சமீபத்திய செய்தி

உலகத்திலே பல சமயங்கள் உள்ளன. அவற்றுள், ஈழத்தில் வழங்கும் சமயங்கள் நான்கு, அவை சைவம்
நன்கொடை
English

+94 123 456 789

நன்கொடை
English

416 528 1407

திருக்கோணேசுவரம் இலங்கையின் வடகிழக்குக் கடற்கரையில் அமைந்திருக்கும் தலமாகும். திருக்கோணேச்சரம் இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் தலை நகரமான திருக்கோணமலையில் உள்ள ஒரு சிவன் கோயில் ஆகும். பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான இத்தலம் ஈழநாட்டின் இரண்டு தேவாரப் பாடல் பெற்ற தலங்களுள் இதுவும் ஒன்று. இலங்கையின் புகழ்பெற்ற ஆலயங்களுள் ஒன்றாக விளங்குகின்றது.

திருமூலர் இலங்கையைச் சிவபூமி என்றும் இலங்கையில் மேருவின் குறியைக் காணலாம் என்றும் கூறியுள்ளார். அவர் கூறிய மேருவின் குறி கோணேசர் மலையேயாம். கோணேசர் ஆலயம் உலகிலுள்ள பழைய வழிபாட்டுத் தலங்களுள் மிகவும் பழைமையான ஒன்றென்பதும், திருகோணமலை நாகரிகமும், மொஹஞ்சதாரோ நாகரிகமும் ஏறக்குறைய ஒரே காலத்தன என்பதும் ஆராய்ச்சியாளர் சிலரின் துணிபு.

இலங்கையை இராவணன் ஆண்ட காலத்தில் கோணேசுவரர் இராவணனுடைய இட்ட தெய்வமாக இருந்ததாகப் பழைய வரலாறுகள் கூறுகின்றன. இராவணன் வழிபட்ட பழைய கோணேசுவரம் கடல்கொள்ளப்பட்டு. கடலுக்கடியில் இருப்பதாக ஆழ்கடல் ஆராய்ச்சியாளர் கண்டுபிடித்துக் கூறியுள்ளனர். தென்னகத்துக்காவிரிப்பூம் பட்டினத்தைக்கடல் கொண்டதுபோல், கோணேசுவரமும் கடல்கொள்ளப்பட்டிருக்கலாமெனக் கருத இடமுண்டு. இதற்குச் சான்றாக இருக்கறது “ராஜவளி” என்ற புராதன பாளிநூல், இராமாயண காலத்திற்குப் பின்னர் கி. மு. 3544 ஆம் ஆண்டிலும், அதற்குப் பின்னார் விகாரமா தேவியின் தந்தை களனிதீசன் காலத்திலும் இரு பெருங்கடற்கோள்கள் நடந்ததாக இந்நூல் கூறுகின்றது. இவற்றுள் ஒன்றினால் கோணேசுவரமும் கடல்கொள்ளப்பட்டிருக்கலாம் என யாம் நம்ப இடமுண்டு.

இதையடுத்துக் குளக்கோட்டன் என்னும் சோழ மன்னன் திருக்கோணேசுவரர் ஆலயத்தைத் திரும்பவும் கட்டுவித்துத் திருப்பணிகள் செய்ததாகச் சில சாசனங்கள் கூறுகின்றன. இத்திருக்கோயில் பல மண்டபங்களோடும் பெரு வீதிகளோடும் கூடியதாக அக்காலத்தில் விளங்கியுள்ளது.

இப்படி பழம் பெருமை வாய்ந்த இத்திருத்தலம் 1624ஆம் ஆண்டு சித்திரை வருடப்பிறப்பன்று போர்த்துக்கேயத் தளபதியினால் இடித்தழிக்கப்பட்டுக் கோட்டை கட்டப்பட்டதாக வரலாறு கூறுகின்றது. அவன் கோவிலை இடித்த பொழுது செய்த நல்ல செயல் ஆலயத்தை இடித்துத் தகர்க்குமுன் அதன் படத்தை வரைந்து வைத்திருந்தமையேயாகும். அப்படங்களுள் ஒன்று போர்த்துக்கலில் உள்ள “லிஸ்பன்” நகரிலுள்ள உலகப் பிரசித்தி பெற்ற “அட்சுடா” நூல்நிலையத்தில் கண்டெடுக்கப்பட்டு 1889இல் இலங்கையில் பிரசுரிக்கப்பட்டது. கோணேசர் கோவில் புனர்நிர்மாணம் பெற்று விளங்குவதற்கு முன்னோடியாய் நின்று உழைத்த, டாக்டர் பாலேந்திராவிற்கு உதவியாயிருந்த கருவிகளில் இப்படமும் முக்கியமான ஒன்றாகும். 1953இல் இப் பெரியாரால் வெளியிடப்பட்ட “திருகோணமலை விக்கரகங்கள்” என்ற நூலே திருக்கோணசுவரம் பற்றி முதன் முதலாக எழுந்த இக்கால அமைவுபெற்ற ஆராய்ச்சி நூலாகும்.

அழிந்த கோவிலைப் புனருத்தாணஞ் செய்வதற்காக 9-7-1950இல் நிறுவப்பட்ட இப்பணிச் சபை. கிணறொன்றைத் தோண்டியபொழுது நிலத்துள்ளிருந்து தாமிர மயமான சோமாஸ்கந்தர், பார்வதி. சந்திரசேகரர் முதலான விக்கிரகங்கள் கண்டெடுக்கப்பட்டன.

இத் திருப்பணிச் “சபையாரின் நன் முயற்சியால் முற்காலத்தே அமைந்த பொலிவுடைய சுற்றுப்பிராகாரத்தோடமைந்த கோவில் ஒன்று கட்டப்பட்டு சுபகிருது வருடம் பங்குனி 21 ஆம் நாள் புதன் கிழமை (8-4-63 இல்) குடமுழுக்குச் செய்யப்பட்டது. நித்தியநைமித்திய பூசைகள் இன்று ஒழுங்காக நடைபெற்று வருகின்றன. இன்று நாம் காண்பது மூன்றாவது கோணேசர் ஆலயமாகும்.

திருஞானசம்பந்தமூர்த்து நாயனாரால் பாடப்பெற்ற திருப்பதிகம் ஒன்று இத் இருத்தலத்திற்கு உண்டு. இதனோடு சம்பந்தப்பெருமான் பாடியருளிய திருப்பதிகக் கோவையிலும் (2 ஆம் பாடல் அண்ணாமலை ஈங்கோயுமத் எனத் தொடங்கும் பாடலில் வரும் கோணம்). சுந்தரமூர்த்திநாயனாரால் அருளப்பட்ட ஊர்த்தொகைப் பதிகத்திலும் (3 ஆம் பாடல் நிறைக்காட்டானே நெஞ்சத்தானே…. எனத் தொடங்கும் பாடலில் வரும் மாகோணம்) திருக்கோணேசுவரம் இடம்பெற்றிருக்கின்றது. இவ்வாலயத்தின் மீது அருணகிரிநாதர் திருப்புகழும் பாடியுள்ளார்.

இக் கோவிலில் வழிபாடாற்றி அருள் பெற்றோர் தேவேந்திரன், இராவணனின் தாயார், கயபாகு மன்னன் போன்றோராவர்.

இவ்வாலய இறைவன் பெயர் கோணேசுவரர். இறைவி மாதுமை. தீர்த்தம். பாவநாசம். தலவிருட்சம் கல்லால், வரலாறு கூறும் நூல்கள் தட்சணகயிலாய புராணம், திருக்கோணாசல புராணம், திருக்கோணாசல வைபவம், திருக்கோணைநாதர் வைபவம், திருக்கோணமலை அந்தாதி முதலியன.
வருடாந்த அலங்கார உற்சவம் பங்குனிப் பூரணையும் உத்தரமும் கூடிய நாளில் தொடங்கி, அடுத்துவரும் திருதியைத் திதியுடன் கூடியபரணி நாளில் தீர்த்தம் நடைபெறும்.

திருக்கோணேஸ்வரம்

Copyrights © 2022 to Saivaneethi. All rights reserved.