சமீபத்திய செய்தி

உலகத்திலே பல சமயங்கள் உள்ளன. அவற்றுள், ஈழத்தில் வழங்கும் சமயங்கள் நான்கு, அவை சைவம்
நன்கொடை
English

+94 123 456 789

நன்கொடை
English

416 528 1407

04.106 நெய்தற் குருகுதன்

திருச்சிற்றம்பலம்

நெய்தற் குருகுதன் பிள்ளையென் 
  றெண்ணி நெருங்கிச்சென்று
கைதை மடற்புல்கு தென்கழிப் 
  பாலை யதனுறைவாய்
பைதற் பிறையொடு பாம்புடன் 
  வைத்த பரிசறியோம்
எய்தப் பெறின்இரங் காதுகண் 
  டாய்நம் மிறையவனே.   1 
 
		
பருமா மணியும் பவளமுத் 
  தும்பரந் துந்திவரை
பொருமால் கரைமேற் றிரைகொணர்ந் 
  தெற்றப் பொலிந்திலங்குங்
கருமா மிடறுடைக் கண்டனெம் 
  மான்கழிப் பாலையெந்தை
பெருமா னவனென்னை யாளுடை 
  யானிப் பெருநிலத்தே.   2 
 
		
நாட்பட் டிருந்தின்பம் எய்தலுற் 
  றிங்கு நமன்தமராற்
கோட்பட் டொழிவதன் முந்துற 
  வேகுளி ரார்தடத்துத்
தாட்பட்ட தாமரைப் பொய்கையந் 
  தண்கழிப் பாலையண்ணற்
காட்பட் டொழிந்தமன் றேவல்ல 
  மாயிவ் வகலிடத்தே.
  
  
இப்பதிகத்தில் ஏனைய செய்யுட்கள் சிதைந்து போயின.
	
		

சுவாமி:பால்வண்ணநாதர்;அம்பாள்:வேதநாயகி.3

திருச்சிற்றம்பலம்

Copyrights © 2022 to Saivaneethi. All rights reserved.