருள ரேலவர் 
தமச்ச நீங்கத் தவநெறி சார்தலால் 
அமைத்துக் கொண்டதோர் வாழ்க்கைய னாகிலும் 
இமைத்து நிற்பது சால அரியதே.
5.97.22
979பற்பல் காலம் பயிற்றிப் பரமனைச் 
சொற்பல் காலம்நின் றேத்துமின் தொல்வினை 
வெற்பில் தோன்றிய வெங்கதிர் கண்டவப் 
புற்ப னிக்கெடு மாறது போலுமே.
5.97.23
980மணிசெய் கண்டத்து மான்மறிக் கையினான் 
கணிசெய் வேடத்தர் ஆயவர் காப்பினாற் 
பணிகள் தாஞ்செய வல்லவர் யாவர்தம் 
பிணிசெய் யாக்கையை நீக்குவர் பேயரே.
5.97.24
981இயக்கர் கின்னரர் இந்திரன் தானவர் 
நயக்க நின்றவன் நான்முகன் ஆழியான் 
மயக்க மெய்தவன் மாலெரி யாயினான் 
வியக்குந் தன்மையி னானெம் விகிர்தனே.
5.97.25
982அரவ மார்த்தன லாடிய அண்ணலைப் 
பரவு வாரவர் பாவம் பறைதற்குக் 
குரவை கோத்தவ னுங்குளிர் போதின்மேல் 
கரவில் நான்முக னுங்கரி யல்லரே.
5.97.26
983அழலங் கையினன் அந்தரத் தோங்கிநின் 
றுழலும் மூவெயில் ஒள்ளழ லூட்டினான் 
தழலுந் தாமரை யானொடு தாவினான் 
கழலுஞ் சென்னியுங் காண்டற் கரியனே.
5.97.27
984இளமை கைவிட் டகறலும் மூப்பினார் 
வளமை போய்ப்பிணி யோடு வருதலால் 
உளமெ லாமொளி யாய்மதி ஆயினான் 
கிளமை யேகிளை யாக நினைப்பனே.
5.97.28
985தன்னிற் றன்னை அறியுந் தலைமகன் 
தன்னிற் றன்னை அறியிற் றலைப்படுந் 
தன்னிற் றன்னை அறிவில னாயிடிற் 
தன்னிற் றன்னையுஞ் சார்தற் கரியனே.
5.97.29
986இலங்கை மன்னனை ஈரைந்து பத்துமன் 
றலங்க லோடுட னேசெல வூன்றிய 
நலங்கொள் சேவடி நாடொறும் நாடொறும் 
வலம்கொண் டேத்துவார் வானுல காள்வரே.
5.97.30


திருச்சிற்றம்பலம்
 


5.98 உள்ளம் – திருக்குறுந்தொகை 

திருச்சிற்றம்பலம்

987நீற லைத்ததோர் மேனி நிமிர்சடை 
ஆற லைக்கநின் றாடும் அமுதினைத் 
தேற லைத்தெளி யைத்தெளி வாய்த்ததோர் 
ஊற லைக்கண்டு கொண்டதெ னுள்ளமே.
5.98.1
988பொந்தை யைப்புக்கு நீக்கப் புகுந்திடுந் 
தந்தை யைத்தழல் போல்வதோர் மேனியைச் 
சிந்தை யைத்தெளி வைத்தெளி வாய்த்ததோர் 
எந்தை யைக்கண்டு கொண்டதெ னுள்ளமே.
5.98.2
989வெள்ளத் தார்விஞ்சை யார்கள் விரும்பவே 
வெள்ளத் தைச்சடை வைத்த விகிர்தனார் 
கள்ளத் தைக்கழி யம்மன மொன்றிநின் 
றுள்ளத் தில்லொளி யைக்கண்ட துள்ளமே.
5.98.3
990அம்மா னையமு தின்னமு தேயென்று 
தம்மா னைத்தத்து வத்தடி யார்தொழுஞ் 
செம்மா னநிறம் போல்வதோர் சிந்தையுள் 
எம்மா னைக்கண்டு கொண்டதெ னுள்ளமே.
5.98.4
991கூறே றும்முமை பாகமோர் பாலராய் 
ஆறே றுஞ்சடை மேற்பிறை சூடுவர் 
பாறே றுந்தலை யேந்திப் பலஇலம் 
ஏறேறு மெந்தையைக் கண்டதெ னுள்ளமே.
5.98.5
992முன்னெஞ் சம்மின்றி மூர்க்கராய்ச் சாகின்றார் 
தன்னெஞ் சந்தமக் குத்தாம் இலாதவர் 
வன்னெஞ் சம்மது நீங்குதல் வல்லிரே 
என்னெஞ்சி லீசனைக் கண்டதெ னுள்ளமே.
5.98.6
993வென்றா னைப்புல னைந்துமென் தீவினை 
கொன்றா னைக்குணத் தாலே வணங்கிட 
நன்றா நன்மனம் வைத்திடு ஞானமாம் 
ஒன்றா னைக்கண்டு கொண்டதெ னுள்ளமே.
5.98.7
994மருவி னைமட நெஞ்சம் மனம்புகுங் 
குருவி னைக்குணத் தாலே வணங்கிடுந் 
திருவி னைச்சிந்தை யுட்சிவ னாய்நின்ற 
உருவி னைக்கண்டு கொண்டதெ னுள்ளமே.
5.98.8
995தேச னைத்திரு மால்பிர மன்செயும் 
பூச னைப்புண ரிற்புணர் வாயதோர் 
நேச னைநெஞ்சி னுள்நிறை வாய்நின்ற 
ஈச னைக்கண்டு கொண்டதெ னுள்ளமே.
5.98.9
996வெறுத்தா னைம்புல னும்பிர மன்றலை 
அறுத்தா னையரக் கன்கயி லாயத்தைக் 
கறுத்தா னைக்கா லில்விர லொன்றினால் 
ஒறுத்தா னைக்கண்டு கொண்டதெ னுள்ளமே.
5.98.10


திருச்சிற்றம்பலம்
 


5.99 பாவநாசம் – திருக்குறுந்தொகை 

திருச்சிற்றம்பலம்

997பாவ மும்பழி பற்றற வேண்டுவீர் 
ஆவில் அஞ்சுகந் தாடு மவன்கழல் 
மேவ ராய்மிக வும்மகிழ்ந் துள்குமின் 
காவ லாளன் கலந்தருள் செய்யுமே.
5.99.1
998கங்கை யாடிலென் காவிரி யாடிலென் 
கொங்கு தண்கும ரித்துறை யாடிலென் 
ஒங்கு மாகட லோதநீ ராடிலென் 
எங்கு மீசனெ னாதவர்க் கில்லையே.
5.99.2
999பட்ட ராகிலென் சாத்திரங் கேட்கிலென் 
இட்டு மட்டியு மீதொழில் பூணிலென் 
எட்டு மொன்றும் இரண்டு மறியிலென் 
இட்ட மீசனெ னாதவர்க் கில்லையே.
5.99.3
1000வேத மோதிலென் வேள்விகள் செய்கிலென் 
நீதி நூல்பல நித்தல் பயிற்றிலென் 
ஓதி யங்கமோ ராறும் உணரிலென் 
ஈச னையுள்கு வார்க்கன்றி இல்லையே.
5.99.4
1001காலை சென்று கலந்துநீர் மூழ்கிலென் 
வேலை தோறும் விதிவழி நிற்கிலென் 
ஆலை வேள்வி யடைந்தது வேட்கிலென் 
ஏல ஈசனென் பார்க்கன்றி இல்லையே.
5.99.5
1002கான நாடு கலந்து திரியிலென் 
ஈன மின்றி இருந்தவஞ் செய்யிலென் 
ஊனை யுண்டல் ஒழிந்துவா னோக்கிலென் 
ஞான னென்பவர்க் கன்றிநன் கில்லையே.
5.99.6
1003கூட வேடத்த ராகிக் குழுவிலென் 
வாடி யூனை வருத்தித் திரியிலென் 
ஆடல் வேடத்தன் அம்பலக் கூத்தனைப் 
பாட லாளர்க்கல் லாற்பயன் இல்லையே.
5.99.7
1004நன்று நோற்கிலென் பட்டினி யாகிலென் 
குன்ற மேறி யிருந்தவஞ் செய்யிலென் 
சென்று நீரிற் குளித்துத் திரியிலென் 
என்று மீசனென் பார்க்கன்றி இல்லையே.
5.99.8
1005கோடித் தீர்த்தங் கலந்து குளித்தவை 
ஆடி னாலும் அரனுக்கன் பில்லையேல் 
ஓடும் நீரினை ஓட்டைக் குடத்தட்டி 
மூடி வைத்திட்ட மூர்க்கனோ டொக்குமே.
5.99.9
1006மற்று நற்றவஞ் செய்து வருந்திலென் 
பொற்றை யுற்றெடுத் தானுடல் புக்கிறக் 
குற்ற நற்குரை யார்கழற் சேவடி 
பற்றி லாதவர்க் குப்பயன் இல்லையே.
5.99.10


திருச்சிற்றம்பலம்
 


5.100 ஆதிபுராணம் – திருக்குறுந்தொகை 

திருச்சிற்றம்பலம்

1007வேத நாயகன் வேதியர் நாயகன் 
மாதின் நாயகன் மாதவர் நாயகன் 
ஆதி நாயகன் ஆதிரை நாயகன் 
பூத நாயகன் புண்ணிய மூர்த்தியே.
5.100.1
1008செத்துச் செத்துப் பிறப்பதே தேவென்று 
பத்தி செய்மனப் பாறைகட் கேறுமோ 
அத்த னென்றரி யோடு பிரமனுந் 
துத்தி யஞ்செய நின்றநற் சோதியே.
5.100.2
1009நூறு கோடி பிரமர்கள் நொந்தினார் 
ஆறு கோடி நாராயண ரங்ஙனே 
ஏறு கங்கை மணலெண்ணில் இந்திரர் 
ஈறி லாதவன் ஈசன் ஒருவனே.
5.100.3
1010வாது செய்து மயங்கு மனத்தராய் 
ஏது சொல்லுவீ ராகிலும் ஏழைகாள் 
யாதோர் தேவ ரெனப்படு வார்க் கெல்லாம் 
மாதே வனலாற் றேவர்மற் றில்லையே.
5.100.4
1011கூவ லாமை குரைகட லாமையைக் 
கூவ லோடொக்கு மோகட லென்றல்போற் 
பாவ காரிகள் பார்ப்பரி தென்பராற் 
தேவ தேவன் சிவன்பெருந் தன்மையே.
5.100.5
1012பேய்வ னத்தமர் வானைப்பி ரார்த்தித்தார்க் 
கீவ னையிமை யோர்முடி தன்னடிச் 
சாய்வ னைச்சல வார்கள் தமக்குடற் 
சீவ னைச்சிவ னைச்சிந்தி யார்களே.
5.100.6
1013எரிபெ ருக்குவர் அவ்வெரி ஈசன 
துருவ ருக்கம தாவ துணர்கிலார் 
அரிய யற்கரி யானை அயர்த்துப்போய் 
நரிவி ருத்தம தாகுவர் நாடரே.
5.100.7
1014அருக்கன் பாதம் வணங்குவர் அந்தியில் 
அருக்க னாவான் அரனுரு வல்லனோ 
இருக்கு நான்மறை ஈசனை யேதொழுங் 
கருத்தி னைநினை யார்கன் மனவரே.
5.100.8
1015தாயி னும்நல்ல சங்கர னுக்கன்பர் 
ஆய வுள்ளத் தமுதருந் தப்பெறார் 
பேயர் பேய்முலை யுண்டுயிர் போக்கிய 
மாயன் மாயத்துப் பட்ட மனத்தரே.
5.100.9
1016அரக்கன் வல்லரட் டாங்கொழித் தாரருள் 
பெருக்கச் செய்த பிரான்பெருந் தன்மையை 
அருத்தி செய்தறி யப்பெறு கின்றிலர் 
கருத்தி லாக்கய வக்கணத் தோர்களே.
5.100.10

திருச்சிற்றம்பலம்

திருநாவுக்கரசுசுவாமிகள் அருளிச்செய்த தேவாரப்பதிகங்கள் 
ஐந்தாம் திருமுறை முற்றும்.


This webpage was last updated on 7th October 2008
Please send your comments to the webmasters of this website.

OR

Please send your corrections


5.52 திருநாகேச்சரம் – திருக்குறுந்தொகை 


திருச்சிற்றம்பலம்

521நல்லர் நல்லதோர் நாகங்கொண் டாட்டுவர் 
வல்லர் வல்வினை தீர்க்கும் மருந்துகள் 
பல்லில் ஓடுகை யேந்திப் பலிதிரி 
செல்வர் போல்திரு நாகேச் சரவரே.
5.52.1
522நாவ லம்பெருந் தீவினில் வாழ்பவர் 
மேவி வந்து வணங்கி வினையொடு 
பாவ மாயின பற்றறு வித்திடுந் 
தேவர் போல்திரு நாகேச் சரவரே.
5.52.2
523ஓத மார்கட லின்விட முண்டவர் 
ஆதி யார்அய னோடம ரர்க்கெலாம் 
மாதோர் கூறர் மழுவல னேந்திய 
நாதர் போல்திரு நாகேச் சரவரே.
5.52.3
524சந்தி ரன்னொடு சூரியர் தாமுடன் 
வந்து சீர்வழி பாடுகள் செய்தபின் 
ஐந்த லையர வின்பணி கொண்டருள் 
மைந்தர் போல்மணி நாகேச் சரவரே.
5.52.4
525பண்டோ ர் நாளிகழ் வான்பழித் தக்கனார் 
கொண்ட வேள்விக் குமண்டை யதுகெடத் 
தண்ட மாவிதா தாவின் றலைகொண்ட 
செண்டர் போல்திரு நாகேச் சரவரே.
5.52.5
526வம்பு பூங்குழல் மாது மறுகவோர் 
கம்ப யானை யுரித்த கரத்தினர் 
செம்பொ னாரித ழிம்மலர்ச் செஞ்சடை 
நம்பர் போல்திரு நாகேச் சரவரே.
5.52.6
527மானை யேந்திய கையினர் மையறு 
ஞானச் சோதியர் தியர் நாமந்தான் 
ஆன அஞ்செழுத் தோதவந் தண்ணிக்குந் 
தேனர் போல்திரு நாகேச் சரவரே.
5.52.7
528கழல்கொள் காலினர் காலனைக் காய்ந்தவர் 
தழல்கொள் மேனியர் சாந்தவெண் ணீறணி 
அழகர் ஆல்நிழற் கீழற மோதிய 
குழகர் போல்குளிர் நாகேச் சரவரே.
5.52.8
529வட்ட மாமதில் மூன்றுடன் வல்லரண் 
சுட்ட செய்கைய ராகிலுஞ் சூழ்ந்தவர் 
குட்ட வல்வினை தீர்த்துக் குளிர்விக்குஞ் 
சிட்டர் போல்திரு நாகேச் சரவரே.
5.52.9
530தூர்த்தன் றோண்முடி தாளுந் தொலையவே 
சேர்த்தி னார்திருப் பாதத் தொருவிரல் 
ஆர்த்து வந்துல கத்தவ ராடிடுந் 
தீர்த்தர் போல்திரு நாகேச் சரவரே.
5.52.10


இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் – செண்பகாரணியேசுவரர், 
தேவியார் – குன்றமுலைநாயகியம்மை. 

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


5.53 திருவதிகைவீரட்டம் – திருக்குறுந்தொகை 


திருச்சிற்றம்பலம்

531கோணன் மாமதி சூடியோர் கோவணம் 
நாணில் வாழ்க்கை நயந்தும் பயனிலை 
பாணில் வீணை பயின்றவன் வீரட்டங் 
காணில் அல்லதென் கண்டுயில் கொள்ளுமே.
5.53.1
532பண்ணி னைப்பவ ளத்திரள் மாமணி 
அண்ண லையம ரர்தொழு மாதியைச் 
சுண்ண வெண்பொடி யான்றிரு வீரட்டம் 
நண்ணி லல்லதென் கண்டுயில் கொள்ளுமே.
5.53.2
533உற்ற வர்தம் உறுநோய் களைபவர் 
பெற்ற மேறும் பிறங்கு சடையினர் 
சுற்றும் பாய்புனல் சூழ்திரு வீரட்டங் 
கற்கி லல்லதென் கண்டுயில் கொள்ளுமே.
5.53.13
534முற்றா வெண்மதி சூடும் முதல்வனார் 
செற்றார் வாழுந் திரிபுரந் தீயெழ 
விற்றான் கொண்டெயி லெய்தவர் வீரட்டங் 
கற்றா லல்லதென் கண்டுயில் கொள்ளுமே.
5.53.4
535பல்லா ரும்பல தேவர் பணிபவர் 
நல்லா ருந்நயந் தேத்தப் படுபவன் 
வில்லால் மூவெயி லெய்தவன் வீரட்டங் 
கல்லே னாகிலென் கண்டுயில் கொள்ளுமே.
5.53.5
536வண்டார் கொன்றையும் மத்தம் வளர்சடைக் 
கொண்டான் கோல மதியோ டரவமும் 
விண்டார் மும்மதி லெய்தவன் வீரட்டங் 
கண்டா லல்லதென் கண்டுயில் கொள்ளுமே.
5.53.6
537அரையார் கோவண ஆடைய னாறெலாந் 
திரையார் ஒண்புனல் பாய்கெடி லக்கரை 
விரையார் நீற்றன் விளங்கு வீரட்டன்பாற் 
கரையே னாகிலென் கண்டுயில் கொள்ளுமே.
5.53.7
538நீறு டைத்தடந் தோளுடை நின்மலன் 
ஆறு டைப்புனல் பாய்கெடி லக்கரை 
ஏறு டைக்கொடி யான்றிரு வீரட்டங் 
கூறி லல்லதென் கண்டுயில் கொள்ளுமே.
5.53.8
539செங்கண் மால்விடை யேறிய செல்வனார் 
பைங்க ணானையின் ஈருரி போர்த்தவர் 
அங்கண் ஞாலம தாகிய வீரட்டங் 
கங்கு லாகவென் கண்டுயில் கொள்ளுமே.
5.53.9
540பூணா ணாரம் பொருந்த வுடையவர் 
நாணா கவ்வரை வில்லிடை யம்பினாற் 
பேணார் மும்மதி லெய்தவன் வீரட்டங் 
காணே னாகிலென் கண்டுயில் கொள்ளுமே.
5.53.10
541வரையார்ந் தவயி ரத்திரள் மாணிக்கந் 
திரையார்ந் தபுனல் பாய்கெடி லக்கரை 
விரையார் நீற்றன் விளங்கிய வீரட்டம் 
உரையே னாகிலென் கண்டுயில் கொள்ளுமே.
5.53.11
542உலந்தார் வெண்டலை உண்கல னாகவே 
வலந்தான் மிக்கவன் வாளரக் கன்றனைச் 
சிலம்பார் சேவடி யூன்றினான் வீரட்டம் 
புலம்பே னாகிலென் கண்டுயில் கொள்ளுமே.
5.53.12


இத்தலம் நடுநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் – வீரட்டானேசுவரர், தேவியார் – திருவதிகைநாயகியம்மை. 
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப



5.54 திருவதிகைவீரட்டம் – திருக்குறுந்தொகை 

திருச்சிற்றம்பலம்

543எட்டு நாண்மலர் கொண்டவன் சேவடி 
மட்ட லரிடு வார்வினை மாயுமாற் 
கட்டித் தேன்கலந் தன்ன கெடிலவீ 
ரட்ட னாரடி சேரு மவருக்கே.
5.54.1
544நீள மாநினைந் தெண்மலர் இட்டவர் 
கோள வல்வினை யுங்குறை விப்பரால் 
வாள மாலிழி யுங்கெடி லக்கரை 
வேளி சூழ்ந்தழ காய வீரட்டரே.
5.54.2
545கள்ளின் நாண்மல ரோரிரு நான்குகொண் 
டுள்குவா ரவர் வல்வினை யோட்டுவார் 
தெள்ளு நீர்வயல் பாய்கெடி லக்கரை 
வெள்ளை நீறணி மேனிவீ ரட்டரே.
5.54.3
546பூங்கொத் தாயின மூன்றொடோ ரைந்திட 
வாங்கி நின்றவர் வல்வினை யோட்டுவார் 
வீங்கு தண்புனல் பாய்கெடி லக்கரை 
வேங்கைத் தோலுடை யாடைவீ ரட்டரே.
5.54.4
547தேனப் போதுகள் மூன்றொடோ ரைந்துடன் 
தானப் போதிடு வார்வினை தீர்ப்பவர் 
மீனத் தண்புனல் பாய்கெடி லக்கரை 
வேன லானை யுரித்தவீ ரட்டரே.
5.54.5
548ஏழித் தொன்மலர் கொண்டு பணிந்தவர் 
ஊழித் தொல்வினை யோட அகற்றுவார் 
பாழித் தண்புனல் பாய்கெடி லக்கரை 
வேழத் தின்னுரி போர்த்தவீ ரட்டரே.
5.54.6
549உரைசெய் நூல்வழி யொண்மல ரெட்டிடத் 
திரைகள் போல்வரு வல்வினை தீர்ப்பரால் 
வரைகள் வந்திழி யுங்கெடி லக்கரை 
விரைகள் சூழ்ந்தழ காயவீ ரட்டரே.
5.54.7
550ஓலி வண்டறை யொண்மல ரெட்டினாற் 
காலை யேத்த வினையைக் கழிப்பரால் 
ஆலி வந்திழி யுங்கெடி லக்கரை 
வேலி சூழ்ந்தழ காயவீ ரட்டரே.
5.54.8
551தாரித் துள்ளித் தடமல ரெட்டினாற் 
பாரித் தேத்தவல் லார்வினை பாற்றுவார் 
மூரித் தெண்டிரை பாய்கெடி லக்கரை 
வேரிச் செஞ்சடை வேய்ந்தவீ ரட்டரே.
5.54.9
552அட்ட புட்பம் அவைகொளு மாறுகொண் 
டட்ட மூர்த்தி அனாதிதன் பாலணைந் 
தட்டு மாறுசெய் கிற்ப அதிகைவீ 
ரட்ட னாரடி சேரு மவர்களே.
5.54.10


திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


5.55 திருநாரையூர் – திருக்குறுந்தொகை 

திருச்சிற்றம்பலம்

553வீறு தானுடை வெற்பன் மடந்தையோர் 
கூற னாகிலுங் கூன்பிறை சூடிலும் 
நாறு பூம்பொழில் நாரையூர் நம்பனுக் 
காறு சூடலும் அம்ம அழகிதே.
5.55.1
554புள்ளி கொண்ட புலியுரி யாடையும் 
வெள்ளி கொண்டவெண் பூதிமெய் யாடலும் 
நள்ளி தெண்டிரை நாரையூ ரான்நஞ்சை 
அள்ளி யுண்டலும் அம்ம அழகிதே.
5.55.2

555
வேடு தங்கிய வேடமும் வெண்டலை 
ஓடு தங்கிய வுண்பலி கொள்கையும் 
நாடு தங்கிய நாரையூ ரான்நடம் 
ஆடு பைங்கழல் அம்ம அழகிதே.
5.55.3
556கொக்கின் றூவலுங் கூவிளங் கண்ணியும் 
மிக்க வெண்டலை மாலை விரிசடை 
நக்க னாகிலும் நாரையூர் நம்பனுக் 
கக்கி னாரமும் அம்ம அழகிதே.
5.55.4
557வடிகொள் வெண்மழு மானமர் கைகளும் 
பொடிகொள் செம்பவ ளம்புரை மேனியும் 
நடிகொள் நன்மயில் சேர்திரு நாரையூர் 
அடிகள் தம்வடி வம்ம அழகிதே.
5.55.5
558சூல மல்கிய கையுஞ் சுடரொடு 
பாலு நெய்தயி ராடிய பான்மையும் 
ஞால மல்கிய நாரையூர் நம்பனுக் 
கால நீழலும் அம்ம அழகிதே.
5.55.6
559பண்ணி னான்மறை பாடலொ டாடலும் 
எண்ணி லார்புர மூன்றெரி செய்ததும் 
நண்ணி னார்துயர் தீர்த்தலும் நாரையூர் 
அண்ண லார்செய்கை அம்ம அழகிதே.
5.55.7
560என்பு பூண்டெரு தேறி இளம்பிறை 
மின்பு ரிந்த சடைமேல் விளங்கவே 
நன்ப கற்பலி தேரினும் நாரையூர் 
அன்ப னுக்கது அம்ம அழகிதே.
5.55.8
561முரலுங் கின்னரம் மொந்தை முழங்கவே 
இரவி னின்றெரி யாடலு நீடுவான் 
நரலும் வாரிநன் னாரையூர் நம்பனுக் 
கரவும் பூணுதல் அம்ம அழகிதே.
5.55.9
562கடுக்கை யஞ்சடை யன்கயி லைம்மலை 
எடுத்த வாளரக் கன்றலை ஈரைஞ்சும் 
நடுக்கம் வந்திற நாரையூ ரான்விரல் 
அடுத்த தன்மையும் அம்ம அழகிதே.
5.55.10


இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் – சவுந்தரேசுவரர், தேவியார் – திருபுரசுந்தரநாயகி.
திருச்சிற்றம்பலம் 
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


5.56 திருக்கோளிலி – திருக்குறுந்தொகை 


திருச்சிற்றம்பலம்

563மைக்கொள் கண்ணுமை பங்கினன் மான்மழுத் 
தொக்க கையினன் செய்யதோர் சோதியன் 
கொக்க மர்பொழில் சூழ்தரு கோளிலி 
நக்க னைத்தொழ நம்வினை நாசமே.
5.56.1
564முத்தி னைமுத லாகிய மூர்த்தியை 
வித்தி னைவிளை வாய விகிர்தனைக் 
கொத்த லர்பொழில் சூழ்தரு கோளிலி 
அத்த னைத்தொழ நீங்கும்நம் மல்லலே.
5.56.2
565வெண்டி ரைப்பர வைவிட முண்டதோர் 
கண்ட னைக்கலந் தார்தமக் கன்பனைக் 
கொண்ட லம்பொழிற் கோளிலி மேவிய 
அண்ட னைத்தொழு வார்க்கல்ல லில்லையே.
5.56.3
566பலவும் வல்வினை பாறும் பரிசினால் 
உலவுங் கங்கையுந் திங்களும் ஒண்சடை 
குலவி னான்குளி ரும்பொழிற் கோளிலி 
நிலவி னான்றனை நித்தல் நினைமினே.
5.56.4
567அல்ல லாயின தீரும் அழகிய 
முல்லை வெண்முறு வல்லுமை யஞ்சவே 
கொல்லை யானை யுரித்தவன் கோளிலிச் 
செல்வன் சேவடி சென்று தொழுமினே.
5.56.5
568ஆவின் பால்கண் டளவில் அருந்தவப் 
பாலன் வேண்டலுஞ் செல்லென்று பாற்கடல் 
கூவி னான்குளி ரும்பொழிற் கோளிலி 
மேவி னானைத் தொழவினை வீடுமே.
5.56.6
569சீர்த்த நன்மனை யாளுஞ் சிறுவரும் 
ஆர்த்த சுற்றமும் பற்றிலை யாதலாற் 
கூத்த னாருறை யுந்திருக் கோளிலி 
ஏத்தி நீர்தொழு மின்னிடர் தீருமே.
5.56.7
570மால தாகி மயங்கு மனிதர்காள் 
காலம் வந்து கடைமுடி யாமுனங் 
கோல வார்பொழிற் கோளிலி மேவிய 
நீல கண்டனை நின்று நினைமினே.
5.56.8
571கேடு மூடிக் கிடந்துண்ணு நாடது 
தேடி நீர்திரி யாதே சிவகதி 
கூட லாந்திருக் கோளிலி ஈசனைப் 
பாடு மின்னிர வோடு பகலுமே.
5.56.8
572மடுத்து மாமலை யேந்தலுற் றான்றனை 
அடர்த்துப் பின்னும் இரங்கி யவற்கருள் 
கொடுத்த வன்னுறை கோளிலி யேதொழ 
விடுத்து நீங்கிடும் மேலை வினைகளே.
5.56.9

இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் – கோளிலிநாதர், தேவியார் – வண்டமர்பூங்குழலம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


5. 57 திருக்கோளிலி – திருக்குறுந்தொகை 

திருச்சிற்றம்பலம்

573முன்ன மேநினை யாதொழிந் தேனுனை 
இன்னம் நானுன சேவடி யேத்திலேன் 
செந்நெ லார்வயல் சூழ்திருக் கோளிலி 
மன்ன னேயடி யேனை மறவலே.
5.57.1
574விண்ணு ளார்தொழு தேத்தும் விளக்கினை 
மண்ணு ளார்வினை தீர்க்கு மருந்தினைப் 
பண்ணு ளார்பயி லுந்திருக் கோளிலி 
அண்ண லாரடி யேதொழு துய்ம்மினே.
5.57.2
575நாளும் நம்முடை நாள்கள் அறிகிலோம் 
ஆளும் நோய்களோ ரைம்பதோ டாறெட்டும் 
ஏழை மைப்பட் டிருந்துநீர் நையாதே 
கோளி லியரன் பாதமே கூறுமே.
5.57.3
576விழவி னோசை ஒலியறாத் தண்பொழில் 
பழகி னார்வினை தீர்க்கும் பழம்பதி 
அழல்கை யானம ருந்திருக் கோளிலிக் 
குழக னார்திருப் பாதமே கூறுமே.
5.57.4
577மூல மாகிய மூவர்க்கு மூர்த்தியைக் 
கால னாகிய காலற்குங் காலனைக் 
கோல மாம்பொழில் சூழ்திருக் கோளிலிச் 
சூல பாணிதன் பாதந் தொழுமினே.
5.57.5
578காற்ற னைக்கடல் நஞ்சமு துண்டவெண் 
ணீற்ற னைநிமிர் புன்சடை யண்ணலை 
ஆற்ற னையம ருந்திருக் கோளிலி 
ஏற்ற னாரடி யேதொழு தேத்துமே.
5.57.6
579வேத மாயவிண் ணோர்கள் தலைவனை 
ஓதி மன்னுயி ரேத்து மொருவனைக் 
கோதி வண்டறை யுந்திருக் கோளிலி 
வேத நாயகன் பாதம் விரும்புமே.
5.57.7
580நீதி யாற்றொழு வார்கள் தலைவனை 
வாதை யான விடுக்கும் மணியினை 
கோதி வண்டறை யுந்திருக் கோளிலி 
வேத நாயகன் பாதம் விரும்புமே.
5.57.8
581மாலும் நான்முக னாலும் அறிவொணாப் 
பாலின் மென்மொழி யாளொரு பங்கனைக் 
கோல மாம்பொழில் சூழ்திருக் கோளிலி 
நீல கண்டனை நித்தல் நினைமினே.
5.57.9
582அரக்க னாய இலங்கையர் மன்னனை 
நெருக்கி யம்முடி பத்திறுத் தானவற் 
கிரக்க மாகிய வன்றிருக் கோளிலி 
அருத்தி யாயடி யேதொழு துய்ம்மினே.
5.57.10


திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


5.58 திருப்பழையாறைவடதளி – திருக்குறுந்தொகை 

திருச்சிற்றம்பலம்

583தலையெ லாம்பறிக் குஞ்சமண் கையருள் 
நிலையி னான்மறைத் தான்மறைக் கொண்ணுமே 
அலையி னார்பொழி லாறை வடதளி 
நிலையி னானடி யேநினைந் துய்ம்மினே.
5.58.1
584மூக்கி னால்முரன் றோதியக் குண்டிகை 
தூக்கி னார்குலந் தூரறுத் தேதனக் 
காக்கி னானணி யாறை வடதளி 
நோக்கி னார்க்கில்லை யாலரு நோய்களே.
5.58.2

585
குண்ட ரைக்குண மில்லரைக் கூறையில் 
மிண்ட ரைத்துரந் தவிம லன்றனை 
அண்ட ரைப்பழை யாறை வடதளிக் 
கண்ட ரைத்தொழு துய்ந்தன கைகளே.
5.58.3
586முடைய ரைத்தலை முண்டிக்கும் மொட்டரை 
கடைய ரைக்கடிந் தார்கனல் வெண்மழுப் 
படைய ரைப்பழை யாறை வடதளி 
உடைய ரைக்குளிர்ந் துள்குமென் உள்ளமே.
5.58.4
587ஒள்ள ரிக்கணார் முன்னமண் நின்றுணுங் 
கள்ள ரைக்கடிந் தகருப் பூறலை 
அள்ள லம்புன லாறை வடதளி 
வள்ள லைப்புக ழத்துயர் வாடுமே.
5.58.5
588நீதி யைக்கெட நின்றம ணேயுணுஞ் 
சாதி யைக்கெடு மாசெய்த சங்கரன் 
ஆதி யைப்பழை யாறை வடதளிச் 
சோதி யைத்தொழு வார்துயர் தீருமே.
5.58.6
589திரட்டி ரைக்க வளந்திணிக் குஞ்சமண் 
பிரட்ட ரைப்பிரித் தபெரு மான்றனை 
அருட்டி றத்தணி யாறை வடதளித் 
தெருட்ட ரைத்தொழத் தீவினை தீருமே.
5.58.7
590ஓதி னத்தெழுத் தஞ்சுண ராச்சமண் 
*வேதி னைப்படுத் தானைவெங் கூற்றுதை 
பாத னைப்பழை யாறை வடதளி 
நாத னைத்தொழ நம்வினை நாசமே. 
* வேது என்பது – வெப்பம்.
5.58.8
591வாயி ருந்தமி ழேபடித் தாளுறா 
ஆயி ரஞ்சம ணும்மழி வாக்கினான் 
பாயி ரும்புன லாறை வடதளி 
மேய வன்னென வல்வினை வீடுமே.
5.58.9
592செருத்த னைச்செயுஞ் சேணரக் கன்னுடல் 
எருத்தி றவிர லாலிறை யூன்றிய 
அருத்த னைப்பழை யாறை வடதளித் 
திருத்த னைத்தொழு வார்வினை தேயுமே.
5.58.10


இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் – சோமேசுவரர், தேவியார் – சோமகலாநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


5.59 திருமாற்பேறு – திருக்குறுந்தொகை 

திருச்சிற்றம்பலம்

593பொருமாற் றின்படை வேண்டிநற் பூம்புனல் 
வருமாற் றின்மலர் கொண்டு வழிபடுங் 
கருமாற் கின்னருள் செய்தவன் காண்டகு 
திருமாற் பேறு தொழவினை தேயுமே.
5.59.1
594ஆலத் தார்நிழ லில்லறம் நால்வர்க்குக் 
கோலத் தாலுரை செய்தவன் குற்றமில் 
மாலுக் காரருள் செய்தவன் மாற்பேறு 
ஏலத் தான்றொழு வார்க்கிட ரில்லையே.
5.59.2
595துணிவண் ணச்சுட ராழிகொள் வானெண்ணி 
அணிவண் ணத்தலர் கொண்டடி யர்ச்சித்த 
மணிவண் ணற்கருள் செய்தவன் மாற்பேறு 
பணிவண் ணத்தவர்க் கில்லையாம் பாவமே.
5.59.3
596தீத வைசெய்து தீவினை வீழாதே 
காதல் செய்து கருத்தினில் நின்றநன் 
மாத வர்பயில் மாற்பேறு கைதொழப் 
போது மின்வினை யாயின போகுமே.
5.59.4
597வார்கொள் மென்முலை மங்கையோர் பங்கினன் 
வார்கொள் நன்முர சம்மறை யவ்வறை 
வார்கொள் பைம்பொழில் மாற்பேறு கைதொழு 
வார்கள் மன்னுவர் பொன்னுல கத்திலே.
5.59.5
598பண்டை வல்வினை பற்றறுக் கும்வகை 
உண்டு சொல்லுவன் கேண்மின் ஒளிகிளர் 
வண்டு சேர்பொழில் சூழ்திரு மாற்பேறு 
கண்டு கைதொழத் தீருங் கவலையே.
5.59.6
599மழுவ லான்றிரு நாமம் மகிழ்ந்துரைத் 
தழவ லார்களுக் கன்புசெய் தின்பொடும் 
வழுவி லாவருள் செய்தவன் மாற்பேறு 
தொழவ லார்தமக் கில்லை துயரமே.
5.59.7
600முன்ன வனுல குக்கு முழுமணிப் 
பொன்ன வன்றிகழ் முத்தொடு போகமாம் 
மன்ன வன்றிரு மாற்பேறு கைதொழும் 
அன்ன வரெமை யாளுடை யார்களே.
5.59.8
601வேட னாய்விச யன்னொடும் எய்துவெங் 
காடு நீடுகந் தாடிய கண்ணுதல் 
மாட நீடுய ருந்திரு மாற்பேறு 
பாடு வார்பெறு வார்பர லோகமே.
5.59.9
602கருத்த னாய்க்கயி லாய மலைதனைத் 
தருக்கி னாலெடுத் தானைத் தகரவே 
வருத்தி யாரருள் செய்தவன் மாற்பேறு 
அருத்தி யாற்றொழு வார்க்கில்லை அல்லலே.
5.59.10


இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் – மால்வணங்குமீசர், தேவியார் – கருணைநாயகியம்மை. 
திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


5.60 திருமாற்பேறு – திருக்குறுந்தொகை 

திருச்சிற்றம்பலம்

603ஏது மொன்று மறிவில ராயினும் 
ஓதி அஞ்செழுத் தும்முணர் வார்கட்குப் 
பேத மின்றி அவரவர் உள்ளத்தே 
மாதுந் தாமும் மகிழ்வர்மாற் பேறரே.
5.60.1
604அச்ச மில்லைநெஞ் சேயரன் நாமங்கள் 
நிச்ச லுந்நினை யாய்வினை போயறக் 
கச்ச மாவிட முண்டகண் டாவென 
வைச்ச மாநிதி யாவர் மாற்பேறரே.
5.60.2
605சாத்தி ரம்பல பேசுஞ் சழக்கர்காள் 
கோத்தி ரமுங்கு லமுங்கொண் டென்செய்வீர் 
பாத்தி ரஞ்சிவ மென்று பணிதிரேல் 
மாத்தி ரைக்குள் அருளுமாற் பேறரே.
5.60.3
606இருந்து சொல்லுவன் கேண்மின்கள் ஏழைகாள் 
அருந்த வந்தரும் அஞ்செழுத் தோதினாற் 
பொருந்து நோய்பிணி போகத் துரப்பதோர் 
மருந்து மாகுவர் மன்னுமாற் பேறரே.
5.60.4
607சாற்றிச் சொல்லுவன் கேண்மின் தரணியீர் 
ஏற்றின் மேல்வரு வான்கழ லேத்தினாற் 
கூற்றை நீக்கிக் குறைவறுத் தாள்வதோர் 
மாற்றி லாச்செம்பொ னாவர்மாற் பேறரே.
5.60.5
608ஈட்டு மாநிதி சால இழக்கினும் 
வீட்டுங் காலன் விரைய அழைக்கினுங் 
காட்டில் மாநட மாடுவாய் காவெனில் 
வாட்டந் தீர்க்கவும் வல்லர்மாற் பேறரே.
5.60.6
609ஐய னேயர னேயென் றரற்றினால் 
உய்ய லாமுல கத்தவர் பேணுவர் 
செய்ய பாத மிரண்டும் நினையவே 
வைய மாளவும் வைப்பர்மாற் பேறரே.
5.60.7
 இப்பதிகத்தில் 8,9-ம் செய்யுட்கள் சிதைந்து போயின.5.60.8-9

610
உந்திச் சென்று மலையை யெடுத்தவன் 
சந்து தோளொடு தாளிற வூன்றினான் 
மந்தி பாய்பொழில் சூழுமாற் பேறென 
அந்த மில்லதோர் இன்பம் அணுகுமே.
5.60.10


திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


5.61 திருஅரிசிற்கரைப்புத்தூர் – திருக்குறுந்தொகை 


திருச்சிற்றம்பலம்

611முத்தூ ரும்புனல் மொய்யரி சிற்கரைப் 
புத்தூ ரன்னடி போற்றியென் பாரெலாம் 
பொய்த்தூ ரும்புல னைந்தொடு புல்கிய 
மைத்தூ ரும்வினை மாற்றவும் வல்லரே.
5.61.1
612பிறைக்க ணிச்சடை யெம்பெரு மானென்று 
கறைக்க ணித்தவர் கண்ட வணக்கத்தாய் 
உறக்க ணித்துரு காமனத் தார்களைப் 
புறக்க ணித்திடும் புத்தூர்ப் புனிதரே.
5.61.2
613அரிசி லின்கரை மேலணி யார்தரு 
புரிசை நந்திருப் புத்தூர்ப் புனிதனைப் 
பரிசொ டும்பர விப்பணி வார்க்கெலாந் 
துரிசில் நன்னெறி தோன்றிடுங் காண்மினே.
5.61.3
614வேத னைமிகு வீணையின் மேவிய 
கீத னைக்கிள ருந்நறுங் கொன்றையம் 
போத னைப்புனல் சூழ்ந்தபுத் தூரனை 
நாத னைந்நினைந் தென்மனம் நையுமே.
5.61.4
615அருப்புப் போன்முலை யாரல்லல் வாழ்க்கைமேல் 
விருப்புச் சேர்நிலை விட்டுநல் லிட்டமாய் 
திருப்புத் தூரனைச் சிந்தை செயச்செயக் 
கருப்புச் சாற்றிலும் அண்ணிக்குங் காண்மினே.
5.61.5
616பாம்பொ டுமதி யும்படர் புன்சடைப் 
பூம்பு னலும்பொ திந்தபுத் தூருளான் 
நாம்ப ணிந்தடி போற்றிட நாடொறுஞ் 
சாம்பல் என்பு தனக்கணி யாகுமே.
5.61.6
617கனலங் கைதனி லேந்திவெங் காட்டிடை 
அனலங் கெய்திநின் றாடுவர் பாடுவர் 
பினலஞ் செஞ்சடை மேற்பிறை யுந்தரு 
புனலுஞ் சூடுவர் போலும்புத் தூரரே.
5.61.7
618காற்றி னுங்கடி தாகி நடப்பதோர் 
ஏற்றி னும்மிசைந் தேறுவர் என்பொடு 
நீற்றி னையணி வர்நினை வாய்த்தமைப் 
போற்றி யென்பவர்க் கன்பர்புத் தூரரே.
5.61.8
619முன்னு முப்புரஞ் செற்றன ராயினும் 
அன்ன மொப்பர் அலந்தடைந் தார்க்கெலாம் 
மின்னு மொப்பர் விரிசடை மேனிசெம் 
பொன்னு மொப்பர்புத் தூரெம் புனிதரே.
5.61.9
620செருத்த னாற்றன தேர்செல வுய்த்திடுங் 
கருத்த னாய்க்கயி லையெடுத் தானுடல் 
பருத்த தோள்கெடப் பாதத் தொருவிரல் 
பொருத்தி னார்பொழி லார்ந்தபுத் தூரரே.
5.61.10

இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் – படிக்காசுவைத்தநாதர், தேவியார் – அழகாம்பிகை.
திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


5.62 திருக்கடுவாய்க்கரைப்புத்தூர் – திருக்குறுந்தொகை 

திருச்சிற்றம்பலம்

621ஒருத்த னைமூ வுலகொடு தேவர்க்கும் 
அருத்த னையடி யேன்மனத் துள்ளமர் 
கருத்த னைக்கடு வாய்ப்புன லாடிய 
திருத்த னைப்புத்தூர் சென்றுகண் டுய்ந்தேனே.
5.62.1
622யாவ ருமறி தற்கரி யான்றனை 
மூவ ரின்முத லாகிய மூர்த்தியை 
நாவின் நல்லுரை யாகிய நாதனைத் 
தேவனைப் புத்தூர் சென்றுகண் டுய்ந்தேனே.
5.62.2
623அன்ப னையடி யாரிடர் நீக்கியைச் 
செம்பொ னைத்திக ழுந்திருக் கச்சியே 
கம்ப னைக்கடு வாய்க்கரைத் தென்புத்தூர் 
நம்ப னைக்கண்டு நானுய்யப் பெற்றேனே.
5.62.3
624மாத னத்தைமா தேவனை மாறிலாக் 
கோத னத்திலைந் தாடியை வெண்குழைக் 
காத னைக்கடு வாய்க்கரைத் தென்புத்தூர் 
நாத னைக்கண்டு நானுய்யப் பெற்றேனே.
5.62.4
625குண்டு பட்டகுற் றந்தவிர்த் தென்னையாட் 
கொண்டு நற்றிறங் காட்டிய கூத்தனைக் 
கண்ட னைக்கடு வாய்க்கரைத் தென்புத்தூர் 
அண்ட னைக்கண் டருவினை யற்றேனே.
5.62.5
626பந்த பாச மறுத்தெனை யாட்கொண்ட 
மைந்த னைம்மண வாளனை மாமலர்க் 
கந்த நீர்க்கடு வாய்க்கரைத் தென்புத்தூர் 
எந்தை யீசனைக் கண்டினி தாயிற்றே.
5.62.6
627உம்ப ரானை உருத்திர மூர்த்தியை 
அம்ப ரானை அமலனை ஆதியைக் 
கம்பு நீர்க்கடு வாய்க்கரைத் தென்புத்தூர் 
எம்பி ரானைக்கண் டின்பம தாயிற்றே.
5.62.7
628மாசார் பாச மயக்கறு வித்தெனுள் 
நேச மாகிய நித்த மணாளனைப் 
பூச நீர்க்கடு வாய்க்கரைத் தென்புத்தூர் 
ஈச னேயென இன்பம தாயிற்றே.
5.62.8
629இடுவா ரிட்ட கவளங் கவர்ந்திரு 
கடுவா யிட்டவர் கட்டுரை கொள்ளாதே 
கடுவாய்த் தென்கரைப் புத்தூ ரடிகட்காட் 
படவே பெற்றுநான் பாக்கியஞ் செய்தேனே.
5.62.9
630அரக்க னாற்றல் அழித்தவன் பாடல்கேட் 
டிரக்க மாகி அருள்புரி யீசனைத் 
திரைக்கொள் நீர்க்கடு வாய்க்கரைத் தென்புத்தூர் 
இருக்கு நாதனைக் காணப்பெற் றுய்ந்தேனே.
5.62.10


இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் – சொர்ணபுரீசுவரர், தேவியார் – சொர்ணபுரிநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


5.63 திருக்குரங்காடுதுறை – திருக்குறுந்தொகை 

திருச்சிற்றம்பலம்

631இரங்கா வன்மனத் தார்கள் இயங்குமுப் 
புரங்கா வல்லழி யப்பொடி யாக்கினான் 
தரங்கா டுந்தட நீர்ப்பொன்னித் தென்கரைக் 
குரங்கா டுதுறைக் கோலக் கபாலியே.
5.63.1
632முத்தி னைமணி யைப்பவ ளத்தொளிர் 
தொத்தி னைச்சுடர் சோதியைச் சோலைசூழ் 
கொத்த லர்குரங் காடு துறையுறை 
அத்த னென்னஅண் ணித்திட் டிருந்ததே.
5.63.2
633குளிர்பு னற்குரங் காடு துறையனைத் 
தளிர்நி றத்தையல் பங்கனைத் தண்மதி 
ஒளிய னைந்நினைந் தேனுக்கென் உள்ளமுந் 
தெளிவி னைத்தெளி யத்தெளிந் திட்டதே.
5.63.3
634மணவன் காண்மலை யாள்நெடு மங்கலக் 
கணவன் காண்கலை ஞானிகள் காதலெண் 
குணவன் காண்குரங் காடு துறைதனில் 
அணவன் காணன்பு செய்யு மடியர்க்கே.
5.63.4
635ஞாலத் தார்தொழு தேத்திய நன்மையன் 
காலத் தானுயிர் போக்கிய காலினன் 
நீலத் தார்மிடற் றான்வெள்ளை நீறணி 
கோலத் தான்குரங் காடு துறையனே.
5.63.5
636ஆட்டி னான்முன் அமணரோ டென்றனைப் 
பாட்டி னான்றன பொன்னடிக் கின்னிசை 
வீட்டி னான்வினை மெய்யடி யாரொடுங் 
கூட்டி னான்குரங் காடு துறையனே.
5.63.6
637மாத்தன் றான்மறை யார்முறை யான்மறை 
ஓத்தன் றாருகன் றன்னுயி ருண்டபெண் 
போத்தன் றானவள் பொங்கு சினந்தணி 
கூத்தன் றான்குரங் காடு துறையனே.
5.63.7
638நாடி நந்தம ராயின தொண்டர்காள் 
ஆடு மின்னழு மின்தொழு மின்னடி 
பாடு மின்பர மன்பயி லும்மிடங் 
கூடு மின்குரங் காடு துறையையே.
5.63.8
639தென்றல் நன்னெடுந் தேருடை யானுடல் 
பொன்ற வெங்கனல் பொங்க விழித்தவன் 
அன்ற வந்தக னையயிற் சூலத்தாற் 
கொன்ற வன்குரங் காடு துறையனே.
5.63.9
640நற்ற வஞ்செய்த நால்வர்க்கு நல்லறம் 
உற்ற நன்மொழி யாலருள் செய்தநற் 
கொற்ற வன்குரங் காடு துறைதொழப் 
பற்றுந் தீவினை யாயின பாறுமே.
5.63.10
641கடுத்த தேரரக் கன்கயி லைம்மலை 
எடுத்த தோள்தலை யிற்றல றவ்விரல் 
அடுத்த லுமவன் இன்னிசை கேட்டருள் 
கொடுத்த வன்குரங் காடு துறையனே.
5.63.11


இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் – ஆபத்சகாயர், தேவியார் – பவளக்கொடியம்மை.
திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


5.64 திருக்கோழம்பம் – திருக்குறுந்தொகை 

திருச்சிற்றம்பலம்

642வேழம் பத்தைவர் வேண்டிற்று வேண்டிப்போய் 
ஆழம் பற்றிவீழ் வார்பல வாதர்கள் 
கோழம் பத்துறை கூத்தன் குரைகழற் 
தாழும் பத்தர்கள் சாலச் சதுரரே.
5.64.1
643கயிலை நன்மலை யாளுங் கபாலியை 
மயிலி யன்மலை மாதின் மணாளனைக் 
குயில்ப யில்பொழிற் கோழம்ப மேயவென் 
உயிரி னைநினைந் துள்ளம் உருகுமே.
5.64.2
644வாழும் பான்மைய ராகிய வான்செல்வந் 
தாழும் பான்மைய ராகித்தம் வாயினால் 
தாழம் பூமணம் நாறிய தாழ்பொழிற் 
கோழம் பாவெனக் கூடிய செல்வமே.
5.64.3
645பாட லாக்கிடும் பண்ணொடு பெண்ணிவள் 
கூட லாக்கிடுங் குன்றின் மணற்கொடு 
கோடல் பூத்தலர் கோழம்பத் துண்மகிழ்ந் 
தாடுங் கூத்தனுக் கன்புபட் டாளன்றே.
5.64.4
646தளிர்கொள் மேனியள் தான்மிக அஞ்சவோர் 
பிளிறு வாரணத் தீருரி போர்த்தவன் 
குளிர்கொள் நீள்வயல் கோழம்பம் மேவினான் 
நளிர்கொள் நீர்சடை மேலு நயந்ததே.
5.64.5
647நாத ராவர் நமக்கும் பிறர்க்குந்தாம் 
வேத நாவர் விடைக்கொடி யார்வெற்பிற் 
கோதை மாதொடுங் கோழம்பங் கோயில்கொண் 
டாதி பாத மடையவல் லார்களே.
5.64.6
648முன்னை நான்செய்த பாவ முதலறப் 
பின்னை நான்பெரி தும்மருள் பெற்றதும் 
அன்ன மார்வயற் கோழம்பத் துள்ளமர் 
பின்னல் வார்சடை யானைப் பிதற்றியே.
5.64.7
649ஏழை மாரிடம் நின்றிரு கைக்கொடுண் 
கோழை மாரொடுங் கூடிய குற்றமாங் 
கூழை பாய்வயற் கோழம்பத் தானடி 
ஏழை யேன்முன் மறந்தங் கிருந்ததே.
5.64.8
650அரவ ணைப்பயில் மாலயன் வந்தடி 
பரவ னைப்பர மாம்பரஞ் சோதியைக் 
குரவ னைக்குர வார்பொழிற் கோழம்பத் 
துரவ னையொரு வர்க்குணர் வொண்ணுமே.
5.64.9
651சமர சூரபன் மாவைத் தடிந்தவேற் 
குமரன் தாதைநற் கோழம்ப மேவிய 
அமரர் கோவினுக் கன்புடைத் தொண்டர்கள் 
அமர லோகம தாளுடை யார்களே.
5.64.10

652
துட்ட னாகி மலையெடுத் தஃதின்கீழ்ப் 
பட்டு வீழ்ந்து படர்ந்துய்யப் போயினான் 
கொட்டம் நாறிய கோழம்பத் தீசனென் 
றிட்ட கீத மிசைத்த அரக்கனே.
5.64.11


இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் – கோகுலேசுவரர், தேவியார் – சவுந்தரியம்மை.
திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


5.65 திருப்பூவனூர் – திருக்குறுந்தொகை 

திருச்சிற்றம்பலம்

653பூவ னூர்ப்புனி தன்றிரு நாமந்தான் 
நாவின் நூறுநூ றாயிரம் நண்ணினார் 
பாவ மாயின பாறிப் பறையவே 
தேவர் கோவினுஞ் செல்வர்க ளாவரே.
5.65.1
654என்ன னென்மனை எந்தையெ னாருயிர் 
தன்னன் றன்னடி யேன்றனமாகிய 
பொன்னன் பூவனூர் மேவிய புண்ணியன் 
இன்ன னென்றறி வொண்ணான் இயற்கையே.
5.65.2
655குற்றங் கூடிக் குணம்பல கூடாதீர் 
மற்றுந் தீவினை செய்தன மாய்க்கலாம் 
புற்ற ராவினன் பூவனூர் ஈசன்பேர் 
கற்று வாழ்த்துங் கழிவதன் முன்னமே.
5.65.3
656ஆவின் மேவிய ஐந்தமர்ந் தாடுவான் 
தூவெண் ணீறு துதைந்தசெம் மேனியான் 
மேவ நூல்விரி வெண்ணியின் தென்கரைப் 
பூவ னூர்புகு வார்வினை போகுமே.
5.65.4
657புல்ல மூர்தியூர் பூவனூர் பூம்புனல் 
நல்ல மூர்திநல் லூர்நனி பள்ளியூர் 
தில்லை யூர்திரு வாரூர் சீர்காழிநல் 
வல்ல மூரென வல்வினை மாயுமே.
5.65.5
658அனுச யப்பட்ட துவிது வென்னாதே 
கனிம னத்தொடு கண்களும் நீர்மல்கிப் 
புனித னைப்பூவ னூரனைப் போற்றுவார் 
மனித ரிற்றலை யான மனிதரே.
5.65.6
659ஆதி நாதன் அமரர்க ளர்ச்சிதன் 
வேத நாவன்வெற் பின்மடப் பாவையோர் 
பாதி யானான் பரந்த பெரும்படைப் 
பூத நாதன்தென் பூவனூர் நாதனே.
5.65.7
660பூவ னூர்தண் புறம்பயம் பூம்பொழில் 
நாவ லூர்நள் ளாறொடு நன்னிலங் 
கோவ லூர்குட வாயில் கொடுமுடி 
மூவ லூருமுக் கண்ணனூர் காண்மினே.
5.65.8
661ஏவ மேது மிலாவம ணேதலர் 
பாவ காரிகள் சொல்வலைப் பட்டுநான் 
தேவ தேவன் திருநெறி யாகிய 
பூவ னூர்புகு தப்பெற்ற நாளின்றே.
5.65.9
662நார ணன்னொடு நான்முகன் இந்திரன் 
வார ணன்கும ரன்வணங் குங்கழற் 
பூர ணன்திருப் பூவனூர் மேவிய 
கார ணன்னெனை யாளுடைக் காளையே.
5.65.10

663
மைக்க டுத்த நிறத்தரக் கன்வரை 
புக்கெ டுத்தலும் பூவனூ ரன்னடி 
மிக்க டுத்த விரல்சிறி தூன்றலும் 
பக்க டுத்தபின் பாடியுய்ந் தானன்றே.
5.65.11


இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் – புஷ்பவனநாதர் தேவியார் – கற்பகவல்லியம்மை.
திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


5.66 திருவலஞ்சுழி – திருக்குறுந்தொகை 

திருச்சிற்றம்பலம்

664ஓத மார்கட லின்விட முண்டவன் 
பூத நாயகன் பொற்கயி லைக்கிறை 
மாதொர் பாகன் வலஞ்சுழி யீசனைப் 
பாத மேத்தப் பறையுநம் பாவமே.
5.66.1
665கயிலை நாதன் கறுத்தவர் முப்புரம் 
எயில்கள் தீயெழ வெல்வல வித்தகன் 
மயில்க ளாலும் வலஞ்சுழி யீசனைப் 
பயில்கி லார்சிலர் பாவித் தொழும்பரே.
5.66.2
666இளைய காலமெம் மானை யடைகிலாத் 
துளையி லாச்செவித் தொண்டர்காள் நும்முடல் 
வளையுங் காலம் வலஞ்சுழி யீசனைக் 
களைக ணாகக் கருதிநீர் உய்ம்மினே.
5.66.3
667நறைகொள் பூம்புனல் கொண்டெழு மாணிக்காய்க் 
குறைவி லாக்கொடுங் கூற்றுதைத் திட்டவன் 
மறைகொள் நாவன் வலஞ்சுழி மேவிய 
இறைவ னையினி என்றுகொல் காண்பதே.
5.66.4
668விண்ட வர்புர மூன்று மெரிகொளத் 
திண்டி றற்சிலை யாலெரி செய்தவன் 
வண்டு பண்முர லுந்தண் வலஞ்சுழி 
அண்ட னுக்கடி மைத்திறத் தாவனே.
5.66.5
669படங்கொள் பாம்பொடு பான்மதி யஞ்சடை 
அடங்க வாழவல் லானும்பர் தம்பிரான் 
மடந்தை பாகன் வலஞ்சுழி யானடி 
அடைந்த வர்க்கடி மைத்திறத் தாவனே.
5.66.6
670நாக்கொண் டுபர வும்மடி யார்வினை 
போக்க வல்ல புரிசடைப் புண்ணியன் 
மாக்கொள் சோலை வலஞ்சுழி ஈசன்றன் 
ஏக்கொ ளப்புர மூன்றெரி யானவே.
5.66.7
671தேடு வார்பிர மன்திரு மாலவர் 
ஆடு பாத மவரும் அறிகிலார் 
மாட வீதி வலஞ்சுழி யீசனைத் 
தேடு வானுறு கின்றதென் சிந்தையே.
5.66.8
672கண்ப னிக்குங் கைகூப்புங் கண்மூன்றுடை 
நண்ப னுக்கெனை நான்கொடுப் பேனெனும் 
வண்பொ னித்தென் வலஞ்சுழி மேவிய 
பண்ப னிப்பொனைச் செய்த பரிசிதே.
5.66.9
673இலங்கை வேந்தன் இருபது தோளிற 
நலங்கொள் பாதத் தொருவிர லூன்றினான் 
மலங்கு பாய்வயல் சூழ்ந்த வலஞ்சுழி 
வலங்கொள் வாரடி யென்றலை மேலவே.
5.66.10


இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் – வலஞ்சுழிநாதர், தேவியார் – பெரியநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


5.67 திருவாஞ்சியம் – திருக்குறுந்தொகை 

திருச்சிற்றம்பலம்

674படையும் பூதமும் பாம்பும்புல் வாயதள் 
உடையுந் தாங்கிய உத்தம னார்க்கிடம் 
புடைநி லாவிய பூம்பொழில் வாஞ்சியம் 
அடைய வல்லவர்க் கல்லலொன் றில்லையே.
5.67.1
675பறப்பை யும்பசு வும்படுத் துப்பல 
திறத்த வும்முடை யோர்திக ழும்பதி 
கறைப்பி றைச்சடைக் கண்ணுதல் சேர்தரு 
சிறப்பு டைத்திரு வாஞ்சியஞ் சேர்மினே.
5.67.2
676புற்றி லாடர வோடு புனல்மதி 
தெற்று செஞ்சடைத் தேவர் பிரான்பதி 
சுற்று மாடங்கள் சூழ்திரு வாஞ்சியம் 
பற்றிப் பாடுவார்க் குப்பாவ மில்லையே.
5.67.3
677அங்க மாறும் அருமறை நான்குடன் 
தங்கு வேள்வியர் தாம்பயி லுந்நகர் 
செங்கண் மாலிட மார்திரு வாஞ்சியந் 
தங்கு வார்நம் மமரர்க் கமரரே.
5.67.4
678நீறு பூசி நிமிர்சடை மேற்பிறை 
ஆறு சூடும் அடிகள் உறைபதி 
மாறு தானொருங் கும்வயல் வாஞ்சியந் 
தேறி வாழ்பவர்க் குச்செல்வ மாகுமே.
5.67.5
679அற்றுப் பற்றின்றி யாரையு மில்லவர்க் 
குற்ற நற்றுணை யாவான் உறைபதி 
தெற்று மாடங்கள் சூழ்திரு வாஞ்சியங் 
கற்றுச் சேர்பவர்க் குக்கருத் தாவதே.
5.67.6
680அருக்கன் அங்கி நமனொடு தேவர்கள் 
திருத்துஞ் சேவடி யான்றிக ழுந்நகர் 
ஒருத்தி பாக முகந்தவன் வாஞ்சியம் 
அருத்தி யாலடை வார்க்கில்லை யல்லலே.
5.67.7
 இப்பதிகத்தில் 8,9,10-ம் செய்யுட்கள் சிதைந்து போயின.5.67.8-10


இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் – சுகவாஞ்சிநாதர், தேவியார் – வாழவந்தஅம்மை.
திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


5.68 திருநள்ளாறு – திருக்குறுந்தொகை 

திருச்சிற்றம்பலம்

681உள்ளா றாததோர் புண்டரி கத்திரள் 
தெள்ளா றாச்சிவ சோதித் திரளினைக் 
கள்ளா றாதபொற் கொன்றை கமழ்சடை 
நள்ளா றாவென நம்வினை நாசமே.
5.68.1
682ஆர ணப்பொரு ளாமரு ளாளனார் 
வார ணத்துரி போர்த்த மணாளனார் 
நார ணன்நண்ணி யேத்துநள் ளாறனார் 
கார ணக்கலை ஞானக் கடவுளே.
5.68.2
683மேகம் பூண்டதோர் மேருவிற் கொண்டெயில் 
சோகம் பூண்டழல் சோரத்தொட் டானவன் 
பாகம் பூண்டமால் பங்கயத் தானொடு 
நாகம் பூண்டுகூத் தாடுநள் ளாறனே.
5.68.3
684மலியுஞ் செஞ்சடை வாளர வம்மொடு 
பொலியும் பூம்புனல் வைத்த புனிதனார் 
நலியுங் கூற்றை நலிந்தநள் ளாறர்தம் 
வலியுங் கண்டிறு மாந்து மகிழ்வனே.
5.68.4
685உறவ னாய்நிறைந் துள்ளங் குளிர்ப்பவன் 
இறைவ னாகிநின் றெண்ணிறைந் தானவன் 
நறவ நாறும் பொழிற்றிரு நள்ளாறன் 
மறவ னாய்ப்பன்றிப் பின்சென்ற மாயமே.
5.68.5
686செக்க ரங்கழி செஞ்சுடர்ச் சோதியார் 
நக்க ரங்கர வார்த்தநள் ளாறனார் 
வக்க ரன்னுயிர் வவ்விய மாயற்குச் 
சக்க ரமருள் செய்த சதுரரே.
5.68.6
687வஞ்ச நஞ்சிற் பொலிகின்ற கண்டத்தர் 
விஞ்சை யிற்செல்வப் பாவைக்கு வேந்தனார் 
வஞ்ச நெஞ்சத் தவர்க்கு வழிகொடார் 
நஞ்ச நெஞ்சர்க் கருளுநள் ளாறரே.
5.68.7
688அல்ல னென்று மலர்க்கரு ளாயின 
சொல்ல னென்றுசொல் லாமறைச் சோதியான் 
வல்ல னென்றும்வல் லார்வள மிக்கவர் 
நல்ல னென்றுநல் லார்க்குநள் ளாறனே.
5.68.8
689பாம்ப ணைப்பள்ளி கொண்ட பரமனும் 
பூம்ப ணைப்பொலி கின்ற புராணனுந் 
தாம்ப ணிந்தளப் பொண்ணாத் தனித்தழல் 
நாம்ப ணிந்தடி போற்றுநள் ளாறனே.
5.68.9
690இலங்கை மன்னன் இருபது தோளிற 
மலங்க மால்வரை மேல்விரல் வைத்தவர் 
நலங்கொள் நீற்றர்நள் ளாறரை நாடொறும் 
வலங்கொள் வார்வினை யாயின மாயுமே.
5.68.10


இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் – திருநள்ளாற்றீசர், தேவியார் – போகமார்த்தபூண்முலையம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


5.69 திருக்கருவிலி – திருக்குறுந்தொகை 

திருச்சிற்றம்பலம்

691மட்டிட் டகுழ லார்சுழ லில்வலைப் 
பட்டிட் டுமயங் கிப்பரி யாதுநீர் 
கட்டிட் டவினை போகக் கருவிலிக் 
கொட்டிட் டையுறை வான்கழல் கூடுமே.
5.69.1
692ஞால மல்கு மனிதர்காள் நாடொறும் 
ஏல மாமல ரோடிலை கொண்டுநீர் 
கால னார்வரு தன்முன் கருவிலிக் 
கோல வார்பொழிற் கொட்டிட்டை சேர்மினே.
5.69.2
693பங்க மாயின பேசப் பறைந்துநீர் 
மங்கு மாநினை யாதே மலர்கொடு 
கங்கை சேர்சடை யான்றன் கருவிலிக் 
கொங்கு வார்பொழிற் கொட்டிட்டை சேர்மினே.
5.69.3
694வாடி நீர்வருந் தாதே மனிதர்காள் 
வேட னாய்விச யற்கருள் செய்தவெண் 
காட னாருறை கின்ற கருவிலிக் 
கோடு நீள்பொழிற் கொட்டிட்டை சேர்மினே.
5.69.4
695உய்யு மாறிது கேண்மின் உலகத்தீர் 
பைகொள் பாம்பரை யான்படை யார்மழுக் 
கையி னானுறை கின்ற கருவிலிக் 
கொய்கொள் பூம்பொழிற் கொட்டிட்டை சேர்மினே.
5.69.5
696ஆற்ற வும்மவ லத்தழுந் தாதுநீர் 
தோற்றுந் தீயொடு நீர்நிலந் தூவெளி 
காற்று மாகிநின் றான்றன் கருவிலிக் 
கூற்றங் காய்ந்தவன் கொட்டிட்டை சேர்மினே.
5.69.6
697நில்லா வாழ்வு நிலைபெறு மென்றெண்ணிப் 
பொல்லா வாறு செயப்புரி யாதுநீர் 
கல்லா ரும்மதில் சூழ்தண் கருவிலிக் 
கொல்லே றூர்பவன் கொட்டிட்டை சேர்மினே.
5.69.7
698பிணித்த நோய்ப்பிற விப்பிறி வெய்துமா 
றுணர்த்த லாமிது கேண்மின் உருத்திர 
கணத்தி னார்தொழு தேத்துங் கருவிலிக் 
குணத்தி னானுறை கொட்டிட்டை சேர்மினே.
5.69.8
699நம்பு வீரிது கேண்மின்கள் நாடொறும் 
எம்பி ரானென் றிமையவ ரேத்துமே 
கம்ப னாருறை கின்ற கருவிலிக் 
கொம்ப னார்பயில் கொட்டிட்டை சேர்மினே.
5.69.9
700பாரு ளீரிது கேண்மின் பருவரை 
பேரு மாறெடுத் தானை யடர்த்தவன் 
கார்கொள் நீர்வயல் சூழ்தண் கருவிலிக் 
கூர்கொள் வேலினன் கொட்டிட்டை சேர்மினே.
5.69.10


இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் – சற்குணநாதர், தேவியார் – சர்வாங்கநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


5.70 திருக்கொண்டீச்சரம் – திருக்குறுந்தொகை 

திருச்சிற்றம்பலம்

701கண்ட பேச்சினிற் காளையர் தங்கள்பால் 
மண்டி யேச்சுணு மாதரைச் சேராதே 
சண்டி யீச்சுர வர்க்கருள் செய்தவக் 
கொண்டி யீச்சுர வன்கழல் கூறுமே.
5.70.1
702சுற்ற முந்துணை நன்மட வாளொடு 
பெற்ற மக்களும் பேண லொழிந்தனர் 
குற்ற மில்புகழ்க் கொண்டீச் சுரவனார் 
பற்ற லாலொரு பற்றுமற் றில்லையே.
5.70.2
703மாடு தானது வில்லெனின் மானிடர் 
பாடு தான்செல்வா ரில்லைபன் மாலையாற் 
கூட நீர்சென்று கொண்டீச் சுரவனைப் 
பாடு மின்பர லோகத் திருத்துமே.
5.70.3
704தந்தை தாயொடு தார மெனுந்தளைப் 
பந்த மாங்கறுத் துப்பயில் வெய்திய 
கொந்த விழ்பொழிற் கொண்டீச் சுரவனைச் 
சிந்தை செய்ம்மின் அவனடி சேரவே.
5.70.4
705கேளு மின்னிள மையது கேடுவந் 
தீளை யோடிரு மல்லது வெய்தன்முன் 
கோள ராவணி கொண்டீச் சுரவனை 
நாளு மேத்தித் தொழுமின்நன் காகுமே.
5.70.5
706வெம்பு நோயும் இடரும் வெறுமையும் 
துன்ப முந்துய ரும்மெனுஞ் சூழ்வினை 
கொம்ப னார்பயில் கொண்டீச் சுரவனை 
எம்பி ரானென வல்லவர்க் கில்லையே.
5.70.6
707அல்ல லோடரு நோயில் அழுந்திநீர் 
செல்லு மாநினை யாதே கனைகுரற் 
கொல்லை யேறுடைக் கொண்டீச் சுரவனை 
வல்ல வாறு தொழவினை மாயுமே.
5.70.7
708நாறு சாந்தணி நன்முலை மென்மொழி 
மாறி லாமலை மங்கையோர் பாகமாக் 
கூற னாருறை கொண்டீச் சுரநினைந் 
தூறு வார்தமக் கூனமொன் றில்லையே.
5.70.8
709அயிலார் அம்பெரி மேருவில் லாகவே 
எயிலா ரும்பொடி யாய்விழ எய்தவன் 
குயிலா ரும்பொழிற் கொண்டீச் சுரவனைப் 
பயில்வா ரும்பெரு மைபெறும் பாலரே.
5.70.9
710நிலையி னார்வரை நின்றெடுத் தான்றனை 
மலையி னாலடர்த் துவிறல் வாட்டினான் 
குலையி னார்பொழிற் கொண்டீச் சுரவனைத் 
தலையி னால்வணங் கத்தவ மாகுமே.
5.70.10


இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் – பசுபதீச்சுவரர், தேவியார் – சாந்தநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


5.71 திருவிசயமங்கை – திருக்குறுந்தொகை 

திருச்சிற்றம்பலம்

711குசையும் அங்கையிற் கோசமுங் கொண்டவவ் 
வசையின் மங்கல வாசகர் வாழ்த்தவே 
இசைய மங்கையுந் தானுமொன் றாயினான் 
விசைய மங்கையுள் வேதியன் காண்மினே.
5.71.1
712ஆதி நாதன் அடல்விடை மேலமர் 
பூத நாதன் புலியத ளாடையன் 
வேத நாதன் விசயமங் கையுளான் 
பாத மோதவல் லார்க்கில்லை பாவமே.
5.71.2
713கொள்ளி டக்கரைக் கோவந்த புத்தூரில் 
வெள்வி டைக்கருள் செய்விச யமங்கை 
உள்ளி டத்துறை கின்ற உருத்திரன் 
கிள்ளி டத்தலை யற்ற தயனுக்கே.
5.71.3
714திசையு மெங்குங் குலுங்கத் திரிபுரம் 
அசைய வங்கெய்திட் டாரழ லூட்டினான் 
விசைய மங்கை விருத்தன் புறத்தடி 
விசையின் மங்கி விழுந்தனன் காலனே.
5.71.4
715பொள்ள லாக்கை அகத்திலைம் பூதங்கள் 
கள்ள மாக்கிக் கலக்கிய காரிருள் 
விள்ள லாக்கி விசயமங் கைப்பிரான் 
உள்ள நோக்கியெ னுள்ளுள் உறையுமே.
5.71.5
716கொல்லை யேற்றுக் கொடியொடு பொன்மலை 
வில்லை யேற்றுடை யான்விச யமங்கைச் 
செல்வ போற்றியென் பாருக்குத் தென்றிசை 
எல்லை யேற்றலும் இன்சொலு மாகுமே.
5.71.6
717கண்பல் உக்கக் கபாலம்அங் கைக்கொண்டு 
உண்ப லிக்குழல் உத்தம னுள்ளொளி 
வெண்பி றைக்கண்ணி யான்விச யமங்கை 
நண்ப னைத்தொழப் பெற்றது நன்மையே.
5.71.7
718பாண்டு வின்மகன் பார்த்தன் பணிசெய்து 
வேண்டு நல்வரங் கொள்விச யமங்கை 
ஆண்ட வன்னடி யேநினைந் தாசையாற் 
காண்ட லேகருத் தாகி யிருப்பனே.
5.71.8
719வந்து கேண்மின் மயல்தீர் மனிதர்காள் 
வெந்த நீற்றன் விசயமங் கைப்பிரான் 
சிந்தை யால்நினை வார்களைச் சிக்கெனப் 
பந்து வாக்கி உயக்கொளுங் காண்மினே.
5.71.9
720இலங்கை வேந்தன் இருபது தோளிற 
விலங்கள் சேர்விர லான்விச யமங்கை 
வலஞ்செய் வார்களும் வாழ்த்திசைப் பார்களும் 
நலஞ்செய் வாரவர் நன்னெறி நாடியே.
5.72.10


இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் – விசையநாதேசுவரர், தேவியார் – மங்கைநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


5.72 திருநீலக்குடி – திருக்குறுந்தொகை 

திருச்சிற்றம்பலம்

721வைத்த மாடும் மனைவியும் மக்கள்நீர் 
செத்த போது செறியார் பிரிவதே 
நித்த நீலக் குடியர னைந்நினை 
சித்த மாகிற் சிவகதி சேர்திரே.
5.72.1
722செய்ய மேனியன் றேனொடு பால்தயிர் 
நெய்ய தாடிய நீலக் குடியரன் 
மைய லாய்மற வாமனத் தார்க்கெலாங் 
கையி லாமல கக்கனி யொக்குமே.
5.72.2
723ஆற்ற நீள்சடை ஆயிழை யாளொரு 
கூற்றன் மேனியிற் கோலம தாகிய 
நீற்றன் நீலக் குடியுடை யானடி 
போற்றி னாரிடர் போக்கும் புனிதனே.
5.72.3
724நாலு வேதியர்க் கின்னருள் நன்னிழல் 
ஆலன் ஆலநஞ் சுண்டகண் டத்தமர் 
நீலன் நீலக் குடியுறை நின்மலன் 
கால னாருயிர் போக்கிய காலனே.
5.72.4
725நேச நீலக் குடியர னேயெனா 
நீச ராய்நெடு மால்செய்த மாயத்தால் 
ஈச னோர்சர மெய்ய எரிந்துபோய் 
நாச மானார் திரிபுர நாதரே.
5.72.5
726கொன்றை சூடியைக் குன்ற மகளொடு 
நின்ற நீலக் குடியர னேயெனீர் 
என்றும் வாழ்வுகந் தேயிறு மாக்குநீர் 
பொன்றும் போது நுமக்கறி வொண்ணுமே.
5.72.6
727கல்லி னோடெனைப் பூட்டி அமண்கையர் 
ஒல்லை நீர்புக நூக்கவென் வாக்கினால் 
நெல்லு நீள்வயல் நீலக் குடியரன் 
நல்ல நாமம் நவிற்றியுய்ந் தேனன்றே.
5.72.7
728அழகி யோமிளை யோமெனு மாசையால் 
ஒழுகி ஆவி உடல்விடு முன்னமே 
நிழல தார்பொழில் நீலக் குடியரன் 
கழல்கொள் சேவடி கைதொழு துய்ம்மினே.
5.72.8
729கற்றைச் செஞ்சடைக் காய்கதிர் வெண்டிங்கள் 
பற்றிப் பாம்புடன் வைத்த பராபரன் 
நெற்றிக் கண்ணுடை நீலக் குடியரன் 
சுற்றித் தேவர் தொழுங்கழற் சோதியே.
5.72.9
730தருக்கி வெற்பது தாங்கிய வீங்குதோள் 
அரக்க னாருட லாங்கோர் விரலினால் 
நெரித்து நீலக் குடியரன் பின்னையும் 
இரக்க மாயருள் செய்தனன் என்பரே.
5.72.10


இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் – நீலகண்டேசுவரர், தேவியார் – நீலநிறவுமையம்மை.
திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


5.73 திருமங்கலக்குடி – திருக்குறுந்தொகை 

திருச்சிற்றம்பலம்

731தங்க லப்பிய தக்கன் பெருவேள்வி 
அங்க லக்கழித் தாரருள் செய்தவன் 
கொங்க லர்க்குழற் கொம்பனை யாளொடு 
மங்க லக்குடி மேய மணாளனே.
5.73.1
732காவி ரியின்வ டகரைக் காண்டகு 
மாவி ரியும்பொ ழில்மங் கலக்குடித் 
தேவ ரியும்பி ரமனுந் தேடொணாத் 
தூவெ ரிச்சுடர்ச் சோதியுட் சோதியே.
5.73.2
733மங்க லக்குடி ஈசனை மாகாளி 
வெங்க திர்ச்செல்வன் விண்ணொடு மண்ணுநேர் 
சங்கு சக்கர தாரி சதுர்முகன் 
அங்க கத்திய னும்மர்ச்சித் தாரன்றே.
5.73.3
734மஞ்சன் வார்கடல் சூழ்மங்க லக்குடி 
நஞ்ச மாரமு தாக நயந்துகொண் 
டஞ்சு மாட லமர்ந்தடி யேனுடை 
நெஞ்ச மாலய மாக்கொண்டு நின்றதே.
5.73.4
735செல்வ மல்கு திருமங் கலக்குடிச் 
செல்வ மல்கு சிவநிய மத்தராய்ச் 
செல்வ மல்கு செழுமறை யோர்தொழச் 
செல்வன் றேவியொ டுந்திகழ் கோயிலே.
5.73.5
736மன்னு சீர்மங் கலக்குடி மன்னிய 
பின்னு வார்சடைப் பிஞ்ஞகன் றன்பெயர் 
உன்னு வாரு முரைக்கவல் லார்களுந் 
துன்னு வார்நன் னெறிதொடர் வெய்தவே.
5.73.6
737மாத ரார்மரு வும்மங்க லக்குடி 
ஆதி நாயகன் அண்டர்கள் நாயகன் 
வேத நாயகன் வேதியர் நாயகன் 
பூத நாயகன் புண்ணிய மூர்த்தியே.
5.73.7
738வண்டு சேர்பொழில் சூழ்மங்க லக்குடி 
விண்ட தாதையைத் தாளற வீசிய 
சண்ட நாயக னுக்கருள் செய்தவன் 
துண்ட மாமதி சூடிய சோதியே.
5.73.8
739கூசு வாரலர் குண்டர் குணமிலர் 
நேச மேது மிலாதவர் நீசர்கள் 
மாசர் பால்மங்க லக்குடி மேவிய 
ஈசன் வேறு படுக்கவுய்ந் தேனன்றே.
5.73.9
740மங்க லக்குடி யான்கயி லைமலை 
அங்க லைத்தெடுக் குற்ற அரக்கர்கோன் 
தன்க ரத்தொடு தாள்தலை தோள்தகர்ந் 
தங்க லைத்தழு துய்ந்தனன் தானன்றே.
5.73.10


இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் – பிராணேசவரதர், தேவியார் – மங்களநாயகியம்மை.

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


5.74 திருஎறும்பியூர் – திருக்குறுந்தொகை 

திருச்சிற்றம்பலம்

741விரும்பி யூறு விடேல்மட நெஞ்சமே 
கரும்பி னூறல்கண் டாய்கலந் தார்க்கவன் 
இரும்பி னூறல றாததோர் வெண்டலை 
எறும்பி யூர்மலை யானெங்க ளீசனே.
5.74.1
742பிறங்கு செஞ்சடைப் பிஞ்ஞகன் பேணுசீர்க் 
கறங்கு பூத கணமுடைக் கண்ணுதல் 
நறுங்கு ழல்மட வாளொடு நாடொறும் 
எறும்பி யூர்மலை யானெங்க ளீசனே.
5.74.2
743மருந்து வானவர் தானவர்க் கின்சுவை 
புரிந்த புன்சடைப் புண்ணியன் கண்ணுதல் 
பொருந்து பூண்முலை மங்கைநல் லாளொடும் 
எறும்பி யூர்மலை யானெங்க ளீசனே.
5.74.3
744நிறங்கொள் கண்டத்து நின்மலன் எம்மிறை 
மறங்கொள் வேற்கண்ணி வாணுதல் பாகமா 
அறம்பு ரிந்தருள் செய்தவெம் அங்கணன் 
எறும்பி யூர்மலை யானெங்க ளீசனே.
5.74.4
745நறும்பொன் நாண்மலர்க் கொன்றையு நாகமுந் 
துறும்பு செஞ்சடைத் தூமதி வைத்துவான் 
உறும்பொன் மால்வரைப் பேதையோ டூர்தொறும் 
எறும்பி யூர்மலை யானெங்க ளீசனே.
5.74.5
746கறும்பி யூர்வன ஐந்துள காயத்தில் 
திறம்பி யூர்வன மற்றும் பலவுள 
குறும்பி யூர்வதோர் கூட்டகத் திட்டெனை 
எறும்பி யூரரன் செய்த இயற்கையே.
5.74.6
747மறந்து மற்றிது பேரிடர் நாடொறுந் 
திறம்பி நீநினை யேல்மட நெஞ்சமே 
புறஞ்செய் கோலக் குரம்பையி லிட்டெனை 
எறும்பி யூரரன் செய்த இயற்கையே.
5.74.7
748இன்ப மும்பிறப் பும்மிறப் பின்னொடு 
துன்ப மும்முட னேவைத்த சோதியான் 
அன்ப னேயர னேயென் றரற்றுவார்க் 
கின்ப னாகும் எறும்பியூ ரீசனே.
5.74.8
749கண்ணி றைந்த கனபவ ளத்திரள் 
விண்ணி றைந்த விரிசுடர்ச் சோதியான் 
உண்ணி றைந்துரு வாயுயி ராயவன் 
எண்ணி றைந்த எறும்பியூ ரீசனே.
5.74.9
750நிறங்கொள் மால்வரை ஊன்றி யெடுத்தலும் 
நறுங்கு ழல்மட வாள்நடுக் கெய்திட 
மறங்கொள் வாளரக் கன்வலி வாட்டினான் 
எறும்பி யூர்மலை எம்மிறை காண்மினே.
5.74.10


இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் – எறும்பீசுவரர், 
தேவியார் – நறுங்குழல்நாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


5.75 திருக்குரக்குக்கா – திருக்குறுந்தொகை 

திருச்சிற்றம்பலம்

751மரக்கொக் காமென வாய்விட் டலறிநீர் 
சரக்குக் காவித் திரிந்தய ராதுகால் 
பரக்குங் காவிரி நீரலைக் குங்கரைக் 
குரக்குக் காவடை யக்கெடுங் குற்றமே.
5.75.1
752கட்டா றேகழி காவிரி பாய்வயல் 
கொட்டா றேபுன லூறு குரக்குக்கா 
முட்டா றாவடி யேத்த முயல்பவர்க் 
கிட்டா றாவிட ரோட எடுக்குமே.
5.75.2
753கைய னைத்துங் கலந்தெழு காவிரி 
செய்ய னைத்திலுஞ் சென்றிடுஞ் செம்புனல் 
கொய்ய னைத்துங் கொணருங் குரக்குக்கா 
ஐய னைத்தொழு வார்க்கல்ல லில்லையே.
5.75.3
754மிக்க னைத்துத் திசையும் அருவிகள் 
புக்குக் காவிரி போந்த புனற்கரைக் 
கொக்கி னம்பயில் சோலைக் குரக்குக்கா 
நக்க னைநவில் வார்வினை நாசமே.
5.75.4
755விட்டு வெள்ளம் விரிந்தெழு காவிரி 
இட்ட நீர்வய லெங்கும் பரந்திடக் 
கொட்ட மாமுழ வோங்கு குரக்குக்கா 
இட்ட மாயிருப் பார்க்கிட ரில்லையே.
5.75.5
756மேலை வானவ ரோடு விரிகடல் 
மாலும் நான்முக னாலுமளப் பொணாக் 
கோல மாளிகைக் கோயில் குரக்குக்காப் 
பால ராய்த்திரி வார்க்கில்லை பாவமே.
5.75.6
757ஆல நீழ லமர்ந்த அழகனார் 
கால னையுதை கொண்ட கருத்தனார் 
கோல மஞ்ஞைகள் ஆலும் குரக்குக்காப் 
பால ருக்கருள் செய்வர் பரிவொடே.
5.75.7
758செக்க ரங்கெழு செஞ்சுடர்ச் சோதியார் 
அக்க ரையரெம் மாதிபு ராணனார் 
கொக்கி னம்வயல் சேருங் குரக்குக்கா 
நக்க னைத்தொழ நம்வினை நாசமே.
5.75.8
759உருகி ஊன்குழைந் தேத்தி யெழுமின்நீர் 
கரிய கண்டன் கழலடி தன்னையே 
குரவ னஞ்செழுங் கோயில் குரக்குக்கா 
இரவும் எல்லியும் ஏத்தித் தொழுமினே.
5.75.9
760இரக்க மின்றி மலையெடுத் தான்முடி 
உரத்தை யொல்க அடர்த்தா னுறைவிடங் 
குரக்கி னங்குதி கொள்ளுங் குரக்குக்கா 
வரத்த னைப்பெற வானுல காள்வரே.
5.75.10


இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் – கொந்தளக்கருணைநாதர், தேவியார் – கொந்தளநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


5.76 திருக்கானூர் – திருக்குறுந்தொகை 

திருச்சிற்றம்பலம்

761திருவின் நாதனுஞ் செம்மலர் மேலுறை 
உருவ னாயுல கத்தி னுயிர்க்கெலாங் 
கருவ னாகி முளைத்தவன் கானூரிற் 
பரம னாய பரஞ்சுடர் காண்மினே.
5.76.1
762பெண்டிர் மக்கள் பெருந்துணை நன்னிதி 
உண்டின் றேயென் றுகவன்மின் ஏழைகாள் 
கண்டு கொண்மின்நீர் கானூர் முளையினைப் 
புண்ட ரீகப் பொதும்பி லொதுங்கியே.
5.76.2
763தாயத் தார்தமர் நன்னிதி யென்னுமிம் 
மாயத் தேகிடந் திட்டு மயங்கிடேல் 
காயத் தேயுளன் கானூர் முளையினை 
வாயத் தால்வணங் கீர்வினை மாயவே.
5.76.3
764குறியில் நின்றுண்டு கூறையி லாச்சமண் 
நெறியை விட்டு நிறைகழல் பற்றினேன் 
அறிய லுற்றிரேல் கானூர் முளையவன் 
செறிவு செய்திட் டிருப்பதென் சிந்தையே.
5.76.4
765பொத்தல் மண்சுவர்ப் பொல்லாக் குரம்பையை 
மெய்த்த னென்று வியந்திடேல் ஏழைகாள் 
சித்தர் பத்தர்கள் சேர்திருக் கானூரில் 
அத்தன் பாத மடைதல் கருமமே.
5.76.5
766கல்வி ஞானக் கலைப்பொரு ளாயவன் 
செல்வ மல்கு திருக்கானூ ரீசனை 
எல்லி யும்பக லும்மிசை வானவர் 
சொல்லி டீர்நுந் துயரங்கள் தீரவே.
5.76.6
767நீரும் பாரும் நெருப்பும் அருக்கனுங் 
காரு மாருதங் கானூர் முளைத்தவன் 
சேர்வு மொன்றறி யாது திசைதிசை 
ஓர்வு மொன்றில ரோடித் திரிவரே.
5.76.7
768ஓமத் தோடயன் மாலறி யாவணம் 
வீமப் பேரொளி யாய விழுப்பொருள் 
காமற் காய்ந்தவன் கானூர் முளைத்தவன் 
சேமத் தாலிருப் பாவதென் சிந்தையே.
5.76.8
 இப்பதிகத்தில் 9-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.5.76.9
769வன்னி கொன்றை எருக்கணிந் தான்மலை 
உன்னி யேசென் றெடுத்தவன் ஒண்டிறல் 
தன்னை வீழத் தனிவிரல் வைத்தவன் 
கன்னி மாமதிற் கானூர்க் கருத்தனே.
5.76.10


இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் – செம்மேனிநாயகர், தேவியார் – சிவயோகநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


5.77 திருச்சேறை – திருக்குறுந்தொகை 

திருச்சிற்றம்பலம்

770பூரி யாவரும் புண்ணியம் பொய்கெடுங் 
கூரி தாய அறிவுகை கூடிடுஞ் 
சீரி யார்பயில் சேறையுட் செந்நெறி 
நாரி பாகன்றன் நாமம் நவிலவே.
5.77.1
771என்ன மாதவஞ் செய்தனை நெஞ்சமே 
மின்னு வார்சடை வேதவி ழுப்பொருள் 
செந்நெ லார்வயல் சேறையுட் செந்நெறி 
மன்னு சோதிநம் பால்வந்து வைகவே.
5.77.2
772பிறப்பு மூப்புப் பெரும்பசி வான்பிணி 
இறப்பு நீங்கியிங் கின்பம்வந் தெய்திடுஞ் 
சிறப்பர் சேறையுட் செந்நெறி யான்கழல் 
மறப்ப தின்றி மனத்தினுள் வைக்கவே.
5.77.3
773மாடு தேடி மயக்கினில் வீழ்ந்துநீர் 
ஓடி யெய்த்தும் பயனிலை ஊமர்காள் 
சேடர் வாழ்சேறைச் செந்நெறி மேவிய 
ஆட லான்றன் அடியடைந் துய்ம்மினே.
5.77.4
774எண்ணி நாளும் எரியயிற் கூற்றுவன் 
துண்ணென் றோன்றிற் றுரக்கும் வழிகண்டேன் 
திண்ணன் சேறைத் திருச்செந் நெறியுறை 
அண்ண லாருளர் அஞ்சுவ தென்னுக்கே.
5.77.5
775தப்பில் வானந் தரணிகம் பிக்கிலென் 
ஒப்பில் வேந்தர் ஒருங்குடன் சீறிலென் 
செப்ப மாஞ்சேறைச் செந்நெறி மேவிய 
அப்ப னாருளர் அஞ்சுவ தென்னுக்கே.
5.77.6
776வைத்த மாடும் மடந்தைநல் லார்களும் 
ஒத்தொவ் வாதவுற் றார்களு மென்செய்வார் 
சித்தர் சேறைத் திருச்செந் நெறியுறை 
அத்தர் தாமுளர் அஞ்சுவ தென்னுக்கே.
5.77.7
777குலங்க ளென்செய்வ குற்றங்க ளென்செய்வ 
துலங்கி நீநின்று சோர்ந்திடல் நெஞ்சமே 
இலங்கு சேறையிற் செந்நெறி மேவிய 
அலங்க னாருளர் அஞ்சுவ தென்னுக்கே.
5.77.8
778பழகி னால்வரும் பண்டுள சுற்றமும் 
விழவி டாவிடில் வேண்டிய எய்தொணா 
திகழ்கொள் சேறையிற் செந்நெறி மேவிய 
அழக னாருளர் அஞ்சுவ தென்னுக்கே.
5.77.9
779பொருந்து நீண்மலை யைப்பிடித் தேந்தினான் 
வருந்த வூன்றி மலரடி வாங்கினான் 
திருந்து சேறையிற் செந்நெறி மேவியங் 
கிருந்த சோதியென் பார்க்கிட ரில்லையே.
5.77.10


இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் – செந்நெறியப்பர், தேவியார் – ஞானவல்லியம்மை.
திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


5.78 திருக்கோடிகா – திருக்குறுந்தொகை 

திருச்சிற்றம்பலம்

780சங்கு லாமுன்கைத் தையலோர் பாகத்தன் 
வெங்கு லாமத வேழம் வெகுண்டவன் 
கொங்கு லாம்பொழிற் கோடிகா வாவென 
எங்கி லாததோர் இன்பம்வந் தெய்துமே.
5.78.1
781வாடி வாழ்வதென் னாவது மாதர்பால் 
ஓடி வாழ்வினை உள்கிநீர் நாடொறுங் 
கோடி காவனைக் கூறீரேற் கூறினேன் 
பாடி காவலிற் பட்டுக் கழிதிரே.
5.78.2
782முல்லை நன்முறு வல்லுமை பங்கனார் 
தில்லை யம்பலத் தில்லுறை செல்வனார் 
கொல்லை யேற்றினர் கோடிகா வாவென்றங் 
கொல்லை யேத்துவார்க் கூனமொன் றில்லையே.
5.78.3
783நாவ ளம்பெறு மாறும னன்னுதல் 
ஆம ளஞ்சொலி அன்புசெ யின்னலாற் 
கோம ளஞ்சடைக் கோடிகா வாவென 
ஏவ ளின்றெனை ஏசுமவ் வேழையே.
5.78.4
784வீறு தான்பெறு வார்சில ராகிலும் 
நாறு பூங்கொன்றை தான்மிக நல்கானேற் 
கூறு வேன்கோடி காவுளாய் என்றுமால் 
ஏறு வேனும்மால் ஏசப் படுவனோ.
5.78.5
785நாடி நாரணன் நான்முகன் வானவர் 
தேடி யேசற வுந்தெரி யாததோர் 
கோடி காவனைக் கூறாத நாளெலாம் 
பாடி காவலிற் பட்டுக் கழியுமே.
5.78.6
 இப்பதிகத்தில் 7,8,9-ம் செய்யுட்கள் சிதைந்து போயின.5.78.7-9
– 786வரங்க ளால்வரை யையெடுத் தான்றனை 
அரங்க வூன்றி யருள்செய்த அப்பனூர் 
குரங்கு சேர்பொழிற் கோடிகா வாவென 
இரங்கு வேன்மனத் தேதங்கள் தீரவே.
5.78.10


இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் – கோடீசுவரர், தேவியார் – வடிவாம்பிகையம்மை.
திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


5.79 திருப்புள்ளிருக்குவேளூர் – திருக்குறுந்தொகை 

திருச்சிற்றம்பலம்

787வெள்ளெ ருக்கர வம்விர வுஞ்சடைப் 
புள்ளி ருக்குவே ளூரரன் பொற்கழல் 
உள்ளி ருக்கு முணர்ச்சியில் லாதவர் 
நள்ளி ருப்பர் நரகக் குழியிலே.
5.79.1
788மாற்ற மொன்றறி யீர்மனை வாழ்க்கைபோய்க் 
கூற்றம் வந்துமைக் கொள்வதன் முன்னமே 
போற்ற வல்லிரேற் புள்ளிருக் குவேளூர் 
சீற்ற மாயின தேய்ந்தறுங் காண்மினே.
5.79.2
789அரும றையனை ஆணொடு பெண்ணனைக் 
கருவி டம்மிக வுண்டவெங் கண்டனைப் 
புரிவெண் ணூலனைப் புள்ளிருக் குவேளூர் 
உருகி நைபவர் உள்ளங் குளிருமே.
5.79.3
790தன்னு ருவை யொருவர்க் கறிவொணா 
மின்னு ருவனை மேனிவெண் ணீற்றனைப் 
பொன்னு ருவனைப் புள்ளிருக் குவேளூர் 
என்ன வல்லவர்க் கில்லை யிடர்களே.
5.79.4
791செங்கண் மால்பிர மற்கு மறிவொணா 
அங்கி யின்னுரு வாகி அழல்வதோர் 
பொங்க ரவனைப் புள்ளிருக் குவேளூர் 
மங்கை பாகனை வாழ்த்த வருமின்பே.
5.79.5
792குற்ற மில்லியைக் கோலச் சிலையினாற் 
செற்ற வர்புரஞ் செந்தழ லாக்கியைப் 
புற்ற ரவனைப் புள்ளிருக் குவேளூர் 
பற்ற வல்லவர் பாவம் பறையுமே.
5.79.6
793கையி னோடுகால் கட்டி யுமரெலாம் 
ஐயன் வீடினன் என்பதன் முன்னம்நீர் 
பொய்யி லாவரன் புள்ளிருக் குவேளூர் 
மையு லாவிய கண்டனை வாழ்த்துமே.
5.79.7
794உள்ளம் உள்கி உகந்து சிவனென்று 
மெள்ள வுள்க வினைகெடும் மெய்ம்மையே 
புள்ளி னார்பணி புள்ளிருக் குவேளூர் 
வள்ளல் பாதம் வணங்கித் தொழுமினே.
5.79.8
 இப்பதிகத்தில் 9-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.5.79.9
795அரக்க னார்தலை பத்தும் அழிதர 
நெருக்கி மாமலர்ப் பாதம் நிறுவிய 
பொருப்ப னாருறை புள்ளிருக் குவேளூர் 
விருப்பி னாற்றொழு வார்வினை வீடுமே.
5.79.10


இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் – வைத்தியநாதர், தேவியார் – தையல்நாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


5.80 திருஅன்பில்ஆலந்துறை – திருக்குறுந்தொகை 

திருச்சிற்றம்பலம்

796வானஞ் சேர்மதி சூடிய மைந்தனை 
நீநெஞ் சேகெடு வாய்நினை கிற்கிலை 
ஆனஞ் சாடியை அன்பிலா லந்துறைக் 
கோனெஞ் செல்வனைக் கூறிடக் கிற்றியே.
5.80.1
797கார ணத்தர் கருத்தர் கபாலியார் 
வார ணத்துரி போர்த்த மணாளனார் 
ஆர ணப்பொருள் அன்பிலா லந்துறை 
நார ணற்கரி யானொரு நம்பியே.
5.80.2
798அன்பினா னஞ்ச மைந்துட னாடிய 
என்பின் ஆனை யுரித்துக் களைந்தவன் 
அன்பி லானையம் மானையள் ளூறிய 
அன்பி னால்நினைந் தாரறிந் தார்களே.
5.80.3
799சங்கை யுள்ளதுஞ் சாவது மெய்யுமை 
பங்க னாரடி பாவியே னானுய 
அங்க ணனெந்தை அன்பிலா லந்துறைச் 
செங்க ணாரடிச் சேரவும் வல்லனே.
5.80.4
800கொக்கி றகர் குளிர்மதிச் சென்னியர் 
மிக்க ரக்கர் புரமெரி செய்தவர் 
அக்க ரையினர் அன்பிலா லந்துறை 
நக்கு ருவரும் நம்மை யறிவரே.
5.80.5
801வெள்ள முள்ள விரிசடை நந்தியைக் 
கள்ள முள்ள மனத்தவர் காண்கிலார் 
அள்ள லார்வயல் அன்பிலா லந்துறை 
உள்ள வாறறி யார்சிலர் ஊமரே.
5.80.6
802பிறவி மாயப் பிணக்கில் அழுந்தினும் 
உறவெ லாஞ்சிந்தித் துன்னி உகவாதே 
அறவன் எம்பிரான் அன்பிலா லந்துறை 
மறவா தேதொழு தேத்தி வணங்குமே.
5.80.7
803நுணங்கு நூலயன் மாலும் இருவரும் 
பிணங்கி யெங்குந் திரிந்தெய்த்துங் காண்கிலா 
அணங்கன் எம்பிரான் அன்பிலா லந்துறை 
வணங்கும் நும்வினை மாய்ந்தறும் வண்ணமே.
5.80.8
804பொய்யெ லாமுரைக் குஞ்சமண் சாக்கியக் 
கையன் மாருரை கேளா தெழுமினோ 
ஐயன் எம்பிரான் அன்பிலா லந்துறை 
மெய்யன் சேவடி யேத்துவார் மெய்யரே.
5.80.9
805இலங்கை வேந்தன் இருபது தோளிற்று 
மலங்க மாமலை மேல்விரல் வைத்தவன் 
அலங்கல் எம்பிரான் அன்பிலா லந்துறை 
வலங்கொள் வாரைவா னோர்வலங் கொள்வரே.
5.80.10


இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் – சத்திவாகீசர், தேவியார் – சவுந்தரநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


5.81 திருப்பாண்டிக்கொடுமுடி – திருக்குறுந்தொகை 

திருச்சிற்றம்பலம்

806சிட்ட னைச்சிவ னைச்செழுஞ் சோதியை 
அட்ட மூர்த்தியை ஆல நிழலமர் 
பட்ட னைத்திருப் பாண்டிக் கொடுமுடி 
நட்ட னைத்தொழ நம்வினை நாசமே.
5.81.1
807பிரமன் மாலறி யாத பெருமையன் 
தரும மாகிய தத்துவன் எம்பிரான் 
பரம னாருறை பாண்டிக் கொடுமுடி 
கரும மாகத் தொழுமட நெஞ்சமே.
5.81.2
808ஊச லாளல்லள் ஒண்கழ லாளல்லள் 
தேச மாந்திருப் பாண்டிக் கொடுமுடி 
ஈச னேயெனும் இத்தனை யல்லது 
பேசு மாறறி யாளொரு பேதையே.
5.81.3
809தூண்டி யசுடர் போலொக்குஞ் சோதியான் 
காண்ட லுமெளி யன்னடி யார்கட்குப் 
பாண்டிக் கொடுமுடி மேய பரமனைக் 
காண்டு மென்பவர்க் கேதுங் கருத்தொணான்.
5.81.4
810நெருக்கி யம்முடி நின்றிசை வானவர் 
இருக்கொ டும்பணிந் தேத்த இருந்தவன் 
திருக்கொ டுமுடி யென்றலுந் தீவினைக் 
கருக்கெ டுமிது கைகண்ட யோகமே.
5.81.5
 இப்பதிகத்தில் 6,7,8,9,10-ம் செய்யுட்கள் சிதைந்து போயின.5.81.6-10


இத்தலம் கொங்குநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் – கொடுமுடிநாதேசுவரர், தேவியார் – பண்மொழிநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


5.82 திருவான்மியூர் – திருக்குறுந்தொகை 

திருச்சிற்றம்பலம்

811விண்ட மாமலர் கொண்டு விரைந்துநீர் 
அண்ட நாயகன் றன்னடி சூழ்மின்கள் 
பண்டு நீர்செய்த பாவம் பறைந்திடும் 
வண்டு சேர்பொழில் வான்மியூ ரீசனே.
5.82.1
812பொருளுஞ் சுற்றமும் பொய்ம்மையும் விட்டுநீர் 
மருளும் மாந்தரை மாற்றி மயக்கறுத் 
தருளு மாவல்ல ஆதியா யென்றலும் 
மருள றுத்திடும் வான்மியூ ரீசனே.
5.82.2
813மந்த மாகிய சிந்தை மயக்கறுத் 
தந்த மில்குணத் தானை யடைந்துநின் 
றெந்தை யீசனென் றேத்திட வல்லிரேல் 
வந்து நின்றிடும் வான்மியூ ரீசனே.
5.82.3
814உள்ள முள்கலந் தேத்தவல் லார்க்கலாற் 
கள்ள முள்ள வழிக்கசி வானலன் 
வெள்ள முமர வும்விர வுஞ்சடை 
வள்ள லாகிய வான்மியூ ரீசனே.
5.82.4
815படங்கொள் பாம்பரைப் பான்மதி சூடியை 
வடங்கொள் மென்முலை மாதொரு கூறனைத் 
தொடர்ந்து நின்று தொழுதெழு வார்வினை 
மடங்க நின்றிடும் வான்மியூ ரீசனே.
5.82.5
816நெஞ்சி லைவர் நினைக்க நினைக்குறார் 
பஞ்சின் மெல்லடி யாளுமை பங்கவென் 
றஞ்சி நாண்மலர் தூவி யழுதிரேல் 
வஞ்சந் தீர்த்திடும் வான்மியூ ரீசனே.
5.82.6
817நுணங்கு நூலயன் மாலு மறிகிலாக் 
குணங்கள் தாம்பர விக்குறைந் துக்கவர் 
சுணங்கு பூண்முலைத் தூமொழி யாரவர் 
வணங்க நின்றிடும் வான்மியூ ரீசனே.
5.82.7
818ஆதி யும்மர னாயயன் மாலுமாய்ப் 
பாதி பெண்ணுரு வாய பரமனென் 
றோதி யுள்குழைந் தேத்தவல் லாரவர் 
வாதை தீர்த்திடும் வான்மியூ ரீசனே.
5.82.8
819ஓட்டை மாடத்தி லொன்பது வாசலுங் 
காட்டில் வேவதன் முன்னங் கழலடி 
நாட்டி நாண்மலர் தூவி வலஞ்செயில் 
வாட்டந் தீர்த்திடும் வான்மியூ ரீசனே.
5.82.9
820பார மாக மலையெடுத் தான்றனைச் 
சீர மாகத் திருவிர லூன்றினான் 
ஆர்வ மாக அழைத்தவ னேத்தலும் 
வார மாயினன் வான்மியூ ரீசனே.
5.82.10


இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் – மருந்தீசுவரர், தேவியார் – சொக்கநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


5.83 திருநாகைக்காரோணம் – திருக்குறுந்தொகை 

திருச்சிற்றம்பலம்

821பாணத் தான்மதில் மூன்று மெரித்தவன் 
பூணத் தானர வாமை பொறுத்தவன் 
காணத் தானினி யான்கடல் நாகைக்கா 
ரோணத் தானென நம்வினை ஓயுமே.
5.83.1
822வண்ட லம்பிய வார்சடை ஈசனை 
விண்ட லம்பணிந் தேத்தும் விகிர்தனைக் 
கண்ட லங்கமழ் நாகைக்கா ரோணனைக் 
கண்ட லும்வினை யான கழலுமே.
5.83.2
823புனையு மாமலர் கொண்டு புரிசடை 
நனையு மாமலர் சூடிய நம்பனைக் 
கனையும் வார்கடல் நாகைக்கா ரோணனை 
நினைய வேவினை யாயின நீங்குமே.
5.83.3
824கொல்லை மால்விடை யேறிய கோவினை 
எல்லி மாநட மாடும் இறைவனைக் 
கல்லி னார்மதில் நாகைக்கா ரோணனைச் 
சொல்ல வேவினை யானவை சோருமே.
5.83.4
825மெய்ய னைவிடை யூர்தியை வெண்மழுக் 
கைய னைக்கடல் நாகைக்கா ரோணனை 
மைய னுக்கிய கண்டனை வானவர் 
ஐய னைத்தொழு வார்க்கல்ல லில்லையே.
5.83.5
826அலங்கல் சேர்சடை ஆதி புராணனை 
விலங்கல் மெல்லியல் பாகம் விருப்பனைக் 
கலங்கள் சேர்கடல் நாகைக்கா ரோணனை 
வலங்கொள் வார்வினை யாயின மாயுமே.
5.83.6
827சினங்கொள் மால்கரி சீறிய ஏறினை 
இனங்கொள் வானவ ரேத்திய ஈசனைக் 
கனங்கொள் மாமதில் நாகைக்கா ரோணனை 
மனங்கொள் வார்வினை யாயின மாயுமே.
5.83.7
828அந்த மில்புகழ் ஆயிழை யார்பணிந் 
தெந்தை யீசனென் றேத்தும் இறைவனைக் 
கந்த வார்பொழில் நாகைக்கா ரோணனைச் 
சிந்தை செய்யக் கெடுந்துயர் திண்ணமே.
5.83.8
829கருவ னைக்கடல் நாகைக்கா ரோணனை 
இருவ ருக்கறி வொண்ணா இறைவனை 
ஒருவ னையுண ரார்புர மூன்றெய்த 
செருவ னைத்தொழத் தீவினை தீருமே.
5.83.9
830கடல்க ழிதழி நாகைக்கா ரோணன்றன் 
வடவ ரையெடுத் தார்த்த அரக்கனை 
அடர வூன்றிய பாதம் அணைதரத் 
தொடர அஞ்சுந் துயக்கறுங் காலனே.
5.83.10


இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் – காயாரோகணேசுவரர், தேவியார் – நீலயதாட்சியம்மை.
திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


5.84 திருக்காட்டுப்பள்ளி – திருக்குறுந்தொகை 

திருச்சிற்றம்பலம்

831மாட்டுப் பள்ளி மகிழ்ந்துறை வீர்க்கெலாங் 
கேட்டுப் பள்ளிகண் டீர்கெடு வீரிது 
ஓட்டுப் பள்ளிவிட் டோ ட லுறாமுனங் 
காட்டுப் பள்ளியு ளான்கழல் சேர்மினே.
5.84.1
832மாட்டைத் தேடி மகிழ்ந்துநீர் நும்முளே 
நாட்டுப் பொய்யெலாம் பேசிடு நாணிலீர் 
கூட்டை விட்டுயிர் போவதன் முன்னமே 
காட்டுப் பள்ளியு ளான்கழல் சேர்மினே.
5.84.2
833தேனை வென்றசொல் லாளொடு செல்வமும் 
ஊனை விட்டுயிர் போவதன் முன்னமே 
கான வேடர் கருதுங்காட் டுப்பள்ளி 
ஞான நாயக னைச்சென்று நண்ணுமே.
5.84.3
834அருத்த முமனை யாளொடு மக்களும் 
பொருத்த மில்லை பொல்லாதது போக்கிடுங் 
கருத்தன் கண்ணுதல் அண்ணல்காட் டுப்பள்ளித் 
திருத்தன் சேவடி யைச்சென்று சேர்மினே.
5.84.4
835சுற்ற முந்துணை யும்மனை வாழ்க்கையும் 
அற்ற போதணை யாரவ ரென்றென்றே 
கற்ற வர்கள் கருதுங்காட் டுப்பள்ளிப் 
பெற்ற மேறும் பிரானடி சேர்மினே.
5.84.5
836அடும்புங் கொன்றையும் வன்னியும் மத்தமுந் 
துடும்பல் செய்சடைத் தூமணிச் சோதியான் 
கடம்பன் தாதை கருதுங்காட் டுப்பள்ளி 
உடம்பி னார்க்கோர் உறுதுணை யாகுமே.
5.84.6
837மெய்யின் மாசுடை யாருடல் மூடுவார் 
பொய்யை மெய்யென்று புக்குடன் வீழன்மின் 
கையின் மானுடை யான்காட்டுப் பள்ளியெம் 
ஐயன் றன்னடி யேயடைந் துய்மினே.
5.84.7
838வேலை வென்றகண் ணாரை விரும்பிநீர் 
சீலங் கெட்டுத் திகையன்மின் பேதைகாள் 
காலை யேதொழுங் காட்டுப்பள் ளியுறை 
நீல கண்டனை நித்தல் நினைமினே.
5.84.8
839இன்று ளார்நாளை இல்லை யெனும்பொருள் 
ஒன்று மோரா துழிதரும் ஊமர்காள் 
அன்று வானவர்க் காக விடமுண்ட 
கண்ட னார்காட்டுப் பள்ளிகண் டுய்ம்மினே.
5.84.9
840எண்ணி லாவரக் கன்மலை யேந்திட 
எண்ணி நீண்முடி பத்து மிறுத்தவன் 
கண்ணு ளார்கரு துங்காட்டுப் பள்ளியை 
நண்ணு வாரவர் தம்வினை நாசமே.
5.84.10


இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் – ஆரணியசுந்தரர், தேவியார் – அகிலாண்டநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


5.85 திருச்சிராப்பள்ளி – திருக்குறுந்தொகை 

திருச்சிற்றம்பலம்

841மட்டு வார்குழ லாளொடு மால்விடை 
இட்ட மாவுகந் தேறும் இறைவனார் 
கட்டு நீத்தவர்க் கின்னரு ளேசெயுஞ் 
சிட்டர் போலுஞ் சிராப்பள்ளிச் செல்வரே.
5.85.1
842அரிய யன்றலை வெட்டிவட் டாடினார் 
அரிய யன்றொழு தேத்தும் அரும்பொருள் 
பெரிய வன்சிராப் பள்ளியைப் பேணுவார் 
அரிய யன்றொழ அங்கிருப் பார்களே.
5.85.2
843அரிச்சி ராப்பகல் ஐவரா லாட்டுண்டு 
சுரிச்சி ராதுநெஞ் சேயொன்று சொல்லக்கேள் 
திரிச்சி ராப்பள்ளி யென்றலுந் தீவினை 
நரிச்சி ராது நடக்கும் நடக்குமே.
5.85.3
844தாயு மாயெனக் கேதலை கண்ணுமாய்ப் 
பேய னேனையும் ஆண்ட பெருந்தகை 
தேய நாதன் சிராப்பள்ளி மேவிய 
நாய னாரென நம்வினை நாசமே.
5.85.4
 இப்பதிகத்தில் 5,6,7,8,9,10-ம் செய்யுட்கள் சிதைந்து போயின.5.85.5-10


இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் – தாயுமானேசுவரர், தேவியார் – மட்டுவார்குழலம்மை.
திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


5.86 திருவாட்போக்கி – திருக்குறுந்தொகை 

திருச்சிற்றம்பலம்

845கால பாசம் பிடித்தெழு தூதுவர் 
பால கர்விருத் தர்பழை யாரெனார் 
ஆல நீழ லமர்ந்தவாட் போக்கியார் 
சீல மார்ந்தவர் செம்மையுள் நிற்பரே.
5.86.1
846விடுத்த தூதுவர் வந்து வினைக்குழிப் 
படுத்த போது பயனிலை பாவிகாள் 
அடுத்த கின்னரங் கேட்கும்வாட் போக்கியை 
எடுத்து மேத்தியும் இன்புறு மின்களே.
5.86.2
847வந்திவ் வாறு வளைத்தெழு தூதுவர் 
உந்தி யோடி நரகத் திடாமுனம் 
அந்தி யின்னொளி தாங்கும்வாட் போக்கியார் 
சிந்தி யாவெழு வார்வினை தீர்ப்பரே.
5.86.3
848கூற்றம் வந்து குமைத்திடும் போதினாற் 
தேற்றம் வந்து தெளிவுற லாகுமே 
ஆற்ற வுமருள் செய்யும்வாட் போக்கிபால் 
ஏற்று மின்விளக் கையிருள் நீங்கவே.
5.86.4
849மாறு கொண்டு வளைத்தெழு தூதுவர் 
வேறு வேறு படுப்பதன் முன்னமே 
ஆறு செஞ்சடை வைத்தவாட் போக்கியார்க் 
கூறி யூறி உருகுமென் னுள்ளமே.
5.86.5
850கான மோடிக் கடிதெழு தூதுவர் 
தான மோடு தலைபிடி யாமுனம் 
ஆனஞ் சாடி யுகந்தவாட் போக்கியார் 
ஊன மில்லவர்க் குண்மையில் நிற்பரே.
5.86.6
851பார்த்துப் பாசம் பிடித்தெழு தூதுவர் 
கூர்த்த வேலாற் குமைப்பதன் முன்னமே 
ஆர்த்த கங்கை யடக்கும்வாட் போக்கியார் 
கீர்த்தி மைகள் கிளர்ந்துரை மின்களே.
5.86.7
852நாடி வந்து நமன்தமர் நல்லிருள் 
கூடி வந்து குமைப்பதன் முன்னமே 
ஆடல் பாடல் உகந்தவாட் போக்கியை 
வாடி யேத்தநம் வாட்டந் தவிருமே.
5.86.8
853கட்ட றுத்துக் கடிதெழு தூதுவர் 
பொட்ட நூக்கிப் புறப்படா முன்னமே 
அட்ட மாமலர் சூடும்வாட் போக்கியார்க் 
கிட்ட மாகி யிணையடி யேத்துமே.
5.86.9
854இரக்க முன்னறி யாதெழு தூதுவர் 
பரக்க ழித்தவர் பற்றுதன் முன்னமே 
அரக்க னுக்கருள் செய்தவாட் போக்கியார் 
கரப்ப துங்கரப் பாரவர் தங்கட்கே.
5.86.10


இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் – இரத்தினகிரீசுவரர், தேவியார் – சுரும்பார்குழலம்மை.
திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


5.87 திருமணஞ்சேரி – திருக்குறுந்தொகை 

திருச்சிற்றம்பலம்

855பட்ட நெற்றியர் பாய்புலித் தோலினர் 
நட்ட நின்று நவில்பவர் நாடொறுஞ் 
சிட்டர் வாழ்திரு வார்மணஞ் சேரியெம் 
வட்ட வார்சடை யார்வண்ணம் வாழ்த்துமே.
5.87.1
856துன்னு வார்குழ லாளுமை யாளொடும் 
பின்னு வார்சடை மேற்பிறை வைத்தவர் 
மன்னு வார்மணஞ் சேரி மருந்தினை 
உன்னு வார்வினை யாயின ஓயுமே.
5.87.2
857புற்றி லாடர வாட்டும் புனிதனார் 
தெற்றி னார்புரந் தீயெழச் செற்றவர் 
சுற்றி னார்மதில் சூழ்மணஞ் சேரியார் 
பற்றி னாரவர் பற்றவர் காண்மினே.
5.87.3
858மத்த மும்மதி யும்வளர் செஞ்சடை 
முத்தர் முக்குணர் மூசர வம்மணி 
சித்தர் தீவணர் சீர்மணஞ் சேரியெம் 
வித்தர் தாம்விருப் பாரை விருப்பரே.
5.87.4
859துள்ளு மான்மறி தூமழு வாளினர் 
வெள்ள நீர்கரந் தார்சடை மேலவர் 
அள்ள லார்வயல் சூழ்மணஞ் சேரியெம் 
வள்ள லார்கழல் வாழ்த்தவாழ் வாவதே.
5.87.5
860நீர்ப ரந்த நிமிர்புன் சடையின்மேல் 
ஊர்ப ரந்த உரகம் அணிபவர் 
சீர்ப ரந்த திருமணஞ் சேரியார் 
ஏர்ப ரந்தங் கிலங்குசூ லத்தரே.
5.87.6
861சுண்ணத் தர்சுடு நீறுகந் தாடலார் 
விண்ணத் தம்மதி சூடிய வேதியர் 
மண்ணத் தம்முழ வார்மணஞ் சேரியார் 
வண்ணத் தம்முலை யாளுமை வண்ணரே.
5.87.7

862
துன்ன வாடையர் தூமழு வாளினர் 
பின்னு செஞ்சடை மேற்பிறை வைத்தவர் 
மன்னு வார்பொழில் சூழ்மணஞ் சேரியெம் 
மன்ன னார்கழ லேதொழ வாய்க்குமே.
5.87.8
863சித்தர் தேவர்கள் மாலொடு நான்முகன் 
புத்தர் தேரமண் கையர் புகழவே 
மத்தர் தாமறி யார்மணஞ் சேரியெம் 
அத்த னாரடி யார்க்கல்ல லில்லையே.
5.87.9
864கடுத்த மேனி அரக்கன் கயிலையை 
எடுத்த வனெடு நீண்முடி பத்திறப் 
படுத்த லுமணஞ் சேரி யருளெனக் 
கொடுத்த னன்கொற்ற வாளொடு நாமமே.
5.87.10


இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் – அருள்வள்ளல்நாயகர், தேவியார் – யாழின்மொழியம்மை.
திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


5.88 திருமருகல் – திருக்குறுந்தொகை 

திருச்சிற்றம்பலம்

865பெருக லாந்தவம் பேதைமை தீரலாந் 
திருக லாகிய சிந்தை திருத்தலாம் 
பருக லாம்பர மாயதோ ரானந்தம் 
மருக லானடி வாழ்த்தி வணங்கவே.
5.88.1
866பாடங் கொள்பனு வற்றிறங் கற்றுப்போய் 
நாடங் குள்ளன தட்டிய நாணிலீர் 
மாடஞ் சூழ்மரு கற்பெரு மான்றிரு 
வேடங் கைதொழ வீடெளி தாகுமே.
5.88.2
867சினத்தி னால்வருஞ் செய்தொழி லாமவை 
அனைத்தும் நீங்கிநின் றாதர வாய்மிக 
மனத்தி னால்மரு கற்பெரு மான்றிறம் 
நினைப்பி னார்க்கில்லை நீணில வாழ்க்கையே.
5.88.3
868ஓது பைங்கிளிக் கொண்பால் அமுதூட்டிப் 
பாது காத்துப் பலபல கற்பித்து 
மாது தான்மரு கற்பெரு மானுக்குத் 
தூது சொல்ல விடத்தான் தொடங்குமே.
5.88.4
869இன்ன வாறென்ப துண்டறி யேனின்று 
துன்னு கைவளை சோரக்கண் நீர்மல்கும் 
மன்னு தென்மரு கற்பெரு மான்றிறம் 
உன்னி யொண்கொடி உள்ள முருகுமே.
5.88.5
870சங்கு சோரக் கலையுஞ் சரியவே 
மங்கை தான்மரு கற்பெரு மான்வரும் 
அங்க வீதி அருகணை யாநிற்கும் 
நங்கை மீரிதற் கென்செய்கேன் நாளுமே.
5.88.6
871காட்சி பெற்றில ளாகிலுங் காதலே 
மீட்சி யொன்றறி யாது மிகுவதே 
மாட்சி யார்மரு கற்பெரு மானுக்குத் 
தாழ்ச்சி சாலவுண் டாகுமென் தையலே.
5.88.7
872நீடு நெஞ்சுள் நினைந்துகண் ணீர்மல்கும் 
ஓடு மாலினோ டொண்கொடி மாதராள் 
மாட நீண்மரு கற்பெரு மான்வரிற் 
கூடு நீயென்று கூட லிழைக்குமே.
5.88.8
873கந்த வார்குழல் கட்டிலள் காரிகை 
அந்தி மால்விடை யோடுமன் பாய்மிக 
வந்தி டாய்மரு கற்பெரு மானென்று 
சிந்தை செய்து திகைத்திடுங் காண்மினே.
5.88.9
874ஆதி மாமலை அன்றெடுத் தானிற்றுச் 
சோதி யென்றலுந் தொல்லருள் செய்திடும் 
ஆதி யான்மரு கற்பெரு மான்றிறம் 
ஓதி வாழ்பவர் உம்பர்க்கும் உம்பரே.
5.88.10


இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் – மாணிக்கவண்ணவீசுவரர், தேவியார் – வண்டுவார்குழலம்மை.
திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


5.89 தனி – திருக்குறுந்தொகை 

திருச்சிற்றம்பலம்

875ஒன்று வெண்பிறைக் கண்ணியோர் கோவணம் 
ஒன்று கீளுமை யோடு முடுத்தது 
ஒன்று வெண்டலை யேந்தியெம் முள்ளத்தே 
ஒன்றி நின்றங் குறையும் ஒருவனே.
5.89.1
876இரண்டு மாமவர்க் குள்ளன செய்தொழில் 
இரண்டு மாமவர்க் குள்ளன கோலங்கள் 
இரண்டு மில்லிள மானெமை யாளுகந் 
திரண்டு போதுமென் சிந்தையுள் வைகுமே.
5.89.2
877மூன்று மூர்த்தியுள் நின்றிய லுந்தொழில் 
மூன்று மாயின மூவிலைச் சூலத்தன் 
மூன்று கண்ணினன் தீத்தொழில் மூன்றினன் 
மூன்று போதுமென் சிந்தையுள் மூழ்குமே.
5.89.3
878நாலின் மேன்முகஞ் செற்றது மன்னிழல் 
நாலு நன்குணர்ந் திட்டது மின்பமாம் 
நாலு வேதஞ் சரித்தது நன்னெறி 
நாலு போலெம் அகத்துறை நாதனே.
5.89.4
879அஞ்சு மஞ்சுமோ ராடி யரைமிசை 
அஞ்சு போலரை யார்த்ததின் றத்துவம் 
அஞ்சு மஞ்சுமோ ரோரைஞ்சு மாயவன் 
அஞ்சு மாமெம் அகத்துறை ஆதியே.
5.89.5
880ஆறு கால்வண்டு மூசிய கொன்றையன் 
ஆறு சூடிய அண்ட முதல்வனார் 
ஆறு கூர்மையர்க் கச்சம யப்பொருள் 
ஆறு போலெம் அகத்துறை ஆதியே.
5.89.6
881ஏழு மாமலை ஏழ்பொழில் சூழ்கடல் 
ஏழு போற்றுமி ராவணன் கைந்நரம் 
பேழு கேட்டருள் செய்தவன் பொற்கழல் 
ஏழுஞ் சூழடி யேன்மனத் துள்ளவே.
5.89.7
882எட்டு மூர்த்தியாய் நின்றிய லுந்தொழில் 
எட்டு வான்குணத் தீசனெம் மான்றனை 
எட்டு மூர்த்தியு மெம்மிறை யெம்முளே 
எட்டு மூர்த்தியு மெம்மு ளொடுங்குமே.
5.89.8
883ஒன்ப தொன்பதி யானை யொளிகளி 
றொன்ப தொன்பது பல்கணஞ் சூழவே 
ஒன்ப தாமவை தீத்தொழி லின்னுரை 
ஒன்ப தொத்துநின் றென்னு ளொடுங்குமே.
5.89.9
884பத்து நூறவன் வெங்கண்வெள் ளேற்றண்ணல் 
பத்து நூறவன் பல்சடை தோண்மிசை 
பத்தி யாமில மாதலின் ஞானத்தாற் 
பத்தி யானிடங் கொண்டது பள்ளியே.
5.89.10


திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


5.90 தனி – திருக்குறுந்தொகை 

திருச்சிற்றம்பலம்

885மாசில் வீணையும் மாலை மதியமும் 
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும் 
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே 
ஈசன் எந்தை இணையடி நீழலே.
5.90.1
886நமச்சி வாயவே ஞானமுங் கல்வியும் 
நமச்சி வாயவே நானறி விச்சையும் 
நமச்சி வாயவே நாநவின் றேத்துமே 
நமச்சி வாயவே நன்னெறி காட்டுமே.
5.90.2
887ஆளா காராளா னாரை அடைந்துய்யார் 
மீளா வாட்செய்து மெய்ம்மையுள் நிற்கிலார் 
*தோளா தசுரை யோதொழும் பர்செவி 
வாளா மாய்ந்துமண் ணாகிக் கழிவரே. 
* தோளாத சுரையென்பது துவாரமிடாத சுரைக்காய்
5.90.3
888நடலை வாழ்வுகொண் டென்செய்திர் நாணிலீர் 
சுடலை சேர்வது சொற்பிர மாணமே 
கடலின் நஞ்சமு துண்டவர் கைவிட்டால் 
உடலி னார்கிடந் தூர்முனி பண்டமே.
5.90.4
889பூக்கைக் கொண்டரன் பொன்னடி போற்றிலார் 
நாக்கைக் கொண்டரன் நாமம் நவில்கிலார் 
ஆக்கைக் கேயிரை தேடி அலமந்து 
காக்கைக் கேயிரை யாகிக் கழிவரே.
5.90.5
890குறிக ளுமடை யாளமுங் கோயிலும் 
நெறிக ளுமவர் நின்றதோர் நேர்மையும் 
அறிய ஆயிரம் ஆரணம் ஓதிலும் 
பொறியி லீர்மன மென்கொல் புகாததே.
5.90.6
891வாழ்த்த வாயும் நினைக்க மடநெஞ்சும் 
தாழ்த்தச் சென்னியுந் தந்த தலைவனைச் 
சூழ்த்த மாமலர் தூவித் துதியாதே 
வீழ்த்த வாவினை யேன்நெடுங் காலமே.
5.90.7
892எழுது பாவைநல் லார்திறம் விட்டுநான் 
தொழுது போற்றிநின் றேனையுஞ் சூழ்ந்துகொண் 
டுழுத சால்வழி யேயுழு வான்பொருட் 
டிழுதை நெஞ்சமி தென்படு கின்றதே.
5.90.8
893நெக்கு நெக்கு நினைபவர் நெஞ்சுளே 
புக்கு நிற்கும்பொன் னார்சடைப் புண்ணியன் 
பொக்க மிக்கவர் பூவுநீ ருங்கண்டு 
நக்கு நிற்ப ரவர்தமை நாணியே.
5.90.9
894விறகிற் றீயினன் பாலிற் படுநெய்போல் 
மறைய நின்றுளன் மாமணிச் சோதியான் 
உறவு கோல்நட் டுணர்வு கயிற்றினான் 
முறுக வாங்கிக் கடையமுன் னிற்குமே.
5.90.10


திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


5.91 தனி – திருக்குறுந்தொகை 

திருச்சிற்றம்பலம்

895ஏயி லானையெ னிச்சை யகம்படிக் 
கோயி லானைக் குணப்பெருங் குன்றினை 
வாயி லானை மனோன்மனி யைப்பெற்ற 
தாயி லானைத் தழுவுமென் ஆவியே.
5.91.1
896முன்னை ஞான முதற்றனி வித்தினைப் 
பின்னை ஞானப் பிறங்கு சடையனை 
என்னை ஞானத் திருளறுத் தாண்டவன் 
தன்னை ஞானத் தளையிட்டு வைப்பனே.
5.91.2
897ஞானத் தாற்றொழு வார்சில ஞானிகள் 
ஞானத் தாற்றொழு வேனுனை நானலேன் 
ஞானத் தாற்றொழு வார்கள் தொழக்கண்டு 
ஞானத் தாயுனை நானுந் தொழுவனே.
5.91.3
898புழுவுக் குங்குணம் நான்கெனக் கும்மதே 
புழுவுக் கிங்கெனக் குள்ளபொல் லாங்கில்லை 
புழுவி னுங்கடையேன்புனி தன்றமர் 
குழுவுக் கெவ்விடத் தேன்சென்று கூடவே.
5.91.4
899மலையே வந்து விழினும் மனிதர்காள் 
நிலையி னின்று கலங்கப் பெறுதிரேல் 
தலைவ னாகிய ஈசன் றமர்களைக் 
கொலைகை யானைதான் கொன்றிடு கிற்குமே.
5.91.5
900கற்றுக் கொள்வன வாயுள நாவுள 
இட்டுக் கொள்வன பூவுள நீருள 
கற்றைச் செஞ்சடை யானுளன் நாமுளோம் 
எற்றுக் கோநம னால்முனி வுண்பதே.
5.91.6
901மனிதர் காளிங்கே வம்மொன்று சொல்லுகேன் 
கனிதந் தாற்கனி யுண்ணவும் வல்லிரே 
புனிதன் பொற்கழல் ஈசனெ னுங்கனி 
இனிது சாலவும் ஏசற் றவர்கட்கே.
5.91.7
902என்னை யேதும் அறிந்திலன் எம்பிரான் 
தன்னை நானுமு னேது மறிந்திலேன் 
என்னைத் தன்னடி யானென் றறிதலுந் 
தன்னை நானும் பிரானென் றறிந்தெனே.
5.91.8
903தெள்ளத் தேறித் தெளிந்துதித் திப்பதோர் 
உள்ளத் தேறல் அமுத ஒளிவெளி 
கள்ளத் தேன்கடி யேன்கவ லைக்கடல் 
வெள்ளத் தேனுக்கெவ் வாறு விளைந்ததே.
5.91.9
 இப்பதிகத்தில் 10-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.5.91.10


திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


5.92 காலபாராயணம் – திருக்குறுந்தொகை 

திருச்சிற்றம்பலம்

904கண்டு கொள்ளரி யானைக் கனிவித்துப் 
பண்டு நான்செய்த பாழிமை கேட்டிரேல் 
கொண்ட பாணி கொடுகொட்டி தாளங்கைக் 
கொண்ட தொண்டரைத் துன்னிலுஞ் சூழலே.
5.92.1
905நடுக்கத் துள்ளும் நகையுளும் நம்பற்குக் 
கடுக்கக் கல்ல வடமிடு வார்கட்குக் 
கொடுக்கக் கொள்க வெனவுரைப் பார்களை 
இடுக்கண் செய்யப் பெறீரிங்கு நீங்குமே.
5.92.2
906கார்கொள் கொன்றைக் கடிமலர்க் கண்ணியான் 
சீர்கொள் நாமஞ் சிவனென் றரற்றுவார் 
ஆர்க ளாகிலு மாக அவர்களை 
நீர்கள் சாரப் பெறீரிங்கு நீங்குமே.
5.92.3
907சாற்றி னேன்சடை நீண்முடிச் சங்கரன் 
சீற்றங் காமன்கண் வைத்தவன் சேவடி 
ஆற்ற வுங்களி பட்ட மனத்தராய்ப் 
போற்றி யென்றுரைப் பார்புடை போகலே.
5.92.4
908இறையென் சொன்மற வேல்நமன் றூதுவீர் 
பிறையும் பாம்பு முடைப்பெரு மான்றமர் 
நறவம் நாறிய நன்னறுஞ் சாந்திலும் 
நிறைய நீறணி வாரெதிர் செல்லலே.
5.92.5
909வாம தேவன் வளநகர் வைகலுங் 
காம மொன்றில ராய்க்கை விளக்கொடு 
தாமந் தூபமுந் தண்ணறுஞ் சாந்தமும் 
ஏம மும்புனை வாரெதிர் செல்லலே.
5.92.6
910படையும் பாசமும் பற்றிய கையினீர் 
அடையன் மின்னம தீசன் அடியரை 
விடைகொ ளூர்தியி னானடி யார்குழாம் 
புடைபு காதுநீர் போற்றியே போமினே.
5.92.7
911விச்சை யாவதும் வேட்கைமை யாவதும் 
நிச்சல் நீறணி வாரை நினைப்பதே 
அச்ச மெய்தி அருகணை யாதுநீர் 
பிச்சை புக்கவன் அன்பரைப் பேணுமே.
5.92.8
912இன்னங் கேண்மின் இளம்பிறை சூடிய 
மன்னன் பாதம் மனத்துட னேத்துவார் 
மன்னும் அஞ்செழுத் தாகிய மந்திரந் 
தன்னி லொன்றுவல் லாரையுஞ் சாரலே.
5.92.9
913மற்றுங் கேண்மின் மனப்பரிப் பொன்றின்றிச் 
சுற்றும் பூசிய நீற்றொடு கோவணம் 
ஒற்றை யேறுடை யானடியே யல்லாற் 
பற்றொன் றில்லிகள் மேற்படை போகலே.
5.92.10

914
அரக்கன் ஈரைந் தலையுமோர் தாளினால் 
நெருக்கி யூன்றியிட் டான்தமர் நிற்கிலுஞ் 
சுருக்கெ னாதங்குப் பேர்மின்கண் மற்றுநீர் 
சுருக்கெ னிற்சுட ரான்கழல் சூடுமே.
5.92.11


திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


5.93 மறக்கிற்பனே என்னும் – திருக்குறுந்தொகை 

திருச்சிற்றம்பலம்

915காச னைக்கன லைக்கதிர் மாமணித் 
தேச னைப்புக ழார்சிலர் தெண்ணர்கள் 
மாசி னைக்கழித் தாட்கொள வல்லவெம் 
ஈச னையினி நான்மறக் கிற்பனே.
5.93.1
916புந்திக் குவிளக் காய புராணனைச் 
சந்திக் கண்ணட மாடுஞ் சதுரனை 
அந்தி வண்ணனை ஆரழல் மூர்த்தியை 
வந்தெ னுள்ளங்கொண் டானை மறப்பனே.
5.93.2
917ஈசன் ஈசனென் றென்றும் அரற்றுவன் 
ஈசன் றானென் மனத்திற் பிரிவிலன் 
ஈசன் றன்னையு மென்மனத் துக்கொண்டு 
ஈசன் றன்னையும் யான்மறக் கிற்பனே.
5.93.3
918ஈசன் என்னை யறிந்த தறிந்தனன் 
ஈசன் சேவடி யேற்றப் பெறுதலால் 
ஈசன் சேவடி யேத்தப் பெற்றேனினி 
ஈசன் றன்னையும் யான்மறக் கிற்பனே.
5.93.4
919தேனைப் பாலினைத் திங்களை ஞாயிற்றை 
வான வெண்மதி சூடிய மைந்தனை 
வேனி லானை மெலிவுசெய் தீயழல் 
ஞான மூர்த்தியை நான்மறக் கிற்பனே.
5.93.5
920கன்ன லைக்கரும் பூறிய தேறலை 
மின்ன னைமின் னனைய வுருவனைப் 
பொன்ன னைமணிக் குன்று பிறங்கிய 
என்ன னையினி யான்மறக் கிற்பனே.
5.93.6
921கரும்பி னைக்கட்டி யைக்கந்த மாமலர்ச் 
சுரும்பி னைச்சுடர்ச் சோதியுட் சோதியை 
அரும்பி னிற்பெரும் போதுகொண் டாய்மலர் 
விரும்பும் ஈசனை நான்மறக் கிற்பனே.
5.93.7
922துஞ்சும் போதுஞ் சுடர்விடு சோதியை 
நெஞ்சுள் நின்று நினைப்பிக்கு நீதியை 
நஞ்சு கண்டத் தடக்கிய நம்பனை 
வஞ்ச னேனினி யான்மறக் கிற்பனே.
5.93.8
923புதிய பூவினைப் புண்ணிய நாதனை 
நிதியை நீதியை நித்திலக் குன்றினைக் 
கதியைக் கண்டங் கறுத்த கடவுளை 
மதியை மைந்தனை நான்மறக் கிற்பனே.
5.93.9
924கருகு கார்முகில் போல்வதோர் கண்டனை 
உருவ நோக்கியை ஊழி முதல்வனைப் 
பருகு பாலனைப் பான்மதி சூடியை 
மருவு மைந்தனை நான்மறக் கிற்பனே.
5.93.10


திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


5.94 தொழற்பாலனம் என்னும் – திருக்குறுந்தொகை 

திருச்சிற்றம்பலம்

925அண்டத் தானை அமரர் தொழப்படும் 
பண்டத் தானைப் பவித்திர மாந்திரு 
முண்டத் தானைமுற் றாத இளம்பிறைத் 
துண்டத் தானைக்கண் டீர்தொழற் பாலதே.
5.94.1
926முத்தொப் பானை முளைத்தெழு கற்பக 
வித்தொப் பானை விளக்கிடை நேரொளி 
ஒத்தொப் பானை ஒளிபவ ளத்திரள் 
தொத்தொப் பானைக்கண் டீர்தொழற் பாலதே.
5.94.2
927பண்ணொத் தானைப் பவளந் திரண்டதோர் 
வண்ணத் தானை வகையுணர் வான்றனை 
எண்ணத் தானை இளம்பிறை போல்வெள்ளைச் 
சுண்ணத் தானைக்கண் டீர்தொழற் பாலதே.
5.94.3
928விடலை யானை விரைகமழ் தேன்கொன்றைப் 
படலை யானைப் பலிதிரி வான்செலும் 
நடலை யானை நரிபிரி யாததோர் 
சுடலை யானைக்கண் டீர்தொழற் பாலதே.
5.94.4
929பரிதி யானைப்பல் வேறு சமயங்கள் 
கருதி யானைக்கண் டார்மனம் மேவிய 
பிரிதி யானைப் பிறரறி யாததோர் 
சுருதி யானைக்கண் டீர்தொழற் பாலதே.
5.94.5
930ஆதி யானை அமரர் தொழப்படும் 
நீதி யானை நியம நெறிகளை 
ஓதி யானை உணர்தற் கரியதோர் 
சோதி யானைக்கண் டீர்தொழற் பாலதே.
5.94.6
931ஞாலத் தானைநல் லானைவல் லார்தொழுங் 
கோலத் தானைக் குணப்பெருங் குன்றினை 
மூலத் தானை முதல்வனை மூவிலைச் 
சூலத் தானைக்கண் டீர்தொழற் பாலதே.
5.94.7
932ஆதிப் பாலட்ட மூர்த்தியை ஆனஞ்சும் 
வேதிப் பானைநம் மேல்வினை வெந்தறச் 
சாதிப் பானைத் தவத்திடை மாற்றங்கள் 
சோதிப் பானைக்கண் டீர்தொழற் பாலதே.
5.94.8
933நீற்றி னானை நிகரில்வெண் கோவணக் 
கீற்றி னானைக் கிளரொளிச் செஞ்சடை 
ஆற்றி னானை அமரர்தம் ஆருயிர் 
தோற்றி னானைக்கண் டீர்தொழற் பாலதே.
5.94.9
934விட்டிட் டானைமெய்ஞ் ஞானத்து மெய்ப்பொருள் 
கட்டிட் டானைக் கனங்குழை பாலன்பு 
பட்டிட் டானைப் பகைத்தவர் முப்புரஞ் 
சுட்டிட் டானைக்கண் டீர்தொழற் பாலதே.
5.94.10
935முற்றி னானை இராவணன் நீண்முடி 
ஒற்றி னானை ஒருவிர லாலுறப் 
பற்றி னானையோர் வெண்டலைப் பாம்பரைச் 
சுற்றி னானைக்கண் டீர்தொழற் பாலதே.
5.94.11


திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


5.95 இலிங்கபுராணம் – திருக்குறுந்தொகை 

திருச்சிற்றம்பலம்

936புக்க ணைந்து புரிந்தல ரிட்டிலர் 
நக்க ணைந்து நறுமலர் கொய்திலர் 
சொக்க ணைந்த சுடரொளி வண்ணனை 
மிக்குக் காணலுற் றாரங் கிருவரே.
5.95.1
937அலரு நீருங்கொண் டாட்டித் தெளிந்திலர் 
திலக மண்டலந் தீட்டித் திரிந்திலர் 
உலக மூர்த்தி யொளிநிற வண்ணனைச் 
செலவு காணலுற் றாரங் கிருவரே.
5.95.2
938ஆப்பி நீரோ டலகுகைக் கொண்டிலர் 
பூப்பெய் கூடை புனைந்து சுமந்திலர் 
காப்புக் கொள்ளி கபாலிதன் வேடத்தை 
ஓப்பிக் காணலுற் றாரங் கிருவரே.
5.95.3
939நெய்யும் பாலுங்கொண் டாட்டி நினைந்திலர் 
பொய்யும் பொக்கமும் போக்கிப் புகழ்ந்திலர் 
ஐயன் வெய்ய அழல்நிற வண்ணனை 
மெய்யைக் காணலுற் றாரங் கிருவரே.
5.95.4
940எருக்கங் கண்ணிகொண் டிண்டை புனைந்திலர் 
பெருக்கக் கோவணம் பீறி யுடுத்திலர் 
தருக்கி னாற்சென்று தாழ்சடை யண்ணலை 
நெருக்கிக் காணலுற் றாரங் கிருவரே.
5.95.5
941மரங்க ளேறி மலர்பறித் திட்டிலர் 
நிரம்ப நீர்சுமந் தாட்டி நினைந்திலர் 
உரம்பொ ருந்தி யொளிநிற வண்ணனை 
நிரம்பக் காணலுற் றாரங் கிருவரே.
5.95.6
942கட்டு வாங்கங் கபாலங்கைக் கொண்டிலர் 
அட்ட மாங்கங் கிடந்தடி வீழ்ந்திலர் 
சிட்டன் சேவடி சென்றெய்திக் காணிய 
பட்ட கட்டமுற் றாரங் கிருவரே.
5.95.7
943வெந்த நீறு விளங்க அணிந்திலர் 
கந்த மாமலர் இண்டை புனைந்திலர் 
எந்தை ஏறுகந் தேறெரி வண்ணனை 
அந்தங் காணலுற் றாரங் கிருவரே.
5.95.8
944இளவெ ழுந்த இருங்குவ ளைம்மலர் 
பிளவு செய்து பிணைத்தடி யிட்டிலர் 
களவு செய்தொழிற் காமனைக் காய்ந்தவன் 
அளவு காணலுற் றாரங் கிருவரே.
5.95.9
945கண்டி பூண்டு கபாலங்கைக் கொண்டிலர் 
விண்ட வான்சங்கம் விம்மவாய் வைத்திலர் 
அண்ட மூர்த்தி அழல்நிற வண்ணனைக் 
கெண்டிக் காணலுற் றாரங் கிருவரே.
5.95.10
946செங்க ணானும் பிரமனுந் தம்முளே 
எங்குந் தேடித் திரிந்தவர் காண்கிலார் 
இங்குற் றேனென்றி லிங்கத்தே தோன்றினான் 
பொங்கு செஞ்சடைப் புண்ணிய மூர்த்தியே. 11
5.95.11


திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


5.96 மனத்தொகை – திருக்குறுந்தொகை 

திருச்சிற்றம்பலம்

947பொன்னுள் ளத்திரள் புன்சடை யின்புறம் 
மின்னுள் ளத்திரள் வெண்பிறை யாயிறை 
நின்னுள் ளத்தருள் கொண்டிருள் நீங்குதல் 
என்னுள் ளத்துள தெந்தை பிரானிரே.
5.96.1
948முக்க ணும்முடை யாய்முனி கள்பலர் 
தொக்கெ ணுங்கழ லாயொரு தோலினோ 
டக்க ணும்மரை யாயரு ளெய்தலா 
தெக்க ணும்மிலன் எந்தை பிரானிரே.
5.96.2
949பனியாய் வெங்கதிர் பாய்படர் புன்சடை 
முனியாய் நீயுல கம்முழு தாளினுந் 
தனியாய் நீசரண் நீசல மேபெரி 
தினியாய் நீயெனக் கெந்தை பிரானிரே.
5.96.3
950மறையும் பாடுதிர் மாதவர் மாலினுக் 
குறையு மாயினை கோளர வோடொரு 
பிறையுஞ் சூடினை யென்பத லாற்பிறி 
திறையுஞ் சொல்லிலை எந்தை பிரானிரே.
5.96.4
951பூத்தார் கொன்றையி னாய்புலி யின்னதள் 
ஆர்த்தா யாடர வோடன லாடிய 
கூத்தா நின்குரை யார்கழ லேயல 
தேத்தா நாவெனக் கெந்தை பிரானிரே.
5.96.5
952பைம்மா லும்மர வாபர மாபசு 
மைம்மால் கண்ணியோ டேறுமைந் தாவெனும் 
அம்மா லல்லது மற்றடி நாயினேற் 
கெம்மா லும்மிலன் எந்தை பிரானிரே.
5.96.6
953வெப்பத் தின்மன மாசு விளக்கிய 
செப்பத் தாற்சிவ னென்பவர் தீவினை 
ஒப்பத் தீர்த்திடும் ஒண்கழ லாற்கல்ல 
தெப்பற் றும்மிலன் எந்தை பிரானிரே.
5.96.7
954திகழுஞ் சூழ்சுடர் வானொடு வைகலும் 
நிகழு மொண்பொரு ளாயின நீதியென் 
புகழு மாறு மலானுன பொன்னடி 
இகழு மாறிலன் எந்தை பிரானிரே.
5.96.8
955கைப்பற் றித்திரு மால்பிர மன்னுனை 
எப்பற் றியறி தற்கரி யாயருள் 
அப்பற் றல்லது மற்றடி நாயினேன் 
எப்பற் றும்மிலன் எந்தை பிரானிரே.
5.96.9
956எந்தை யெம்பிரான் என்றவர் மேல்மனம் 
எந்தை யெம்பிரான் என்றிறைஞ் சித்தொழு 
தெந்தை யெம்பிரான் என்றடி யேத்துவார் 
எந்தை யெம்பிரான் என்றடி சேர்வரே.
5.96.10


திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


5.97 சித்தத்தொகை – திருக்குறுந்தொகை 

திருச்சிற்றம்பலம்

957சிந்திப் பார்மனத் தான்சிவன் செஞ்சுடர் 
அந்தி வானிறத் தானணி யார்மதி 
முந்திச் சூடிய முக்கண்ணி னானடி 
வந்திப் பாரவர் வானுல காள்வரே.
5.97.1
958அண்ட மாரிரு ளூடு கடந்தும்பர் 
உண்டு போலுமோ ரொண்சுட ரச்சுடர் 
கண்டிங் காரறி வாரறி வாரெலாம் 
வெண்டிங் கட்கண்ணி வேதியன் என்பரே.
5.97.2
959ஆதி யாயவ னாரு மிலாதவன் 
போது சேர்புனை நீண்முடிப் புண்ணியன் 
பாதி பெண்ணுரு வாகிப் பரஞ்சுடர்ச் 
சோதி யுட்சோதி யாய்நின்ற சோதியே.
5.97.3
960இட்ட திட்டதோ ரேறுகந் தேறியூர் 
பட்டி துட்டங்க னாய்ப்பலி தேர்வதோர் 
கட்ட வாழ்க்கைய னாகிலும் வானவர் 
அட்ட மூர்த்தி யருளென் றடைவரே.
5.97.4
961ஈறில் கூறைய னாகி எரிந்தவெண் 
ணீறு பூசி நிலாமதி சூடிலும் 
வீறி லாதன செய்யினும் விண்ணவர் 
ஊற லாயரு ளாயென் றுரைப்பரே.
5.97.5
962உச்சி வெண்மதி சூடிலும் ஊனறாப் 
பச்சை வெண்டலை யேந்திப் பலஇலம் 
பிச்சை யேபுகு மாகிலும் வானவர் 
அச்சந் தீர்த்தரு ளாயென் றடைவரே.
5.97.6
963ஊரி லாயென்றொன் றாக வுரைப்பதோர் 
பேரி லாய்பிறை சூடிய பிஞ்ஞகா 
காரு லாங்கண்ட னேயுன் கழலடி 
சேர்வி லார்கட்குத் தீயவை தீயவே.
5.97.7
964எந்தை யேயெம் பிரானே யெனவுள்கிச் 
சிந்திப் பாரவர் தீவினை தீருமால் 
வெந்த நீறுமெய் பூசிய வேதியன் 
அந்த மாவளப் பாரடைந் தார்களே.
5.97.8
965ஏன வெண்மருப் போடென்பு பூண்டெழில் 
ஆனை யீருரி போர்த்தன லாடிலுந் 
தான வண்ணத்த னாகிலுந் தன்னையே 
வான நாடர் வணங்குவர் வைகலே.
5.97.9
966ஐயன் அந்தணன் ஆணொடு பெண்ணுமாம் 
மெய்யன் மேதகு வெண்பொடிப் பூசிய 
மைகொள் கண்டத்தன் மான்மறிக் கையினான் 
பைகொள் பாம்பரை யார்த்த பரமனே.
5.97.10
967ஒருவ னாகிநின் றானிவ் வுலகெலாம் 
இருவ ராகிநின் றார்கட் கறிகிலான் 
அருவ ராவரை ஆர்த்தவ னார்கழல் 
பரவு வாரவர் பாவம் பறையுமே.
5.97.11
968ஓத வண்ணனும் ஒண்மலர்ச் செல்வனும் 
நாத னேயரு ளாயென்று நாடொறுங் 
காதல் செய்து கருதப் படுமவர் 
பாத மேத்தப் பறையுநம் பாவமே.
5.97.12
969வ தன்மை யவரவ ராக்கையான் 
வெவ்வ தன்மைய னென்ப தொழிமினோ 
மௌவல் நீண்மலர் மேலுறை வானொடு 
பௌவ வண்ணனு மாய்ப்பணி வார்களே.
5.97.13
970அக்கும் ஆமையும் பூண்டன லேந்திஇல் 
புக்குப் பல்பலி தேரும் புராணனை 
நக்கு நீர்கள் நரகம் புகேன்மினோ 
தொக்க வானவ ராற்றொழு வானையே.
5.97.14
971கங்கை தங்கிய செஞ்சடை மேலிளந் 
திங்கள் சூடிய தீநிற வண்ணனார் 
இங்க ணாரெழில் வானம் வணங்கவே 
அங்க ணாற்கது வாலவன் தன்மையே.
5.97.15
972நகர வெல்கொடி யானொடு நன்னெஞ்சே 
நுகர நீயுனைக் கொண்டுயப் போக்குறில் 
மகர வெல்கொடி மைந்தனைக் காய்ந்தவன் 
புகரில் சேவடி யேபுக லாகுமே.
5.97.16
973சரண மாம்படி யார்பிற ரியாவரோ 
கரணந் தீர்த்துயிர் கையி லிகழ்ந்தபின் 
மரண மெய்திய பின்னவை நீக்குவான் 
அரண மூவெயி லெய்தவ னல்லனே.
5.97.17
974ஞமனென் பான்நர கர்க்கு நமக்கெலாஞ் 
சிவனென் பான்செழு மான்மறிக் கையினான் 
கவனஞ் செய்யுங் கனவிடை யூர்தியான் 
தமரென் றாலுங் கெடுந்தடு மாற்றமே.
5.97.18
975இடப மேறியும் இல்பலி யேற்பவர் 
அடவி காதலித் தாடுவர் ஐந்தலைப் 
படவம் பாம்பரை யார்த்த பரமனைக் 
கடவி ராய்ச்சென்று கைதொழு துய்ம்மினே.
5.97.19
976இணர்ந்து கொன்றைபொற் றாது சொரிந்திடும் 
புணர்ந்த வாளர வம்மதி யோடுடன் 
அணைந்த அஞ்சடை யானவன் பாதமே 
உணர்ந்த உள்ளத் தவருணர் வார்களே.
5.97.20
977தருமந் தான்றவந் தான்றவத் தால்வருங் 
கருமந் தான்கரு மான்மறிக் கையினான் 
அருமந் தன்ன அதிர்கழல் சேர்மினோ 
சிரமஞ் சேரழல் தீவினை யாளரே.
5.97.21
978நமச்சி வாயவென் பாருள ரேலவர் 
தமச்ச நீங்கத் தவநெறி சார்தலால் 
அமைத்துக் கொண்டதோர் வாழ்க்கைய னாகிலும் 
இமைத்து நிற்பது சால அரியதே.
5.97.22
979பற்பல் காலம் பயிற்றிப் பரமனைச் 
சொற்பல் காலம்நின் றேத்துமின் தொல்வினை 
வெற்பில் தோன்றிய வெங்கதிர் கண்டவப் 
புற்ப னிக்கெடு மாறது போலுமே.
5.97.23
980மணிசெய் கண்டத்து மான்மறிக் கையினான் 
கணிசெய் வேடத்தர் ஆயவர் காப்பினாற் 
பணிகள் தாஞ்செய வல்லவர் யாவர்தம் 
பிணிசெய் யாக்கையை நீக்குவர் பேயரே.
5.97.24
981இயக்கர் கின்னரர் இந்திரன் தானவர் 
நயக்க நின்றவன் நான்முகன் ஆழியான் 
மயக்க மெய்தவன் மாலெரி யாயினான் 
வியக்குந் தன்மையி னானெம் விகிர்தனே.
5.97.25
982அரவ மார்த்தன லாடிய அண்ணலைப் 
பரவு வாரவர் பாவம் பறைதற்குக் 
குரவை கோத்தவ னுங்குளிர் போதின்மேல் 
கரவில் நான்முக னுங்கரி யல்லரே.
5.97.26
983அழலங் கையினன் அந்தரத் தோங்கிநின் 
றுழலும் மூவெயில் ஒள்ளழ லூட்டினான் 
தழலுந் தாமரை யானொடு தாவினான் 
கழலுஞ் சென்னியுங் காண்டற் கரியனே.
5.97.27
984இளமை கைவிட் டகறலும் மூப்பினார் 
வளமை போய்ப்பிணி யோடு வருதலால் 
உளமெ லாமொளி யாய்மதி ஆயினான் 
கிளமை யேகிளை யாக நினைப்பனே.
5.97.28
985தன்னிற் றன்னை அறியுந் தலைமகன் 
தன்னிற் றன்னை அறியிற் றலைப்படுந் 
தன்னிற் றன்னை அறிவில னாயிடிற் 
தன்னிற் றன்னையுஞ் சார்தற் கரியனே.
5.97.29
986இலங்கை மன்னனை ஈரைந்து பத்துமன் 
றலங்க லோடுட னேசெல வூன்றிய 
நலங்கொள் சேவடி நாடொறும் நாடொறும் 
வலம்கொண் டேத்துவார் வானுல காள்வரே.
5.97.30


திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


5.98 உள்ளம் – திருக்குறுந்தொகை 

திருச்சிற்றம்பலம்

987நீற லைத்ததோர் மேனி நிமிர்சடை 
ஆற லைக்கநின் றாடும் அமுதினைத் 
தேற லைத்தெளி யைத்தெளி வாய்த்ததோர் 
ஊற லைக்கண்டு கொண்டதெ னுள்ளமே.
5.98.1
988பொந்தை யைப்புக்கு நீக்கப் புகுந்திடுந் 
தந்தை யைத்தழல் போல்வதோர் மேனியைச் 
சிந்தை யைத்தெளி வைத்தெளி வாய்த்ததோர் 
எந்தை யைக்கண்டு கொண்டதெ னுள்ளமே.
5.98.2
989வெள்ளத் தார்விஞ்சை யார்கள் விரும்பவே 
வெள்ளத் தைச்சடை வைத்த விகிர்தனார் 
கள்ளத் தைக்கழி யம்மன மொன்றிநின் 
றுள்ளத் தில்லொளி யைக்கண்ட துள்ளமே.
5.98.3
990அம்மா னையமு தின்னமு தேயென்று 
தம்மா னைத்தத்து வத்தடி யார்தொழுஞ் 
செம்மா னநிறம் போல்வதோர் சிந்தையுள் 
எம்மா னைக்கண்டு கொண்டதெ னுள்ளமே.
5.98.4
991கூறே றும்முமை பாகமோர் பாலராய் 
ஆறே றுஞ்சடை மேற்பிறை சூடுவர் 
பாறே றுந்தலை யேந்திப் பலஇலம் 
ஏறேறு மெந்தையைக் கண்டதெ னுள்ளமே.
5.98.5
992முன்னெஞ் சம்மின்றி மூர்க்கராய்ச் சாகின்றார் 
தன்னெஞ் சந்தமக் குத்தாம் இலாதவர் 
வன்னெஞ் சம்மது நீங்குதல் வல்லிரே 
என்னெஞ்சி லீசனைக் கண்டதெ னுள்ளமே.
5.98.6
993வென்றா னைப்புல னைந்துமென் தீவினை 
கொன்றா னைக்குணத் தாலே வணங்கிட 
நன்றா நன்மனம் வைத்திடு ஞானமாம் 
ஒன்றா னைக்கண்டு கொண்டதெ னுள்ளமே.
5.98.7
994மருவி னைமட நெஞ்சம் மனம்புகுங் 
குருவி னைக்குணத் தாலே வணங்கிடுந் 
திருவி னைச்சிந்தை யுட்சிவ னாய்நின்ற 
உருவி னைக்கண்டு கொண்டதெ னுள்ளமே.
5.98.8
995தேச னைத்திரு மால்பிர மன்செயும் 
பூச னைப்புண ரிற்புணர் வாயதோர் 
நேச னைநெஞ்சி னுள்நிறை வாய்நின்ற 
ஈச னைக்கண்டு கொண்டதெ னுள்ளமே.
5.98.9
996வெறுத்தா னைம்புல னும்பிர மன்றலை 
அறுத்தா னையரக் கன்கயி லாயத்தைக் 
கறுத்தா னைக்கா லில்விர லொன்றினால் 
ஒறுத்தா னைக்கண்டு கொண்டதெ னுள்ளமே.
5.98.10


திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


5.99 பாவநாசம் – திருக்குறுந்தொகை 

திருச்சிற்றம்பலம்

997பாவ மும்பழி பற்றற வேண்டுவீர் 
ஆவில் அஞ்சுகந் தாடு மவன்கழல் 
மேவ ராய்மிக வும்மகிழ்ந் துள்குமின் 
காவ லாளன் கலந்தருள் செய்யுமே.
5.99.1
998கங்கை யாடிலென் காவிரி யாடிலென் 
கொங்கு தண்கும ரித்துறை யாடிலென் 
ஒங்கு மாகட லோதநீ ராடிலென் 
எங்கு மீசனெ னாதவர்க் கில்லையே.
5.99.2
999பட்ட ராகிலென் சாத்திரங் கேட்கிலென் 
இட்டு மட்டியு மீதொழில் பூணிலென் 
எட்டு மொன்றும் இரண்டு மறியிலென் 
இட்ட மீசனெ னாதவர்க் கில்லையே.
5.99.3
1000வேத மோதிலென் வேள்விகள் செய்கிலென் 
நீதி நூல்பல நித்தல் பயிற்றிலென் 
ஓதி யங்கமோ ராறும் உணரிலென் 
ஈச னையுள்கு வார்க்கன்றி இல்லையே.
5.99.4
1001காலை சென்று கலந்துநீர் மூழ்கிலென் 
வேலை தோறும் விதிவழி நிற்கிலென் 
ஆலை வேள்வி யடைந்தது வேட்கிலென் 
ஏல ஈசனென் பார்க்கன்றி இல்லையே.
5.99.5
1002கான நாடு கலந்து திரியிலென் 
ஈன மின்றி இருந்தவஞ் செய்யிலென் 
ஊனை யுண்டல் ஒழிந்துவா னோக்கிலென் 
ஞான னென்பவர்க் கன்றிநன் கில்லையே.
5.99.6
1003கூட வேடத்த ராகிக் குழுவிலென் 
வாடி யூனை வருத்தித் திரியிலென் 
ஆடல் வேடத்தன் அம்பலக் கூத்தனைப் 
பாட லாளர்க்கல் லாற்பயன் இல்லையே.
5.99.7
1004நன்று நோற்கிலென் பட்டினி யாகிலென் 
குன்ற மேறி யிருந்தவஞ் செய்யிலென் 
சென்று நீரிற் குளித்துத் திரியிலென் 
என்று மீசனென் பார்க்கன்றி இல்லையே.
5.99.8
1005கோடித் தீர்த்தங் கலந்து குளித்தவை 
ஆடி னாலும் அரனுக்கன் பில்லையேல் 
ஓடும் நீரினை ஓட்டைக் குடத்தட்டி 
மூடி வைத்திட்ட மூர்க்கனோ டொக்குமே.
5.99.9
1006மற்று நற்றவஞ் செய்து வருந்திலென் 
பொற்றை யுற்றெடுத் தானுடல் புக்கிறக் 
குற்ற நற்குரை யார்கழற் சேவடி 
பற்றி லாதவர்க் குப்பயன் இல்லையே.
5.99.10


திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


5.100 ஆதிபுராணம் – திருக்குறுந்தொகை 

திருச்சிற்றம்பலம்

1007வேத நாயகன் வேதியர் நாயகன் 
மாதின் நாயகன் மாதவர் நாயகன் 
ஆதி நாயகன் ஆதிரை நாயகன் 
பூத நாயகன் புண்ணிய மூர்த்தியே.
5.100.1
1008செத்துச் செத்துப் பிறப்பதே தேவென்று 
பத்தி செய்மனப் பாறைகட் கேறுமோ 
அத்த னென்றரி யோடு பிரமனுந் 
துத்தி யஞ்செய நின்றநற் சோதியே.
5.100.2
1009நூறு கோடி பிரமர்கள் நொந்தினார் 
ஆறு கோடி நாராயண ரங்ஙனே 
ஏறு கங்கை மணலெண்ணில் இந்திரர் 
ஈறி லாதவன் ஈசன் ஒருவனே.
5.100.3
1010வாது செய்து மயங்கு மனத்தராய் 
ஏது சொல்லுவீ ராகிலும் ஏழைகாள் 
யாதோர் தேவ ரெனப்படு வார்க் கெல்லாம் 
மாதே வனலாற் றேவர்மற் றில்லையே.
5.100.4
1011கூவ லாமை குரைகட லாமையைக் 
கூவ லோடொக்கு மோகட லென்றல்போற் 
பாவ காரிகள் பார்ப்பரி தென்பராற் 
தேவ தேவன் சிவன்பெருந் தன்மையே.
5.100.5
1012பேய்வ னத்தமர் வானைப்பி ரார்த்தித்தார்க் 
கீவ னையிமை யோர்முடி தன்னடிச் 
சாய்வ னைச்சல வார்கள் தமக்குடற் 
சீவ னைச்சிவ னைச்சிந்தி யார்களே.
5.100.6
1013எரிபெ ருக்குவர் அவ்வெரி ஈசன 
துருவ ருக்கம தாவ துணர்கிலார் 
அரிய யற்கரி யானை அயர்த்துப்போய் 
நரிவி ருத்தம தாகுவர் நாடரே.
5.100.7
1014அருக்கன் பாதம் வணங்குவர் அந்தியில் 
அருக்க னாவான் அரனுரு வல்லனோ 
இருக்கு நான்மறை ஈசனை யேதொழுங் 
கருத்தி னைநினை யார்கன் மனவரே.
5.100.8
1015தாயி னும்நல்ல சங்கர னுக்கன்பர் 
ஆய வுள்ளத் தமுதருந் தப்பெறார் 
பேயர் பேய்முலை யுண்டுயிர் போக்கிய 
மாயன் மாயத்துப் பட்ட மனத்தரே.
5.100.9
1016அரக்கன் வல்லரட் டாங்கொழித் தாரருள் 
பெருக்கச் செய்த பிரான்பெருந் தன்மையை 
அருத்தி செய்தறி யப்பெறு கின்றிலர் 
கருத்தி லாக்கய வக்கணத் தோர்களே.
5.100.10

திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

திருநாவுக்கரசுசுவாமிகள் அருளிச்செய்த தேவாரப்பதிகங்கள் 
ஐந்தாம் திருமுறை முற்றும்.

Copyrights © 2022 to Saivaneethi. All rights reserved.