சமீபத்திய செய்தி

உலகத்திலே பல சமயங்கள் உள்ளன. அவற்றுள், ஈழத்தில் வழங்கும் சமயங்கள் நான்கு, அவை சைவம்
நன்கொடை
English

+94 123 456 789

நன்கொடை
English

416 528 1407

04.109 பொன்னார் திருவடிக்

திருச்சிற்றம்பலம்

பொன்னார் திருவடிக் கொன்றுண்டு 
  விண்ணப்பம் போற்றிசெய்யும்
என்னாவி காப்பதற் கிச்சையுண் 
  டேலிருங் கூற்றகல
மின்னாரு மூவிலைச் சூலமென் 
  மேற்பொறி மேவுகொண்டல்
துன்னார் கடந்தையுள் தூங்கானை 
  மாடச் சுடர்க்கொழுந்தே.   1 
 
  
ஆவா சிறுதொண்ட னென்நினைந் 
  தானென் றரும்பிணிநோய்
காவா தொழியிற் கலக்குமுன் 
  மேற்பழி காதல்செய்வார்
தேவா திருவடி நீறென்னைப் 
  பூசுசெந் தாமரையின்
பூவார் கடந்தையுள் தூங்கானை 
  மாடத்தெம் புண்ணியனே.   2 
 
  
  
இப்பதிகத்தில் 3-ம் செய்யுட்கள் சிதைந்து போயின. 3
	
  
  
இப்பதிகத்தில் 4-ம் செய்யுட்கள் சிதைந்து போயின. 4
	
  
  
இப்பதிகத்தில் 5-ம் செய்யுட்கள் சிதைந்து போயின. 5
	
  
  
இப்பதிகத்தில் 6-ம் செய்யுட்கள் சிதைந்து போயின. 6
	
  
  
இப்பதிகத்தில் 7-ம் செய்யுட்கள் சிதைந்து போயின. 7
	
  
  
இப்பதிகத்தில் 8-ம் செய்யுட்கள் சிதைந்து போயின. 8
	
  
  
இப்பதிகத்தில் 9-ம் செய்யுட்கள் சிதைந்து போயின. 9
	
		
கடவுந் திகிரி கடவா 
  தொழியக் கயிலையுற்றான்
படவுந் திருவிர லொன்றுவைத் 
  தாய்பனி மால்வரைபோல்
இடபம் பொறித்தென்னை ஏன்றுகொள் 
  ளாயிருஞ் சோலைதிங்கள்
தடவுங் கடந்தையுள் தூங்கானை 
  மாடத்தெந் தத்துவனே.	
		

சுவாமி:சுடர்க்கொழுந்தீசர்;அம்பாள்:அழகியகாதலியம்மை.10

திருச்சிற்றம்பலம்

Copyrights © 2022 to Saivaneethi. All rights reserved.