சமீபத்திய செய்தி

உலகத்திலே பல சமயங்கள் உள்ளன. அவற்றுள், ஈழத்தில் வழங்கும் சமயங்கள் நான்கு, அவை சைவம்
நன்கொடை
English

+94 123 456 789

நன்கொடை
English

416 528 1407

01.020 தடநில வியமலை நிறுவியொர்

திருச்சிற்றம்பலம்

தடநில வியமலை நிறுவியொர் 
  தழலுமிழ் தருபட அரவுகொ
டடல்அசு ரரொடம ரர்கள்அலை 
  கடல்கடை வுழியெழு மிகுசின
விடம்அடை தருமிட றுடையவன் 
  விடைமிசை வருமவ னுறைபதி
திடமலி தருமறை முறையுணர் 
  மறையவர் நிறைதிரு மிழலையே.   1 
		

தரையொடு திவிதல நலிதரு 
  தகுதிற லுறுசல தரனது
வரையன தலைவிசை யொடுவரு 
  திகிரியை அரிபெற அருளினன்
உரைமலி தருசுர நதிமதி 
  பொதிசடை யவனுறை பதிமிகு
திரைமலி கடல்மண லணிதரு 
  பெறுதிடர் வளர்திரு மிழலையே.   2  
		

மலைமகள் தனையிகழ் வதுசெய்த 
  மதியறு சிறுமன வனதுயர்
தலையினொ டழலுரு வனகரம் 
  அறமுனி வுசெய்தவ னுறைபதி
கலைநில வியபுல வர்களிடர் 
  களைதரு கொடைபயில் பவர்மிகு
சிலைமலி மதிள்புடை தழுவிய 
  திகழ்பொழில் வளர்திரு மிழலையே.   3 
        

மருவலர் புரமெரி யினின்மடி 
  தரவொரு கணைசெல நிறுவிய
பெருவலி யினன்நலம் மலிதரு 
  கரனுர மிகுபிணம் அமர்வன
இருளிடை யடையுற வொடுநட 
  விசையுறு பரனினி துறைபதி
தெருவினில் வருபெரு விழவொலி 
  மலிதர வளர்திரு மிழலையே.   4 
		

அணிபெறு வடமர நிழலினி 
  லமர்வொடு மடியிணை யிருவர்கள்
பணிதர அறநெறி மறையொடு 
  மருளிய பரனுறை விடமொளி
மணிபொரு வருமர கதநில 
  மலிபுன லணைதரு வயலணி
திணிபொழில் தருமணம் மதுநுக 
  ரறுபத முரல்திரு மிழலையே.   5 
        
		
வசையறு வலிவன சரவுரு 
  வதுகொடு நினைவரு தவமுயல்
விசையன திறன்மலை மகளறி 
  வுறுதிற லமர்மிடல் கொடுசெய்து
அசைவில படையருள் புரிதரு 
  மவனுறை பதியது மிகுதரு
திசையினின் மலர்குல வியசெறி 
  பொழின்மலி தருதிரு மிழலையே.   6 
	    

நலமலி தருமறை மொழியொடு 
  நதியுறு புனல்புகை யொளிமுதல்
மலரவை கொடுவழி படுதிறன் 
  மறையவ னுயிரது கொளவரு
சலமலி தருமற லிதனுயிர் 
  கெடவுதை செய்தவர னுறைபதி
திலகமி தெனவுல குகள்புகழ் 
  தருபொழி லணிதிரு மிழலையே.   7 
	    

அரனுறை தருகயி லையைநிலை 
  குலைவது செய்ததச முகனது
கரமிரு பதுநெரி தரவிரல் 
  நிறுவிய கழலடி யுடையவன்
வரன்முறை யுலகவை தருமலர் 
  வளர்மறை யவன்வழி வழுவிய
சிரமது கொடுபலி திரிதரு 
  சிவனுறை பதிதிரு மிழலையே.   8 
		

அயனொடும் எழிலமர் மலர்மகள் 
  மகிழ்கண1 னளவிட ஒழியவொர்
பயமுறு வகைதழல் நிகழ்வதொர் 
  படியுரு வதுவர வரன்முறை
சயசய வெனமிகு துதிசெய 
  வெளியுரு வியவவ னுறைபதி
செயநில வியமதில் மதியது 
  தவழ்தர வுயர்திரு மிழலையே.
       

பாடம் : 1மகிழ்வண 9


இகழுரு வொடுபறி தலைகொடு 
  மிழிதொழில் மலிசமண் விரகினர்
திகழ்துவ ருடையுடல் பொதிபவர் 
  கெடஅடி யவர்மிக அருளிய
புகழுடை யிறையுறை பதிபுன 
  லணிகடல் புடைதழு வியபுவி
திகழ்சுரர் தருநிகர்2 கொடையினர் 
  செறிவொடு திகழ்திரு மிழலையே.
	    

பாடம் : 2தருநிகழ் 10

		
சினமலி கரியுரி செய்தசிவ 
  னுறைதரு திருமிழ லையைமிகு
தனமனர் சிரபுர நகரிறை 
  தமிழ்விர கனதுரை யொருபதும்
மனமகிழ் வொடுபயில் பவரெழின் 
  மலர்மகள் கலைமகள் சயமகள்
இனமலி புகழ்மக ளிசைதர 
  இருநில னிடையினி தமர்வரே.
  

சுவாமி : வீழியழகர்; அம்பாள் : அழகுமுலையம்மை. 11

திருச்சிற்றம்பலம்

Audio


அ௫ளியவர் : திருஞானசம்பந்தர்

திருமுறை : முதல்-திருமுறை

பண் : நட்டபாடை

நாடு : சோழநாடு காவிரித் தென்கரை
தலம் : வீழிமிழலை

Author : மதுரை முத்துக்குமரன்

Copyrights © 2022 to Saivaneethi. All rights reserved.