சமீபத்திய செய்தி

உலகத்திலே பல சமயங்கள் உள்ளன. அவற்றுள், ஈழத்தில் வழங்கும் சமயங்கள் நான்கு, அவை சைவம்
நன்கொடை
English

+94 123 456 789

நன்கொடை
English

416 528 1407

04.057 மஞ்சனே மணியு

திருச்சிற்றம்பலம்

மஞ்சனே மணியு மானாய் 
  மரகதத் திரளு மானாய்
நெஞ்சுளே புகுந்து நின்று 
  நினைதரு நிகழ்வி னானே
துஞ்சும்போ தாக வந்து 
  துணையெனக் காகி நின்று
அஞ்சலென் றருள வேண்டும் 
  ஆவடு துறையு ளானே.   1 
 
 
நானுகந் துன்னை நாளும் 
  நணுகுமா கருதி யேயும்
ஊனுகந் தோம்பும் நாயேன் 
  உள்ளுற ஐவர் நின்றார்
தானுகந் தேயு கந்த 
  தகவிலாத் தொண்ட னேன்நான்
ஆனுகந் தேறு வானே 
  ஆவடு துறையு ளானே.   2
 
 
கட்டமே வினைக ளான 
  காத்திவை நோக்கி ஆளாய்
ஒட்டவே ஒட்டி நாளும் 
  உன்னையுள் வைக்க மாட்டேன்
பட்டவான் தலைகை யேந்திப் 
  பலிதிரிந் தூர்கள் தோறும்
அட்டமா வுருவி னானே 
  ஆவடு துறையு ளானே.   3 
 
 
பெருமைநன் றுடைய தில்லை 
  யென்றுநான் பேச மாட்டேன்
ஒருமையால் உன்னை உள்கி 
  உகந்துவா னேற மாட்டேன்
கருமையிட் டாய வூனைக் 
  கட்டமே கழிக்கின் றேன்நான்
அருமையா நஞ்ச முண்ட 
  ஆவடு துறையு ளானே.   4 
 
 
துட்டனாய் வினைய தென்னுஞ் 
  சுழித்தலை அகப்பட் டேனைக்
கட்டனாய் ஐவர் வந்து 
  கலக்காமைக் காத்துக் கொள்வாய்
மட்டவிழ் கோதை தன்னை 
  மகிழ்ந்தொரு பாகம் வைத்து
அட்டமா நாக மாட்டும் 
  ஆவடு துறையு ளானே.   5
 
 
காரழற் கண்ட மேயாய் 
  கடிமதிற் புரங்கள் மூன்றும்
ஓரழல் அம்பி னாலே 
  யுகைத்துத்தீ எரிய மூட்டி
நீரழற் சடையு ளானே 
  நினைப்பவர் வினைகள் தீர்ப்பாய்
ஆரழல் ஏந்தி யாடும் 
  ஆவடு துறையு ளானே.   6 
  
 
செறிவிலேன் சிந்தை யுள்ளே 
  சிவனடி தெரிய மாட்டேன்
குறியிலேன் குணமொன் றில்லேன் 
  கூறுமா கூற மாட்டேன்
நெறிபடு மதியொன் றில்லேன் 
  நினையுமா நினைய மாட்டேன்
அறிவிலேன் அயர்த்துப் போனேன் 
  ஆவடு துறையு ளானே.   7 
  
 
கோலமா மங்கை தன்னைக் 
  கொண்டொரு கோல மாய
சீலமே அறிய மாட்டேன் 
  செய்வினை மூடி நின்று
ஞாலமாம் இதனுள் என்னை 
  நைவியா வண்ணம் நல்காய்
ஆலமா நஞ்ச முண்ட 
  ஆவடு துறையு ளானே.   8 
  
நெடியவன் மலரி னானும் 
  நேர்ந்திரு பாலும் நேடக்
கடியதோர் உருவ மாகிக் 
  கனலெரி யாகி நின்ற
வடிவின வண்ண மென்றே 
  என்றுதாம் பேச லாகார்
அடியனேன் நெஞ்சி னுள்ளார் 
  ஆவடு துறையு ளானே.   9
   
		
மலைக்குநே ராய ரக்கன் 
  சென்றுற மங்கை அஞ்சத்
தலைக்குமேற் கைக ளாலே 
  தாங்கினான் வலியை மாள
உலப்பிலா விரலால் ஊன்றி 
  ஒறுத்தவற் கருள்கள் செய்து
அலைத்தவான் கங்கை சூடும் 
  ஆவடு துறையு ளானே.
  

சுவாமி:மாசிலாமணியீசுவரர்;அம்பாள்:ஒப்பிலாமுலையம்மை.10

திருச்சிற்றம்பலம்

Audio


அ௫ளியவர் : திருநாவுக்கரசர்

திருமுறை : நான்காம்-திருமுறை

பண் : திருநேரிசை

நாடு : சோழநாடு காவிரித் தென்கரை

தலம் : ஆவடுதுறை

Author : மதுரை முத்துக்குமரன்

Copyrights © 2022 to Saivaneethi. All rights reserved.