சமீபத்திய செய்தி
திருச்சிற்றம்பலம்
நெடியமால் பிரம னோடு நீரெனும் பிலயங் கொள்ள அடியொடு முடியுங் காணார் அருச்சுனற் கம்பும் வில்லுந் துடியுடை வேட ராகித் தூயமந் திரங்கள் சொல்லிக் கொடிநெடுந் தேர்கொ டுத்தார் குறுக்கைவீ ரட்ட னாரே. 1
ஆத்தமாம் அயனு மாலும் அன்றிமற் றொழிந்த தேவர் சோத்தமெம் பெருமான் என்று தொழுதுதோத் திரங்கள் சொல்லத் தீர்த்தமாம் அட்ட மீமுன் சீருடை ஏழு நாளுங் கூத்தராய் வீதி போந்தார் குறுக்கைவீ ரட்ட னாரே.
சுவாமி:வீரட்டேசுவரர்;அம்பாள்:ஞானாம்பிகையம்மை. 2
திருச்சிற்றம்பலம்
அ௫ளியவர் : திருநாவுக்கரசர்
திருமுறை : நான்காம்-திருமுறை
பண் : திருநேரிசை
நாடு : சோழநாடு காவிரி வடகரை
தலம் : குறுக்கை வீரட்டம்
Copyrights © 2022 to Saivaneethi. All rights reserved.