சமீபத்திய செய்தி
திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் தேவாரம்
திருக்கோணமலைப் பதிகம்
பிள்ளையார் பாண்டி நாட்டில் சமணரை வாதில் வென்றரின், நெடுமாற பாண்டியரும், மங்கையர்க்கரசியாரும், குலச்சிறையாரும். உடன்வரப் பாண்டிநாட்டுத் தலங்களுக்கு யாத்திரை செய்துகொண்டு, திருவிராமேச்சுரத்தை அடைந்து சுவாமி தரிசனஞ் செய்துகொண்டு சிலநாள் எழுந்தருளி இருந்தார். அங்ஙனம் இருக்கும் நாவில், ஆழிசூழ்ந்த ஈழ, நாட்டில் இறைவன் எழுந்தருளியிருக்கும் திருக்கோணமலை, திருக்கேதீச்சரம் ஆகய இரு தலங்களையும் இசைநோக்கித் தொழுது தேவாரப் பதிகங்கள் பாடியருளினார். இத் இருப்பதிகம் மூன்றாந் இருமுறையில் உள்ளது.
பண்: புறநீர்மை
திருச்சிற்றம்பலம்
1. நிரைகழ லரவஞ் சிலம்பொலி அலம்பும் நிமலர்நீ றணிதிரு மேனி
வரைகெழு மகளோர் பாகமாப் புணர்ந்த வடிவினர் கொடியணி விடையர்
கரைகெழு சந்துங் கார்திற் பிளவும் அளப்பருங் கனமணி .வரன்றிக்
குரைகட லோதம் நித்திலங் கொழிக்குங் கோணமா மலையமர்ந் தாரே.
பொழிப்பு:வீரக்கழலும் சிலம்பும் ஒலிக்கும் திருவடிசளுடைய பரிசுத்தர், இருநீறணிந்த தம் திருமேனியில் மலைமகளாகிய உமாதேவியாரைப் பாகமாகக் கொண்ட கோலத்தினர், இட்பமெழுதிய கொடியை உடையவராகய சிவபெருமான் கரையிலே சந்தனம் அகில் அளவில்லாத மணிகள் ஆகியவற்றை வாரிக்கொண்டுவந்து ஒலிக்கன்ற கடலின் திரைகள் முத்துக்களையும் கொழித்து ஒதுக்குகின்ற திருக்கோணமலையில் எழுந்தருளி இருக்கின்றார்.
குறிப்பு : நிமலர் – தூயவர், பரிசுத்தர், வரை – மலை. சந்து- சந்தனம், வரன்றுதல் – வாருதல், ஓதம் – திரை. நித்திலம் – முத்து.
2. கடிதென வந்த கரிதனை உரித்து அவ்வுரி மேனிமேற் போர்ப்பர்
பிடியன நடையாள் பெய்வளை மடந்தை பிறைநுத லவளொடு முடஞய்க்
கொடிதெனக் கதறுங் குரைகடல் சூழ்ந்து கொள்ளமுன் நித்திலஞ் சுமந்து
குடிதனை நெருங்கிப் பெருக்கமாய்த் தோன் றுங் கேரணமா மலையமர்க் தாரே
பொழிப்பு : வேகமாய் வந்த கயாசுரன் என்னும் யானையை உரித்து அதன் தோலைத் தோளிலே போர்த்தருளியவர், பெண்யானை போலும் நடையும், ௮ணித்த வளையலும், பிறைபோலும் நெற்றியுமுடைய உமையம்மையோடு கூடத் திருக்கோணமலையில் வீற்றிருக்கின்றார். அம்மலையானது, கொடிதாக ஓலிக்கின்ற கடலானது சூழ்ந்து சேற்றையும், முத்தையும் சுமந்துகொண்டு அயலிலுள்ள குடிகளை நெருக்கிக்கொண்டு பெருக்கமாய்த் தோன்றுவதாகும்.
குறிப்பு: -கரி – யானை – கயாசுரன். உரி – தோல் – உரிக்கப்பட்டது. பிடி- பெண் யானை. நுதல் – நெற்றி. கொள்ளம் – சேறு, யானை வடிவாயிருந்த கயாசுரன், தனக்குப் பயந்தோடிய தேவரும் முனிவரும் காமில் விசுவநாதப்பெருமான் கோயிலில் அடைக்கலம் புகுந்தருக்க அங்கும் அவர்களைக் கொல்லச் சென்றான். அப்போது பெருமான் தேவரைக்காக்கும் பொருட்டு யானையை உதைத்து அதன் தோலை உரித்துப் போர்த்தருளினார்.
3. பனித்திளந் திங்கள் பைந்தலை நாகம் படர்சடை முடியிடை வைத்தார்.
கனித்திளந் துவர்வாய்க் காரிகை பாக மாகழுன் கலந்தவர் மதில்மேல்
தனித்தபே ருருவ விழித்தழல் நாகந் தாங்கிய மேருவெஞ் சிலையாக்
குனித்ததோர் வில்லார் குரைகடல் சூழ்ந்த கோணமா மலையமர்ந் தாரே
பொழிப்பு : குளிர்ச்சிபொருந்திய. இளம்பிறையையும், படம் விரிக்குந் தலையுள்ள பாம்பையும் படர்ந்த சடாமுடியில் வைத்தவரும், கொவ்வைக் கனிபோன்ற மென்மையான சிவந்த வாயுள்ளஉமாதேவியைப் பாகத்திலே கலந்திருக்கக் கொண்டவரும், முப்புரங்களின் மேலே போராட ஒப்பற்ற பேருருவம். கோபத்தீ சிதறும் கண்ணுடைய வாசுகி என்னும் பாம்பை நாணாகக் கொண்டு மேரு மலையை வில்லாகும்படி வளைத்துக்கொண்ட வில்லாளருமாகிய சிவபெருமான், ஒலிகடல் சூழ்ந்த திருக்கோணமலையில் அமர்ந்தருளுகின்றார்.
குறிப்பு : பனி – குளிர், இங்கள் – சந்திரன், பை- படம் கனி கொவ்வைப்பழம், துவர் – சிவப்பு, காரிகை – பெண் உமை, மதில், முப்புரம், தனித்த ஒப்பற்ற நாகம் – பாம்பு – வாசுகி, குனித்த – வளைத்த் வில்லார் – வில்வீரர்.
4. பழித்திளங் கங்கை சடையிடை வைத்துப் பாங்குடை மதனனைப் பொடியா
விழித்தவன் தேவி வேண்டமுன் கொடுத்த வீமலஞர். கமலமார் பாதர்
தெழித்துமுன் அரற்றுஞ் செழுங்கடற் றரளஞ் செம்பொனும் இப்பியுஷ் சுமந்து
கொழித்துவன் திரைகள் கரையிடைச் சேர்க்குங் சோணமா மலையமர்க் தாரே.
பொழிப்பு : கங்கையைச் சடையிலே வைத்தும், மன்மதன் வெந்து பொடியாகும் வண்ணம் நெற்றிக்கண்ண விழித்துப் பார்த்தும், பின் மனமில்லாதவர். கமலம் தாமரை. தரளம் – மூத்து. பரேதன் தவத்ராகும்படி செய்வேனென்று மலரம்புகளை எய்த மன்மதனை, சிவபெருமான் நெற்றிக்கண்ணாற் பார்த்து எரித்துப் பொடியாகச் செய்தார். பின்பு இரதி இரந்து வேண்ட, அவளுக்கு உருவமுடையவனாயும், – மற்றவர்களுக்கு உருவிலியாயும் இருக்கும்படி மன்மதனை. மீள எழுந்து வரச் செய்தருளினார்.
5. தாயினும் நல்ல தலைவரென் றடியார் தம்மடி போற்றிசைப் பார்கள்
வாயினும் மனத்தும் மருவிரின் கலா மாண்பினர் காண்பல வேடர்
நோயிலும் பிணியும் தொழிலர்பால் ரீக்கி நுழைதரு நூலினர் ஞாலங்
கோயிலுஞ் சுனையுங் கடலுடன் சூழ்ந்த கோண மா மலையமர்ந் தாரே.
பொழிப்பு: தம்மடியவர்கள் “தாயினுமினிய தம்பிரான்” என்று தம் பாதங்களைப் போற்ற, அவ்வடியாரது வாயிலும் மனத்திலும் (சொல்லிலும் நினைவிலும்) பொருந்தியிருந்து நீங்காத மாண்புடையவரும், காணும் பல வேடமுடையவரும், தொண்டு செய்யும் தொழிலுடையவர்களை நோய் பிணிகளினின்றும் நீக்கி (அவர்களறிவிலே) நுழையும் வேதம் முதலான நூல்களாயிருப்பவரும் ஆய சிவபிரான், பூமியிலே கோயிலும், சுனைகளுங் கடலுஞ் சூழ்ந்துள்ள திருக்கோணமலையில் அமர்ந்துள்ளார்.
திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் தேவாரம்
திருவாலவாய் திருநீற்றுப் பதிகம்
கூன்பாண்டியன் என்னும் பாண்டிய மன்னனும், நாட்டு மக்களும் சமணம் புகுந்தமை கண்டு, மற்கையர்க்கரசியாரும் குலச்சிறை நாயனாரும் மனம் வருந்தி, ௮தனை அடியார் மூலம் வேதாரணியத்திலிருந்த திருஞான சம்பந்தமூர்த்தி நாயனாருக்கு விண்ணப்பித்தனர். நாயனார் அவர் சூறை தீர்த்தற்பொருட்டுப் பாண்டிநாட்டுக்கு வந்து, ஒரு மடத்துலே எழுந்தருளினார். அவர் அங்;கு எழுந்தருளியிருத்தலைப் பொறாத சமணர், மடத்துக்கத் தீயிட்டனர் நாயனார் “செய்யனே என்றெடுத்து” “அமணர் கொழுவும் சுடர் பையவே சென்று பாண்டியற்காகவே” என்று பாடியருள, அத்த பாண்டியன்பால் வெப்புநோயாய்ச் சேர்ந்து வருத்தியது. சமணருடைய – மருந்தாலும் மந்திரங்களாலும் நீங்காமல் மேன்மேல் அதிகரித்தது. அதனைத் தீர்த்தருளும்படி மங்கையர்க்கரசியார் நாயனாரிடம் விண்ணப்பித்தார். நாயனார் அரண்மனைக்கு எழுந்தருளிப் பாண்டியனுக்கு ‘நீறு சாத்தி இத் திருப்பதிகத்தைப் பாடியருள அவனது வெப்புநோம் நீங்கற்று. அவனும் நாட்டு மக்களும் சைவ சமய மகிமையை உணர்ந்து சைவசமயிகளாயினர். இப் பதிகம் இரண்டாம் திருமுறையில் உள்ளது.
பண் : காந்தாரம்.
திருச்சிற்றம்பலம்
1. மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு
தந்திர மாவது மீறு சமயத்தில் உள்ளது நீறு
செந்துவர் வாயுமை பங்கன் திருவால வாயான் திருநீறே
பொழிப்பு: மந்திரமாய் இருப்பதும், தேவர்கள் தங்கள் மேல் அணியப் பெற்றிருப்பதும், அழகாலதும், வணங்கப்படுவதும், சிவாகமத்திலே சிறப்பாகச் சொல்லப்படுவதும், சைவசமய சின்னமாயுள்ளதுந் திருநீறு. இப்பெருமைகளையுடைய இது, வந்த பவளம் போன்ற திருவாயினை உடைய உமாதேவியாரை இடப்பக்கத்திலே கொண்ட திருவாலவாய்ப் பெருமானது திருநீறேயாம்.
குறிப்பு: வானவர் – தேவர், சுந்தரம்-அழகு, தந்திரம்-ஆகமம், சமயத்தில் – சைவசமயத்தில், உள்ளது. சின்னமாயுள்ளது, செந்துவர்- சிவந்த பவளம், பங்கன் – பக்கத்தலே கொண்டவர், பங்காக – உடையவன், திருஆலவாய் – மதுரையிலுள்ள சிவாலயம் பாண்டியனது வேண்டுகோளின்படி, சிவபெருமான் தமது திருக்கையிலணிந்த சிறு பாம்பினாலே மதுரையின் எல்லைகாட்டிய காரணத்தால் ‘ஆலவாய்’ என்னும் பெயருடையதாயீற்று. (ஆலவாய்- நஞ்சை வாயிலே உடையது-பாம்பு.)
2. வேதத்தில் உள்ளது நீறு வெந்துயர் தீர்ப்பது நீறு
போதந் தருவது நீறு புன்மை தவிர்ப்பது நீறு
ஓதத் தகுவது நீறு – உண்மையில் உள்ளது நீறு
சீதப் புனல்வயல் சூழ்ந்த திருவால வாயான் திருநீறே.
பொழிப்பு: வேதத்திலே சிறப்பித்துச் சொல்லப்பெற்று இருப்பதும், கொடிய துன்பங்களை ஒழிப்பதும், மெய்யுணர்வைத் தருவதும், இழிந்த இயல்புகளை நீக்குவதும், யாவராலும் படித்து ஆராய்ந்து உணரத்தக்கதும், உண்மை நூல்களிலே சிறப்பித்துச் சொல்லப்பட்டுள்ளதும் திருநீறு. இப்பெருமைகளை உடைய இது குளிர்ந்த நீர்வளமுள்ள வயல்களாற் சூழப்பட்ட திருவாலவாயிலே எழுந்தருளிய சிவபெருமானது திருநீறே,
குறிப்பு: வெந்துயர் – கொடிய துன்பம், போதம்-மெய்யுணர்வு, சிவஞானம். புன்மை-இழிந்த செயல்கள்-இழிந்த குணஞ் செயல்கள், ஒதுதல்-படித்துணர்தல், திருநீற்றின் மகிமை யாவரும் உணரவேண்டுவது ஆதலால் “ஓதத்தருவது” என்று கூறப்பட்டது. சதம்- குளிர், புனல் – நீர்;
3. முத்தி தருவது நீறு முனிவர் அணிவது நீறு
சத்திய மாவது நீறு தக்கோர் புகழ்வது நீறு
பத்தி தருவது நீறு பரவ இனியது நீறு
சித்தி தருவது நீறு திருவால வாயான் திருநீறே.
பொழிப்பு: முத்தியின்பத்தைத் தருவதும், முனிவர் அணிந்து கொள்வதும், உண்மையாவதும், சிவனடியார் புகழ்ந்துரைப்பதும், பத்தியைத் தருவதும், துதிக்க இன்பம் பயப்பதும், சிறந்த பேறுகளைத் தருவதும் திருநீறு. இத்தகைய பெருமை வாய்ந்த இது திருவாலவாய்ப் பெருமானது திருநீறே.
குறிப்பு: முத்தி – வீடு – பேறு. மும்மலங்களும் அகன்று பேரின்பப் பேறெய்தி நிற்கும் நிலை. தக்கோர் – சிவனடியார், பரவுதல் – துதித்தல், போற்றுதல், சித்தி – சிறந்தபேறு, நற்பேறு.
4. காண இனியது நீறு கவினைத் தருவது நீறு
பேணி அணிபவர்க் கெல்லாம் பெருமை கொடுப்பது நீறு
மாணந் தகைவது நீறு மதியைத் தருவது நீறு
சேணந் தருவது நீறு திருஆல வாயான் திருநீறே.
பொழிப்பு : காணும்போது இன்பம் பயப்பதும், அழகைத் தருவதும், விரும்பித் தரித்துக்கொள்பவர்களுக்குப் பெருமை தருவதும், மாட்சிமையை நீங்காமற்றடுப்பதும், அறிவைத் தருவதும், மேலுலக இன்பத்தைத் தருவதும் திருநீறு இவ்வியல்புகளையுடைய இது திருவாலவாய்ப் பெருமானது திருநீறே.
குறிப்பு : கவின்-அழகு, பேணுதல்-விரும்புதல், மதித்தல், பாதுகாத்தல்; மாணம்- மாட்சிமை. தகைவது-நீங்காமற்றடுப்பது. மதி-அறிவு. சேணம் (சேண் £ அம்) என்பதில் சேண் – மேலுலகம்;| அம்-சாரியை.
5. பூச இனியது நீறு புண்ணிய மாவது நீறு
பேச இனியது நீறு பெருந்தவத் தோர்களுக் கெல்லாம்
ஆசை கெடுப்பது நீறு அந்தம தாவது நீறு
தேசம் புகழ்வது நீறு திருவால வாயான் திருநீறே.
பொழிப்பு : தரித்துக்கொள்ள இன்பமளிப்பதும், புண்ணிய வடிவம் ஆவதும், எடுத்துரைப்பதற்கு இனியதாயிருப்பதும், பெரிய தவமுள்ளவர்களுக்கு அவர்களது உலகப்பற்றுக்களை நீக்குவதும், எல்லாப் பொருள்களின் முடிவாயிருப்பதும், உயர்ந்தோராற் புகழப்படுவதும் திருநீறு. இத்தகைய பெருமையுடையது திருவாலவாய்ப் பெருமானது திருநீறே.
குறிப்பு : ஆசை-உலகப்பற்று. திருநீறு இல்லறத்தாருக்குப் புண்ணியப்பயனான இம்மை இன்பங்களைக் கொடுத்து உதவுதலால் “புண்ணியம் ஆவது” என்றும் துறவறத்தாருக்கு ஆகாத உலகப்பற்றுக்களை நீக்குதலால் “ஆசை கெடுப்பது” என்றும் கூறப்பட்டது. எல்லாப் பொருள்களும் இதனுருவம் அடைந்து முடிவாகும் இயல்பின ஆதலால் “அந்தமதாவது” என்று கூறப்பட்டது. தேசம் – இடவாகுபெயரால் உயர்ந்தோரைக் குறித்தது.
திருநாவுக்கரசு நாயனார் தேவாரம்
நமச்சிவாயப் பதிகம்
உலக நிலையாமை கண்டு இளமையிலேயே துறவு பூண்டு சமண சமயப் பெருங் சூரவராய்த் தருமசேனர் என்னும் பெயரோடு விளங்கும் நாளில், சிவபிரான் திருவருளாலே தம்மைப் பற்றிய சூலைநோய் நீக்காமை கண்டு, திருவதுகையை அடைந்து, திலகவதியாரிடம் திருநீறு பெற்றுத் தரித்துடி “கூற்றாயினவாறு” என்னும் தேவாரம் பாடியருளிச் சூலை நீங்கி இறைவனே “நாவுக்கரசன்” என நாமமிடப்பெற்ற திருநாவுக்கரச சுவாமிகளாலே சமண சமயம் தாழ்வடையப் போறதே என்று அஞ்சிய சமண குரவர்களின் சூழ்ச்சிக்காளான பல்லவ மன்னன் அப்பரை அழைப்பித்து அவரைக் கொல்லும் பொருட்டு நீற்றறையிலிட்டும், நஞ்சூட்டியும், யானையை ஏவியும் ஒன்றுஞ், செய்யமுடியாது போகவே, அவரைக் கல்லோடு கட்டிக் கடலிலிடுமாறு பணித்தான். அரசகட்டளை நிறை வேற்றப்பட்டபோது அப்பர் சுவாமிகள் பின்வரும் நமச்சிவாயப் பதிகத்தைப்பாடியருளினார். அப்போது கல்லே தெப்பமாக மிதக்கக் கட்டுகள் கழன்று போக, மெல்ல மெல்லத் திருப்பாதிரிப் புலியூர் என்னும் திருப்பதியில் கரைசேர்ந்தார். கல்லே தெப்பமாகக் கரைசேர்ந்த நாயனாரைச் சிவனடியார்கள் மழ்ச்சியோடும், சிவநாம ஒலியோடும் வரவேற்று வணங்கப் போற்றினர். இப் பதிகத்தில். திருவருளே வடிவாய் திருவைந்தெழுத்து மந்திரத்தின் சிறப்புச் சொல்லப்படுகிறது. இப்பதிகம் நான்காம் திருமுறையில் உள்ளது.
பண் : காந்தார பஞ்சமம்
திருச்சிற்றம்பலம்
1. சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமச்சி வாயவே.
பொழிப்பு : ஆருயிர்க்குத் துணைவன் எனச் சொல்லப்படுகின்ற வேதப் பொருளாயுள்ளவனும், ஞானச் சோதிவடிவான தேவனும் – ஆகிய சிவபிரானது பொன்போன்ற திருவடிகளை மனம்பொருந்தி அன்பு செய்து கைதொழுது வணங்கினால், அங்ஙனம் வணங்குபவரைக் கல்லையும் தணையாகச் சேர்த்துக் கட்டிக் கடலினுள்ளே விட்டாலும், அமிழ்ந்திவிடாதபடி நல்ல தணையாக நின்று கரைசேர்த்து உய்யும் படி உதவுவது நமச்சிவாய என்னும் திருவைந்தெழுத்தே.
குறிப்பு : வேதியன்-வேதத்தின் உட்பொருளாயவன், பொருந்த – மனம், வாக்குக், -காயம் ஒருமுகப்பட்டு?
2. பூவினுக் கருங்கலம் பொங்கு தாமரை
ஆவினுக் கருங்கலம் அரனஞ் சாடுதல்
கோவினுக் கருங்கலங் கோட்டம் இல்லது
நாவினுக் கருங்கலம் நமச்சி வாயவே.
பொழிப்பு : பூக்களுக்கெல்லாம் சிறப்பாயுள்ளது பொலிவுடைய தாமரை மலர் பசுவுக்குச் சிறப்புத் தருவது பஞ்ச கவ்வியங்களால் இறைவன் மஞ்சனம் ஆடுதல் அரசனுக்குச் சிறப்பாவது செங்கோல் கோடாதிருத்தல் நாவுக்குச் சிறப்பு நமச்சிவாய மந்திரத்தை ஓதுதல்,
குறிப்பு : அருங்கலம் – அணி- சிறப்பு, ஆ- பசு. கோ – அரசன். கோட்டம் – கோடுதல் (நீதி தவறுதல்). நா- நாக்கு.
2. விண்ணுற அடுக்கிய விறகின் வெவ்வழல்
உண்ணிய புகில்அவை ஒன்றும் இல்லையாம்
பண்ணிய உலகினிற் பயின்ற பாவத்தை
நண்ணிநின் றறுப்பது நமச்சி வாயவே.
பொழிப்பு : விண்ணை முட்ட அடுக்கிய விறகுக் குவியலில் கொடிய நெருப்பானது அதை உண்பதற்குச் சென்றால், அவ்விறகல் ஒன்றும் எஞ்சாதபடி எரித்துண்டுவிடும்;. அதுபோல நாம் பிறந்து பயின்று வாழும் உலகத்திலே பண்ணிய பாவம் முழுவதையும் (நாம் பஞ்சாட்சர செபஞ் செய்தால்) பொருந்திநின்று எரித்தழிக்க வல்லது அந்த நமச்சிவாய மந்திரமே.
குறிப்பு : வெவ்வழல் – கொடிய உண்ணிய – உண்பதற்கு, தீ, விறகை எஞ்சாதபடி எரிப்பதுபோல நமச்சிவாய மந்திரம் ஓதுவாரது வினைகளை எஞ்சாமல் அழிக்கும்.
4. இடுக்கண்பட் டிருக்கினும் இரந்து யாரையும்
விடுக்கற் பிரானென்று வினவுவோ மல்லோம்
அடுக்கற்கீழ்க் கடக்கினும் அருளின் நாமுற்ற
நடுக்கத்தைக் கெடுப்பது நமச்சி வாயவே.
மொழிப்பு: நாம் எத்தனை துன்பமுற்றிருக்கும் போதிலும், சிவபிரானையன்றி, வேறு யாரையும் நம்மை ஆபத் இனின்றும் விடுவிப்பீராக என்று இரந்து கேட்கமாட்டோம். மேலும் ஒருவார் தாமாக வந்து விடுவித்தாராயினும் அவரைப் பிரான்-இறைவன்-என்று நாம் மதிக்கவும் மாட்டோம்;| மலையின் கீழே அகப்பட்டு வருந்த நேரிடினும், அருளாலே முன்வந்து, நாமடைந்த வருத்தத்தைத் தணித்து உய்விப்பது நமச்சிவாய மந்திர செபமேயாகும்.
குறிப்பு: இடுக்கண் – துன்பம். விடுக்கில் – விடுவித்தால், அடுக்கல் -மலை. நடுக்கம் – வருத்தம்,
5. வெந்தநீ றருங்கலம் விரதி கட்கெலாம்
அந்தணர்க் கருங்கலம் அருமறை ஆறங்கம்
திங்களுக் கருங்கலந் இகழும் நீண்முடி
நங்களுக் கருங்கலம் நமச்சி வாயவே.
பொழிப்பு : விரதிகளாகிய முனிவர்களுக்குச் சிறந்த அணியாயுள்ளது சுடப்பட்ட திருநீறாகும்;. அந்தணருக்குச் சிறந்த அணி அருமையான நால்வேதமும் ஆறங்கமுமேயாம்; சந்திரனுக்குச் சிறப்புத் தருவது சிவபிரானது நீட்ட சடாமுடியில் அணியப்பெற்றிருத்தல்;| சிவனடியேங்களாகிய நமக்குச் சிறந்த அணியாவது நமச்சிவாய மந்திர செபமேயாகும்.
சுந்தரமூர்த்து நாயனார் தேவாரம்
திருக்கேதீச்சரப் பதிகம்
சுந்தரமூர்த்தி நாயனார் தம் தோழராக சேரமான்பெருமாள் நாயனாரோடு பாண்டி நாட்டுத் தலயாத்திரை. செய்துகொண்டு, திருவிராமேச்சரத்தை அடைந்து, சுவாமி தரிசனஞ் செய்துகொண்டிருக்கும் நாளில், ஈழ நாட்டுத் திருப்பதியான திருக்கேதீச்சரத்தையும் அங்கிருந்தவாறே தொழுது பதிகம் பாடியருளினாச் இப்பதிகம் ஏழாந் திருமுறையில் உள்ளது.
இத்தலம் ஈழத்து வடமேற்குப் பாகத்தில் மன்னார்ப் பகுதியிலுள்ள மாந்தையிலுள்ளது. இத்தலத்தையும் தென்கயிலை என்றும், வாயுதேவன் பறித்தெறிந்த திருக்கயிலைச் சிகரத்தில் ஒன்றுதான் இங்கு வீழ்ந்து இப் பெயரோடு நிலைத்ததென்றும் புராணம் கூறும். இத்தலத்தில் கேதுவும், மகாதுவட்டாவும், அகத்தியரும் இராமரும் பூசித்து அருள் பெற்றனர். கேது பூசித்ததால் கேதீச்சரம் என்றும், மகாதுவட்டா பூசித்ததால் மகா துவட்டாபுரம் என்றும், அப்பெயரே மருவி இன்று மாதோட்டம் – மாந்தை என வழங்குகின்றது என்றும் சொல்வர். மாதோட்டம் விஜயன் முதலிய அரசர்களின் தலைநகராயும், துறைமுகமாயும் விளங்கியதென்பர். அம்மை பெயர் – கௌரி அம்பாள் சுவாமி. பெயர் – கேதீச்சுரர்.
பண்: நட்டமாடை இருச்சிற்றம்பலம்
1. நத்தார்படை ஞானன்பசு ஏறிந்நனை கவிழ்வாய்
மத்தம்மத யானைஉரி போர்த்தமண வாளன்
பத்தாகிய தொண்டர்தொழு பாலாவியின் கரைமேல்
செத்தாரெலும் பணிவான்திருக் கேதீச்சரசத் தானே.
பொழிப்பு : சங்கைப் படையாகக் கொண்ட ஞானியாகிய விஷ்ணுவையே இடப வாகனமாகக் கொண்டவரும், மதத்தால் நனைந்த கவிழ்ந்த வாயையும், மதத்தால் செருக்சையுங் கொண்ட, கயாசுரன் என்னும் யானையை உரித்து அதன் தோல்ப் போர்த்த மணவாளரும் ஆகிய சிவபிரான், பற்றுடைய தொண்டர்கள் தொழும் பாலாவித் தீர்த்தத்தை அடுத்துள்ள திருக்கேதீச்சரத்தில் செத்த (பிரமா, விஷ்ணு என்பவர்களின்) எலும்பைப் பூண்டவராய் எழுந்தருளியுள்ளார்.
குறிப்பு : நத்து – சங்கு – பாஞ்சசன்னியம் (விஷ்ணுவின் ஐம்படைகளில் ஒன்று), ஞானன் – ஞானி அறிதுயில் கொள்ளும் விஷ்ணு பசு – இடபம். மத்தம் – உன்மத்தம், செருக்கு. பத்து – பற்று-அன்பு.
2. சுடுவார்பொடி நீறும்நல்ல துண்டப்பிறை கீளுங்
கடமார்களி யானைஉரி அணிந்தகறைக் கண்டன்
படவேரிடை மடவாளொடு பாலாவியின் கரைமேல்
திடமாவுறை கின்றான்திருக் கேதீச்சரத் தானே.
பொழிப்பு : சர்வசங்கார்த்தில் சுடப்பட்டு வெந்த பிரம விஷ்ணுக்களின் சாம்பரும், நல்ல ஒரு கலையாகிய பிறைச்சந்திரனும்களுடையும், மதச் செருக்குள்ள யானைத்தோலும் அணிந்த நீலகண்டராய சிவபிரான், சர்ப்ப படம் போன்ற இடையுடைய கௌரியம்மையோடும் பாலாவித் தீர்த்தத்தை அடுத்துள்ள திருக்கேதீச்சரத்தில் நிலையாக எழுந்தருளி இருக்கின்றார்.
குறிப்பு : உலகம் அழிந்து பிரம விஷ்ணுக்களில் ஒடுங்க, அவர்களையும் அழித்துத் தம்மிடம் ஒடுங்கச் செய்பவர் சிவபிரான். அந்த ஒடுக்கத்தை – லயத்தைக் குறிக்கவே நீற்றை அணிந்தருளினார். கீழ் – சிவனடியார் அணியும் ஒருவகை உடை கறைக்கண்டன் -நஞ்சையுண்டதால் நீலமான கழுத்துடையவர். திடமாய்-உறுதியாய்- நிலையாய்.
3. அங்கம்மொழி அன்னாரவர் அமரர்தொழு தேத்த
வங்கம்மலி கின்றகடல் மாதோட்டநன் னகரில்
பங்கஞ்செய்த பிறைசூடினன் பாலாவியின் கரைமேல்
செங்கண்ணர வசைத்தான்திருக் கேதீச்சரத் தானே.
பொழிப்பு : மரக்கலங்கள். வந்து நிறைகின்ற கடலைச் சார்ந்துள்ள மாதோட்ட நகரிலே பாலாவியை அடுத்துள்ள திருக்கேதீச்சரத்தில் வேத வேதாங்கங்களை ஓதும் அவ்வியல்பு உடைய அந்தணரும் தேவரும் தொழுது துதிக்க, தேய்ந்த பிறையைச் சூடியவரும் சிவந்த கண்ணுள்ள பாம்பை ஆபரணமாக அணிந்தவருமாகிய சிவபிரான் எழுந்தருளியுள்ளார்.
குறிப்பு: அங்கம் – வேதாங்கங்கள். மொழிதல் – ஒதுதல். வங்கம் – மரக்கலம். பங்கஞ் செய்த – (தக்கன் சாபத்தாலே) தேய்ந்த, அரவு – பாம்பு, அசைத்தல் – அணிதல். தக்கன் தன் புதல்வியரில் இருபத்தெழுவரைச் சந்திரனுக்கு மணஞ் செய்துகொடுத்து யாவரையும் சமமாய் நடத்தும்படி பணித்தான். சந்திரன் உரோகிணி என்பவளிடம் அதிக பிரியம் கொண்டிருந்தான். இதனை அறிந்த தக்கன், கலைகள் தேய்ந்து அழியும்படி சந்திரனுக்குச் சாபமிட்டான். கலை பதினைந்துந் தேயப்பெற்று ஒரு கலையோடு சந்திரன் சிவபிரானிடந் தஞ்சமடைந்தான். அவர் அவ்வொரு கலையைத் தம் சடையிலணிந்து வளர்ந்து வருமாறும், மீண்டுஞ் சாபத்தின்படி தேயுமாறும், பின்னும் வளர்வதும் தேய்வதுமாய் இருக்குமாறும் அருள் செய்தார். இனி “அங்கம் மொழி யன்னாரவர்” என்பதற்கு “அங்கம் மொழியன்னாரரவு” எனப் பாடங் கொண்டு, அங்கம் வெட்டுண்டு ஒழியப்பெற்ற அந்தக் கேதுவாகிய அரவும்’ எனப் பொருள் கூறுவதும் உண்டு.
தேவார காலத்தில் திருக்கேதீச்சரம் பல கோவில்களைக் கொண்ட கோயிற் பட்டணமாகவும், மாதோட்டம் பிரசித்தி பெற்ற பெருந்துறைமுகமாகவும் விளங்கியிருந்தன.
4. கரியகறைக் கண்டன்நல்ல கண்மேலொரு கண்ணான்
வரியசிறை வண்டியாழ்செயும் மாநோட்டநன் னகரில்
பரியதிரை எறியாவரு பாலாவியின் கரைமேல்
தெரியும்மறை வல்லான்திருக் கேதீச்சரத் தானே.
பொழிப்பு : கரிய நஞ்சேறிய கண்டரும், நல்ல கண்களுக்கு மேலும் ஒரு (நெற்றி) கண்ணை உடையவரும் ஆய்ந்து தெளியப்படும். வேதங்களைப் பாட வல்லவரும் ஆகிய சிவபிரான், வரிபொருந்திய சிறகுள்ள வண்டுகள் யாழிசை போல ஓலிக்கும் சோலைகளுள்ள மாதோட்ட நகரிலே, பெரிய திரைகளை வீசுகின்ற பாலாவித் தீர்த்தக் கரையை அடுத்துள்ள திருக்கேதீச்சரத்தில் வீற்றிருக்கின்றார்.
குறிப்பு : பிணி மூப்புச் சாக்காட்டை நீக்கி, அமரத்துவம் தரும் அமுதம் பெற விரும்பிய சூரரும், அசுரரும் பாற்கடலைக் கடைந்தபொழுது எழுந்த ஆலகால விடத்தைக் கண்டு அஞ்சிச் சிவபிரானிடம் சரணடைந்தனர். உலகம் முழுவதையும் அழிக்கவல்ல அவ்விடத்தை இறைவன் தாமே உண்டு திருமிடற்றில் நிறுத்தி எல்லா உயிரையும் அழியாது காத்தருளினர். அதனால் அவர் கறைக் கண்டர் எனப்படுவர்.
5. அங்கத்துறு நோய்கள் அடி யார்மேல்ஒழித் தருளி
வங்கம்மலி கின்றகடல் மாதோட்டநன் னகரில்
பங்கஞ்செய்த மடவாளொடு பாலாவியின் கரைமேல்
தெங்கம்பொழில் சூழ்ந்ததிருக் கேதீச்சரத் தானே.
பொழிப்பு: மரக்கலங்கள் தங்கும் கடலைச் சார்ந்துள்ள மாதோட்ட நகரிலே, பாலாவித் தீர்த்தத்தை யடுத்திருக்கும் தென்னை மரச் சோலையாலே சூழப்பெற்ற திருக்கேதீச்சரத்தில், தம்மை வழிபடும் அடியவர்களது அங்கங்களில் வரும் நோய்களைத் தீர்த்து அருள்பவராய், பாதியுடம்பைத் தமதாக்கிய கௌரியம்மையோடும் சிவபிரான் எழுந்தருளியுள்ளார்.
குறிப்பு : அர்த்த நாரீசுர வடிவில் வலப்பாகம் சிவமும் இடப்பாகம் – சத்தியுமாயிருக்கும். பங்கம் – பாதி.
திருவெம்பாவை
மார்கழி நீராடலும் பாவை நோன்பும்
சங்ககாலந் தொடக்கந் தமிழகத்தில் மார்கழி நீராடும் வழக்கம் நிகழ்ந்து வருகிறது. இதையே தை நீராடல் என்றும் கூறுவர். இது முன்னை நாளில் சமூக வழக்கமாயிருந்து, காலகதியில் ஒரு சமயச் சடங்கும் விழாவுமாக வளர்ச்சி பெற்றதாக ஆராய்ச்சியாளர் கூறுவர் சமயப் பெரியார்கள், மக்களுடைய வாழ்க்கை நிகழ்ச்சிகள் யாவும் சமயத்தோடு இணைந்து போகும்படி அமைவதே, அவர்களை நல்ல சமய வாழ்வில் வளர்ந்தோங்கச் செய்யுமெனக் கருதினர். அதனாலே பல சமூகப் பழக்க வழக்கங்களையெல்லாம் சமய அடிப்படையோடு இணைத்து, சமயப் பண்டிகைகளும், விழாக்களும் நோன்புகளுமாக அமைத்துவிட்டனர் என்பது ஆராய்ச்சியாளர் கருத்தாகும்.
மார்கழி நீராடலோடு, கன்னிப் பெண்கள் மண்ணாலே பாவை அமைத்து வழிபட்டு நோன்புசெய்யும் முறையும் இருந்ததாகப் பண்டைய இலக்கியங்கள் கூறுகின்றன. சைவம், வைணவம், சமணம் முதலியனவாகத் தமிழ்நாட்டில் நிலவிய பல சமய இலக்கியங்களிலும், கன்னியர் மார்கழி நீராடிப் பாவை நோன்பு புரிந்த செய்திகள் காணப்படுகின்றன.
கன்னியர் மார்கழித் திங்களில் வைகறைப்போதில் துயிலைழுந்து தோழியரையும் எழுப்பி அழைத்துக்கொண்டு, இறைவன் சீர்பாடிச் சென்று, பெரிய நீர்நிலையை அடைந்து நீராடி ஈரமண்ணாலே பாவைசெய்து வழிபட்டு வருவது வழக்கம். இந்த நோன்பிலே தாம் விரும்பிய நல்ல கணவரை அடையவேண்டும் அவரோடு சேர்ந்து இறைபணி புரியவேண்டும்;. பருவம் மாறுது மழை பொழியவேண்டும்; நாடு செழிக்கவேண்டும்; மக்கள் குறையின்றி நிறைவுடன் வாழவேண்டும் என வேண்டுதல் செய்வர்.
திருவெம் பாவை அருளப்பெற்றமை
மேற்குறித்தவாறு மார்கழி நீராடச் செல்லும் கன்னியர் செயலைக்கண்ட மாணிக்கவாசகசுவாமிகள், அக்கன்னியர் துயிலெழுப்பும் போதும், நீராடும்போதும் உரைத்தவற்றைக் கருவாகக் கொண்டு, அவர்களே பாடிய பாவனையில், திருவெம்பாவை என்னும் இந்த அருட்பாக்களை அருளிச்செய்தார். எட்டாந் திருமுறையாகிய திருவாசகப்பாடலின் ஒரு பகுதியாயமைந்த இது திருவண்ணாமலையில் அருளப்பெற்றதென்பர்.
தத்துவப்பொருள் : மனிதருக்கு ஓர் ஆண்டு, தேவருக்கு ஒரு நாள். அந்த நாளின்வைகறை மார்கழி. உதய காலம் தை. நவசத்திகளும் வைகறையிலே துயிலெழுந்து நீராடிப் பராசத்தியை வியந்து பாடியதாக அமைத்தது திருவெம்பாவை என்பார் தத்துவ ஞானியர்.
3. முத்தன்ன வெண்ணகையாய் முன்வந் தெதிரெழுந்தென்
அத்தன் ஆனந்தன் அமுதனென் றள்ளூறித்
தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடைதிறவாய்
பத்துடையீர் ஈசன் பழஅடியீர் பாங்குடையீர்
புத்கடியோம் புன்மைதீர்த் தாட்கொண்டாற் பொல்லாதோ
எத்தோநின் அன்புடைமை எல்லோம் அறியோமோ
இத்தம் அழகியார் பாடாரோ நஞ்சிவனை
இத்தனையும் வேண்டும் எமக்கேலோர் எம்பாவாய்.
மொழிப்புரை: முத்துப் போலும் வெண்மையான பற்களை உடைய பெண்ணே! முன்னேயெல்லாம் நாங்கள் எழுவதற்கு முன்னரே விழித்தெழுந்து வந்து, என் தந்தை என்றும், இன்ப வடிவினன் என்றும், அமுதம் போன்றவன் என்றும் வாயூறி இனிக்கப் பேசுவாய், (இன்று நாங்கள் அழைத்தும்) எழுந்து வந்து உன் பள்ளியறையின் வாயிற் கதவைத் திறக்கின்றாயில்லையே. (என்று தோழிப் பெண்கள் கூற, துயில் நீத்த பெண் கூறுவது) இறைவனிடத்துப் பேரன்பு உடையீர், இறைவனின் பழைய தொண்டர்களே, இறைவனிடத்தும் என்னிடத்தும் மிக்க. உரிமை உடையீர், புதிய அடியவர்களாகய எங்களது குற்றத்தை நீக்க ஆட்கொண்டால் தீங்காகுமோ? (இதைக் கேட்ட தோழிப் பெண்கள் கூறுவது) உனது அன்புடைமை வேறு எதுவாகும்? நாங்கள் அதனை அறியமாட்டோமா? மனத் தூய்மை உடையவர்கள் நமது சிவபெருமானைப் புகழ்ந்து பாடாமலிருப்பார்களோ? புழைக்க வந்த எங்களுக்கு இவ்வளவும் வேண்டியதே எமது கண் பாவை போன்றவளே, நாம் சொல்வதை ஏற்பாயாக ஆராய்ந்து உணர்வாயாக,
குறிப்பு: முன் எழுந்து எதிர்வந்து என இயைத்துப் பொருள் கொள்க. அள்;றுதல் – வாயூறுதல் – உள்ளங்களித்தல், கடை வாயில் கதவு, பத்து-பேரன்பு. பாங்கு-தகுதி புத்தடியோம் – புதிய அடியேங்கள். எத்து- எத்தன்மையது, அழகியார் – தூயார் நேற்றுத்தான் பழ அடியாள் போல் முன்னெழுந்து வந்து தம்மை எழுப்பியவள், இன்று தன்னைப் புத்தடியாள் என்றும், தம்மைப் பழ அடியார் என்றும் நகையாடுகிறாள் என நினைந்து, இத்தனையும் வேண்டும் நமக்கு என்றனர்.
5. மாலறியா நான்முகனுங் காணா மலையினைநாம்
போலறிவோம் என்றுள்ள பொக்கங்க ளேபேசும்
பாலூறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய்
ஞாலமே விண்ணே பிறவே அறிவரியான்
கோலமும் நம்மையாட் கொண்டருளிக் கோதாட்டுஞ்
சீலமும் பாடிச் சிவனே சிவனேயென்
ரோல மிடினும் உணராய் உணராய்காண்
ஏலக் குழலி பரிசேலோர் எம்பாவாய்
பொழிப்புரை : மயிர்ச் சாந்தணிந்த கூந்தலை உடைய பெண்ணே! திருமால் அறியாத திருவடியையும், பிரமா அறியாத திருமுடியையும் உடைய. மலைபோலும் பேரொளிப் பிழம்பாய் நின்ற இறைவனை, நாம் அறியமுடியுமென்று, நினைக்கும்படி வேடிக்கையாகப் பொய்களையே பாலோடு சேர்ந்த தேன்போல இனிமை தோன்ற வாயாற் பேசும் வஞ்சகீ கதவைத் திறப்பாயாக| இவ்வுலகினரும் வானுலகினரும் பிற உலூனரும் அறிவதற்கு அரியவனுடைய திருமேனியையும், எங்களை அடிமையாகக்கொண்டு குற்றங்களைந்து சீர்செய்யும் பெருங்குணத்தையும் வியந்து பாடி சிவபெருமானே, சிவபெருமானே என்று சரணடையும் ஓலக் குரலெழுப்பியும் நீ அறிந்தாயில்லை. துயிலுணர்ந்தாயுமில்லை. எமது கண்பாவை போன்றவளே, இதுவோ உன்னியல்பு. நாம் சொல்வதை ஏற்பாயாக| ஆராய்ந்து உணர்வாயாக.
குறிப்பு: மால்-திருமால். நான்முகன்-பிரமா. போல் – அசை. பொக்கம்-வாய். படிறீ – வஞ்சகீ (விளி) , ஞாலம், விண், பிற (உலகு)- ஆகுபெயர்களாய். அவ்வவ்வுலகினரைக் குறித்தன. கோதாட்டுதல்- குற்றங்களைந்து குணமுடையராக்குதல். ஓலம் – அபயக் குரல்.
8. கோழி இலம்பச் சிலம்புங் குருகெங்கும்
ஏழில் இயம்ப இயம்பும்வெண் சங்கெங்குங்
கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை
கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ
வாழியீ தென்ன உறக்கமோ வாய்திறவாய்
ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ
ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை
ஏழைபங் காளனையே பாடேலோர் எம்பாவாய்.
மொழிப்புரை : கோழி கூவ எங்கும் காக்கை முதலிய பறவைகள் ஓசை எழுப்புகின்றன. நாதசுரம் இசைக்க எவ்விடத்திலும் வெண்சங்குகள் ஒலிக்கின்றன. ஒப்பற்ற மேலான ஒளிவடிவினனும் ஒப்பற்ற மேலான அருளுடையவனும் ஆகிய சிவபெருமானது, ஒப்பற்ற சிறந்த புகழமைந்த வேதப் பொருள்களைப் பாடினோம்; அவற்றை நீ கேட்கவில்லையோ? நீ நன்றாக வாழ்வாய்; இது எத்தகையதான தூக்கமோ தெரியவில்லை. வாயைத் திறக்கின்றாயில்லையே சக்கரப் படையாளியாகிய திருமால் சிறந்த சிவபக்தன் எனப்படுவதும் இவ்வண்ணந்தானோ? சர்வசங்கார காலமான பேரூழியில் அழிவற்ற தலைவனாய் நிற்கின்ற ஒருவனும், உமையம்மையை ஒரு பாகத்திலுடையவனும் ஆகிய சிவபெருமானையே, இனியாவது பாடுவாயாக் எமது கண்பாவை போன்றவளே நாம் சொல்வதை ஏற்பாயாக ஆராய்ந்து உணர்வாயாக,.
குறிப்பு : ஏழில் – ஏழு துளைகளையுடைய வாத்தியம் – நாதசுரம். கேழ்இல்-ஒப்பில்லாத. திருமாலானவர் பாற்கடலிலே பாம்பணைமீது என்றும் அறிதுயில் கொள்பவர். சிறந்த சிவபத்தராக மதிக்கப்படுபவர். உறங்குகின்ற திருமால் சிறந்த சிவபக்தரானவாறு, நீயும் உறங்கிக்கிடப்பதால் சிறந்த சிவபத்தையாகிவிடலாமென எண்ணுகின்றாயா? என்று நகையாடிக் கூறினர். ஏழை-உமையவள். பங்காளன் – பாகத்திலுடையவன். ஏழைபங்காளன் – ஏழை எளியவர்கள் பக்கத்தில் துணை நிற்பவன்.
11. மொய்யார் தடம்பொய்கை புக்கு முகேரென்னக்
கையாற் குடைந்து குடைந்துன் கழல்பாடி
ஐயா வழியடியோம் வாழ்ந்கோங்காண் ஆரழல்போல்
செய்யாவெண் ணீராடி செல்வா சிறுமருங்குல்
மையார் தடங்கண் மடந்தை மணவாளா
ஐயா நீயாட்கொண் டருளும் விளையாட்டின்
உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உய்ந்தொழிந்தோம்
எய்யாமற் காப்பாய் எமையேலோர் எம்பாவாய்.
பொழிப்புரை: தலைவனே, நிறைந்த நெருப்புப்போலும் செம்மை. திறம் உடைவனே, வெண்மையான திருநீற்றைத் திருமேனி முழுவதும் அணிந்தவனே பேரின்பமாகிய பெருஞ்செல்வம் உடையவனே, சிறிய இடையும் மை பொருந்திய நெடிய கண்களும் உள்ள உமாதேவியாரின் கணவனே, வண்டுகள் நிறைந்த அகன்ற தடாகத்திலே – புகுந்து, “முகேர்” – என்னும் ஓலி எழும்படி. கையினால் நீரை அளைந்து முழுகி, சிவன் திருவடிகளைப் புகழ்ந்து பாடி, உன் பரம்பரை அடிமைகளாக நாங்கள் வாழ்ந்தோம் அதனை நீ அறிவாய்; ஆண்டவனாகிய நீ ஆட்கொண்டருளும் (ஐந்தொழிலாகிய) திருவிளையாட்டினாலே, உய்திபெறுகின்றவர்கள் உய்யும் வகை எல்லாவற்றாலும் நாமும் உய்ந்துவிட்டோம். இனி நாங்கள் (பிறவி வழியே சென்று) இளைத்து விடாதபடி எங்களைக் காத்தருள்வாயாக. எமது கண்பாவை போன்றவளே (இப்படியாக) நாம் கூறுவதை ஏற்று ஆராய்ந்து உணர்ந்து கொள்வாயாக.
குறிப்பு : மொய்- வண்டுகள் மொய்க்கின்ற. பொய்கை – தடாகம். முகேர் – நீராடும்போது எழும் ஒலிக் குறிப்பு. குடைந்து குடைந்து – மூழ்கி (எழுந்து) மூழ்கி. (கையிரண்டையும் தலைமீது குவித்துப்பிடித்துத் தலையை நீருள் முழுகுமாறு செலுத்தி நீராடுவதைக் குறிப்பிட்டது.) வழியடியோம் – வாழையடி வாழைபோல மரபுவழி மாறாது வந்த அடியேங்கள், இறைவன் திருவிளையாட்டாகச் செய்யும் ஐந்தொழிலால் ஆன்மாக்கள் கீழான பிறவிகளைக் கடந்து மேலான மானுடப் பிறவியெடுத்து அதிலும் சிறு தெய்வங்களை வழிபடும் புறச்சமயங்களைக் கடந்து சைவராய், அந்த நிலையிலும் பத்தி சிரத்தையோடு சிவதொண்டு புரிபவராய் வருதல் அரிதினும் அரிது, ஆதலால் உய்ந்தோம் என்றார்.
17. செங்க ணவன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால்
எங்கும் இலாததோர் இன்பம்நம் பாலதாக்
கொங்குண் கருங்குழலி நந்தம்மைக் கோதாட்டி
இங்குநம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்
செங்கமலப் பொற்பாதந் தந்தருளுஞ் சேவகனை
அங்கண் அரசை அடியோங்கட் காரமுதை
நங்கள் பெருமானைப் பாடி நலந்திகழப்
பங்கயப் பூம்புனல்பாய்ந் தாடேலோர் எம்பாவாய்.
பொழிப்புரை : வாசனையை இயற்கையாகக் கொண்ட கரிய கூந்தலை உடையவளே, சிவந்த கண்களையுடைய திருமாலிடத்தும், நான்முகனிடத்தும், ஏனைய தேவர்களிடத்தும், வேறு எவ்விடத்தும், இல்லாததாகிய ஒப்பற்ற பேரின்பம் நம்மைச் சேரும்படி, எங்களைக்குற்றங் களைந்து தூய்மை செய்து, இவ்வுலகில் எமது வீடுகள் தோறும் எழுந்தருளி வந்து, தனது செந்தாமரை மலர் போன்ற அழகிய திருவடிகளைத் தந்தருளுகின்ற காவலனை, அழகிய அருள்நோக்கமுடைய இறைவனை, அடிமைகளாக்கிய எமக்குக் கிடைத்தற்கரிய அமுதாக உள்ளவனை, எம்முடைய தலைவனை. புகழ்ந்து பாடிநன்மை சிறந்து விளங்கும்படி தாமரைத் தடாகத்திலே உள்ள புதுப்புனலிற் குதித்து முழுகுவோமாக் எமது கண் பாவை { போன்றவளே, நாம் சொல்வதை ஏற்று ஆராய்ந்து உணர்ந்து கொள்வாயாக,
குறிப்பு: செங்கண்ணவன் – திருமால், திசைமுகன் – நான்முகன், பிரமா. கொங்கு – வாசனை, சேவகன் – தலைவன் – காவலன்.
கருவூர்த்தேவர் அருளிச்செய்த
திருவிசைப்பா
திருவிசைப்பா, திருப்பல்லாண்டு என்னும் அருட்பாக்கள் ஒன்பதாந் திருமுறையாக வகுக்கப்பட்டுள்ளன. சிவபெருமானது சிறந்த பொருள் சேர் புகழைக் கூறும் அருட்பா, “திருவிசைப்பா” எனப்படும். தெய்வத்தன்மை பொருந்திய இசைப்பாடல்கள் என்று பொருள் கொள்வதும் உண்டு. திருவிசைப்பாவை அருளிச்செய்தோர், சேந்தனார், கருவூர்த்தேவர், பூந்துருத்திநம்பி, காடநம்பி, கண்டராதித்தர், வேணாட்டடிகள், திருவாலியமுதனார், புருடோத்தமநம்பி, சேதிராயர், திருமாளிகைத்தேவர் என்போராவர்.
பின்வரும் திருவிசைப்பா கருவூர்த்தேவர் அருளிச்செய்த திருவிசைப்பாத் திருப்பதிகத்தில் மூன்றாம் பாடலாய் இருப்பது கங்கை கொண்ட சோழேச்சரத்தில் எழுந்தருவிய பெருமானைப் பற்றிக் கூறுவது.
கங்கை கொண்ட சோழேச்சரம் இராசராசசோழன் மகனான இராசேந்திரனாற் கட்டப்பட்டது. கருவூர்த்தேவர் இவ்வரசன் காலத்தில் (பத்தாம் நூற்றாண்டில்) வாழ்ந்தவர்.
பண் : பஞ்சமம்
திருச்சிற்றம்பலம்
அற்புதத் தெய்வம் இதனின்மற் றுண்டே
அன்பொடு தன்னைஅஞ் செழுத்தின்
சொற்பதத் துள்வைத் துள்ளம் அள்ளுறுந்
தொண்டருக் கெண்டிசைக் கனகம்
பற்பதக் குவையும் பைம்பொன்மா ளிகையும்
பவளவா யவர்பணை முலையும்
கற்பகப் பொழிலும் முழுதுமாங் கங்கை
கொண்டசோ மேச்சரத் தானே
திருச்சிற்றம்பலம்
மொழிப்புரை: கங்கை கொண்ட சோழேச்சரத்தில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமான் ஆகிய தெய்வம், தன்னைத் திருவைந்தெழுத் சொல்லினிடத்திலே வைத்துத் தியானித்து ஓதி மனம் உவக்கின்ற மெய்யன்பர்களுக்கு எட்டுத் திசைகளிலும் பல பொற்குவியல்களும், பசிய பொன்போலும் சிறப்புடைய மாளிகைகளும், பவளம் போலும் வாயுடைய இல்லாளது நெஞ்சகத்தைப் பொருந்தும் இன்பமும், கற்பகச் சோலையில் வாழும் இன்பமும் ஆகிய எல்லாப் பேறுகளுமாகப் பொருந்தி நின்றுதவும். ஆதலினால், இந்தத் தெய்வத்திலும். மேலான் தெய்வம் வேறு (உண்டோ) இல்லை.
குறிப்பு : உண்டே – இல்லை என்றபடி. அஞ்செழுத்து-திருவைந் தெழுத்து சொற்பதத்துள் – சொல்லிடத்தில் சொற்பதத்துள் வைத்து அள்ளுறுதலாவது, இறைவனது அருளியல்புகளையும் அருட் செயல்களையுந் திருவைந்தெழுத்திற் பொருந்திப் பொருளுணர்ந்து ஓதி மகிழுதலாம். கனகம் – பொன்.
சேந்தனார் அருளிச்செய்த
திருப்பல்லாண்டு
இறைவனிடம் பேரன்பு கொண்டு பெரும்பேறு அடைந்த மகிழ்ச்சியால் அத்தம் இல்லாத அப்பெருமானை “பல ஆண்டுகள் வாழ்க” என மெய்யடியார்கள் வாழ்த்துவர். அங்ஙனம் வாழ்த்திக்கூறும் அருட்பா திருப்பல்லாண்டு எனப்படும்.
திருப்பல்லாண்டுத் திருப்பதிகம் பாடியருளியவர் சேந்தனார் ஒருவரே. அது சிதம்பரத் தேர்த்திருவிழாவிலே ஓடாது நின்ற தேரை ஓடச்செய்யும் பொருட்டப் பாடியருளப்பட்டது.
பின்வரும் திருப்பல்லாண்டு அத்திருப்பதிகத்திற் பன்னிரண்டாம் பாடலாய் உள்ளது.
பண்: பஞ்சமம்
திருச்சிற்றம்பலம்
ஆரார் வந்தார் அமரர் குழாத்தில்
அணியுடை ஆதிரைநாள்
நாரா யணனொடு நான்முகன் அங்கி
இரவியும் இந்திரனுந்
தேரார் வீதியிற் றேவர் குழாங்கள்
தசையனைத் தும்நிறைந்து
பாரார் தொல்புகழ் பாடியு மாடியும்
பல்லாண்டு கூறுதுமே
திருச்சிற்றம்பலம்
மொழிப்புரை : எங்கும் அழகு பொலிகின்ற திருவாதிரை நாளிலே (சிதம்பரத்துக்கு) தேவர் கூட்டத்தில் யார் யார் வந்தார்கள் திருமாலுடன் பிரமன், அக்கினிதேவன், சூரியன், இந்திரன் முதலான தேவர் கூட்டத்தினர் வந்தனர்; தேரோடும் வீதியிலே எல்லாத் திசைகளிலும் நிறைந்து நிற்கின்றனர். நாமும் அவர்களுடன் சேர்ந்து பூமி முழுவதும் நிறைந்த இறைவனது பழைமையான புகழைப் பாடியும், ஆனந்தக் கூத்தாடியும் அவ்விறைவன் பல்லாண்டு வாழ்க என்று வாழ்த்துக் கூறுவோமாக.
குறிப்பு : ஆர் ஆர்-யார் யார். அமரர் குழாம்-தேவர் கூட்டம் – அணி உடை-அழகு உடைய. ஆதிரைநாள்-திருவாதிரைநாள். நாராயணன் – திருமால், அங்கி-அக்கினிதேவன். இரவி-சூரியன், தேர் ஆர் வீதி-தேர் ஓடும் வீதி. நிறைந்து-நிறைந்து நிற்கின்றார்கள் ( என வினை முடிவு வருவிக்கப்பட்டது) பாரார். (பார் £ஆர்) – பூமியில் நிறைந்த ஆடுதல்-ஆனந்தக் கூத்தாடுதல். கூறுதும்-கூறுவோம்.
திருமந்திரம்
அன்புஞ் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவ தாரும் அறிகிலார்.
அன்பே சிவமாவ தாரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே.
பொழிப்புரை: அன்பாகிய திருவருளும், இன்பாகிய சிவனும் மணியும் ஒளியும்போல் ஒன்றே. அவற்றை இருவேறு பொருள்கள் என்று கூறுவார் மெய்யுணர்வு கைவரப்பெருதார். மெய்ம்மையான் நோக்கின் அன்பாகிய திருவருளே இன்பமாகிய சிவனுக்குத் திருமேனியாகும். அம்முறையான் அன்பே சிவமாகும். இவ்வுண்மையினையும் எவரும் உணர்கலர். அன்பே சிவம் என்னும் உண்மையினை அருளால் அனைவரும் அறிந்த பின், தாம் இடையருது திருவடிக்கண்வைக்கும் அன்பாகிய வித்தே சிவமாய் விளைந்து இன்பாய்க் கனிந்து அவ்வன்புடையார்க்கு என்றும் பொன்றாப் பேரின்ப நுகர்வாகும். அவ்வுண்மை – “சிவமாய் அமர்த்திருந்தார்” என்னும் இம்மறை மொழியான் உணரலாம்.
குறிப்பு : அன்பும் – அன்பாகிய திருவருளும் சிவமும் – இன்பாகிய சிவனும்; இரண்டென்பர் – இருவேறு பொருள்கள் என்று கூறுவர், அறிவிலார் – மெய்யுணர்வு கைவரப்பெருதார்;| அன்பே சிவமாவது -அன்பாகியதிருவருளே இன்பாகிய சிவனுக்குத் திருமேனியாகும் என்பதை ஆரும் அறிகலார் – எவரும் உணர்கிலர்; அன்பே சிவமாவது – அன்பே சிவம் என்னும் உண்மையினை ஆரும் அறிந்தபின் – அனைவரும் அறிந்த பின்பு, அன்பே சிவமாய் -அன்பாகய வித்தே சிவமாய் விளைந்த| அமர்ந்திருந்தார் – அவ்வுண்மை சிவமாய் அமர்ந்திருந்தார்.
பன்னிரண்டாந் திருமுறை
பெரிய புராணம்
நாயன்மாரது திருச்சரிதையைக் கூறும் திருத்தொண்டர்புராணம் எல்லாம் புராணங்களிலும் சிறப்புமிக்கது. ஆதலால் அது, பெரிய புராணம் என வழங்கும்.
பெரிய புராணத்தை அருளிச்செய்தவர் சேக்கிழார் சுவாமிகள், இவர் அநபாய சோழனின் முதன் மந்திரியாய் இருந்தவர்; அவனிடத்திலே “உத்தம சோழப் பல்லவன்” என்னும் வரிசைப் பெயரும், திருத்தொண்டர் புராணத்தை அருளிச்செய்த காரணத்தால் “தொண்டாசீர் பரவுவார்” என்னும் சிறப்புப் பெயரும் பெற்றவர்
பின்வரும் புராணம் திருஞானசம்பந்தமூர்த்தநாயனாரது திருச்சரிதையில் உள்ளது. அவர் பெற்ற ஞானத்தைப்பற்றிக் கூறுவது. இஃதாகும்.
சிவனடியே இந்திக்குந் திருப்பெருகு சிவஞானம்
பவமதனை அறமாற்றும் பாங்கினில்ஓங் கியஞானம்
உவமையிலாக் கலைஞானம் உணர்வரிய மெய்ஞ்ஞானம்
தவமுதல்வர் சம்பந்தர் தாமுணர்ந்தார் அந்நிலையில்.
பொழிப்புரை : வைதிக சைவநெறி காட்டும் தவங்களை நிலைபெற வைத்தமையால் அத்தவங்களுக்கு முதல்வரான ஆளுடைய் பிள்ளையார், சிவபெருமானது திருவடியையே தியானிக்கும் (பேரின்ப) செல்வம் மிகுந்த (பரஞானமான) சிவஞானத்தையும், பிறவித் துன்பத்தை முற்றாக நீக்குகின்ற இயல்பினுற் சிறந்த அபரஞானத்தையும் ஒப்பு இல்லாத அறுபத்துநான்கு கலை ஞானத்தையும், உண்மைப் பொருளை உணர்வதற்கு ஏற்ற அரிய துணையான வியாகரணம், தருக்கம், மீமாம்சை முதலிய கருவி நூல்களால் உண்டாகும் ஞானத்தையும், உமையம்மையாரிடத்தில் ஞானப்பாலுண்ட அப்பொழுதே உணர்ந்தருளினார்.
குறிப்பு : திரு-செல்வம், பேரின்பச் செல்வம். சிவபெருமானது திருவடியை உள்ளபடி தியானித்தலே சிவஞானமாம், ஆதலின், “சிவனடியே சிந்திக்குஞ் சிவஞானம்” என்றும், அந்தச் சிவஞானம் வளர்ந்து கொண்டேயிருக்கும் பேரின்பச் செல்வத்தையுடையது ஆதலால், “திருப் பெருகு சிவஞானம்” என்றும் கொள்ளப்பட்டது. பவம்-பிறப்பு| பிறவித்துன்பம். அறமாற்றும்-முற்றாக நீக்கும். மாங்கனில் – இயல்பில், தன்மையில் ஒங்கழய – சிறந்த, அயர்ந்த. அபரஞானம்-வேதாகம நூலுணர்வு, உணர்வு அரிய – உண்மைப் பொருளை உணர்வதற்கு அரிய கருவியான மெய்ஞ்ஞானம் – (இங்கு) கருவிநூலுணர்வு (என்னும் பொருளுடையது), வியாகரணம். நிகண்டு, சந்தோபிசிதம், நிருக்தம், சோதிடம், மந்திரம் என்னும் வேதாங்கங்களும், வேதத்தின் கருமகாண்டத்தை ஆராயும் மீமாம்சையும், சரியான பொருளை வரையறை செய்யும் தருக்கம் முதலான கருவி நூலுணர்வும் இல்லாமல் உண்மையை உள்ளபடி உணரமுடியாது ஆதலால், இவற்றின் இன்றியமையாச் சிறப்பை விளக்க, “உணர்வரிய மெய்ஞ்ஞானம்” என்று கூறப்பட்டது.
“ஆளுடைய பிள்ளையார் ஞானப்பாலுண்ட அப்பொழுதே பரஞானம், அபரஞானம், கலைஞானம், கருவி நூல்களின் ஞானம் என்னும் நால்வகை ஞானங்களையும் உணர்ந்துகொண்டார்” என்பது இப்பாடலின் கருத்து.
திருப்புகழ்
முருகவேளின் பெருமையைப் புகழ்ந்து அருணகிரிநாதர் அருளிய அழகிய இனிய சந்தப் பாடல்கள். திருப்புகழ் என வழங்கும்.
அருணகிரிநாதர் பதினைந்தாம் நூற்றாண்டில் அருணையில் அவதரித்து வாழ்ந்தவர். முருகவேளின் திருவருளால் உய்ந்தவர். “முத்துத்தரு” என்று முருகனே அடியெடுத்துக் கொடுக்கத் திருப்புகழைப் பாடியருளியவர். இவர் கந்தரநுபூதி, கந்தரலங்காரம் என்பவற்றையும் அருளிச்செய்தார்.
அருணகிரிநாதரின் அருட்பாடல்கள் திருமுறை வகுக்கப்பெற்ற காலத்துக்குப் பிற்பட்டன. ஆதலால், இவை திருமுறைகளுட் சேர்க்கப்பட்டில, தேவாரம், திருவாசம், திருவிசைபா, திருப்பல்லாண்டு, பெரிய புராணம் என்பவற்றை ஓதியபின் திருப்புகழையும் ஓதுவர்.
பின்வரும் திருப்புகழ் கதிர்காமப் பெருமான்மீது பாடியருளப்பட்டது.
எதிரி லாத பத்தி தனைமேவி
இனிய தாணி னைப்பை இருபோதும்
இதய வாரி திக்கு ஞறவரகி
எனது ளேசி றக்க அருள்வாயே
கதிர் காம வெற்பி லுறைவோனே
கனக மேரு வொத்த புயவீரா
மதுர வாணி யுற்ற கழமலோனே
வழுதி கூனி மிர்த்த பெருமாளே.
Copyrights © 2022 to Saivaneethi. All rights reserved.