சமீபத்திய செய்தி
திருச்சிற்றம்பலம்
ஓம்பினேன் கூட்டை வாளா உள்ளத்தோர் கொடுமை வைத்துக் காம்பிலா மூழை போலக் கருதிற்றே முகக்க மாட்டேன் பாம்பின்வாய்த் தேரை போலப் பலபல நினைக்கின் றேனை ஓம்பிநீ உய்யக் கொள்ளாய் ஒற்றியூ ருடைய கோவே. 1
மனமெனுந் தோணி பற்றி மதியெனுங் கோலை யூன்றிச் சினமெனுஞ் சரக்கை யேற்றிச் செறிகட லோடும் போது மதனெனும் பாறை தாக்கி மறியும்போ தறிய வொண்ணா துனையுனும் உணர்வை நல்காய் ஒற்றியூ ருடய கோவே
சுவாமி:மாணிக்கத்தியாகர்;அம்பாள்:வடிவுடையம்மை. 2
திருச்சிற்றம்பலம்
அ௫ளியவர் : திருநாவுக்கரசர்
திருமுறை : நான்காம்-திருமுறை
பண் : திருநேரிசை
நாடு : தொண்டைநாடு
தலம் : ஒற்றியூர்
Copyrights © 2022 to Saivaneethi. All rights reserved.