சமீபத்திய செய்தி

உலகத்திலே பல சமயங்கள் உள்ளன. அவற்றுள், ஈழத்தில் வழங்கும் சமயங்கள் நான்கு, அவை சைவம்
நன்கொடை
English

+94 123 456 789

நன்கொடை
English

416 528 1407

01.021 புவம்வளி கனல்புனல்

திருச்சிற்றம்பலம்

புவம்வளி கனல்புனல் புவிகலை
  யுரைமறை திரிகுணம் அமர்நெறி
திவமலி தருசுரர் முதலியர் 
  திகழ்தரும் உயிரவை யவைதம
பவமலி தொழிலது நினைவொடு 
  பதுமநன் மலரது மருவிய
சிவனது சிவபுரம் நினைபவர் 
  செழுநில னினில்நிலை பெறுவரே.   1 
        
மலைபல வளர்தரு புவியிடை 
  மறைதரு வழிமலி மனிதர்கள்
நிலைமலி சுரர்முதல் உலகுகள் 
  நிலைபெறு வகைநினை வொடுமிகும்
அலைகடல் நடுஅறி துயிலமர் 
  அரியுரு வியல்பர னுறைபதி
சிலைமலி மதிள்சிவ புரம்நினை 
  பவர்திரு மகளொடு திகழ்வரே.   2 
        

பழுதில கடல்புடை தழுவிய 
  படிமுத லியவுல குகள்மலி
குழுவிய சுரர்பிறர் மனிதர்கள் 
  குலம்மலி தருமுயி ரவையவை
முழுவதும் அழிவகை நினைவொடு 
  முதலுரு வியல்பர னுறைபதி
செழுமணி யணிசிவ புரநகர் 
  தொழுமவர் புகழ்மிகு முலகிலே.   3 
		

நறைமலி தருமள றொடுமுகை 
  நகுமலர் புகைமிகு வளரொளி
நிறைபுனல் கொடுதனை நினைவொடு 
  நியதமும் வழிபடும் அடியவர்
குறைவில பதம்அணை தரஅருள் 
  குணமுடை யிறையுறை வனபதி
சிறைபுன லமர்சிவ புரமது 
  நினைபவர் செயமகள் தலைவரே.   4 
		

சினமலி யறுபகை மிகுபொறி 
  சிதைதரு வகைவளி நிறுவிய
மனனுணர் வொடுமலர் மிசையெழு 
  தருபொருள் நியதமும் உணர்பவர்
தனதெழி லுருவது கொடுஅடை 
  தகுபர னுறைவது நகர்மதிள்
கனமரு வியசிவ புரம்நினைப 
  வர்கலை மகள்தர நிகழ்வரே.   5 
		
		
சுருதிகள் பலநல முதல்கலை 
  துகளறு வகைபயில் வொடுமிகு
உருவிய லுலகவை புகழ்தர 
  வழியொழு குமெயுறு பொறியொழி
அருதவ1 முயல்பவர் தனதடி 
  யடைவகை நினையர னுறைபதி
திருவளர் சிவபுரம் நினைபவர் 
  திகழ்குலன் நிலனிடை நிகழுமே.
	    

பாடம் : 1தருதவ 6


கதமிகு கருவுரு வொடுவுகி 
  ரிட2வட வரைகண கணவென
மதமிகு நெடுமுக னமர்வளை 
  மதிதிக ழெயிறதன் நுதிமிசை
இதமமர் புவியது நிறுவிய 
  எழிலரி வழிபட அருள்செய்த
பதமுடை யவனமர் சிவபுரம் 
  நினைபவர் நிலவுவர் படியிலே.
	    

பாடம் : 2வுகிரிடை 7


அசைவுறு தவமுயல் வினிலயன் 
  அருளினில் வருவலி கொடுசிவன்
இசைகயி லையையெழு தருவகை 
   யிருபது கரமவை நிறுவிய
நிசிசரன் முடியுடை தரவொரு 
  விரல்பணி கொளுமவ னுறைபதி
திசைமலி சிவபுரம் நினைபவர் 
  செழுநில னினில்நிகழ் வுடையரே.   8 
        

அடல்மலி படையரி அயனொடும் 
  அறிவரி யதொரழல் மலிதரு
சுடருரு வொடுநிகழ் தரவவர் 
  வெருவொடு துதியது செயவெதிர்
விடமலி களநுத லமர்கண 
  துடையுரு வெளிபடு மவன்நகர்
திடமலி பொழிலெழில் சிவபுரம் 
  நினைபவர் வழிபுவி திகழுமே.   9 
	    

குணமறி வுகள்நிலை யிலபொரு 
  ளுரைமரு வியபொருள் களுமில
திணமெனு மவரொடு செதுமதி 
  மிகுசம ணருமலி தமதுகை
உணலுடை யவருணர் வருபர 
  னுறைதரு பதியுல கினில்நல
கணமரு வியசிவ புரம்நினை 
  பவரெழி லுருவுடை யவர்களே.   10 
	    
		
திகழ்சிவ புரநகர் மருவிய 
  சிவனடி யிணைபணி சிரபுர
நகரிறை தமிழ்விர கனதுரை 
  நலமலி யொருபதும் நவில்பவர்
நிகழ்குல நிலநிறை திருவுரு 
  நிகரில கொடைமிகு சயமகள்
புகழ்புவி வளர்வழி யடிமையின் 
  மிகைபுணர் தரநலம் மிகுவரே.

சுவாமி : சிவபுரீஸ்வரர்; அம்பாள் : ஆர்யாம்பாள். 11

திருச்சிற்றம்பலம்

Audio


அ௫ளியவர் : திருஞானசம்பந்தர்

திருமுறை : முதல்-திருமுறை

பண் : நட்டபாடை

நாடு : சோழநாடு காவிரித் தென்கரை
தலம் : சிவபுரம்

Author : மதுரை முத்துக்குமரன்

Copyrights © 2022 to Saivaneethi. All rights reserved.