சமீபத்திய செய்தி
ஈழத்துச் சிவாலயங்களை மூன்று பிரிவாகப் பிரிக்கலாம். அவை புராதன சிவாலயங்கள், இடைக்காலச் சிவாலயங்கள், பிற்காலச் சிவாலயங்கள்.
திருக்கேதீச்சரம், திருக்கோணேசுவரம், நகுலேசுவரம், முன்னேசுவரம் சம்புகேசுவரம், மானாவாரி போன்றவை புராதன சிவாலயங்களாகும்.
கி. பி. மூன்றாம் நூற்றாண்டில் வீரவராயன் என்னும் வாணிவச் செட்டியினால் செட்டிகுளத்தில் கட்டப்பட்ட சந்திரசேகரர் கோவிலும் புராதன சிவாலயமாகும். ஆயின் இதன் வரலாறு பற்றி விளப்பமாக இன்று ஒன்றும் அறிந்துகொள்ள முடியாதிருக்கின்றது.
பழைய அநுராதபுரத்திலும் சிவ வணக்கம் பண்டை நாளில் இருந்ததற்குப் போதிய சான்றுகள் கிடைத்துள்ளன. சைவர்கள் பண்டைக்காலந் தொடங்கி நட்சத்திரங்களைப் பற்றியும் கிரகங்களைப் பற்றியும் அவற்றிற்கும் மனிதருக்குமுள்ள தொடர்பைப் பற்றியும் அறிந்திருந்தார்கள். இவற்றைப் பற்றிய அறிவு பூர்விக இலங்கை மக்களிடத்தும் காணப்பட்டது. மக்கள்பிறந்த நட்சத்திரத்தைக் கொண்டே சிலருக்கு பேர் வைக்கப்பட்டதாக டாக்டர் பரணவிதான கூறுகின்றார். இதன்படிக்கு அநுராதபுரம் என்ற நகர்ப்பெயரும் சைவ மக்கள் போற்றும் நட்சத்திரங்களுள் ஒன்ராய அநுஷ நட்சத்திரத்திலிருந்தே வந்ததாகவும் கூறப்படுகின்றது. தேவநம்பியதீசன் அநுராதபுரத்தின் எல்லையை வரையறை செய்தபோது அவன் பிராமணன் ஒருவனுக்குச் சொந்தமான கோவில் ஒன்றைக் கடந்து போகவேண்டி. இருந்ததாகக் கூறப்படுகின்றது. 1893இல் அநுராதபுரியில் நடைபெற்ற புதைபொருள் ஆராய்ச்சி, அப்பழம் நகரில் 2சிவன்கோவில் ஒன்று இருந்ததைத் தெளிவுறுத்தியுள்ளது. ஜெத்தவனராம விகாரைக்கும், விஜயராம மடத்திற்கும் இடையில் சைவ ஆலயங்கள் பலவும் அவற்றோடு தொடர்பான கட்டடங்களும் அவ்வாராய்ச்சியின் போது கண்டுபிடிக்கப்பட்டன. இரு சிவன் கோவில்களில் கருங்கல்லில் செய்யப்பெற்ற இரண்டு சிவலிங்கங்கள் அவைகளுக்குரிய இடங்களில் கண்டெடுக்கப்பட்டன. இவ்வாலயங்களும் ஈழத்துப் புராதன சிவ ஆலயங்களுடன் சேர்க்கப்பட வேண்டியவையாகும்.
ஒட்டுசுட்டான் தான்தோன்றீசுவரர், கொக்கட்டிச் சோலை தான்தோன்றீசுவரர், பொலன்னறுகைச் சிவன் கோயில், பதவியாச் சிவன் கோயில், 1உருத்திரபுரம் சிவன்கோயில், பனங்காமம் சிவன் கோயில்வவுனிக்குளத்திற்கு அண்மையிலுள்ள கோமிற்காடு, கற்சிலமடு ஆகிய இடங்களிலுள்ள சிவன் கோவில்கள்2குரைமலைக்கருகே உள்ள அசுவகிரி, நல்லூர் சட்டநாதர் சிவன் கோவில் போன்ற யாவற்றையும் இடைக்காலக் கோவில்களாகக் கொள்ளலாம்.
இடைக்காலக் கோவில்கள் யாவும் சோழ பாண்டியர் ஆட்டிக்காலத்தில் கட்டப்பட்டனவாக ஊகிக்க இடமுண்டு. இவர்கள் ஆட்சியில், காடாக இன்று மிளிரும் வன்னிப் பிரதேசத்தில் பல சிவன்கோவில்கள் கட்டப்பட்டிருக்கின்றன. இங்கெல்லாம் நான்கு மறைகளிலும் வல்ல அந்தணர் பலர் இருந்திருக்கிறார்கள், இவற்றை உறுதிப்படுத்துகின்றன பழமோட்டைக் கல்வெட்டும், கந்தளாய்க் கற் சாசனமும், மற்றும் இவ்விடங்களில் கண்டு எடுக்கப்பட்ட பிற ஏதுக்களும் இப்பிரதேசத்துக் காடுகளை அழித்து நாடாக்குங்காலை பல அழிந்த இடைக்காலச் சிவாலயங்கள் மேலும் வெளிப்படலாம் என நம்ப இடமுண்டு. சோழ பாண்டியர் ஆட்சிக் காலந் தொட்டு யாழ்ப்பாணத்து அரசர் – வன்னிநாட்டரசர் காலம் வரை எழுந்த ஆலயங்களை இடைக்காலச் சிவாலயங்களாகக் கணிக்கலாம்.
யாழ்ப்பாணத்தரசர் வன்னி நாட்டரசர் வீழ்ச்சிக்குப் பின், தனிப்பட்ட வள்ளல்களாலும், ஊரவர்களினாலும் கட்டப்பட்ட சிவாலயங்கள் பிற்காலத்தனவாகும். வண்ணை வைத்சவரன் கோயில், காரைநகர் சிவன் கோவில், தம்பலகமம் சிவன்கோயில், கொழும்பு கொச்சிக்கடை பொன்னம்பலவாணேசுவரர் கோயில் போன்றவை இக்காலத்தைச் சார்ந்தவையாகும்.
Copyrights © 2022 to Saivaneethi. All rights reserved.