சமீபத்திய செய்தி
நாயன்மார் வரலாறு
ஒன்பதாம் திருமுறை
புருடோத்தம நம்பி
திருவிசைப்பாவை அருளிச்செய்த ஆசிரியர்களில் எட்டா மவராக அமைந்தவர் புருடோத்தம நம்பி. புருஷோத்தமன் என்ற பெயர் திருமால் பெயர்களில் ஒன்று, இவர் தம்மை “மாசிலா மறைபல ஓதுநாவன் வண்புருடோத்தமன்“ என்று கூறிக் கொள்வதால் இவர் வைணவ அந்தணர் குலத்தில் தோன்றியவர் என அறியலாம். வைணவ குலத்தில் தோன்றிச் சிவபெருமானிடத்துப் பக்தி பூண்டு சிவனடியாராக விளங்கியவர் இவர். நம்பி என்பது இவரது சிறப்புப் பெயர்.
இவர் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கியவர். தில்லையில் எழுந்தருளியுள்ள நடராசப்பெருமானையே வழிபட்டுக்கொண்டு சிதம்பரத்திலேயே வாழ்ந்துவந்தவர் என்பர்.
புருடோத்தமநம்பி அருளிச்செய்த திருவிசைப்பாப் பதிகங்கள் இரண்டு. இவை கோயில் என்னும் சிதம்பரத்தைப் பற்றியனவேயாகும்.
இவரைப்பற்றிய பிற செய்திகள் அறியக்கூடவில்லை.
Copyrights © 2022 to Saivaneethi. All rights reserved.