சமீபத்திய செய்தி

உலகத்திலே பல சமயங்கள் உள்ளன. அவற்றுள், ஈழத்தில் வழங்கும் சமயங்கள் நான்கு, அவை சைவம்
நன்கொடை
English

+94 123 456 789

நன்கொடை
English

416 528 1407

04.054 பகைத்திட்டார் புரங்கள்

திருச்சிற்றம்பலம்

பகைத்திட்டார் புரங்கள் மூன்றும் 
  பாறிநீ றாகி வீழப்
புகைத்திட்ட தேவர் கோவே 
  பொறியிலேன் உடலந் தன்னுள்
அகைத்திட்டங் கதனை நாளும் 
  ஐவர்கொண் டாட்ட வாடித்
திகைத்திட்டேன் செய்வ தென்னே 
  திருப்புக லூர னீரே.   1 
 
 
மையரி மதர்த்த ஒண்கண் 
  மாதரார் வலையிற் பட்டுக்
கையெரி சூல மேந்துங் 
  கடவுளை நினைய மாட்டேன்
ஐநெரிந் தகமி டற்றே 
  அடைக்கும்போ தாவி யார்தாஞ்
செய்வதொன் றறிய மாட்டேன் 
  திருப்புக லூர னீரே.   2  
 
 
முப்பதும் முப்பத் தாறும் 
  முப்பதும் இடுகு ரம்பை
அப்பர்போல் ஐவர் வந்து 
  அதுதரு கிதுவி டென்று
ஒப்பவே நலிய லுற்றால் 
  உய்யுமா றறிய மாட்டேன்
செப்பமே திகழு மேனித் 
  திருப்புக லூர னீரே.   3
 
 
பொறியிலா அழுக்கை யோம்பிப் 
  பொய்யினை மெய்யென் றெண்ணி
நெறியலா நெறிகள் சென்றேன் 
  நீதனேன் நீதி யேதும்
அறிவிலேன் அமரர் கோவே 
  அமுதினை மனனில் வைக்குஞ்
செறிவிலேன் செய்வ தென்னே 
  திருப்புக லூர னீரே.   4  
 
 
அளியினார் குழலி னார்கள் 
  அவர்களுக் கன்ப தாகிக்
களியினார் பாடல் ஓவாக் 
  கடவூர்வீ ரட்ட மென்னுந்
தளியினார் பாத நாளும் 
  நினைவிலாத் தகவில் நெஞ்சந்
தெளிவிலேன் செய்வ தென்னே 
  திருப்புக லூர னீரே.   5 
 
 
இலவினார் மாதர் பாலே 
  இசைந்துநான் இருந்து பின்னும்
நிலவுநாள் பலவென் றெண்ணி 
  நீதனேன் ஆதி உன்னை
உலவிநான் உள்க மாட்டேன் 
  உன்னடி பரவு ஞானஞ்
செலவிலேன் செய்வ தென்னே 
  திருப்புக லூர னீரே.   6 
  
 
காத்திலேன் இரண்டும் மூன்றுங் 
  கல்வியேல் இல்லை என்பால்
வாய்த்திலேன் அடிமை தன்னுள் 
  வாய்மையால் தூயே னல்லேன்
பார்த்தனுக் கருள்கள் செய்த 
  பரமனே பரவு வார்கள்
தீர்த்தமே திகழும் பொய்கைத் 
  திருப்புக லூர னீரே.   7 
  
 
நீருமாய்த் தீயு மாகி 
  நிலனுமாய் விசும்பு மாகி
ஏருடைக் கதிர்க ளாகி 
  இமையவர் இறைஞ்ச நின்று
ஆய்வதற் கரிய ராகி 
  அங்கங்கே யாடு கின்ற
தேவர்க்குந் தேவ ராவார் 
  திருப்புக லூர னாரே.   8
  
மெய்யுளே விளக்கை ஏற்றி 
  வேண்டள வுயரத் தூண்டி
உய்வதோர் உபாயம் பற்றி 
  உகக்கின்றேன் உகவா வண்ணம்
ஐவரை அகத்தே வைத்தீர் 
  அவர்களே வலியர் சாலச்
செய்வதொன் றறிய மாட்டேன் 
  திருப்புக லூர னீரே.   9 
   
		
அருவரை தாங்கி னானும் 
  அருமறை யாதி யானும்
இருவரும் அறிய மாட்டா 
  ஈசனார் இலங்கை வேந்தன்
கருவரை எடுத்த ஞான்று 
  கண்வழி குருதி சோரத்
திருவிரல் சிறிது வைத்தார் 
  திருப்புக லூர னாரே.
  
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.

சுவாமி:அக்கினீசுவரர்;அம்பாள்:கருந்தார்க்குழலியம்மை.10

திருச்சிற்றம்பலம்

Audio


அ௫ளியவர் : திருநாவுக்கரசர்

திருமுறை : நான்காம்-திருமுறை

பண் : திருநேரிசை

நாடு : சோழநாடு காவிரித் தென்கரை

தலம் : புகலூர்

Author : மதுரை முத்துக்குமரன்

Copyrights © 2022 to Saivaneethi. All rights reserved.