சமீபத்திய செய்தி

உலகத்திலே பல சமயங்கள் உள்ளன. அவற்றுள், ஈழத்தில் வழங்கும் சமயங்கள் நான்கு, அவை சைவம்
நன்கொடை
English

+94 123 456 789

நன்கொடை
English

416 528 1407

01.003 பத்தரோடுபல ரும்பொலியம்மலர்

திருச்சிற்றம்பலம்

பத்தரோடுபல ரும்பொலியம்மலர் 
	அங்கைப் புனல்தூவி
ஒத்தசொல்லியுல கத்தவர்தாந்தொழு 
	தேத்த உயர்சென்னி
மத்தம்வைத்தபெரு மான்பிரியா
	துறைகின்ற வலிதாயம்
சித்தம்வைத்தஅடி யாரவர்மேல 
	டையாமற் றிடர்நோயே.  1 

		
படையிலங்குகரம் எட்டுடை 
	யான்படி றாகக்கனலேந்திக்
கடையிலங்குமனை யிற்பலிகொண்டுணுங் 
	கள்வன்னுறை கோயில்
மடையிலங்குபொழி லின்நிழல்வாய்மது 
	வீசும் வலிதாயம்
அடையநின்றஅடி யார்க்கடையாவினை 
	அல்லல் துயர்தானே.  2	
		
ஐயனொய்யன்அணி யன்பிணியில்லவ 
	ரென்றுந் தொழுதேத்தச்
செய்யன்வெய்யபடை யேந்தவல்லான்திரு 
	மாதோ டுறைகோயில்
வையம்வந்துபணி யப்பிணிதீர்த் 
	துயர்கின்ற வலிதாயம்
உய்யும்வண்ணம்நினை மின்நினைந்தால் 
	வினைதீருந் நலமாமே.  3 

		

ஒற்றைஏறதுடை யான்நடமாடி 
	யோர்பூதப் படைசூழப்
புற்றில்நாகம்அரை யார்த்துழல்கின்ற 
	எம்பெம்மான் மடவாளோ
டுற்றகோயிலுல கத்தொளிமல் 
	கிடஉள்கும் வலிதாயம்
பற்றிவாழும்அது வேசரணாவது 
	பாடும் மடியார்க்கே.  4 
		
புந்தியொன்றிநினை வார்வினை 
	யாயினதீரப் பொருளாய
அந்தியன்னதொரு பேரொளியான் 
	அமர்கோயில் அயலெங்கும்
மந்திவந்துகடு வன்னொடுங்கூடி 
	வணங்கும் வலிதாயஞ்
சிந்தியாதஅவர் தம்மடும்வெந் 
	துயர்தீர்த லெளிதன்றே.  5 
		

ஊனியன்றதலை யிற்பலிகொண்டு 
	லகத்துள் ளவரேத்தக்
கானியன்றகரி யின்னுரிபோர்த்துழல் 
	கள்வன் சடைதன்மேல்
வானியன்றபிறை வைத்தஎம் 
	மாதிமகிழும் வலிதாயம்
தேனியன்றநறு மாமலர்கொண்டு 
	நின்றேத்தத் தெளிவாமே.  6 

கண்ணிறைந்தவிழி யின்னழலால் 
	வருகாமன் னுயிர்வீட்டிப்
பெண்ணிறைந்தவொரு பால்மகிழ்வெய்திய 
	பெம்மா னுறைகோயில்
மண்ணிறைந்தபுகழ் கொண்டடியார்கள் 
	வணங்கும் வலிதாயத்
துண்ணிறைந்தபெரு மான்கழலேத்த 
	நம்உண்மைக் கதியாமே.  7 .

கடலில்நஞ்சமமு துண்டிமையோர் 
	தொழுதேத்த நடமாடி
அடலிலங்கையரை யன்வலிசெற்றருள் 
	அம்மா னமர்கோயில்
மடலிலங்குகமு கின்பலவின் 
	மதுவிம்மும் வலிதாயம்
உடலிலங்கும் உயிர்ருள்ளளவுந் 
	தொழஉள்ளத் துயர்போமே.  8 		
		


பெரியமேருவரை யேசிலையா 
	மலைவுற்றா ரெயில்மூன்றும்
எரியஎய்தவொரு வன்னிருவர்க் 
	கறிவொண்ணா வடிவாகும்
எரியதாகியுற வோங்கியவன் 
	வலிதாயந் தொழுதேத்த
உரியராகவுடை யார்பெரியா 
	ரெனஉள்கும் முலகோரே.  9 

		

ஆசியாரமொழி யாரமண் 
	சாக்கியரல் லாதவர்கூடி
ஏசியீரமில ராய்மொழிசெய்தவர் 
	சொல்லைப் பொருளென்னேல்
வாசிதீர அடியார்க்கருள்செய்து 
	வளர்ந்தான் வலிதாயம்
பேசும்ஆர்வ முடையாரடி 
	யாரெனப்பேணும் பெரியோரே.  10 

		

பவண்டுவைகும்மணம் மல்கியசோலை 
	வளரும் வலிதாயத்
தண்டவாணனடி யுள்குதலால்அருள் 
	மாலைத் தமிழாகக்
கண்டல்வைகுகடற் காழியுள்ஞான 
	சம்பந்தன் தமிழ்பத்துங்
கொண்டுவைகியிசை பாடவல்லார் 
	குளிர்வானத் துயர்வாரே
		

சுவாமி : வல்லீஸ்வரர்; அம்பாள் : ஜகதாம்பாள். 11

திருச்சிற்றம்பலம்

Audio


அ௫ளியவர் : திருஞானசம்பந்தர்

திருமுறை : முதல் திருமுறை

பண் : நட்டபாடை

நாடு : தொண்டைநாடு

தலம் : வலிதாயம்

Author : மதுரை முத்துக்குமரன்

Copyrights © 2022 to Saivaneethi. All rights reserved.