சமீபத்திய செய்தி

உலகத்திலே பல சமயங்கள் உள்ளன. அவற்றுள், ஈழத்தில் வழங்கும் சமயங்கள் நான்கு, அவை சைவம்
நன்கொடை
English

+94 123 456 789

நன்கொடை
English

416 528 1407

இளம்பெருமாள் அடிகள்

நாயன்மார் வரலாறு

பதினொன்றாம் திருமுறை

பதினொன்றாம் திருமுறையில் உள்ள பிரபந்தங்களை அருளிச்செய்த ஆசிரியர்கள் திருவாலவாயுடையார், காரைக்கால் அம்மையார் ஐயடிகள் காடவர்கோன் நாயனார், சேரமான் பெருமாள் நாயனார், நக்கீரதேவர், கல்லாட தேவர், கபிலதேவர், பரணதேவர், இளம் பெருமான் அடிகள், அதிரா அடிகள், பட்டினத்து அடிகள் நம்பியாண்டார் நம்பிகள் ஆகிய பன்னிருவராவர்.

மதுரைத் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் சோமசுந்தரக் கடவுள் ஆவார். ஏனையோருள் காரைக்கால் அம்மையார், ஐயடிகள் காடவர் கோன் நாயனார், சேரமான் பெருமாள் நாயனார் ஆகிய மூவர் சுந்தரமூர்த்தி சுவாமிகளால் திருத்தொண்டத் தொகையில் போற்றப்பெற்ற நாயன்மார்கள் ஆவர். இவர்கள் வரலாறு பெரிய புராணத்தில் விரி வாகக் கூறப்பட்டுள்ளது.

சங்கப்புலவரும் சங்கப்புலவர் பெயர் தாங்கியவர்களுமாக நக்கீரர், கல்லாடர், கபிலர், பரணர் ஆகிய நால்வர் உள்ளனர்.

ஏனையோராக இளம் பெருமான் அடிகள், அதிரா அடிகள், திருவெண்காட்டு அடிகள் எனப்படும் பட்டினத்தார், நம்பியாண்டார் நம்பிகள் ஆகிய நால்வர் விளங்குகின்றனர்.

இளம்பெருமாள் அடிகள் வரலாறு

திருநெறிச்செம்மல், நல்லிசைப்புலவர்
வித்துவான், திரு. வி. சா. குருசாமி தேசிகர் அவர்கள்
பொறுப்பு முதல்வர், தருமையாதீனப் பல்கலைக் கல்லூரி.

பதினொன்றாம் திருமுறையுள் சிவபெருமான் திரு மும்மணிக் கோவை என்னும் பிரபந்தத்தை அருளியவர் இவர்.

பெயர்க்காரணம்

பெருமான் அடிகள் என்பது சிவபெருமானைக் குறிக்கும் பெயர். திருஞானசம்பந்தர் தேவாரத்தில் திருக்கடவூர்த் திருப்பதிகப் பாடல்கள் தோறும் சிவபெருமானைப் பெருமான் அடிகள் என அவர் போற்றக் காணலாம். இளம்பெருமான் என்ற பெயர் முருகனைக் குறித்த பெயர் ஆகலாம். என்றும் இளமை குன்றா நிலையில் விளங்கும் பெருமானுக்கு இப்பெயர் மிகவும் ஏற்புடையதாகும்.

கடவுட் பெயரை மக்கட்கு இட்டு வழங்கும் மரபில் பெற்றோர் இப்பெயரை இவருக்குச் சூட்டியிருத்தல் கூடும்.

இனிச்சிவபிரானுக்கு உரிய பெருமானடிகள் என்ற பெய ருடையார் இருவர் உளராக அவரின் இளையவர் என்ற பொருளில் இவர் இளம் பெருமான் அடிகள் எனப் பெற்றவர் ஆதலும் கூடும்.

இவர் வாழ்ந்த காலம் கி.பி. 9-ஆம் நூற்றாண்டின் இறுதியும் பத்தாம் நூற்றாண்டின் தொடக்கமும் ஆகலாம்.

Copyrights © 2022 to Saivaneethi. All rights reserved.