சமீபத்திய செய்தி

உலகத்திலே பல சமயங்கள் உள்ளன. அவற்றுள், ஈழத்தில் வழங்கும் சமயங்கள் நான்கு, அவை சைவம்
நன்கொடை
English

+94 123 456 789

நன்கொடை
English

416 528 1407

திருமுறைகள் ஆசிரியர்கள்

 

செந்தமிழ் மொழியிள்ள சைவ நூல்களெல்லாம் மூவகையில் அடங்குவன. அவை சாத்திரம், தோத்திரம், காப்பியம் என்பன. சைவ சமயத்திலுள்ள பதி, பசு, பாச உண்மைகளை நியாய சாத்திர முறையில் நிலைநாட்டிக் கூறும் நூல்கள்(மெய்கண்ட சாத்திரங்கள் சாத்திரங்கள்எனப்படும். இறைவனையும் அடியார்களையும் போற்றிப் துதிப்பனவாகிய பாடல்கள் தோத்திரங்களாகும். இறைவன் அருள் செயல்களாகும். அடியார் வரலாறுகளையும் கதை வடிவில் எடுத்தக்கூறும் புராணம் முதலான நூல்கள் காப்பியங்களாகும். இம் மூவகையில் இருமுறைகள் தோத்திரங்களாகும். இவற்றுள் பன்னிரண்டாந் திருமுறையாகிய பெரியபுராணம் காப்பியமாக விளங்குகின்றன.

திருமுறைகளின் ஆசிரியர்கள் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், நம்பியாண்டார் நம்பி, சேந்தனார், திருமூலர், காரைக்கால் அம்மையார் மற்றும் பலர் ஆவர். இந்தத் திருமுறைகள் பன்னிரு திருமுறைகளாகப் பிரிக்கப்பட்டு, சைவ சமயத்தின் முக்கியமான தொகுப்புகளாகக் கருதப்படுகின்றன.

திருமுறை என்ற பெயர் திருமுறை என்ற தொடரில் “திரு” என்பது தெய்வத் தன்மையைச் குறிப்பது, “முறை” என்ற சொல்லுக்கு நூல், ஒழுங்கு, வரிசை, உறவு போன்ற முதன்மை பல கருத்துக்கள் உள்ளன. எனவே திருமுறை என்பது தெய்வத்தன்மை பொருந்திய நூல். உயிர்களைச் செம்மையான ஒழுங்கு முறையில் இறைவனிடம் சேர்ப்பிக்கும் நூல். தொகுத்து வரிசைப்படுத்தப்பட்ட தெய்வீகப் பாடல்களைக் கொண்ட நூல். இறைவனுக்கும் ஆன்மாக்களுக்கும் உள்ள உறவை விளக்கும் நூல். மெய்யடியார்கள் உள்ளம் உருகி இறைவனிடம் செய்துகொண்ட முறையீடுகளைக் கொண்ட நூல் என்பப் பலவசையிற் பொருள் கொள்ளக்கூடியதாயுள்ளது.

திருமுறைகள் ஆசிரியர்கள்
1.முதல் மூன்று திருமுறைகள்: திருஞானசம்பந்தர்.
2.நான்காம், ஐந்தாம் மற்றும் ஆறாம் திருமுறைகள்: திருநாவுக்கரசர்.
3.ஏழாம் திருமுறை: சுந்தரர்.
4.எட்டாம் திருமுறை: திருமூலர் (திருமந்திரம்).
5.ஒன்பதாம் திருமுறை: திருமாளிகைத்தேவர், சேதிராயர் உட்பட ஒன்பது பேர்.
6.பத்தாம் திருமுறை: திருப்பல்லாண்டு பாடிய சேந்தனார்.
7.பதினோராம் திருமுறை: காரைக்கால் அம்மையார் உட்பட பன்னிரு அடியவர்கள்.
8.பன்னிரண்டாம் திருமுறை: திருத்தொண்டர்புராணம்.
9.தொகுத்தவர்: நம்பியாண்டார் நம்பி, 11 ஆம் நூற்றாண்டில் இராஜராஜ சோழன் காலத்தில் திருமுறைகளைத் தொகுத்தார்.


திருமுறை வகுத்தமை: அரசனது வேண்டுகோளுக்கு இசைந்த தம்பிகளும், திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் அருளிச் செய்த தேவாரங்களில் கிடைத்தவற்றை முதலாம், இரண்டாம், மூன்றாந் திருமுறைகளாக வகுத்தார். திருநாவுக்கரசு சுவாமிகள் பாடியருளிய தேவாரங்களிலே கிடைத்தவற்றை நான்காம், ஐந்தாம், ஆறாந் திருமுறைகளாக வகுத்தார். சுந்தரமூர்த்து நாயனார் தேவாரங்களை ஏழாந் திருமுறையென வைத்தார். ஆகவே தமிழ்மறையாகிய மூவர் தேவாரங்களும் முதலேழு திருமுறைகளாயின. இவ்வேழையும் அடங்கன் முறை என்பர்.

மாணிக்கவாசக சுவாமிகள் அருளிய திருவாசகம். திருக்கோவையார். ஆகிய இரண்டையும் எட்டாந் திருமுறையென வைத்தனர். திருமாளிகைத் தேவர் முதல். சேதுராயர் வரையுள்ள மெய்யடியார் ஒன்பதின்மர் அருளிச்செய்த திருவிசைப்பா, திருப்பல்லாண்டு என்பன ஒன்பதாந் திருமுறையாயின. திருமூலநாயனார் அருளிச் செய்த திருமந்திர நூல் பத்தாந் திருமுறையாயிற்று. (இது தலைசிறந்த மந்திர சாத்திர நூலாகவும் போற்றப்படுவதாகும்.) திருவாலவாயுடையார் திருமுகப் பாசுரம் முதலாகப் பட்டினத்தடிகள் பாடல்வரை உள்ளவை பதிலோராந் திருமுறையாக வகுக்கப்பட்டன. பொல்லாப்பிள்ளையார் அருளால் நம்பியாண்டார் நம்பிகள் விநாயகப் பெருமானையும், திருஞானசம்பந்தப் பிள்ளையாரையும், திருநாவுக்கரசு சுவாமிகளையும், திருத்தொண்டத் தொகையிலுள்ள அடியார்களையும் போற்றி செய்த பாடல்களையும் பதினோராந் திருமுறையில் சேர்த்து வைக்குமாறு அரசர் வேண்டிக்கொண்டபடி அவ்வருட்பாக்களும் அத்திருமுறையில் அடங்க, இவ்வாறு நம்பிகள் வகுத்த திருமுறை பதினொன்றும்.


பண்ணமைப்பு: இத்திருமுறைப் பாடல்களின் பண்களையும். ஒதும் வகையையும் அறிவித்தருளுமாறு அரசரும், நம்பிகளும் நடராசப்பெருமானிடம் வேண்டினர். பெருமான் அருளிச்செய்தபடி திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார் மரபில் வந்த, பண்முறைகளைத் தெரிந்திருந்த பெண்ணை அரசர் அழைப்பித்து, நடராசப்பெருமான் சந்நிதியிலே அவ்வவற்றின் பண்முறைகளையும் அமைத்துக்கொண்டார்.


திருமுறைகளைப் பேணிச் சேமித்தமை பின்னர். அரசர் திருமுறைப் பாடல்களையெல்லாம் செப்பேடுகளில் எழுதுவித்துப் பாதுகாப்பாக அழியாதிருக்கும்படி செய்தார். அக்காலம் முதல் தமிழகத்துச் சைவக் கோயில்களிலைல்லாம் ஓதுவார்களை நியமித்துத் திருமுறைப் பாடல்களைப் பண்ணோடு பாராயணஞ் செய்துவருமாறு அரசர்கள் நியமனஞ் செய்தனர். இன்றுவரை அது தொடர்ந்து நடந்து வருகிறது.
பன்னிரண்டாந் திருமுறை: சில ஆண்டுகளின் பின். அநபாயசோழ அரசரின் வேண்டுகோளின்படி, அவரது முதன் மந்திரியாகிய சேக்கிழார் நாயனார், நடராசப். பெருமானே “உலகெலாம்” என அடியெடுத்துக் கொடுக்கப் பாடியருளிய திருத்தொண்டர் புராணம் ஆகிய பெரியபுராணம், சைவப் பேரறிஞர்கள் சபையில் அரசர் முன்பு அரங்கேற்றப்பட்டது. அப்பொழுது அறிஞரும், அரசரும் அந்நூலின் சிறப்பை நோக்கி அதனைப் பன்னிரண்டாந் திருமுறை நூலென ஏற்றுப் போற்றினர். இவ்வாறே சைவத் திருமுறைகள் பன்னிரண்டும் அமைந்தனவாம்.

Copyrights © 2022 to Saivaneethi. All rights reserved.